Tuesday, November 23, 2010

63. மனிதர்களை தேவர்கள் என யோவான் 10:34ன்படி அழைக்கலாமல்லவா?


கேள்வி:
யோவான் 10:34, 35-ல் "தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க" என்று வாசிக்கிறோம். எனவே நாம் மனிதர்களை தேவர்கள் என அழைக்கலாம். பிசாசும் இப்பிரபஞ்சத்தின் தேவன் என்று அழைக்கப்படுகிறான். அப்படித்தான் இயேசுவும் தன்னை தேவன் என்றார். எனவே இயேசுவை தேவன் என்பது தவறல்லவா?"

பதில்: இல்லை
செய்தி: "இந்தியாவைச் சேர்ந்த ராமன் என்பவர் ஒரு கடையில் கைக்கடிகாரத்தை (wrist watch) திருடிவிட்டார்".
இந்த செய்தியைப் படித்துவிட்டு: "இந்தியர்கள் திருடர்கள்" என்றும், "ராமன் என்ற பெயர் உடையவர்கள் கைக்கடிகாரத்தை திருடுபவர்கள்" என்றும் சொல்வது "அவசரத்தில் பொதுவாக்குதல்" (Hasty generalization) என்ற விவாதப்பிழையின்கீழ் வரும்.

முதலாவதாக, "தேவ வசனத்தைப்பெற்றவர்கள் தேவர்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது; எல்லாரையும் அல்ல. அந்த வசனமானது சங்கீதம் 82:6-லிருந்து இயேசுவால் எடுத்து குறிப்பிடப்பட்டது. இதை புரிந்துகொள்ளும் முன்பு சங்கீதம் 82 இங்கே...

சங்கீதம் 82
1. தேவசபையிலே
தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
2. எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)
3. ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
4. பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
5. அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
6. நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
7. ஆனாலும் நீங்கள் [மற்ற] மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.
8.
தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
 

அங்கே அவர்கள் குற்றவாளிகள் என்று தேவன் நியாயாம்தீர்க்கும்வகையில் சொல்கிறார்.


முதலாம் வசனத்தில் "தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். (God presides among the gods)"
==> இங்கே தேவர்கள்
யார் ? தேவன் யார்?

நம்முடைய கண்களுக்கு முன்னே ஒரு நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தில் ஏழைக்கும் திக்கற்றவர்களுக்கும் சரியாக நியாயம் விசாரிக்காமல், துன்மார்க்கனுக்கு முகதாட்சணியம் பண்ணி அநியாயத்தீர்ப்பு செய்யும் நியாயாதிபதிகளாகிய இவர்களும் "தேவர்கள்" (Elohim) என்றழைக்கப்பட்டனர். தேவன் இங்கே மற்ற தேவர்கள் தன்னைப்போலொத்தவர்கள் அல்ல, தன்னைப்போல் நீதியுள்ளவர்கள் அல்ல என்று அங்கே உள்ள நியாயாதிபதிகளைத்தான் சொல்கிறார். பழைய ஏற்பாட்டில் நியாயாதிபதிகள் (Judges) தேவனுடைய கட்டளைகளைப் படித்தவர்கள்; அதாவது தேவனுடைய வசனத்தைப் பெற்றவர்கள். தேவன் தான்செய்வதில் ஒரு சிறு பகுதியை இவர்களிடம் பொறுப்பாக ஒப்படைத்ததால் அவர்களுக்குத் தேவர்கள் என்ற அடைமொழியும் கொடுக்கப்பட்டது. இதை எபிரெய மொழியில் உள்ள வேதாகமத்தில் படித்தால் தெளிவாக புரிந்துகொள்ளலாம். நாம் இப்படியாக வாசிக்கிறோம்:

யாத்திராகமம் 21:6 அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் (தேவர்கள் - Elohim) அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி,
==> தமிழில் மொழிபெயர்த்தவர்கள் நியாயாதிபதிகள் என்று கொடுத்துள்ளனர்.
யாத்திராகமம் 22:28. நியாயாதிபதிகளை (தேவர்கள் - Elohim) தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.
Thou shalt not revile the gods, nor curse the ruler of thy people. (KJV)
==> ஆங்கிலத்தில் "gods" என்பதைக் காணவும்.


யாத்திராகமம் 22:8 திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் (தேவர்கள் - Elohim) அவனைக் கொண்டுபோக வேண்டும்.

மேலே எல்லாம் தேவர்கள் என்று நியாயாதிபதிகளை குறித்து சொல்லப்பட்டுள்ளது.

சங்கீதம் 138:1-லும் "உம்மை என் முழுஇருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு (நியாயாதிபதிகள் / ஆளுபவர்களுக்கு) முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்" என்று வாசிக்கிறோம். எனவே
அக்காலத்தில் சங்கீதம் 82:1-ன்படி நியாயாதிபதிகள் என்பவர்களையே தேவர்கள் என்றனர்.

யோவான் 10:34ல் தேவ தூஷணம் என இயேசுவை யூதர்கள் (நியாயாதிபதிகள், பரிசேயர்கள்) குற்றப்படுத்த முயற்சிக்கும்போது, நம்முடைய கர்த்தராகிய இயேசு: "உங்கள் வேதத்தில் நான் உங்களை (நியாயாதிபதிகளை) தேவர்கள் என்று சொன்னதாக வாசிக்கவில்லையா" என்கிறார். நியாயாதிபதிகள் தேவ வசனத்தை, தேவனுடைய கட்டளைகளைப் பெற்றவர்கள். நானோ உங்களுக்கு தேவனுடைய வார்த்தையாகவே வந்திருக்கிறேன், எனவே நான் தேவனுடைய குமாரன் என்பதில் என்ன பிழை? ஆதியாகம் 9:6-லேயே நான் மனிதனுக்கு நீதிசரிகட்டும் அந்த உரிமையை வழங்கியிருக்கிறேனே. தேவனுடைய வசனம்/கட்டளை/பொறுப்பை பெற்றவர்கள் தேவர்கள் என்றால், தேவனுடைய வார்த்தையாகிய நான் ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே இருக்கிறேன் என்றால் நான் யார்?

------------------------
இரண்டாவதாக, பிசாசானவன் "இப்பிரபஞ்சத்தின் தேவன்".
இயேசு சொல்லும்போது: "இதோ இவ்வுலகத்தின் அதிபதி வருகிறான்; அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" என்கிறார்.
ஒரு [நல்ல] தலைவன் என்பதற்கும், "கொள்ளைக்கூட்டத் தலைவன்" என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? இரண்டிலும் தலைவன் என்ற வார்த்தை இருப்பினும் நமக்கு புரிகிறதே. சீரகத்துக்கும் பெருஞ்சீரகத்துக்கும் (சோம்பு) வித்தியாசம் தெரிகிறதே! வெங்காயத்துக்கும் வெள்ளைவெங்காயத்துக்கும்(பூண்டு) வித்தியாசம் தெரிகிறதே! ஆனால் தேவனுக்கும், "இப்பிரபஞ்சத்தின் தேவனுக்கும்" உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை.


------------------------
மூன்றாவதாக, "அப்படித்தான் இயேசுவும் தன்னை தேவன் என்றார்" என்பதும் பிழையாகும்.

"அப்படி அல்ல" என்பதை அறிந்துகொள்ளவும்.
- இயேசு பிலாத்துவிடம் விசாரிக்கப்படும்போதும்: "நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவா?" என்ற கேள்விக்கு அவர் "நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்" என்றார். (மாற்கு 14:61)
- மோசேயிடம் தேவன்: நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்; "இருக்கிறேன்(I AM)" என்பவர் அனுப்பினார் என்று சொல் என்றார்.
இயேசு: ஆபிரகாமுக்கு உண்டாவதற்கு முன்னமே நான் "இருக்கிறேன்(I AM)" என்று சொன்னார்; (யோவான் 8:58) அங்கே நான்தான் அவர் என்று சொல்கிறார்.
- தேவன் ஏசாயாவில் "நான் முந்தினவரும் பிந்தினவரும்தானே" என்று சொன்னதை இயேசு நான்தான் அவர் என்று
வெளிப்படுத்தலில் "நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்" என்கிறார்.
- மேலும், ஆ
தியிலே வார்த்தையிருந்தது....அந்த வார்த்தை தேவனாயிருந்தது ... அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார் என்பதிலிருந்து இயேசுதான் அந்த தேவன் என்றும் புரிகின்றதல்லவா? இன்னும் பல வசனங்களை எடுத்து விளக்கிக்கொண்டு போகலாம்.

இயேசு தேவனுடைய குமாரன் என்றும், தேவன் என்றும் ஏற்கனவே கேள்விபதில் 21ல் விளக்கப்பட்டுள்ளது. இயேசு தேவனல்ல என்று சொல்வது பல கூற்றுகளை அலசி ஆராய்ந்து பார்க்காமல் சொல்லும் பிழையாகும்.


தமிழில் எத்தனையோ கிராமங்களில் தங்கள் பேரபிள்ளைகளை “சாமி” என்று பாட்டிகள் அழைக்கின்றனர். அதினால் அவர்கள் சாமியா? மனிதன் குட்டி தேவன் அல்ல, தேவனுமல்ல. ஏதேன் தோட்டத்தில் நீங்கள் தேவர்களைப்போல ஆவீர்கள் என்ற ஆசையை தூண்டிவன் பிசாசு. கர்த்தராகிய இயேசுவாகிய தேவன் ஒருவரே மனிதனாக வந்தார். 

பரலோகத்திலும்: "அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை" என்று வாசிக்கிறோம். இங்கே பரலோகத்திலும் மனிதன் தேவனாக வாய்ப்பே இல்லை, ஜனங்களாகவே இருப்பார்கள் என தெளிவாக உள்ளது. எனவே பரலோகத்தில் தேவனாக இருப்போம்  என்கிற போதகம் எல்லாம் பிசாசினால் உண்டானது.


சிந்தனைக்கு:

சங்கீதம் 8:5ல் "நீர் அவனை(மனிதனை) தேவதூதர்களிலும் (தேவர்கள் - Elohim என்று சொன்னால்) சற்று சிறியவனாக்கினீர்" என்பதில் உங்கள் கணக்கின்படி மனிதன் குட்டி தேவர்கள், தேவதூதர்கள் பெரிய தேவர்கள் என்பதாகிவிடுகிறது. என்றால் தேவன் யார்?

ஏசாயா 40:25 இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார். ஏசாயா 44:8 என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே;

Tuesday, November 16, 2010

62. இயேசுவைப்போல் பிறப்பதற்கு முன்பே பெயர் இடப்பட்டவர்கள் வேறு யாரேனும் பைபிளில் உண்டா?

பதில்: ஆம், சிலர் உண்டு. 

 [1] ஆதியாகமம் 17:19 (ஈசாக்கு) அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். 

 [2] ஆதியாகமம் 16:11,12 (இஸ்மவேல்) பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; 

 [3] I இராஜாக்கள் 13:2 (யோசியா) அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி; 

 [4] I நாளாகமம் 22:9 (சாலொமோன்) இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன் பேர் சாலொமோன் என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவான். 

 [5] லூக்கா 1:13 (யோவான் - ஸ்நானகன்) தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. 

 [6] ஏசாயா 44:28. (கோரேஸ்) கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான். (குறிப்பு: ஏசாயா-கி.மு. 8ம் நூற்றாண்டு; கோரேஸ்-கி.மு.559~530. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு) இயேசுவையும் சேர்த்து மொத்தம் ஏழுபேர். 

 [7] மத்தேயு 1:21 (இயேசு) அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். லூக்கா 1:31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. .

Sunday, November 7, 2010

61. உபாகமம் 18:15-ல் சொல்லப்பட்டவர் முகமதுதானே - இதை உங்களால் மறுக்கமுடியுமா?

Part I

இஸ்லாமிய சகோதரர் ஒருவர் இக்கேள்வியை (இன்னும் சில கேள்விகளும்) கேட்டார். இந்த வசனத்தில் சொல்லப்பட்டவர் முகமது அல்ல, இயேசு.

இஸ்லாமியர்களைப் பொறுத்தமட்டில் கிறிஸ்தவர்களின் வேதமானது தவறு. அப்படியானால் இவர்கள் பைபிள் பக்கமே வரக்கூடாது. (உண்மையிலேயே அவர்களுடைய புத்தகம்தான் பைபிளில் இருந்து எடுத்து புரட்டப்பட்டதும், தவறான உபதேசங்களையுடையதுமாக இருக்கிறது. முகமது என்பவர் 500 வருடம் கழித்து வந்த ஒரு கள்ளப்போதகர். இதைப்பற்றி விளக்கமாக ஒரு தனி கட்டுரை எழுதலாம்.)

இவர்கள் முகமது தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்று நிரூபிக்க அவரைப்பற்றிய முன்னறிவிப்பு எங்கேயாவது இருக்கவேண்டுமே என்பதால் இங்கே ஓடி வருகின்றனர். இதற்காக உபாகமம் 18:15 எடுத்து சொல்கின்றனர். இங்கே சொல்லப்பட்டவர் இயேசு, முகமது அல்ல.

உபாகமம் 18:15-22
. உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.
. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.
. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.
. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
. சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
. ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.


 [A] என்னைப்போல: இது வெறும் மோசேயின் சரீரப்பிரகாரமான வாழ்வைப்பற்றிய ஒப்பிடுகை அல்ல. 
- மோசே தேவனை முகமுகமாக தரிசித்தவர். முகமது தேவனை தரிசிக்கவில்லை.
- மோசே இஸ்ரவேலன். முகமது இஸ்ரவேலன் அல்ல.
-  மோசே பல அற்புதங்களைச் செய்தவர். முகமது அற்புதம் ஒன்றும் செய்யவில்லை.
- மோசேயைப்போல சாந்தகுணமுள்ள மனுஷன் இல்லை என்று வாசிக்கிறோம்.
இயேசு மிகவும் சாந்தகுணமுள்ளவராயிருந்தார். அவர் “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” என்றார்.  ஆனால் முகமது பலரைக் கொன்றவர்.


[B] சகோதரர் யார்?
[B1] இங்கே உங்களுடைய சகோதரருக்குள்ளே என்றால் இஸ்ரவேல் ஜனங்களுடைய சகோதரருக்குள்ளே என்று பொருள். அதாவது இஸ்ரவேல் ஜனங்களின் 12 கோத்திரங்களுக்குள் ஆகும். இஸ்லாமியர்களோ இஸ்ரவேல் ஜனங்களுக்கு சகோதரன் இஸ்மவேல் என்பவனின் சந்ததி என்று நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. ஆபிரகாமுக்கு ஈசாக்கு, இஸ்மவேல் பிறந்தனர். அவர்கள் இருவரும் சகோதரர். ஈசாக்கு என்பவனுக்கு பிறந்தவர்கள் யாக்கோபு, ஏசா; இவர்கள் இரட்டையர்கள். தேவன் யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என்று மாற்றினார். இன்று இஸ்ரவேல் தேசம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அது யாக்கோபுக்கு தேவன் இட்ட பெயர்! யாக்கோபுக்கு பிறந்தவர்கள் 12 பேர்; இவர்கள் வம்சம்தான் இஸ்ரவேலர்.

யாக்கோபின் 12 குமாரரில் ஒருவனாகிய யோசேப்பு எகிப்திலே இருந்தபோது அவனுடைய பத்து சகோதரரும் வந்து அவனுடன் நாங்கள் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள் நாங்கள் எல்லாரும் 12 பேர் சகோதரர் (இஸ்ரவேலர்கள்) என்று சொல்கின்றனர்.

[B2] ஏசாவின் சந்ததியாரும் இஸ்ரவேலருக்குச் சகோதரர் என்று சொல்லப்பட்டுள்ளது:
எண் 20:17,18
17. நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் (சேயீர் தேசம்) கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரை குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச் சொன்னான்.
18. அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக் கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.

மேலே ஏதோம் என்பது யாக்கோபு (இஸ்ரவேல்) என்பவரின் சகோதரன் ஆவார். ஆதியாகமம் 25:30 அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.

ஆதியாகமம் 36:8 ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர்.

[B3] யாத்திராகமம் 2:11 மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமை சுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு...

மேலே மோசேயைப் பொருத்தமட்டில் சகோதரர் என்பவர்கள் எபிரெயர்கள் அதாவது இஸ்ரவேல் ஜனங்கள். இங்கேயே விவாதத்தை மூடிவிடலாம். (பல தலைமுறைகள் மேலே போகக்கூடாது; கொஞ்சம் நாள் கழித்து நோவாவின் பிள்ளைகளில் காமும், இஸ்மவேலும் சகோதரன் என்று சொன்னாலும் சொல்வார்கள் போலும்.)

எனவே மோசே சொல்லும்போது: எபிரெயர்கள் (அதாவது இஸ்ரவேலர்கள்), ஏசாவின் சந்ததியார் ஆகியோரே சகோதரர் ஆவர். இஸ்மவேலின் சந்ததி அல்ல.

[C] "என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்."

யோவான் 8:28 ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.

யோவான் 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

எனவே இவர் இயேசுதான்.

[D] மோசே யாரைக்குறித்துச் சொன்னான்?

இயேசு சொன்னார்:
யோவான் 5:46 "நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே."

இங்கேயே இந்த விவாதம் என்கிற சவப்பெட்டிக்கு ஆணியத்து புதைத்துவிடலாம். இயேசுவே தெளிவாக மோசே என்னைக்குறித்து சொன்னான் என்று சொல்கிறார். எனவே கண்டிப்பாக முகமது இல்லை.



மேலும் பேதுரு பேசும்போது:
அப் 3:22. மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
23. அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்.
24. சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.
25. நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்.
26. அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.

இங்கே பேதுரு இயேசுதான் மோசே முன்னறிவித்தவர் என்று தெளிவாக சொல்லுகிறான். எனவே விவாதம் என்று புதைக்பட்ட சவப்பெட்டியை கான்க்ரீட் போட்டு பூசிவிடலாம். இதற்குமேல் அவர்கள்  மனந்திரும்பி இயேசுவை வணங்காவிட்டால் நரகம்தான். ஏனெனில் மோட்சம்/பரலோகம் செல்ல இயேசு மட்டுமே வழி.


[E] சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும்"
தேவனுடைய நாமத்தைக் (name which is YHWH ) கொண்டு
முகமது பேசவில்லை. ஆனால் இயேசுவோ எப்போதும் பிதாவை குறிப்பிடுகிறார்.
யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
(சுயமாக வந்த முகமதுவை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டார்கள்!)
யோவான் 10:25 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.

எனவே இயேசுவைக்குறித்துதான் உபாகமம் 18:15ல் சொல்லப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------
Part II

"பாரான் வனாந்தரம்" - விளக்கம்
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு 40 வருடம் வனாந்திர வழியாக கானான் தேசத்துக்கு போனார்கள். அப்படி போகும்போது அவர்கள் சுக்கோத்திலிருந்து புறப்பட்டு, ஏத்தாமுக்கு வந்து பின்பு ஈரோத் பள்ளத்தாக்கிற்கு வந்தார்கள். இங்கிருந்துதான் செங்கடலைக் கடந்தார்கள். இந்த இடத்தை இன்றும் Google-map ல் காணலாம். Nuweiba என்று தற்போது அதற்கு பெயர்.
பின்பு சூர் என்ற இடத்துக்கு வந்து, பின்பு மாராவுக்கு வந்தாகள் (இங்கே தண்ணீர் கசப்பாக இருந்தது, அதை மதுரமாக மாற்றினார் தேவன்), இங்கிருந்து ஏலீமுக்கு வந்தார்கள் அங்கே 70 பேரீச்சமரங்களும், 12 நீரூற்றுகள் (கேணிகள்) இருந்தன. இதையும் தற்போது Google-map ல் காணலாம். ஆச்சரியமாக இன்றும் அந்த 12 நீரூற்றுகளும் உள்ளன, ஆனால் பேரீச்சமரங்களோ மிக அதிகம். அங்கிருந்து சீன், தொப்கா, ஆலூஸ், ரெவிதீம், சீனாய் மலையடிவாரம், கிப்ரோத் அத்தாவா, பாரான் வனந்திரம், காதேஸ்... என போகின்றது இடங்களின் வரிசை.
பாரான் வனாந்திரத்தில் மோசே கானான் தேசத்தை வேவு பார்க்கும்படி 12 பேரை அனுப்பினான். அவர்களில் 10பேர் துர்செய்திசொன்னார்கள். இரவு முழுதும் ஜனங்கள் அழுதனர். ஆனால் காலேபும், யோசுவாவும் தைரியம்கொடுத்தனர்.
10. அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.

இதுதான் பாரன் வனாந்தரத்திலிருந்து தேவன் பிரகாசமாக தோன்றினார் என்று அர்த்தம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
Part III

"சீனாய் மலையில் தோன்றிய பிரகாரசம் மோசேவின் வேதம் என்றால்,
சீயேரில் தோன்றிய ஒளி இயேசுவின் வேதம் என்றால்,
பாரானில் தோன்றிய பிரகாசம் எது?"

இப்படி பைபிளை சரியாக படிக்காதவரின் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது. இந்தக் கேள்வியும் தவறு, அதின் யூகமும்(assumption) தவறு.

தேவன் ஒளியாயிருக்கிறார். அவர் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் எழுந்தருளும்போது தோன்றும் மகிமைதான் அப்படியாக கூறப்பட்டுள்ளது. பாரானில் தோன்றிய பிரகாசம் எது என்று Part II-ல் சொல்லப்பட்டுள்ளது.

"சீயேர்" என்று பைபிளில் எங்கும் இல்லை, அது "சேயீர்". சரியாக வேதத்தை படியுங்கள்.
சேயீர்:
உபாகமம் 1:2 சேயீர் மலைவழியாய் ஓரேபுக்கு...
எண் 20:6. அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரை விட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.
இது சேயீரில் தோன்றிய தேவனின் மகிமை.
சீனாய் மலையில் தோன்றிய பிரகாசமும் தேவனின் மகிமை.
---------------------------------------------------------------------------------------------
Part IV

"எருசலேமிருந்து யூதர்கள் ஆசாரியாரையும், லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி நீர் யார் என்று கேட்ட போது அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டது மட்டுமின்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள் பின்னர் யார் எலியாவா? என்று கேட்பார்கள். அதற்கு நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா? என்று கேட்டார்கள் அதற்கும் அல்ல என்றான்.(யோவான் 1:19,22) -- இதில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசி யார்? அவர் தான் முகமது"

எனக்கு சிரிப்புதான் வருகின்றது, நீங்கள் இப்படி புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இருக்கக்கூடாது.

"நீங்கள் ஆசிரியரா?" என்று ஒரு பையன் கேட்டான்.
அதற்கு அவர் "அல்ல" என்றார்.
உடனே அந்தப் பையன் அப்படியானால் ஆசிரியர் என்பவர் முகமது என்றான்.
என்ன ஒரு முட்டாள்தனம்!

மத்தேயு 3:11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார். (என்று யோவான் ஸ்நானகன் இயேசுவைப்பற்றி சொன்னார்)

யோவான் 1:30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான். (என்று இயேசுவைக் காட்டி யோவான் ஸ்நானகன் சொல்கிறான்.)

மத்தேயு 21:11 அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.


-------------------------------------------------------------------------------------------------

மேலே [D] என்ற வாதம் ஒன்றே மோசேயால் சொல்லப்பட்டவர் முகமது அல்ல என்று மிகத் தெளிவாக நிரூபிக்கின்றது. இதற்குமேலும் அவர் முகமது என்று
எப்படித்தான் நம்புகிறார்களோ தெரியவில்லை.

முகமது பெற்ற கட்டளைகள் சத்தியத்துக்கு மாறாக இருக்கின்றன.

கலாத்தியர் 1:8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

எனவே 500 வருடம் கழித்து பிசானவன் (ஒளியுள்ள தூதன் வடிவில் வந்து) பாதி உண்மையும் பாதி பொய்யும் பேசி முகமதுவை வஞ்சித்துள்ளான். இயேசுவின் போதனைகளை மாற்றி சொல்லும் அவர் மேலே சொன்ன வசனத்தின்படி சபிக்கப்பட்டவர்.

மத்தேயு 24:11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
II பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

500 வருடம் கழித்து வந்த முகமது ஒரு கள்ளப்போதகர். பைபிளில் சொல்லப்பட்டுள்ள தேவன் வேறு. முகமது சொல்லும் தேவன் வேறு:

குறிப்பாக பைபிளில், தேவன் பிதா, மனிதர்கள் அவரின் பிள்ளைகள். தேவன் மனிதர்களை நேசிக்கிறார். 
ஆனால் குரானில், அல்லாஹ் எஜமான், மனிதர்கள் அவனின் அடிமைகள். அன்புக்கு அவனிடம் இடமில்லை.
முகமதுவை பின்பற்றினால் நரகத்துக்கு போவீர்கள். இயேசுவைப்பின்பற்றினால் பரலோகம்/மோட்சம் கிடைக்கும்.


சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
இயேசு சொன்னார்: "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்"

காணொளிகள்: https://islam-qanda.blogspot.com/

Friday, November 5, 2010

60. தேவன் தன்னால் தூக்கமுடியாத பெரிய மலை ஒன்றை செய்ய முடியுமா?



இப்படிப்பட்ட முட்டாள்தனமான கேள்வியானது "கடவுள் இல்லை" என்ற நம்பிக்கையைச் சேர்ந்தவர்களால் முதலில் கேட்கப்பட்டது.

பதில்: "
தேவனால் எவ்வளவு பெரியமலையைச் செய்யவும் முடியும், அதை தூக்கவும் முடியும்".ஒருவர் சொன்னார்:
இந்த முட்டாள்தனமான கேள்விக்கு "ஒரே நேரத்தில் ஆம் மற்றும் இல்லை" என்பது பதில்.
தேவனால் பெரியமலையை செய்ய முடியுமா? ஆம். அதை தூக்க முடியாதா? முடியாதது இல்லை. "ஆம் மற்றும் இல்லை" என்று எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவே முடியாது, அப்படி ஒரு கேள்வியும் இல்லை என்று சொல்ல வேண்டாம். இரண்டுமே, இரண்டும் அல்ல என்பதும் ஒரு கேள்விக்கு பதிலாகும்.

"மனிதனால் பறக்க முடியுமா?" என்ற கேள்விக்கு பதில் என்ன? "இல்லை மற்றும் ஆம்". மனிதனுக்கு சிறகு இல்லை பறக்க முடியாது, எனவே இல்லை. இந்த காணொளியினை பாருங்கள் மனிதன் பறக்கிறான்: Crazy Air Gliders, எனவே  பதில் ஆம்.


இன்னும் சில முட்டாள் கேள்விகள்:

[1] தேவனால் சதுரமாக ஒரு கூம்பு அல்லது கோளம் செய்யமுடியுமா?
இதன்மூலம் நீங்கள் இந்த கேள்வியே ஒரு முட்டாள்தனமான கேள்வி என்று காட்டுகின்றீர்கள். அடுத்ததாக இந்தக் கேள்வியில் கோளம் என்ற முப்பரிணாமமும்(3D), சதுரம் என்ற இருபரிணாமமும்(2D) ஒப்பிடப்பட்டுள்ளன என்றும் காட்டுகிறீர்கள். இது போன்ற கேள்வி அடிப்படையில் தவறல்லவா?

[2] "நீ மனிதர்களை கொலை செய்வதை நிறுத்திவிட்டாயா?" என்று ஒருவரிடம் நீதிமன்றத்தில் கேட்டால் அவர் "ஆம்" என்றாலும் பிரச்சனை (இதற்கு முன் கொலை செய்திருக்கிறார்), "இல்லை" என்றாலும் பிரச்சனை (இன்னும் கொலைசெய்கிறார்). எனவே அவர் நிரபராதியாக இருப்பின் இந்தக் கேள்விக்கு ஆம், இல்லை என்ற இரண்டுமே பதில் அல்ல.

சிந்தனைக்கு:
"A" என்பவர் X, Y என்று இரண்டு உருவங்களாகப் பிரிந்து, X என்பவர் தான் தூக்க இயலாமல் செய்த மலையை Y என்பவர் தூக்கிக்காட்டுகிறார். Y என்பவர் தான் தூக்க இயலாமல் செய்த மலையை X என்பவர் தூக்கிக்காட்டுகிறார். பிறகு X, Y ஆகிய இருவரும் மீண்டும் ஒரே உருவமாக ("A" ஆக) மாறி ஒருவனிடம் இவ்விரண்டு பேரில் யார் பலசாலி, பலமற்றவர்? என்று கேட்கிறார். அவனுடைய குழப்பமான பதிலுக்குப்பின் அவர் கேட்கிறார், "இப்போது நீ என்னைக்குறித்து என்ன சொல்கிறாய்?". அவர் ஆச்சரியமானவர்.

"ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்." (I கொரிந்தியர் 1:27)

"இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்". (I கொரிந்தியர் 3:19)
தேவன் பொய் சொல்வதில்லை, தேவன் பாவம் செய்வதில்லை, தனது பரிசுத்த அம்சங்களுக்குள் தனக்குத்தானே முரண்படுவதில்லை.

------- In English ----------------

Question #60:
Can God create a huge mountain that He can not lift?

Such silly question was first asked by Atheists.

Answer is:
God can create a huge mountain of any size and God can lift it.
One person said:
The answer to such stupid question is "both YES and NO at the same time, Go figure it out." Can God make a huge mountain? Yes. He can not lift? No, can lift. Don't say that the answer for a question must be either YES or No. Both, Neither can be the answer to a question. What is the answer to "Can a human being fly?" both "NO and YES". Man has no wings so he can not fly (hence NO). Man can fly by para-gliding and air-gliding. Check this video for yourself and see that these men can fly: Crazy Air Gliders (hence YES). People say, "I am flying to New York tomorrow", referring to their air travel.


Here are more stupid or foolish questions:

[1] Can God make a Cone or Sphere like a Square?
Aren't you showing yourself as stupid by asking such question? Moreover a plane (Square) which is of two dimension is being compared to an object (Sphere) of three dimension. Isn't such question wrong at the very basic level?

[2] If a man was asked in the court, "Have you stopped killing the people?". If he says "YES" he is in trouble (means he was killing in the past), and if he says "NO" he is in trouble (means he is still killing). If the person is not guilty, then the answer for such question is neither YES nor NO.

Musing:
Someone called "A" splits himself into two personalities say X, Y. And X makes a mountain that he can not lift but Y is able to lift it and Y makes a mountain that he can not lift but X is able to lift it. Then X,Y merges together back to "A" and asks the man a question, "Who you think is stronger and who is weaker?". After the man's confused answer, He asks "Now, what do you think about me?". He is wonderful.

"But God hath chosen the foolish things of the world to confound the wise; and God hath chosen the weak things of the world to confound the things which are mighty;" (I Cor 1:27)

"For the wisdom of this world is foolishness with God. For it is written, He taketh the wise in their own craftiness." (I Cor 3:19)

God does not lie, God does not commit sin and does not contradict himself within His holy attributes.