Friday, December 30, 2022

87. கிறிஸ்தவர்கள் யோகா பயிற்சி செய்யலாமா?

கேள்வி: கிறிஸ்தவர்கள் யோகா (Yoga) பயிற்சி செய்யலாமா?

பதில்:  உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் யோகா பயிற்சி செய்யக்கூடாது. முழுகட்டுரையையும் வாசியுங்கள்.


யோகா - அர்த்தம்

யோகா(Yoga) என்ற வார்த்தையின் மூல அர்த்தமானது சமஸ்கிருத வார்த்தையாகிய "யுஜ்" என்னும் வார்த்தையிலிருந்து வருகிறது. இதற்கு "நுகத்தடிக்குட்படுதல்" அல்லது "ஒருங்கிணைதல்" என்று அர்த்தமாகும்.  பெரிய அளவில் இது மனிதத்துவத்தின் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது, மற்றும் "ஒன்றிணைவை" அடைவதற்கான முறையாகும். (The root meaning of yoga: The word “yoga” is derived from the Sanskrit word. “yuj” which means “to yoke”, or “to unify”. In a larger sense it refers to the integration of personality, and is the method of achieving “union".)

நீங்கள் பைபிள் படித்தவர்களாயிருந்தால், இப்போதே உங்கள் தலையில் ஒரு மின்விளக்கு திடீரென எரியவேண்டும். ஆம்! அது இந்த வசனங்களை உங்கள் நினைவுக்கு கொண்டுவரும்: 

கலாத்தியர் 5:1 ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.

II கொரிந்தியர் 6:14 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

என்னங்க மனசைத்தானே ஒருமுகப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லலாம். இல்லை, அங்கே  நிற்கும்/உட்காரும் நிலைகளும் மற்றும் உச்சரிக்கப்படும் சத்தங்களும்/மந்திரங்களும் இந்து தெய்வங்களுடன் சம்பந்தப்பட்டவை ஆகும். அதைக்குறித்து  சீக்கிரத்தில் விவரமாக படிப்போம்.  சிலர், அப்படியெல்லாம் ஏதுமில்லை, நீங்க வேணுமுன்னா இயேசு, ஸ்தோத்திரம்னு சொல்லுங்கோ என்று சொல்லி வஞ்சிக்கின்றனர். இவர்கள் பிசாசுக்கு ஆதாரவாளர்கள். 

 அப்படிப்பட்டவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்: ஒரு அசிங்கமான காணொளி/படத்தை பார்த்துக்கொண்டு இயேசு, ஸ்தோத்திரம் என்று சொன்னால் அது சரியாகிவிடுமா? என்ன ஒரு முட்டாள்தனம். எனவே ஒரு காரியத்துக்கு பின்னே இருப்பது என்ன என்பது எவ்வளவு முக்கியம்! அது பிசாசின் ஆவி, நீங்கள் அதோடு ஒருங்கிணைகிறீர்கள். 

காலையில் மிதமாக ஓடலாம், நடக்கலாம்,  சிறுபிள்ளைகள்போல ஓடிஆடினால் நலம்.

யோகாவில் 8 அங்கங்கள் உள்ளன (8-limbs):

  • யாமா (கட்டுப்பாடுகள்) - Yama (Restraints)
  • நியாமா (கவனிப்புகள்) - Niyama (Observances) .
  • ஆசனா (தோரணை) - Asana (Posture) ...
  • பிராணயாமா (மூச்சு கட்டுப்பாடு) - Pranayama (Breath Control) ...
  • ப்ரத்யாஹாரா (உணர்வுகளை விலக்குதல்) - Pratyahara (Withdrawal of the Senses) ...
  • தரனா (செறிவு) - Dharana (Concentration) ...
  • தையனா (தியானம்) - Dhyana (Meditation) ...
  • சமாதி (கல்லறை - தூய சிந்தனை) - Samadhi (Pure Contemplation)

இவைகளில் "ஆசனம் (பலவிதங்களில் உட்காருதல்)" மற்றும் 'மூச்சுக்கட்டுப்பாடு" ஆகியவை பிரபலமானவை.

ஆசனங்கள் 
ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் உட்காருதல் அல்லது நிற்பது, மூச்சை இழுப்பது விடுவது ஆகும். இப்படி உடற்பயிற்சிகளின் நிலைகள் என்பது இந்து தெய்வங்களை சம்பந்தப்படுத்தி அவைகளை வரவழைக்கும்படி செய்வது ஆகும்.  இந்த ஆசனங்களில் 10 வகைகளை இங்கே காணலாம்:

1.  பத்மாசனம் - Padmasana

பத்மா என்றால் தாமரை என்று பொருள். இப்படி உட்கார்ந்து செய்வது இந்து தெய்வமாகிய லட்சுமியை அழைப்பதாகும். நீங்கள் யாரை அழைக்கிறீர்கள்? அல்லது யாரோடு ஒண்றினையும்படி விரும்புகிறீர்கள்?


2.  வ்ரிக்‌ஷாசனம் - Vrikshasana

விருட்சம் என்பது மரம். இப்படி மரத்தைபோன்று நிற்பது இந்து தெய்வமாகிய விஷ்ணுவை வணங்குதல் ஆகும். இப்படி கைகளைக் கூப்பி யாரை வணங்குகிறீர்கள்?


3.  நடராஜசனம் - Natarajasana

நடராஜன் - என்றால் நடனமாடும்-ராஜன் என்று பொருள்.  இந்த இந்து தெய்வம் யாரென்று உங்களுக்குச் சொல்லவே வேண்டாம்.  இப்படி நின்று அந்த மந்திரத்தைச் சொன்னால் யாரை அழைக்கிறீர்கள், யாருடன் ஒன்றாகிறீர்கள்?



4. வீரபத்ராசனம் - Virabhadrasana.

இதற்கு போர்வீரன் அல்லது சண்டையிடுபவன் என்று பொருள். இவைகள் விரபத்ராசனத்தின் பல கட்டங்களைக் குறிக்கின்றன. இது சிவா தன் மனைவி செத்ததால் பழிவாங்கும்படி உண்டாக்கப்பட்ட ஹீரோ. இந்த பழிவாங்குதலுக்கு பின் பெரிய கதை உள்ளது, அதை நான் சொல்ல விரும்பவில்லை. இதுவும் விக்கிரக ஆராதனையாகும். 



5. ஹனுமாசனம் - Hanumanasana

இந்தப் பெயருக்கு உங்களுக்கு விளக்கம் தேவையில்லை. பிளந்ததுபோல் உட்கார்ந்து கைகளைக் கூப்பி வணங்குதல் அனுமானை (பாதி குரங்கு பாதி மனிதன்) வரவழைப்பதாகும். 



6. நடவராசனம் -  Natvarasana

இது துவக்கநிலை யோகா பயிற்சியாகும்.  மிகவும் சுலபமான ஒன்றாகும். இது கிருஷ்ணன் என்னும் இந்து தெய்வத்தை வணங்குவது ஆகும். இது கூடவே உள்ள பொல்லாத ஆவிகளையும் சேர்த்து வரவழைக்கும் செயலாகும்.




7.  உத்கதா கோனாசனம் - Utkata Konasana

இது கொடூரமான, கருத்த, பயமுறுத்தும் இந்து தெய்வமாகிய காளியை வணங்குதல் ஆகும். மண்டையோட்டை மாலையாகவும், தறித்த கைகளை பாவாடையாகவும் அணிந்திருக்கும் இது எப்படி தெய்வமாகமுடியும்? நரகத்தில் உள்ளவர்களை கொடுமை செய்யும் கொடூரமான பிசாசை வரவழைக்கும் செயலாகும். இப்படி செய்பவர்கள் பிசாசின் கட்டினால் இருப்பார்கள். 



8.  மகராசனம் - Makarasana

முதலைபோல் படுத்திருத்தல் என்பது வருணா என்னும் இந்து தெய்வத்தை வரவழைக்கும் செயலாகும். இந்த தெய்வம் ஆகாயமண்டலத்தில் இருக்கும்.  இது வான மண்டலங்களில் இருக்கும் பொல்லாதசேனையாகும்.  தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எங்கே செல்கிறீர்கள்?




9 . மார்ஜாரிசானம் - Marjariasana

இதற்கு பூனைபோல் நிற்பது என்ற அர்த்தம். இது இந்து தெய்வமாகிய சரஸ்வதியை அழைப்பது ஆகும்.



10.  சூரிய நமஸ்காரம் - Surya Namaskar

இது சூரியனை வணங்குவது ஆகும். இதற்கு விளக்கம் தேவையில்லை.



யாத் 20: 4,5 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; 


பிரச்சனைகள்:

இப்படி தெரியாமல், ஏதோ உடற்பயிற்சி செய்கிறோம் என்று அநேகர் பிசாசின் சம்பிரதாயம், ஆச்சாரங்களில் பங்கு பெறுகின்றனர். இது சாபத்தைக் கொண்டுவரும்.  பிசாசு உங்களை கட்டிவைத்திருப்பான்.  இதனால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காது. அது பிசாசின் சரக்கு. எனவே நீங்கள் இப்போதே தேவனிடம் இந்த பாவத்தை அறிக்கையிடுங்கள். யோகா-வை விட்டு வெளியேறுங்கள். 

கடைசியாக:

வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

II கொரிந்தியர் 6:17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத்  தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

இந்த கட்டுரையை உங்கள் சபையில் உள்ளவர்களுக்கோ அல்லது தவறாக பிரசங்கம் செய்யும் போதகருக்கோ அனுப்பி வையுங்கள். தேவனுடைய ஜனங்களை எச்சரியுங்கள். கீழே உள்ள சாட்சியில் பில்லிசூனியக்காரியின் சாட்சியில் "யோகா"-பற்றி சொல்வதைக் கேளுங்கள்.