Wednesday, June 30, 2010

43. பாவத்தின் வகைகள் என்ன? மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் என்றால்?



மத்தேயு 12:31 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
மத்தேயு 12:32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

[Part I]
பாவங்களை இரண்டாகப் பிரிக்கலாம்.

1. Sin of commission - செய்வதால் பாவம். (எண்ணங்களிலோ -thoughts, கிரியைகளிலோ-works )
2. Sin of omission. - செய்யத் தவறியதால் பாவம்.

மனிதன் செய்த முதலாவது பாவம் செய்கையினால்
(sin of commission or committed sin) உண்டானது. (புசிக்கவேண்டாம் என்று சொல்லியும் புசித்ததால் வந்த கீழ்ப்படியாமை என்கிற பாவம்) . தீமை செய்யாமல் இருக்கவேண்டும் என அறிந்திருந்தும் தீமை செய்தால் அது அவனுக்கு பாவமாகும். அதே போல் நன்மை செய்ய அறிந்திருந்தும் நன்மை செய்யாமல் போனால் அது அவனுக்கு பாவமாகும்.
கீழே பாவங்களைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளன:
 

மாற்கு 7:21, 22 பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். புறப்பட்டு வந்து மனுஷனை தீட்டுப்படுத்தும்.

கலாத்தியர் 5:19-21 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ரோமர் 1:23-32
23. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
24. இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
25. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
26. இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
28. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
29. அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
30. புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப்பிணைக்கிறவர்களுமாய் பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
31. உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
32. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

II தீமோத்தேயு 3:2-5
2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,
3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
5. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.

 



[Part II]
யோவான் இப்படியாக குறிப்பிடுகிறார்:
1
யோவான் 5:16. மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
மரணத்துக்கேதுவான பாவம் என்று இங்கே சொல்லப்படுவது இரண்டாம் மரணம் எனப்படும் நமது ஆத்துமாவின் மரணமாகும். அதாவது அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவது ஆகும். முதலாம் மரணம் என்பது நாம் இந்த சரீரத்தை விட்டு கடந்துபோவது ஆகும்.
[மனம்திரும்பி மன்னிப்பு பெறாத] "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று பவுல் சொல்கிறார். தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் வரும் நித்திய ஜீவன். பவுல் மிகவும் வன்மையாக (strong) பாவம் எதுவும் செய்யாமலிருங்கள் என்று சொல்கிறார். யோவானும் பாவம் எதுவும் செய்யாமல் இருங்கள் என்று வன்மையாகவே சொல்லுகிறார். ஆனால் யோவான் சொல்லுவது மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை சிலர் செய்தால் அதை நாம் பார்த்தால் அல்லது கேள்விப்பட்டால் நாம் அவர்களுக்காக தேவனிடம் வேண்டுதல் செய்யவேண்டும் அப்போது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

உதாரணத்துக்காக:
 
- பிதாவே இவர்களை மன்னியும் என்று இயேசு மற்றவர்களுடைய பாவத்துக்காக வேண்டியது.- யோபு தன் சிநேகிதர்களுக்காக வேண்டியது. 
- தேவ ஊழியர்கள் சபையில் ஒருவருடைய தவறுக்காக தேவனிடம் வேண்டுதல் செய்வது. (பக்கத்து வீட்டுக்காரரிடம் தன் பிள்ளை செய்த தவறுக்கு பெற்றோர் மன்னிப்பு கேட்பது போல்.)
ஒரு மனிதன் மனந்திரும்பி அறிக்கை செய்யப்படும் பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும். ஏனெனில் யோவான் "இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்"என்று சொன்னார். பவுல் சொல்லும்போது தேவனைப்பற்றிய அறிவை அறிந்த பின்பு பாவம்செய்தால் அவர்கள் தேவனுடைய குமாரனை சிலுவையில் இரண்டாம் முறையாக அறைவதால் அவர்களுக்கு மன்னிப்பில்லை என்று வன்மையாகக் கூறுகிறார். ஆனால் பேதுரு இயேசுவைப் பின்பற்றிய தேவனுடைய சீடன். அவன் இயேசுவை அறியேன் என்று மறுதலித்தான், சபித்தான். அதன்பின்பு இயேசு சொன்னதை நினைவுகூர்ந்து மனம்கசந்து அழுதான், அவனுக்கு மன்னிப்பு கிடைத்தது. அதன்பின்பு அவன் பெந்தெகொஸ்தே நாளில் பேசியபோது அன்றே மூவாயிரம்பேர் தேவனை ஏற்றுக்கொண்டார்கள். ஒரு போதகர் சொன்னார்: "பெரிய பாவம் (உதாரணத்திற்காக: விபசாரம்) செய்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் தினமும் மனம்கசந்து துக்கிக்கவேண்டும் என்று ஒரு போதகர் சொன்னார். இப்படிப்பட்ட பேதுரு, ராகாப், சிம்சோன் என்ற சாக்குபோக்குகளை காட்டி வேண்டுமென்றே பாவம் செய்க்கூடாது. ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் பாவம் செய்வதற்கு ஒரு சாக்குப்போக்கைத் தேடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தேவனுடைய ஆக்கினைதான் கிடைக்கும்".

நன்மை செய்ய தகுதியும் பணமும் இருந்தும் நன்மை செய்யாவிட்டால் அது பாவம். இதற்கு "லாசருவும் ஐசுவரியவானும்" பற்றி இயேசு லூக்கா 16ல் சொன்னதை குறிப்பிடலாம் என்பது என்னுடைய சொந்த கருத்து.

மேலும், இயேசு சொன்னார்: "மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக சொல்லப்படும் தூஷணம் இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்படாது". எனவே பிதா, குமாரன், பரிசுத்த ஆவி எல்லாம் வேறு வேறு அல்ல, ஒன்று தான் என்று சொல்லும் கூட்டத்தாரை பின்பற்றுவது எப்படி சரியாகும்? மரணத்துக்கேதுவான பாவத்தை இங்கே இயேசு குறிப்பிட்டுள்ளார். மற்ற மதத்தினரிலும் அநேகர் பரிசுத்தாவியானவரை தூஷிப்பதால் அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது.

Monday, June 21, 2010

42. யூதர்கள் ஏன் இயேசுவை "மேசியா"வாக ஏற்றுக்கொள்ளவில்லை?

[Part I]
இயேசுதான் மேசியா என்று எப்படி சொல்வது?
யோவான் 1:41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனிடம்: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.
லூக்கா 22:67 நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச்சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள் [என்றார்].

யோவான் 10:24-26 அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.

யோவான் 4:25 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்
இங்கே இயேசு நானே மேசியா என்று சொன்னார்! இந்த வசனங்கள் மூலம் நாம் இயேசுவே மேசியா என நிரூபிக்கலாம்.

[Part II]
ஏன் யூதர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை?

யூதர்களில் இரு கூட்டத்தார் இருந்தனர். ஒரு கூட்டத்தார் அவரைப் பின்பற்றினர்; மற்ற கூட்டத்தாரோ அவரைப் பின்பற்றவில்லை. இயேசு செய்த அநேக அற்புதங்களினிமித்தம் அவரை ராஜாவாக்கிவிட எண்ணினார்கள். யோவான் 6:15 ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
இந்தியா இங்கிலாந்தின் ஆட்சியிலிருந்து விடுதலைபெற எப்படி மகாத்மா காந்தி காரணமாயிருந்தாரோ, அதுபோல யூதர்கள் மேசியாவானவர் ரோமர்களின் ஆட்சியிலிருந்து தங்களை விடுதலைபண்ணுவார் என்று நம்பியிருந்தார்கள். இயேசு அப்படி செய்யவில்லை. எனவே அவரை மேசியா என ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதுவே முக்கிய காரணமாகும்.
அப்போஸ்தலர் 1:6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். இங்கேயும் அவர்களுடைய ஏக்கம் தெரிகிறது.
யோவான் 18:36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.

Thursday, June 10, 2010

41. பெண்கள் தங்கம் அணிவது தவறா? மூக்குத்தி அணிவது தவறா?

கேள்வி: பெண்கள் தங்கம் அணிவது தவறா? அதே தங்கத்தில் இந்தியாவின் கலாச்சாரம் நிறைந்த சின்னம் இருந்து அதை நாம் அணிவது தவறா? உதாரணமாக ஒரு மோதிரத்தில் கோபுரம் இருந்து அதை நாம் அணிந்தால் தவறா? கர்த்தருக்கு நாம் ஊழியம் செய்யும்போது அதை ஏன் கூடாது என்று சொல்கின்றார்கள். நான் பிறப்பில் இந்தியனாக இருந்தாலும் நான் கர்த்தருக்கு விசுவாசமாக இருக்கிறேன். மூக்குத்தி போடுவது தவறு என்று சொல்கிறார்கள். எனக்கு இதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. விளக்கம் தாருங்கள்.

பதில்:இந்த தலைப்பும் ஒரு விவாதத்திற்கு உரிய தலைப்பாகும்.

கிறிஸ்தவர்களில் நகை அணிபவர்கள் மற்றும் நகை அணியாதவர்கள் என்று இருக்கின்றார்கள்.
பழைய ஏற்பாட்டில் யாக்கோபின் குடும்பத்தார் குறித்து அறிவோம். அவன் தாயாகிய ரெபெக்காள் குடும்பத்தில் சிலைகளை வணங்கும் பழக்கம்,
நகை அணியும் பழக்கம் இருந்தது. ரெபெக்காள் ஈசாக்குக்கு மனைவியாக வரும்போதுகூட அவளுக்கு காதணிகளும், கடகங்களும் வெகுமானமாக கொடுக்கப்பட்டது. யாக்கோபு தன் தாயின் சகோதரனாகிய லாபானின் பெண்களை மணம் முடிக்கிறான். ஒரு நாள்...

ஆதியாகமம் 35:1-4:
1. தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.
2.அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.
3. நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.
4. அப்பொழுது அவர்கள் தங்கள் கையிலிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப்போட்டான்.


இங்கே யாக்கோபுக்கு தேவன் தரிசனமாகி பேசியபின்பு, தேவனுக்கென்று தங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு அந்நிய தெய்வங்களையும், காதணிகளையும் புதைத்துப்போட்டார்கள். நாமும் கர்த்தருக்கு பரிசுத்தமாயிருக்கவேண்டுமென்றால் பழைய ஏற்பாட்டு காலத்தின் யாக்கோபுக்குமேல் இன்னும் எப்படியெல்லாம் பரிசுத்தமாயிருக்கவேண்டும்?

ஆனால் இந்த இஸ்ரவேல் ஜனங்கள் வரலாற்றில் இவர்கள் எகிப்துக்குப் போய் அங்கே 430 வருடம் எகிப்திய கலாச்சாரத்தில் இருந்து பின்பு புறப்பட்டு வரும்போது தேவன் யாத்திராகமம் 11:2ல் "இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல்" என்றார். இங்கே பின்பு வனாந்தரத்தில் அவர்கள் செய்த
ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைக்காக பொன், வெள்ளியை முன்பே தேவன் தயார் செய்தார். மேலும், யாத்திராகமம் 20:23ல் "வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்." என்றார்.

இந்த உலகத்தில்:

இந்தியா, அரேபியா தேசங்களில் தங்கம் நகைகளை பெரிதாக விரும்பி அணிகின்றார்கள். அவர்களுக்கு ஆசை பேராசையாக உள்ளது.




அமெரிக்காவிலும் (ஐரோப்பாவிலும்) பொதுவாக தங்கம் அணிவது இல்லை. இங்கே அமெரிக்காவில் இருப்பவர்களில் பெரும்பாலானோரின் காதுகள் காலியாகவே உள்ளன. ஆனால் அவர்கள் முத்து, வைரம் மற்றும் விலையேறப்பெற்ற கற்கள் என்று அணிகின்றனர். நாம் வெளிநாடுகளில் அநேக தங்க நகைகளை அணிந்து சென்றால் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகவே தோற்றமளிப்போம். அவர்களும் நம்மை ஒரு வித்தியாசமாகப் பார்ப்பார்கள். இருப்பினும் இவர்களின் மத்தியிலும் ஒரு சிறு அணிகலன்களை நாக்கு, காதுக்கு பின்னே, உதடு, வயிறு, நெற்றி, தாடை என்று குத்திக்கொள்ளும் விநோதமான பழக்கம் சிலர் (விசேஷமாக இளைஞர்கள்) மத்தியில் உள்ளது. நம்மில் அநேகருக்கு இதைப் பார்த்தால் பிடிக்காமல் போகும். படத்தில் இடது ஒருஆண், வலது ஒருபெண். இன்னும் இதைவிட கொடூரமாக குத்திக்கொள்ளும் ஆட்களும் உள்ளனர்.
லேவியராகமம் 19:28 செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.


ஆப்பிரிக்காவில் பெண்களிடம் "மயிரைப் பின்னுதல்" என்னும் பழக்கம் உள்ளது.
இப்பழக்கம் தற்போது உலகின் எல்லா இடங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. மேலும் சிலர் பாசிகளை கோர்த்து முடிகளில் அணிகின்றனர். கழுத்துகளில் அநேக வளையங்களை மாட்டிக்கொள்கின்றனர்.





புதிய ஏற்பாட்டில்:
பேதுரு, தீமோத்தேயு மற்றும் பவுல் ஆகியோர் அலங்கரிப்பினைக் குறித்து சொல்கின்றனர்.

I பேதுரு 3:3-5 மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.

I
தீமோத்தேயு 2:9,10 ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.

I கொரிந்தியர் 12:23,24 மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.

1. தங்கத்தினை ஒரு முதலீடுக்காக (Investment) வீட்டில் வாங்கி வைத்திருக்கலாம். தவறில்லை.

2. தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் இப்படி வெளிப்படையான ஆடம்பரத்தினால் தங்களை அலங்கரிக்கக்கூடாது. தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. லூக்கா 9:3 "அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்." தேவனுக்கு ஊழியம் செய்ய ஆடம்பரம் தேவையில்லை என்பது இங்கே கருத்தாகும்.

3. நகையணியும் கலாச்சாரத்தில் ஒரு பெண் தேவனைப் பின்பற்றும்போது அவரது கணவர் உலகத்தாராக இருந்தால் அந்தப் பெண் சில பிரச்சனைகளைத் தவிர்க்கும்படி அவைகளை அணிந்திருக்கலாம்.

4. திருமணம் ஆனதற்கு ஒரு மோதிரம்தான் (Wedding ring)
அடையாளம் என காரணம் இருந்தால் அதை அணிந்திருக்கலாம்.

5. கலாச்சாரத்தைக் காரணம் காட்டி கோபுரம், பாம்பு, கோவில், சிலுவை, இயேசுவின் படம் என்று எல்லாம் மோதிரம் அணியக்கூடாது. அடுத்து ஒரு சிறு கோபுரம் கட்டலாமே என்ற பேச்சுக்கு சிலர் போனாலும் போவார்கள். பழைய ஏற்பாட்டில் பொன்னால் செய்த கன்றுக்குட்டி சம்பவங்களும் அதின் விளைவுகளும் போதுமே.
6. தேவனைக் காட்டிலும் எதில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோமோ அது நமக்கு விக்கிரகமாகும். தேவனுக்கும் நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் வரும் அது ஒரு நிலையில் அதிக கவனத்தை ஈர்ப்பதால் விக்கிரகமாகிவிடுகிறது.
மூக்குத்தியும் தேவையில்லை. மூக்குத்தி பற்றி இரண்டு இடங்களில் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஏசாயா 3-லும், நீதிமொழிகள் 11:22ல் "மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்" என்றும் வாசிக்கிறோம்.

அழகாக தோற்றம் அளிக்கவேண்டும் என்ற ஆசையே இவையனைத்திற்கும் காரணமாகும்.

ஆனால் இயேசுவைக் குறித்துச் சொல்லும்போது "நாம் விரும்பத்தக்க ரூபம் அவரில் இல்லை" என்று ஏசாயாவில் வாசிக்கிறோம். "நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை" என்று சொல்லி எளிமையான வாழ்வை வாழ்ந்து காட்டியவர் இயேசு.


நகை அணிந்து காது, கைகளை திருடர்களால் இழந்தவர்கள் அநேகர். சிலர் உயிரையும் இழந்திருக்கின்றனர். பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள் அங்கே திருடர் கண்ணமிடுவதுமில்லை, பூச்சி அரிப்பதுமில்லை. அதாவது ஏழைகளுக்கு உதவவேண்டும், அப்போது நாம் பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்கலாம் என்று இயேசு ஒரு மிகுந்த ஆஸ்தியுள்ள ஒருவனுக்கு "உனக்குள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைக்குக் கொடு. பின்பு நீ என்னைப் பின்பற்றி வா. அப்போது பரலோகத்திலே உனக்கு மிகுந்த பலன் உண்டாயிருக்கும் " என்
று சொன்னதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

நீங்கள் மற்றவர்களுக்காகவா அல்லது உங்களுக்காகவா... யாருக்காக இவைகளை அணியவேண்டும் என்று இருக்கிறீர்கள் என்று பார்த்தால் உண்மையான காரணம் வெளிவரும். நகைகளின் மேலுள்ள ஆசையா? இல்லை எல்லாரும் அணிகிறார்கள் எனவே நானும் அணியவேண்டும் என்ற காரணமா? தான் இன்னும் அழகாக தொற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையா?

இயேசு சொன்னார்:
மாற்கு 7:22 களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
லூக்கா 12:15 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

பவுல் சொன்னார்:
I கொரிந்தியர் 6:10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
காந்தியடிகள் வெளிநாட்டில் கோட்/சூட் என்று அணிந்து படித்தார். தன்னுடைய வாழ்வின் பிற்பகுதியில் ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வந்த பின்பு எளிய உடைக்கு மாறினாரே. ஏன்?

நாம் மூக்குத்தியா, தோடா, மோதிரமா என்று இங்கே கேட்பது, அநேகர் பசியினால் சாகும்போது வசதியுள்ளவர்கள் சிலர் பிரியாணியா, வறுவலா என்று கேட்பது போலாகும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள் என்று
வாசிக்கிறோமே.
கர்த்தருடைய வருகைக்கு போகும் கூட்டத்தார் கறை (spot), சுருக்கம் (wrinkle) இல்லாமல் இருக்கவேண்டும் என்று வேதத்தில் ஆவிக்குரிய அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. இயேசு சொன்னார் "
நான் இவ்வுலகத்தான் அல்லாதது போல நீங்களும் இந்த உலகத்தார் அல்ல". இந்த உலகமும் அதின் வேஷமும் கடந்து போகும். இவைகளால் நம்மை கறைப்படுத்தாமல் இருப்பது மேலான ஜீவியம் ஆகும்.