Wednesday, March 31, 2010

33. ஆவியின் வரங்கள் என்றால் என்ன? ஆவியின் கனி கலா 5:22ல் சொல்லப்பட்டுள்ளது.

ஆவியின் வரங்கள்:

II இராஜாக்கள் 2:9
அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.
இங்கே எலியா செய்த அற்புதங்கள்/அடையாளங்கள் மற்றும் ஆவியானவர் பேசி வழிநடத்துதல் என்னும் விசேஷமான தேவனுடைய சக்தியை "ஆவியின் வரம்" என்று எலிசா குறிப்பிடுகிறான். இங்குதான் முதலாவதாக ஆவியின் வரம் குறித்து சொல்லப்பட்டுள்ளது.

[A] "ஆவியின் வரங்கள்" என்பதற்கு கிரேக்க மொழியில்
χαρίσματα (Charismata = gift) என்று அழைக்கப்படுகின்றது.
1 கொரி 12:4. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே.

12:4 Διαιρέσεις δὲ χαρισμάτων εἰσίν τὸ δὲ αὐτὸ πνεῦμα

[B] ஆனால் வரம் என்று வாசிக்கும்போது கிரேக்க மொழியில் δωρεά (dōrea =bestowal, bestowment, donation) என்று சொல்லப்படுகின்றது.(அப் 2:38 38. பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.2:38 Πέτρος δὲ ἔφη πρὸς αὐτούς Μετανοήσατε καὶ βαπτισθήτω ἕκαστος ὑμῶν ἐπὶ τῷ ὀνόματι Ἰησοῦ Χριστοῦ εἰς ἄφεσιν ἁμαρτιῶν καὶ λήψεσθε τὴν δωρεὰν τοῦ ἁγίου πνεύματος )

தமிழில் ஒருமை, பன்மையில் கூறப்பட்டுள்ளது. பவுல் கிரேக்க மொழியில்தான் இந்த நிருபங்களை எழுதினார் என்பதை நினைவில் கொள்ளவும்.

1 கொரி 12ம் அதிகாரத்தில் ஆவியின் வரங்கள் ஒன்பது.


I கொரிந்தியர் 12:8-11 எப்படியெனில்,
1. ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும்,
2. வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
3. வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும்,
4. வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,
5. வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும்,
6. வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும்,
7. வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும்,
8. வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும்,
9. வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.

I கொரிந்தியர் 14:12 நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;

மேலே கூறப்பட்டவை (தேவனுடைய) ஆவியின் வரங்கள் (Charisma)ஆகும்.


ஆவியின் கனிகள்:

"கலா 5:16-22. பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை."

22 ல். ஆவியின் கனி என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கு கனி என்றால் என்ன?

மத்தேயு 7:17 அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
யோவான் 15:2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
மத்தேயு 12:35 நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

எனவே கனி என்பது நம்முடைய "சுபாவம் - Character" (குணம்) குறிக்கிறது.
தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஆவியின் கனியாகிய அன்பு, ... இச்சையடக்கம் என்ற குணங்களுடன் காணப்பட்டால் நம்மில் அந்த கனிகள் உள்ளன என்று பொருள்படும்.

.

Sunday, March 14, 2010

32. பாதாளத்தின் திறவுகோலை இயேசு சிலுவையில் பிசாசை தோற்கடித்து பெற்றாரா?

பின்னூட்டம்:
"அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ எழும்பி வரபண்ணினது சாமுவேலே. காரணம் இயேசு கிறிஸ்து மரித்து உயிரோடு எழும்பும் வரை மரணத்துக்கும் பாதாளத்துக்கும் உரிய திறவுகோல் சாத்தானிடமே இருந்தது. இயேசு சிலுவையில் பிசாசை தோற்கடித்து அந்த திறவுகோலை பிசாசிடமிருந்து பறித்துகொண்டார். இப்போது அந்த திறவுகோல் இயேசுவிடம் இருக்கிறது. மட்டுமல்ல இயேசுவின் மரணத்துக்கு முன்பு வரை பரதீசு பாதாளத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருக்க வேண்டும். அதனால் தான் ஆபிரகாமுடைய மடியிலிருந்த லாசருவை ஐஸ்வரியவான் பார்க்கமுடிந்தது. அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு பெரும் பிளப்பு மட்டுமே இருந்தது. ஆனால் அவர்களை இவர்களும், இவர்களை அவர்களும் பார்க்க முடிந்தது. கிறிஸ்துவினுடைய மரணத்திற்கு முன்பு மரணத்திற்கும் பாதாளதிற்குமுரிய திறவுகோல் பிசாசிடம் இருந்த படியால் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ சொன்னவுடன் பிசாசு போய் சாமுவேலை கூட்டிகொண்டுவந்தான்." என்று ஒருவர் சொன்ன கருத்துக்கு பதில்


விளக்கம்:
இயேசு பிசாசிடம் இருந்து திறவுகோல்களை (keys) பெற்றதாக வேதாகமத்தில் எங்கேயும் இல்லையே!

இங்கே "சாவி" என்பது ஒரு உலோகத்தால் (Metal) செய்யப்பட்டது என்று அர்த்தமல்ல. அதிகாரம் (authority/power) என்று பொருள். சரீர மரணமானது பாதாளத்திற்கு அல்லது பரதீசுக்கு செல்லும் மறைவான வாசல் (portal) என்று சொல்லலாம். ஆத்துமாவின் மரணம் என்பது நரகத்திற்கு செல்லும் இரண்டாம் மரணம் எனப்படும்.
"அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்" என்று வாசிக்கிறோம். இங்கே சொல்லப்பட்டுள்ள மரணத்துக்கு அதிகாரிதான் பிசாசு. அதாவது பாவத்தில் ஜீவிப்பவர்களுக்கு அதிகாரி. எனவே வேதாகமத்தில் சில கூறப்பட்டிருக்கும் இடங்களில் மரணம் என்னும் வார்த்தையை நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும்.
வெளி 1:18ல் மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய (Hades) திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்."

வெளி 1:18 καὶ ὁ ζῶν καὶ ἐγενόμην νεκρὸς καὶ ἰδού, ζῶν εἰμι εἰς τοὺς αἰῶνας τῶν αἰώνων ἀμήν καὶ ἔχω τὰς κλεῖς τοῦ ᾅδου καὶ τοῦ θανάτου

the keys :κλείς kleis of hell: ᾅδης hadēs and: καί kai
of death: θάνατος thanatos
பிசாசு ஆதாமிடமிருந்து சாவியைப் பெற்றான் என்று சிலர் சொல்லுகின்றார்கள். இதுவும் விநோதமாக இருக்கின்றது. ஆதாமுக்கு அந்தச் சாவியை யாரும் கொடுக்கவில்லை. அவர்கள் பாவம் செய்ததினால் பாவம் மற்றும் மரணத்தை இந்த பூமிக்கு வரப்பண்ணினர். (ரோமர் 5). இயேசு பிசாசை பாதளத்துக்குச் சென்று ஜெயித்து சாவியை பெற்றார் என்றும் வேதாகமத்தில் சொல்லப்படவில்லை.

இன்னொரு ஆச்சரியமான விஷயம், "இயேசு பிசாசை சிலுவையிலே ஜெயித்தார்" என்று வார்த்தைக்கு வார்த்தை சரியாக வேதத்தில் சொல்லப்படவில்லை! ஆனால் இப்படியாக இரண்டு வசனங்களை வாசிக்கிறோம்:
கொலோ 2:13-15 உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

எபி 2:14, 15
. ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.

மேலே "சிலுவையிலே வெற்றிசிறந்தார்" என்றும் " பிசாசானவனை அழிக்கும்படிக்கும்" என்று வாசிக்கிறோம். "மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசு என்பதில்" 'மரணம்' என்றால் பாவத்தில் கிடக்கும் அனுபவமாகும். ஏனெனில் எபேசியர் 2:1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். எபேசியர் 2:5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். என்று வாசிக்கிறோம்.

சரீரத்தில் மரிப்பவர்கள் எங்கே செல்லுகின்றார்கள்?
பரதீசுக்கோ (Paradise), பாதாளத்திற்கோ (Hades) செல்கின்றார்கள் என்று ஆபிரகாம்-லாசரு என்னும் சம்பவத்தை இயேசு சொல்லும் (லூக்கா 16:19-31) பகுதியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்குப்பின்
அக்கினிக் கடல் (Lake of fire) , பரலோகம் (Heaven) என்று செல்லும் இடங்களிலிருந்து இவை வேறுபட்டவை.
இயேசு உயிரோடிருக்கும்போதே சொன்னார்:மத் 16:18 மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் (Hades) வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை"என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்". இது சிலுவைக்கு முன்பே கூறப்பட்டதாகும். எனவே ஆதிமுதல் அவர் திறவுகோல்களை வைத்திருந்தார். பிசாசிடம் இருந்து பறிக்கவில்லை.
சிலுவையில் அறையப்படும் வரைக்கும் பிசாசு சாவியை வைத்திருந்தான் என்று சொன்னால்...
- எலியா உயிர்ப்பித்த பிள்ளை (1 இரா 17:23)
- எலிசா உயிர்ப்பித்த மகன் (2 இரா 8:1)
- எலிசா சடலம் பட்டு உயிரடைந்த ஆள் ( 2 இரா 13:21)
- இயேசு உயிரோடு எழுப்பிய லாசரு
- இயேசு உயிரோடு எழுப்பிய யவீருவின் மகள்
- இயேசு உயிரோடு எழுப்பிய விதவையின் மகன்.
இவர்களை உயிரோடு கொண்டுவர போய் பிசாசிடம் சாவி வாங்கி வரப்பட்டதா? இல்லை.

உபாகமம் 32:39 நான் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறேன் என்று நாம் வாசிக்கிறோமே! எனவே தேவனுக்குத்தான் அந்த அதிகாரம் உண்டு.


.

Friday, March 12, 2010

31. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வருவதற்கு முன் நியாயப்பிரமாணம் சுமார் எத்தனை வருஷங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டது?

வரலாறு:

யாத்திராகமம் 1:11 அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப்
பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.

சிலர் கி.மு 13ம் நூற்றாண்டில் பார்வோன்
ராமசேஸ்-II என்பவன் வாழ்ந்தான் என்று சொல்கின்றனர். இவனுடன்தான் மோசேயும் வாழ்ந்தான். பின்பு எத்தியோப்பியாவுக்கு ஓடிப்போய் அங்கே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான். தேவன் ஓரேப் பர்வதத்தில் அவனை சந்தித்து இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்கு வழிநடத்திசெல்லும்படி கூறினார். அப்போது இஸ்ரவேல் ஜனங்கள் பார்வோனுக்காக பித்தோம், ராமசேஸ் (Pithom, Raamses) என்னும் பண்டசாலை நகரத்தை கட்டினார்கள். இவ்விரு நகரங்களும் செத்தி-I மற்றும் ராமசேஸ்-II என்னும் இவர்களின் கீழ் கட்டப்பட்டவையாகும். அதற்குப்பின் வந்த புதிய ராஜன் 10 வாதைகளை சந்தித்து, இஸ்ரவேல் ஜனங்களை செங்கடல்வரை பின்தொடர்ந்து போன மெர்னெபாத் என்னும் பார்வோன் ஆவான்.
கி.மு. 1444ல் தான் எகிப்தியர்களின் 18வது பார்வோன் இருந்தான் என்று சிலர் கூறுகின்றனர். சாலொமோன் தேவாலாயம் கட்டியது இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபின் 480 வருங்கள் கழித்து ஆகும்.
யாத்திராகமம் சுமாராக கி.மு 17 முதல் கி.மு 13 க்கு இடைப்பட்ட நூற்றாண்டுகளில் என்று கணிக்கப்பட்டுள்ளது. சீனாய்மலையில் மோசேயின் மூலமாக வழங்கப்பட்ட நியாயப்பிரமாணமும் அப்போதுதான்.

மோசே: சுமாராக கி.மு. 1500 என்றும்.
ஆபிரகாம்: சுமாராக கி.மு. 2000.
தாவீது: சுமாராக கி.மு. 1000.
சாலொமோன் கட்டிய தேவாலயம் இடிக்கப்பட்ட வருடம் : சரியாக கி.மு 586.



பைபிள்:
யூதர்களுடைய கணக்கின்படி இந்த கி.பி 2010-ம் வருடமானது அவர்களுக்கு 5770-ம் வருடமாகும். யூதர்களுக்கு வருடமானது ஆரம்பித்த முதல் நாள் அவர்கள் எகிப்திலிருந்து விடுதலையான நாளாகும் (யாத் 12: 1,2).

எனவே இந்த கணக்கின்படி நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டு சுமார் 5000 வருடங்களுக்கு மேலேயே ஆகிவிட்டன.