Friday, May 1, 2020

85. கொரோனா வைரஸ் குறித்து பைபிளில் உள்ளதா? இது கடைசி காலமா?


கேள்வி: கொரோனா வைரஸ் குறித்து பைபிளில் உள்ளதா? இது கடைசி காலமா?


பதில்: கடைசி நாட்களில் கொள்ளைநோய்கள் உண்டாகும் என்று இயேசு கூறியுள்ளார். கொரோனா என்ற பெயர் குறிப்பிடவில்லை. இவைகள் வேதனைக்கு ஆரம்பம். முடிவு அல்ல என்று கூறியுள்ளார்.

 மத்தேயு 24:3-14. "பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்."

[1] நானே கிறிஸ்து:

நானே இயேசு என்று சொல்வார்கள் என்று சொல்லவில்லை. கிறிஸ்து என்ற வார்த்தையை சொல்லியிருக்கிறார். அதாவது கிறிஸ்து என்றால் - அபிஷேகம் பண்ணப்பட்டவர் (Anointed) என்று பொருள். அநேகர் என்னுடைய அபிஷேகத்தைப்பாருங்கள் என்று தங்களைப் பிரபலப்படுத்தும்படி மேடைகளிலும், ஊடகங்களிலும் பிதற்றுவார்கள். இவர்களை நம்பி அநேகர் ஏமாந்துபோவார்கள்.  பொல்லாத ஆவிகளைக்கொண்டு போலியான காரியங்களை நடத்துவார்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்களே ஏமாந்துபோவார்கள்.

[2] கொள்ளை நோய்கள் உண்டாகும்:

கொரோனா நோய் ஒன்றும் புதிதல்ல. இந்த கொரோனா நோய் இதற்கு முன்பு MERS (Middle East Respriatory Syndrome) 2012-ல் என்று விலங்குகளிடமிருந்து வந்துள்ளது, குறிப்பாக ஒட்டகத்திடமிருந்து வந்தது.  WHO (World Health Organization - உலக சுகாதார மையம்) தளத்தில் வாசிக்கலாம்: https://www.who.int/news-room/fact-sheets/detail/middle-east-respiratory-syndrome-coronavirus-(mers-cov)

இங்கே  "Middle East respiratory syndrome (MERS) is a viral respiratory disease caused by a novel coronavirus, that was first identified in Saudi Arabia in 2012" என்று குறிப்பிட்டுள்ளனர். மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS) என்பது ஒரு வைரஸ் சுவாச நோயாகும், இது ஒரு நவீன கொரோனா வைரஸ் (மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ், அல்லது MERS - CoV) 2012 ல் சவுதி அரேபியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. இதைக்குறித்து ஒரு காணொளி செப்டம்பர் 2019-ல் இந்த நோய் வருவதற்கு முன்பே வெளியுட்டுள்ளேன், அதில் கொரோனா வைரஸ் என்ற பெயரும் வருகிறது. இப்படி காணொளி செய்தபின்னும்கூட நான் கொரோனா வைரஸ் வரப்போகிறது என்று புரிந்துகொள்ளவில்லை. 

உலக சுகாதார மையம் இவர்களை விசாரித்ததில் இவர்கள் ஒட்டக சிறுநீரை குடித்துள்ளனர். ஏனெனில் முஸ்லீம்களின் முகமது வியாதியுள்ளவர்களை ஒட்டகத்தின் சிறுநீர், பால் குடிக்கச்சொல்லி சொல்லியிருக்கிறார். இப்படி பொல்லாத ஒரு மனிதரின் பேச்சை கேட்டதால் வந்த விளைவுதான் முந்திய கொரோனா வைரஸ்.

இப்போதும் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்துதான் வந்திருக்கவேண்டும் என்று எண்ணப்படுகிறது. சிலர் இது ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்பட்டது என்று கூறுகின்றனர். (நானும் அப்படியே ஒரு சொப்பனத்தில் ஒரு இருட்டான இடத்தில் சிலர் அதை ஆராய்ச்சிசெய்வதை கண்டு விழித்துக்கொண்டேன். ஏன் இவர்கள் இருட்டில் இருக்கின்றனர் என்று வியந்தபோது அது அந்தகாரத்தின் கிரியை என்று உணர்ந்துகொண்டேன்.) இதில் HIV-Sequence சேர்க்கப்பட்டுள்ளது என்று பிரான்ஸ் தேசத்தை சேர்ந்த நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி லூக் மாண்டக்னியர் (Luc Montagnier) கூறுகின்றார். Nobel laureate: Covid-19 is lab grown and ... - Ponderwallponderwall.com › 2020/04/18 › lab-grown-coronavirus

இதுபோன்ற உலக அளவிலான பாதிப்பு இதற்கு முன்பு 1918-ல் ஸ்பேனிஷ் காய்ச்சல் என்ற பெயரில் உண்டானது. "உன்பக்கத்தில் ஆயிரம்பேரும் உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும்..." என்ற வசனத்தை பிடித்துக்கொள்வோமாக.


[3]  அநேக கள்ளத்தீர்க்கதரிகள் எழும்பி ஏமாற்றுவார்கள்:

இது இப்போதே நடந்துகொண்டிருக்கிறது. இதைப்பற்றி கேள்வி பதில் 83-ல் குறிப்பிட்டுள்ளேன்.

[4] பஞ்சங்கள்:

இந்தியாவில் இப்போது பல இடங்களில் ஜனங்கள் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். இந்த கொள்ளைநோயினால் பஞ்சங்கள் உண்டாகும். ஆப்பிரிக்காவில் வயல்களில் வெட்டுக்கிளிகள் மேகம்போல் இறங்கி சாப்பிடுகின்றன. இது மார்ச் 2020-ல் நடந்தது.  ஆமோஸ் சொன்னது போல் தேவ வசனம் கேட்கக்கூடாத பஞ்சம் இப்போதே வந்துவிட்டது. நாம் இன்று தொலைக்காட்சி மற்றும் ஸூம் போன்ற மென்பொருள் வைத்து கூடுகிறோம்.

[5] அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்:

ஜனங்கள் தற்பிரியாரய், மற்றவர்களைக்குறித்த அக்கறையில்லாமல், தன் குடும்பம், தனது பிள்ளைகள் என்பதிலேயே சிந்தையாய் இருப்பார்கள். மற்றவர்கள் கஷ்டப்படுவதைக்கண்டால் இரக்கப்படாமல் (நல்லா கஷ்டப்படட்டும் என்று) விட்டுவிடுவார்கள்.

[6] கொலைசெய்வார்கள்:

இயேசுவைக்குறித்து பிரசங்கம் செய்பவர்கள் கொலைசெய்யப்படுவார்கள். இது முஸ்லீம் நாடுகளாகிய அரபு நாடுகளில் அல்-கைதா மற்றும் ஐசிஸ் என்ற தீவிரவாத மத அமைப்புகள் செய்கின்றன. இந்தியாவிலும், நேபாளத்திலும் பாஸ்டர்கள், ஊழியர்கள் உயிருடன் எரிக்கப்படுகின்றர்.  இதுவும் நிறைவேறிவருகிறது.

[7] பூமி அதிர்ச்சிகள்
பல இடங்களில் பூமி அதிர்ச்சிகள் உண்டாகும். குறிப்பாக பூமி அதிர்ச்சிகளின் அளவு அதிரிக்கும்.
சிலீ, அலாஸ்கா, சுமத்ரா (இந்தோனேஷியா), ஜப்பான், துருக்கி, அஸ்ஸாம்(வட இந்தியா), பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா, பெரூ போன்ற இடங்களில் இவைகளை காணலாம்.

[8] இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்:

இப்போது சுவிசேஷம் பிரசங்கிக்க வழி இல்லாமல் இருக்கலாம். இதற்கான வாசல் சீக்கிரத்தில் திறக்கப்படும். ஜனங்கள் கூட்டம் கூட்டமாக இரட்சிக்கப்படுவார்கள். நான் இருக்கும் இடத்திலிருந்து ஒருமணிநேர தூரத்தில்தான் லாஸ் ஏஞ்சல்ஸ் அசூசா தெரு உள்ளது. இங்குதான் உலகப்புகழ்பெற்ற எழுப்புதல் 1906-ல் உண்டானது. இது 1912-வரை இருந்தது. ஜனங்கள் கட்டிடத்தின் மேல் உள்ள நெருப்பைக்கண்டு தீயணைப்பு குழுவினருக்கு பல தொலைபேசி அழைப்புகள் விடுத்தனர். அது உண்மையான நெருப்பு அல்ல, அக்கினிமயமான நாவுகள்.  இந்த எழுப்புதலில் பல அற்புதங்கள் நடந்தன. ஜனங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர்.வெவ்வேறு பாஷைகளில் பேசினர். இரட்சிக்கப்பட்டனர்.  இதுபோன்ற எழுப்புதல் மீண்டும் 100வருடம் கழித்து வரும் என்று வில்லியம் சீமோர் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அந்த இடம் இப்போது (2 வருடங்களுக்கு முன்பு) மூடப்பட்டுவிட்டது என்பது வருத்தமளிக்கும் செய்தியாகும். ஜனங்கள் அதை மறந்துவிட்டனர்.

இருப்பினும் சுவிஷேசம் பின்மாரி மழையுடன் பிரசங்கிக்கப்படும். சகல ஜாதிகளுக்கும். அநேக முஸ்லீம்கள் இரட்சிக்கப்படுவார்கள். பின்பு முடிவு வரும். அதுவரை இது வேதனைகளுக்கு ஆரம்பம் என்று இயேசு கூறியுள்ளார்.

நாமோ நம்மை ஆராய்ந்துபார்த்து இயேசுவிடம் கிட்டிச்சேர்வோமாக (ஜெபஜீவியத்தை கட்டி எழுப்புவோமாக).


.