Monday, November 26, 2012

77. சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?

கேள்வி: நம்மைச் சுற்றி எத்தனையோ பேர் உள்ளனர். இயேசுவை அறியாதவர்கள் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள், இறந்து போகிறார்கள். அவர்களுக்கு இயேசுவைப்பற்றி யாரும் சொல்லாமலே இறந்தும் போகிறார்கள். அவர்கள் அநேக நன்மைகள் செய்து இருக்கலாம், மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டு இருக்கலாம். இவர்கள் அனைவரும் நரகத்துக்கு போவார்களா அல்லது வித்தியாசமான நியாயத்தீர்ப்பு இருக்குமா?

பதில்:
இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக  எழுப்பப்பட்டுள்ளது. பைபிளில் சொல்லப்பட்டுள்ள  சுவிசேஷத்தை கேள்விப்படாதவர்களும் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்களா? இப்படி வாய்ப்பு கிடைக்காதவர்கள் நரகத்துக்கு போவது நியாயமாக தோன்றவில்லை என்ற எண்ணம் எழுவது இயல்பு. ஆனால், இன்று தொழில்நுட்பமானது எங்கேயோ சென்றுவிட்டது, இப்படி இயேசுவைக் கேள்விப்படவதர்கள் ஒருவேளை மிகவும் சொற்பமானவர்களாக இருக்கலாம்.


 ஒருமனிதன் வீட்டுக்கு வெளியே வந்து இந்த பூமி, கடல், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது, இவைகளுக்குப்பின் இதை உருவாக்கிய தேவன் ஒருவர் இருக்கிறார் என்று அறிவார்கள். அவர்கள் தேவனுக்கு பக்தியாயிருந்தால் தேவனே அவர்களுக்கு தூதர்கள் அல்லது ஆள் அனுப்பி சத்தியத்தை/சுவிசேஷத்தை தெரியப்படுத்துவார். உதாரணமாக கொர்நேலியுவை சொல்லலாம். அவன் பக்தியுள்ளவன் ஆனால் மெய்யான தேவனை அறியாதவன்.

அப்போஸ்தலர் 10:35 எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.

சங்கீதம் 4:3 பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்.

ரோமர் 1:20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

எனவே இப்படி தேவனை அறியாமல் இருப்பது சாத்தியமல்ல.

"எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள்" என்பது முழுக்க தவறு. There is no one good. நல்லவன் ஒருவனும் இல்லை என்று பைபிளில் தெளிவாக உள்ளது (ரோமர் 3:10-12) . நீங்கள் நல்லவர்கள் என்று நினைப்பவர்களின் மற்ற பக்கங்கள் உங்களுக்கு தெரியாது. மிகவும் சரியாக சொல்லவேண்டும் என்றால் நம்மைப்பற்றியே நமக்கு சரியாக தெரியாது. கொடுக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் எப்படி நடந்துகொண்டோம், ஏன் இப்படி செய்தோம், நினைத்தோம், பேசினோம் என்று வருந்துபவர்கள் எல்லாருமே. எனவே பைபிளில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, இருதயமே மகா திருக்கும், கேடுள்ளதுமாக இருக்கிறது -heart is deceitful and desperately wicked என்பது முழுக்க முழுக்க உண்மை.

மேலும், நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றும், நானே ஆடுகளுக்கு வாசல் என்வழியாய் பிரவேசியாமல் வேறு வழியாய் ஏறுபவன்  கள்ளனும் கொள்ளைக்காரனுமாக இருக்கிறான் என்று தெளிவாக இயேசு சொல்லியிருக்கிறார். இயேசுதான் ஒரே வழி, வேறு வழியில்லை.

இயேசுவைப்பற்றி கேள்விப்படாதவர்களைப் பற்றிய நியாயத்தீர்ப்பைப் பார்ப்போம். இதற்காக பதில் பைபிளில் என்ன சொல்லப்பட்டுள்ளது? அப்போஸ்தலனாகிய பவுல் இப்படியாக  ரோமர் 2ம் அதிகாரத்தில்
சொல்கிறார்:

14. அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் (naturally) நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.

15. அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்க்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

16. என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

"புறஜாதியார் நியாயம்தீர்க்கப்பட்டு ஆக்கினையை அடைவார்கள், ஏனெனில் தேவனுடைய கற்பனைகளை அவர்கள் அனுசரிப்பதில்லை" என்று யூதர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். அது அவர்களின் குற்றச்சாட்டு. ஆனால், புறஜாதிகளுக்கும் நியாயப்பிரமாணமானது அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிறது என்று பவுல் சொல்கிறார். இங்கே பவுலின் நோக்கம்: யூதர்கள் மோசே கொடுத்த நியாயப்பிரமாணத்தை கேள்விப்பட்டால் மட்டும் போதாது, அதை பின்பற்றவேண்டும் என்கிறார். நியாயப்பிரமாணத்தைக் கேள்விப்பட்டுவிட்டு பாவத்தில் வாழ்வது நீதியல்ல.

பவுலின் விவாதம் புறஜாதியார்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பினைப் பற்றி அல்ல.  யூதர்களும் நியாயப்பிரமாணத்தைக் கேள்விப்பட்டு  அதின்படி செய்யாமல் (அதற்கு கீழ்ப்படியாமல்) போனால் நியாயத்தீர்ப்பு அடைவார்கள். பாவத்தில் வாழ்ந்து யூதர்களாக ஜீவிப்பதால் எந்த விதத்திலும் தேவனுக்கு முன்பாக மேன்மையானவர்களாக முடியாது. ரோமர் 2:13ல் சொன்னபடி: "நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்." புறஜாதிகள் யூதர்களாக மாறினாலும் பிரயோஜனமில்லை, பாவத்தில் ஜீவிக்காமல் இருக்கவேண்டும் என்பதே கருத்தாகும். யூதர்கள் கற்பனையைக் கைக்கொண்டால் நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள் என்றே நம்புகின்றனர்.


எனவே பவுல் "யூதர்களும், புறஜாதிகளும் தங்கள் செய்யும் கிரியைகளைக்கொண்டே நியாயம்தீர்க்கப்படுவார்கள், மோசேயின் கட்டளைகளை படித்ததால் மட்டும் அல்ல.
நியாயப்பிரமாணமானது புறஜாதிகளுக்கும் அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிறது" என்று  சொல்வதாக நாம் முடிவுக்கு வரலாம்.

ஒருமுறை ஒரு கிராமத்துக்கு என் தந்தை சுவிசேஷம் சொல்ல என்னை அழைத்துச் சென்றார். (அடிக்கடி அப்படியாக நாங்கள் இருவரும் பல இடங்களுக்கு செல்வது வழக்கமாயிருந்தது.) அங்கே செல்ல பேருந்து கிடையாது, வயல்-வரப்புகளைத் தாண்டி செல்லவேண்டும்.  அப்போது மிகவும் இளைஞனாக இருந்தேன். ஒரு வயதான முதியவரிடம் "இயேசுவைத் தெரியுமா?" என்றேன். "எனக்கு  அவங்க வீடு தெரியாது,  கடைக்காரரிடம் கேளுங்கள் அவருக்குத் தெரியும்" என்றார். இயேசுவைப்பற்றி கேள்விப்படாத சிலர் வாழ்ந்த கிராமம் அது. பின்புதான் தேவனைப்பற்றி விளக்க ஆரம்பித்தேன். அதே கிராமத்தில் ஒருவரிடம் "கெட்ட வார்த்தை பேசுவது சரியா?" என்றேன். "தப்புதான்" என்றார்.  "திருடினால்?" என்றேன்... "வரண்டுவது தப்புதான்" என்றார். "பொய், கொலை... என்று சொல்லிக்கொண்டே போகும் போது இதெல்லாம் தவறு என்று யார் இவர்களுக்கு சொன்னது? என்ற எண்ணம் எழுந்தது.   ஆனால் இதெல்லாம் இவர்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டுள்ளது.

புறஜாதியார் அவர்கள் செய்யும் பாவம் மற்றும் பாவம் அல்லாத கிரியைகளைக் கொண்டே நியாயத்தீர்ப்பு அடைவார்கள். நியாயத்தீர்ப்பு தங்களுக்கு தெரியாத ஒரு அளவுகோல் வைத்து அல்ல தெரிந்த அளவுகோல் வைத்துதான். அந்த அளவுகோல் அவர்களுடைய இருதயங்களில் தலைமுறை தலைமுறையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் புறஜாதியாரில் அவர்களுடைய அளவுகோலின்படி பாவம் செய்யாதவர் யார்?
அப்படியானால் அனைத்து புறஜாதியாரும் பாவிகள் என்பதால் நரகத்துக்கு செல்வார்கள்.

யோவான் 8ம் அதிகாரத்தில் நாம் அறிந்த சம்பவம் இங்கே நம் நினைவிற்காக:
அவர்(இயேசு) நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்... அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார். (இங்கே பாவம் செய்யாதவர் இயேசு மட்டுமே! இல்லையென்றால் அவரும் சென்றிருக்கவேண்டும்.) இங்கே எல்லாரும் பாவிகள் என்று பார்க்கிறோம். எனவே சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்கள் எப்படி நல்லவர்களாகிவிடமுடியும்?

இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டு அதை தள்ளிவிட்டவர்களும் ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவத்தில் ஜீவிப்பவர்களும் ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள்.

II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. தீட்டும், தீங்குள்ளதொன்றும் அதற்குள் (பரலோகத்திற்குள்) பிரவேசிப்பதில்லை.



I பேதுரு 4:18
நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? இந்த வசனத்தை சற்றே தியானியுங்கள்.  

அப்படியானால் இயேசுவைப்பற்றிக் கேள்விப்படாமல், எங்கோ தீவில் வசிப்பவர்கள் எப்படி பரலோகம் செல்லமுடியும்? தேவன் அப்படிப்பட்டவர்களை அவர்களுடைய மனசாட்சியைக்கொண்டே நியாந்தீர்ப்பார் என்று ரோமர் 2:15ல் அறிகிறோம்.

படிக்கவும்: கேள்வி-பதில்-24.


52 comments:

Unknown said...

கேள்வி பதில்: நல்ல தகவல்

god bless you

Anonymous said...

Each and everyone should read this and follow Jesus Christ.

Thank you for this reply,
Pls God Bless all of us

Anonymous said...

எது மட்ர மக்கலுக்கு நித்ய ஜிவனை தரும் என்ட்ரு இசு குரிப்பிடுகிரார்?

Colvin said...

\\எது மட்ர மக்கலுக்கு நித்ய ஜிவனை தரும் என்ட்ரு இசு குரிப்பிடுகிரார்?\\
பதில் வெகு எளிது
இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்வதுதான்.இதுதான் தேவன் ஏற்படுத்திய நியமம். அவராலேயன்றி இரட்சிப்பு இல்லை.

Anonymous said...

துன்மார்க்கரும் தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளப்படுவார்கள். சங்கீதம் 9 : 17 இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். எபிரெயர் 2 : 4

Anonymous said...

மத்தேயு 28:19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

navina said...

its so helpful to improve bible knowledge very thakful to who work on this.

pandiaraj a said...

ஆதார் பதிவது செய்வது சரியா- சாத்தா ஆட்சிக்கு அடித்தலாமா praj2869@gmail.com

Anonymous said...

Dear brothers and sisters just think and find the meaning for the "AAkinikulaga therkapaduvar". it just mean "jurgement" not "hell"

nithy.godsshadow@gmail.com

Anonymous said...

I need jesus

Anonymous said...

itz really usefull for us

Amudha samson said...

No one wants to hear about Lord Jesus Christ.not ready to accept.Lord Jesus,please open their eyes to see you.we pray for our dear brothers and sisters.Amen.

Sheeba Merlin said...

Andavar irukirar enbathai epadi nambuvathu endru en friend ketar ena kooruvadhu epadi kooruvadhu

Unknown said...

மனிமாரன்;இது மிகவும் சரியான விலக்கம்
GOD will bless them

Unknown said...

உங்கள் கருதுக்களை நான் மதிக்கிறேன், அனால் பதிலை கொஞ்சம் இன்னும் விரிவாக சொல்லி இருக்கலாம். பழைய ஏற்ப்பாட்டில் அனேக விளக்கஞ்கள் உன்டு

Unknown said...

its realy usef
ul for all....God Bless U All....

Anonymous said...

Its really true...we should prepare ourselves to be good and meet our Lord Jesus Christ.

Anonymous said...

i love jesus

Unknown said...

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். Rev 21;8

KOWSI said...

Very Useful For All Peoples
I LOVE JESUS

KOWSI said...

Very Useful For All Peoples
I LOVE YOU JESUS

Unknown said...

very use full explanation how i ask my questions

Unknown said...

eyes thanam panalam nu bible la iruka by ruban

npriya said...

very usefull for ourlife

Unknown said...

Really a useful information

Unknown said...

சரியான பதில் நன்ட்ரி-ஆல்பெர்ட்

Unknown said...

Correct Answer

Aravindseraph said...

it is fact

Unknown said...

I பேதுரு 4:18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

Unknown said...

18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Unknown said...

matheu 5:18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Unknown said...

II தீமோத்தேயு
4 அதிகாரம்18. கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Unknown said...

i love you jesus

sam said...

good message..

as bible says..:
உலகம் முழுவதையும் ஆதாயபடுத்தி கொண்டாலும் தன் ஜீவனை நஷ்ட்டபடுத்தினால் அவனுக்கு என்ன லாபம்..

Kavitha said...

அழகாக விளக்கம் சொல்லிருக்கிறிர்கள்

Unknown said...


அருமையான விளக்கம் அய்யா@@@@@
எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் தான் பதில் தரவேண்டும் ...... திருச்சபை போதகர்கள் இளமையாய் இருந்து அவர்களின் தலை முடி நரைத்து இருந்தால் அவர்கள் தலைக்கு சாயம் பூசலாமா???? வேத வசனத்தோடு விளக்கம் தரவும் ?????

Unknown said...

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" என்றார்

Unknown said...

very use full explanation how i ask my question

Anonymous said...

Very nice information about bible its very useful to improve our spiritual growth,
Thanks to everyone who has work on it

Unknown said...

ஆமென் ஆமென் தன்க் உ ப்ரொ

Alex said...

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய்
விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி,
என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன் !!
விளக்கம் தரவும்

இது பாவமா அல்லது உடல் சோர்வ

Unknown said...

El-Shaddai God says “I will have mercy on whom I will have mercy and I will have compassion on whom I will have compassion” in Exodus 33:19. We should always thank our Lord God for the precious gift of His “salvation” given to us through JESUS. It is disheartening that the people around us are not eager to know about the true Living God and accepting Jesus as their savior. It is very unfortunate. We, God’s people should keep them in our prayers. From the Lord comes deliverance (Psalms 3:8).

Anonymous said...

பிறந்த உடனேயே இறந்து போகும் குழந்தைகள் அல்லது சிறு வயதிலேயே இறந்து போகும் குழந்தைகளுக்கு நியாயத்தீர்ப்பு உண்டா??

Unknown said...

super devanukku makimai undagattum amen

Tamil Bible said...

பிறந்த உடனேயே இறக்கும் குழந்தைகளுக்கு நியாயத்தீர்ப்பு இருக்காது.

Tamil Bible said...

Alex: பவுல் சொல்வது உடலில் உள்ள பலவீனம்.

Tamil Bible said...

திருச்சபை போதகர்கள் சாயம் பூசி என்ன வேஷத்தை விரும்புகிறார்கள் அல்லது யாரை பிரியப்படுத்தப்பார்க்கிறார்கள்? எனவே இந்த உலகத்துக்குரிய வேஷம் தரிக்கவேண்டாம் என்று பவுல் குறிப்பிடுகிறார்.

Tamil Bible said...

Ruban: கண் தானம் பற்றி பைபிளில் இல்லை.

நெருங்கிய வசனம் இதுவென்று நினைக்கின்றேன்:
எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.

Talapathi Deva... said...

அருமையன பதிவு

Unknown said...

அற்புதமான தகவல்.தேவனிடத்தில் விசுவாசம் வைத்து வேண்டுகிறவன் பெற்றுக்கொள்வான்.ஆசிர்வாதங்களும் அற்புதங்களும் உண்டாகும்.தேவ தகப்பனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏. நன்றி ஆண்டவரே 🙏🙏🙏

Vimal Diaz said...

Amen, Praise the lord

Anonymous said...

Aman

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.