Tuesday, June 16, 2020

86. யெகோவா சாட்சிகள் அமைப்பினரைப் பற்றி சொல்லுங்கள்.

கேள்வி: யெகோவா சாட்சிகள் என்னும் கூட்டத்தாரைப் பற்றி சொல்லுங்கள்

பதில்:
முதலாவதாக "யெகோவா சாட்சிகள்" சாத்தானால் வஞ்சிக்கபட்டவர்கள்.  இவர்களை பின்பற்றுவோர் நிச்சயமாக நரகத்துக்கு போவார்கள். எனவே ஜாக்கிரதையாயிருங்கள்.

வரலாறு:
வில்லியம் மில்லர் (William Miller) என்பவர் 1800-ல் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். அவர் 1843-ல் இயேசுவின் இரண்டாம் வருகை இருக்கும், அதன் பின்பு அர்மெகதோன் யுத்தம் இருக்கும் என்று கணித்தார். இது பொய்யாகிப் போகவே இது மீண்டும் கணக்கிடப்பட்டு 1844 மார்ச் மாதம் என்று அறிவிக்கப்பட்டது. அதுவும் பொய்யாகிவிட அக்டோபர் 1844 என்று அறிவிக்கப்பட்டது.  அதுவும் பொய்யாகிவிட அந்த தேதி வரலாற்றில் ஒரு சோகமான நாளாகிவிட்டது. அது ஏமாந்த நாளாகிவிட்டது (Great disappointment day). இதனால் மிகப்பெரிய அளவில் வன்முறைகள், சபைகள் தீ-வைத்து கொளுத்தப்பட்டன. வன்முறை கும்பல்களும், கொலைகளும் நடந்தன. எனவே மில்லர் இயக்கமானது பொல்லாங்கானது என்று ஜனங்கள் அதைவிட்டு கலைந்தனர்.

எலன் ஜி. வைட் (Ellen G. White) என்னும் சிறுமியின் குடும்பம் மெத்தடிஸ்ட் சபையை சேர்ந்தது. பிறப்பு 1827. இவள் சிறுவயதில் பள்ளியில் ஒருவரால் கல்லால் எறியப்பட்டு முகத்தில் அடிபட்டு அவருக்கு முகம் மாறியது. மூன்று வாரம் மயக்கத்தில் இருந்தாள். வாழ்நாள் முழுதும் பலவிதமான உபாதைகளால் உடலில் (வலுப்பு, நரம்பு தளர்ச்சி.., திடீர் பயம் என) கஷ்டப்பட்டாள். இவளுடைய குடும்பம் 1840-ல் மில்லர் இயக்கதில் கலந்துகொண்டிருந்தது. இவள் இந்த விபத்த்தின் விளைவினால் தான் தரிசனங்கள் கண்டதாகவும்,  இயேசுவை பரலோகத்துக்கு சென்று சந்தித்ததாகவும் சொன்னாள். இந்த தரிசனங்களில் இவளுக்கு 1844ல் மில்லர் இயக்கத்தின் தோல்வி, ஒரு தோல்வி அல்ல அது தயாராவதற்கு ஆரம்பம் என்று சொல்லப்பட்டது. அது புதிய காலத்துக்கு ஆரம்பம்  என்றும், அது இயேசுவின் புதிய வருகைக்கு கொண்டுசெல்லும்  என்றும் அவளுக்கு சொல்லப்பட்டது. மேலும் இந்த ஏழாம்நாள் ஓய்வுக்காரர்கள் மட்டுமே அர்மகதோனுக்கு பின்பு புதிய எருசலேமுக்கு செல்வார்கள் என்றும் மற்றெல்லாரும் அழிந்துபோவார்கள் என்றும் சொல்லப்பட்டது. மேலும் அவளுக்கு இயேசு மீண்டும் வரும் தேதியும் கொடுக்கப்பட்டது, அது 1874 என்று அவளுக்கு சொல்லப்பட்டது. அவளுக்கு நூற்றுக்கணக்கான தரிசனங்கள் உண்டாயின, அப்போதெல்லாம் அவள் தரையிலே விழுந்து கிடப்பாள். கண்கள் திறந்திருக்கும். தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்று அறியாமல் இருப்பாள். பின்பு எழுந்து சில நாட்கள் கண்தெரியாமல் இருப்பாள்.  மேலும் உலகத்தின் கடைசி நாளில், மனிதகுலத்தின் பாவமானது மீண்டும் பிசாசின்மேல் சுமத்தப்படும் அவன் நரகத்தில் தூக்கி எறியப்படுவான் என்று அவள் சொன்னாள். (இது பைபிளுக்கு மிகவும் முரண்பாடான வெளிப்பாடு. பைபிளில் அவர்தாமே நம்முடைய பாவங்களை சுமந்தார் என்று தெளிவாக உள்ளது. அவளுடைய தரிசனத்தின்படி பிசாசானவன் இயேசுவின் இடத்தை எடுத்துக்கொள்கிறான். என்ன ஒரு வஞ்சனை! பிசாசாகிய அவன் விழும்போதே, நான் ஏறுவேன், பிடிப்பேன் என்றானே).  இவள் பின்பு ஏழாம்நாள் ஓய்வுக்காரர் (Seventh Day Adventists) என்ற சபைக்கு பிரசங்கியார் ஆனார். இந்த உபதேசங்களை 1852-ல் பென்சில்வேனியாவில் பிறந்த சார்ல்ஸ் டி ரஸ்ஸல் என்பவர் ஆதரித்தார். (சார்ல்ஸ் ரஸ்ஸல் இந்த மில்லர் இயக்க தோல்விகளுக்கு பின்பு பிறந்தவர் என்பதை கவனிக்கவும்).



இந்த "யெகோவா சாட்சிகள்" அமைப்பு சார்ல்ஸ் டி ரஸ்ஸல் (Charles T. Russel)என்பவரால் 1870-ல் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்கு வயது 17 இருக்கும்போது ஏழாம்நாள் ஓய்வு சபைக்கு சென்றார். அங்கே எலன் ஜி.வைட் என்னும் அந்தப் பெண் உபதேசம் செய்வாள் அதைக் கேட்க வாரம்தோறும் சென்றார். நாளடைவில் அவருக்கு இரக்கமுள்ள தேவன் மனிதர்களை நித்திய நரகத்தில் போடுவார் என்பதை ஜீரணிக்கமுடியாமல் போனது. இதுவே யேகோவா சாட்சிக்காரர் "நரக அக்கினி" என்று ஒன்று இல்லை என்று சொல்லும் உபதேசத்துக்கு கொண்டுசென்றது. மேலும் பல பைபிளில் உள்ள பல உபதேசங்கள் அப்படி அல்ல என்று முடிவுக்கு வந்தார், மேலும் எலன் ஜி.வைட் என்பவளின் ஏழாம்நாள் ஓய்வுக்காரர் உபதேசங்களை ஆதரித்தார். இந்த உபதேசங்கள் மில்லர்  என்பவரின் உபதேசங்களாகும்.

சார்ல்ஸ் டி ரஸ்ஸல் என்பவர் 1799-ல் உலகத்தின் முடிவு ஆரம்பித்துவிட்டது என்று நம்பினார். மேலும் இயேசுவின் வருகை 1874ல் இருக்கும் (எலன் ஜி.வைட் என்பவள் சொன்ன வருடத்தை கவனியுங்கள்) என்றும், உலகம் 1914ல் அழியும் என்றும் கணிப்பிட்டார். இப்படி அவர் முன்னுரைத்த தீர்க்கதரிசனமானது பொய் என்று நாம் அறிவோம். 1916-ல் அவர் இறந்துபோனார். இவர்களால் காவற்கோபுரம்/ஜெபகோபுரம் (Watch Tower) என்னும் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

நாம் அனைவரும் பிசாசானவன் புதிய உலக ஒழுங்குமுறையை (New World Order) அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் கொண்டுவருவான் என்று அறிந்திருக்கிறோம். இந்த சார்ல்ஸ் ரஸ்ஸல் புதிய உலக ஒழுங்குமுறை கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டார். இப்படி பிசாசின் நிகழ்ச்சி நிரல்களை இயக்குபவராக காணப்பட்டார்.

1916-ல் சார்ல்ஸ் ரஸ்ஸல் இறந்துபோனபின்பு, ஜோசப் எப். ருதர்ஃபோர்ட் (Joseph Franklin Rutherford) என்பவர் காவற்கோபுரம் அமைப்பின் பிரதிநிதி ஆனார். இவர் 1925ல் உலகம் முடிவுறும் என்ற (கள்ள) தீர்க்கதரிசனத்தை முன்மொழிந்தார். இதனால் அமெரிக்காவில் அநேக ஜனங்கள் தங்கள் வீடுகளை விற்றுவிட்டு, தங்கள் கார்களிலும், வேன்களிலும் வாழ்ந்தனர். மேலும் பலருக்கு இந்த உலக முடிவு செய்தியை அறிவித்தனர். 1925ம் வருடம் வந்தது, 1914-ல் போலவே ஒன்றும் நிகழவில்லை. இந்த வெட்கப்படும் செயல் யெகோவா சாட்சிகளால் மூடி மறைக்கபட்டது.

ருதர்ஃபோர்ட் இறந்துபோனபின்பு கவர்ந்திழுக்கும் ஒருவர் வந்தார். மிகவும் பிரபலமான (கள்ள)தீர்க்கதரிசனமானது 1975ம் வருடத்தைக் குறித்ததாகும். இன்றைய யெகோவா சாட்சிகள் விசுவாசிகளுக்கு இந்த செய்தி தெரியாது என்பது நம்பமுடியாத அளவுக்கு அதிகமாகும். உலகம் முழுதும் சுமார் 8 மில்லியன் மக்கள் ஞானஸ்நானம் எடுத்து இந்த மனிதகுல வழிதளத்தில் (cult) சேர்ந்துள்ளனர். ரஸ்ஸல் என்பவரின் தவறான் உபதேசத்தினால் இன்று இத்தனை பேர் வழிதவறி இதில் மாட்டிக்கொண்டுள்ளனர்.

காவற்கோபுரம் இன்று பெரிதளவில் வளர்ந்து (கொரோனா வைரஸ் போல்) உலகம்முழுது பரவியுள்ளது. இவர்கள் ஆட்சிக்குழு ஒன்றை (governing body) அமைத்து வைத்துள்ளனர். இந்த யேகோவா சாட்சிகள் தேவனுடைய வசனமானது இந்த ஆட்சிக்குழு மூலமாகத்தான் மனிதர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்ற தவறான கொள்கையோடு உள்ளனர். இந்த குழு சொல்வதை வைத்துதான் மேலிருந்து கீழ்வரை கட்டளைகள் செல்கின்றன. ரேமண்ட் ஃபிரான்ஸ் (Raymond Franz) என்பவர் இந்த காவற்கோபுரம் என்ற அமைப்பின் பிரதிநிதிகளில் ஒருவராக 9 வருடங்கள் (தனது 60 வருடங்களில்) இருந்தார். பின்பு வெளியே வந்துவிட்டார். இவருடைய இரகசிய கூட்டங்களின் விவரங்கள் நம்மை திகைக்கவைக்கும் அளவுக்கு வெளிச்சொல்பவையாகும். அவர் இப்படியாக பேட்டி கொடுத்துள்ளார்: நான் யெகோவா சாட்சியினர் பைபிளுக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்திருந்தனர் என்ற நம்பிக்கையில் பிரதிநிதியானேன். ஆனால் நான் அங்கே பொறுப்பேற்ற பின்னரே பைபிளை அவர்கள் எட்டிக்கூட பார்க்கவில்லை என்று அறிந்தேன். அவர்கள் நிறுவனத்தின் கொள்கைகள் குறித்தே விவாதித்தனர். பிரச்சனைகள் முன்வைக்கப்படும்போது வேதாகமத்தில் அதற்கான தீர்வு இருந்தபோதிலும், நிறுவனகொள்கை ஒன்று இருப்பின் அது வேதாகமத்துக்கு மேலாக ஓங்கி நிற்கும். எனக்கு மத்தேயு 10:22-ல் இயேசு சொன்னபடி, அவர்கள் "தேவனுடைய வசனத்தை தங்களுடைய பாரம்பரியத்தினால் அவமாக்கினார்கள்" என்ற வசனம் ஞாபகத்திற்கு வந்தது என்றார். இவர்கள் எப்படி உலகம்முழுதும் பரவினர் என்று கேள்வி எழுகிறது. இதற்கு பதில்தான் காவற்கோபுரம் (Watch Tower) என்கிற பத்திரிக்கை. இந்த பத்திரிக்கையை எழுதுபவர்கள் அந்த ஆட்சிக்குழுவினரே ஆவர். அந்த பத்திரிக்கை தனிமனித சிந்தனையை அவமதிக்கின்றது (discourages individual thinking). அவர்கள் அந்த மனிதர்களால் உண்டாக்கப்பட்ட போதனைகளுக்கு தங்களை அர்ப்பணிக்கவேண்டும் என்பது கட்டளையாக கூறப்பட்டுள்ளது. சுருக்கத்தில் சொன்னால் யெகோவா சாட்சிகள் தாங்களாக வேதாகமத்தைப் படிக்கக்கூடாது என்பது கட்டளையாகும். அதாவது காவற்கோபுரம் என்கிற பத்திரிக்கை மூலமாகத்தான் பைபிளை அறிந்துகொள்ளவேண்டும். இது வேதாகமத்தை சம்பந்தமில்லாத வகையில் திரித்து புதிய கட்டளைகளை கொண்டுவந்துள்ளது. அவர்களுடைய பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டவைகளில் ஒரு சில இங்கே:

1. "லூசிபர்" என்றால் "ஒளி ஏந்தி செல்பவர்" (Light bearer) என்ற பெயராகும். இது சாத்தான் என்கிற பிசாசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. (காவற்கோபுரம் ஜூலை 1, 1965 - பக்கம் 406)

 ==> வேதவாக்கியத்துக்கு புறம்பானது. அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே என்றுதான் பைபிள் பிசாசை கூறுகின்றது. மேலும் இயேசு: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்று சொன்னார். இந்த யெகோவா சாட்சிகள் பிசாசுதான் ஒளி ஏந்தி செல்பவன் என்று மாற்றி சொல்கின்றனர்.

2. யெகோவாசாட்சிகள் நவீன ஒளி ஏந்தி செல்பவர்கள் (Modern Light bearers) (காவற்கோபுரம் மே 1, 1993 - பக்கம் 12)

==> பிசாசு ஒளி ஏந்தி செல்பவன் என்றால், அவனை பின்பற்றினால் எப்படி இது சரியாகும்.

3.  காவற்கோபுரத்தின் கட்டமைப்புகளுக்கு அங்கத்தினராகிய யெகோவா சாட்சி ஊழியர்கள் மட்டுமே இந்த பொல்லாத அமைப்பினின்று தப்பி முடிவுவரை காப்பற்றப்படுவர். (காவற்கோபுரம் டிச 15, 2007 - பக்கம் 14)

==> இது பைபிளுக்கு முற்றிலும் மாறுபாடானது. யூதா 1:24-ல்  வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக, என்ற வசனத்துக்கு விரோதமாக தேவனைவிட்டு மனிதன்மேல் நம்பிக்கை வைக்கும் இவர்கள் சபிக்கப்பட்டவர்கள். இதை எரேமியா 17:5ல் மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வாசிக்கிறோம்.

4. சார்ல்ஸ் ரஸ்ஸல் என்பவராகிய நீர் கர்த்தரால் நித்திய காலங்களுக்கு ராஜாவாக கிரீடம் தரிப்பிக்கப்பட்டுள்ளீர். உமது பெயரை ஜனங்கள் அறிவார்கள். உமது சத்துருக்கள் (எதிராளிகள்) வந்து உம் பாதத்தில் வணங்கி ஆராதிப்பார்கள். (காவற்கோபுரம் டிச 1, 1916 - பக்கம் 377)

==> இதற்கு விளக்கம் தேவையில்லை. இது பிசாசினால் உண்டானது.

------------


இவர்கள் தங்களுக்கு என்றே தனி மொழிபெயப்பினை உண்டாக்கி - "புதிய உலக ஒழுங்கு மொழிபெயர்ப்பு பைபிள்" என்ற பைபிளை வைத்து அதைத்தான் படிக்கவேண்டும் என்று கட்டளை கொடுக்கின்றனர். இந்த மொழிபெயர்ப்பில் தங்களது சிந்தனைகளையும் கொள்களுக்கு ஏற்ப வசனங்களையும் மாற்றி அச்சடித்து கொடுக்கின்றனர். இப்படி பொய்யான மொழிபெயர்ப்பு கொண்டு பொய் சொல்வதால் இவர்கள் தங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள், ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பொய்யனும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான்.

இவர்களின் துர்உபதேசங்களில் சில:

1. தெய்வீக பெயர்.
கடவுளின் ஒரு உண்மையான பெயர் 'யெகோவா' அதை மட்டும் வைத்து அவரை அடையாளப்படுத்தவேண்டும் என்று யெகோவா சாட்சிகள் நம்புகிறார்கள்.

==> இருப்பினும், பைபிளில் தேவன் பல பெயர்களால் அடையாளம் காணப்படுகிறார், அவற்றுள்:
    . தேவன் (எலோஹிம் ‘Elohim; ஆதி. 1: 1)
    . சர்வவல்லமையுள்ள தேவன் (எல்ஷதாய்; ஆதி. 17: 1)
    . கர்த்தர் (அதோனாய்; சங். 8: 1), மற்றும்
    . சேனைகளின் கர்த்தர் (யெகோவா சபாத்; 1 சாமு. 1: 3).
    . இம்மானுவேல் (ஏசா 9:6)
    . அதிசயமானவர் (நியா 13:18)

2. திரித்துவம்
திரித்துவம் பைபிளுக்கு அப்பாற்பட்டது என்று யெகோவா சாட்சிகள் நம்புகிறார்கள். இந்த வார்த்தை பைபிளில் இல்லை, ஒரே தேவன் இருப்பதாக பைபிள் வலியுறுத்துகிறது என்கின்றனர்.

==>
பைபிளில் ஒரே தேவன்  மட்டுமே இருக்கிறார் என்பது உண்மைதான் என்றாலும் (ஏசா. 44:6; 45:18; 46:9; யோவான் 5:44; 1 கொரி 8:4; யாக் 2:19) மூன்று ஆளத்துவங்கள் வேதத்தில் தேவன் என்று அழைக்கப்படுகிறார்கள்: (1 Being, 3 Persons)
    . பிதா (1 பேது 1:2),
    . குமாரனாகிய இயேசு (யோவான் 20:28; எபி. 1:8; 1 யோவான் 5:20), மற்றும்
    . பரிசுத்த ஆவியானவர் (அப்போஸ்தலர் 5:3-4).

இந்த மூன்று ஆளத்துவமும் கீழே சொல்லப்பட்டுள்ள தேவனின் பண்புகளைக் கொண்டுள்ளது:
    . எங்கும் இருப்பவர் (சங். 139:7; எரே. 23:23-24; மத் 28:20),
    . சர்வத்தையும் அறிந்தவர் (சங். 147:5; யோவான் 16:30; 1 கொரி. 2:10-11),
    . சர்வ வல்லவர் (எரே. 32:17; யோவான் 2:1-11; ரோமர் 15:19), மற்றும்
    . நித்தியமானவர் (சங். 90:2; எபி. 9:14; வெளி 22:13).

இன்னும், இந்த மூவரும் இந்த அண்டத்தை உருவாக்குவதில் உள்ளனர்:
    . பிதா (ஆதி. 1:1; சங். 102:25),
    . குமாரன்  (யோவான் 1:3; கொலோ. 1:16; எபி. 1:2), மற்றும்
    . பரிசுத்த ஆவியானவர் (ஆதி. 1:2; யோபு 33:4; சங். 104:30).

தலையாய தேவனுக்குள் ஒன்றாயிருக்கின்றனர் என பைபிள் குறிப்பிடுகிறது (மத் 28:19; 2 கொரி. 13:14).

இவ்வாறு திரித்துவத்திற்கான கோட்பாட்டு ஆணித்தரமாக வலுவாக பைபிளில் உள்ளது.

3. இயேசு கிறிஸ்து
"உலகம் இருப்பதற்கு முன்பே இயேசு யெகோவாவால் பிரதான தூதனாகிய மிகாவேலாக படைக்கப்பட்டார் என்று யெகோவா சாட்சிகள் நம்புகிறார்கள். மேலும் இயேசு குறைவான வலிமையுடைய தேவன் என்றும் நம்புகின்றனர்"

==>
இயேசுவை எப்படி மிகாவேல் என்று நம்புகிறார்கள் என்றே தெரியவில்லை. பைபிளை படித்தால் அப்படிப்பட்ட முடிவுக்கு வர இயலாது. பைபிளில் இயேசு நித்திய தேவன் என்று வாசிக்கிறோம். யோவான் 1ம் அதிகாரத்தில் "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது..அந்த வார்த்தை மாம்சமாகி" என்று வாசிக்கிறோம். (யோவான் 1:1; 8:58; யாத் 3:14) மற்றும் பிதாவைப் போலவே தேவனின் சுபாவங்களை இயேசு கொண்டிருக்கிறார் (யோவான் 5:18; 10:30; எபி. 1:3).

பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் ஆகியவற்றின் ஒப்பீடு இயேசுவை யெகோவாவுடன் ஒப்பிடுகிறது (ஏசா. 43:11-வை தீத்து 2:13 உடன் ஒப்பிடுங்கள்; ஏசா 44:24 கொலோ 1:16; ஏசா. 6:1-5-ஐ யோவான் 12:41 உடன் ஒப்பிடுங்கள்).

இயேசுவே தேவதூதர்களைப் படைத்தார் (கொலோ. 1:16; யோவான் 1:3; எபி. 1:2,10)
இயேசு அவர்களால் வணங்கப்படுகிறார் (எபி. 1:6).

எனவே யெகோவா சாட்சிகள் பிசாசின் உபதேசத்தை பின்பற்றுகின்றனர்.

4. மானிடப்பிறவி
இயேசு பூமியில் பிறந்தபோது, ​​அவர் வெறும் மனிதர், மனித மாம்சத்தில் தேவன் அல்ல என்று யெகோவா சாட்சிகள் நம்புகிறார்கள்.

==>
இது "ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது" (கொலோ 2:9; பிலி. 2:6-7) என்ற பைபிளின் போதனையை இது மீறுகிறது.

பரிபூரணம்/முழுமை (கிரேக்க. Plērōma) என்ற கிரேக்க சொல் மொத்தம் என்கிற பண்பை குறிக்கிறது.
“முழுமை” என்பதற்கான சொல் மொத்தத்தின் அம்சத்தைக் கொண்டுள்ளது. கிரேக்க மொழியில்: "தியோட்ஸ்" என்பது தேவனின் சுபாவம், இருப்பவர் (being) மற்றும் தேவனின் பண்புகளை குறிக்கிறது.
(திரித்துவம்: மூன்று ஆளத்துவங்கள், ஒரு ஜீவத்துவம் - 3 Persons, 1 Being)

ஆகையால், மானிடப்பிறவியாக வந்த இயேசு சரீரத்தில்: தேவனின் சுபாவம், இருப்பு மற்றும் தேவனின் பண்புகளின் மொத்தம் ஆவார்.

இயேசுவை இம்மானுவேல் அல்லது "தேவன் நம்மோடிருக்கிறார்" என்றே காண்கிறோம். (மத் 1:23; ஏசா 7:14; யோவான் 1:1,14,18; 10:30; 14:9-10).

5. உயிர்த்தெழுதல்
இயேசு மரித்தோரிலிருந்து உடல் ரீதியாக அல்ல, ஆவியாக உயிர்த்தெழுந்தார் என்று யெகோவா சாட்சிகள் நம்புகிறார்கள். அவருடைய சரீரமானது அழிக்கப்பட்டது (disintegrated), அவரை மீண்டும் சிருஷ்டித்தார். புதிய ஆவியுடன் உயிரைந்து மீண்டும் மிகாவேல் தூதனாக மாறி இருக்கிறார் என்று அவர்கள் கூறுகின்றனர்.

==>
உயிர்த்தெழுந்த இயேசு ஒரு ஆவி அல்ல, சதை மற்றும் எலும்பு உடலைக் கொண்டிருந்தார் என்று இயேசுவே வலியுறுத்தினார் (லூக்கா 24:39; யோவான் 2:19-21).

அவர் பல சந்தர்ப்பங்களில் உணவைச் சாப்பிட்டார், இதன் மூலம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவருக்கு உண்மையான உடல் இருந்தது என்பதை அறிகிறோம். (லூக்கா 24:30,42-43; யோவான் 21:12-13).

அவருடைய சீஷர்கள் அவர் சரீரத்தை தொட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது (மத் 28:9; யோவான் 20:17).

6. இரண்டாம் வருகை
இரண்டாவது வருகை கண்ணுக்கு தெரியாத, ஆவிக்குறிய நிகழ்வு என்றும், இது 1914 ஆம் ஆண்டில் நிகழ்ந்து முடிந்தது என்றும் யெகோவா சாட்சிகள் நம்புகிறார்கள்.

==>
பைபிளில் இன்னும் இரண்டாவது வருகையில் மரித்தோர் முதலாவதாக எழும்புவர், பின்பு நாம் எல்லோரும் மறுரூபப்படுவோம் என்று வாசிக்கிறோம். மேலும் அவர் ஒலிவ மலையில் பகிரங்கமாக வரும்போது அவரைக் குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள் என்று வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 1:9-11; தீத்து 2:13, மத் 24:29-30, வெளி 1: 7).

7. பரிசுத்த ஆவியானவர்.
பரிசுத்த ஆவியானவர் தேவனின் சக்தி, அவர் ஒரு தனித்துவமான நபர் அல்ல என்று யெகோவா சாட்சிகள் நம்புகிறார்கள்.

==>
ஆயினும், விவிலியத்தில், பரிசுத்த ஆவியானவர் ஆளத்துவத்தின் முதன்மை பண்புகளைக் கொண்டுள்ளார்:
    . சிந்தை (ரோமர் 8:27),
    . உணர்ச்சிகள் (எபே. 4:30), மற்றும்
    . சித்தம் (1 கொரி. 12:11).

மேலும், தனிப்பட்ட ஆளாக அவரைக் காட்டுகின்றன (அப்போஸ்தலர் 13: 2). மேலும், ஒரு நபர் மட்டுமே செய்யக்கூடிய விஷயங்களை அவர் செய்கிறார்.

    . போதிப்பது (யோவான் 14:26),
    . சாட்சி கொடுப்பார்(யோவான் 15:26),
    . நியமித்தல் (அப்போஸ்தலர் 13:4),
    . கட்டளைகளை வழங்குதல் (அப்போஸ்தலர் 8:29), மற்றும்
    . பரிந்துரைத்தல் (ரோமர் 8:26).

பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தின் மூன்றாவது நபர் (மத் 28:19) ஆவார்.


8. இரட்சிப்பு.

யெகோவா சாட்சிகள்  இரட்சிக்கப்பட கிறிஸ்துவில் நம்பிக்கை, யெகோவா சாட்சிகளின் ஆட்சிக்குழுவுடன் தொடர்பு மற்றும் அதன் விதிகளுக்குக் கீழ்ப்படிதல் ஆகிய அனைத்தும் தேவை என்று சொல்கின்றனர்.

==>
நியாயப்பிரமாண விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால்தான் இரட்சிக்கப்படுவீர்கள் என்பது பைபிளில் சொல்லப்பட்டுள்ள சுவிசேஷத்துக்கு விரோதமானது. (கலா 2:16-21; கொலோ 2:20-23). இரட்சிப்பு என்பது முழுதும் தேவனுடைய கிருபையைக் கொண்டது, நம்முடைய கிரியைகளினால் அல்ல.
எபேசியர் 2:8-ல் கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; என்று தெளிவாக வாசிக்கிறோமே.

நற்கிரியைகள் ஆவியின் கனிகளில் அடங்கும். நற்கிரியை செய்வதால் இரட்சிப்பு என்பது துர்உபதேசம் ஆகும். (எபே 2:8-10; தீத்து 3:4-8).


9. மீட்கப்படும் இரண்டு கூட்டத்தார்.
இரண்டு தேவனின் கூட்டத்தார் இருப்பதாக யெகோவா சாட்சிகள் நம்புகிறார்கள்:
(1) அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் 144,000ம் பேர் பரலோகத்தில் வாழ்ந்து கிறிஸ்துவோடு ஆட்சி செய்வார்கள்
(2) “மற்ற ஆடுகள்” (மற்ற அனைத்து விசுவாசிகளும்) ஒரு பரதீசு என்னும் சொர்க்க பூமியில் என்றென்றும் வாழ்வார்கள்.

இவ்வாறு அவர்கள் சொல்கின்றனர்.

==>
பைபிளைப் பொருத்தமட்டில் கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவருக்கும் நித்திய ஜீவன் உண்டு. இரட்சிக்கப்பட்டு, மறுபடியும் பிறந்த அனுபவத்துடன் பரிசுத்தவான்களாக ஜீவிக்கும் அனைவரும் பரலோகம் செல்வார்கள். (யோவான் 14:1-3; 17:24; 2 கொரி. 5:1; பிலி.3:20; கொலோ. 1:5; 1 தெச. 4:17; எபிரெயர் 3:1).

10. அழிவில்லா ஆத்துமா என்று ஒன்று இல்லை.

யெகோவா சாட்சிகள் மனிதர்களுக்கு ஒரு அழிவற்ற ஆத்துமா இருப்பதாக நம்பவில்லை. "ஆத்துமா" என்பது ஒரு நபருக்குள் இருக்கும் உயிர்-சக்தி. மரணத்தில், அந்த உயிர்-சக்தி உடலை விட்டு வெளியேறுகிறது. இப்படியாக அவர்கள் சொல்கின்றனர்.

==>
பைபிளில் ஆத்துமா அது அழிவற்றது.
(ஆதி. 35:18; வெளி. 6:9-10)
(மத் 13:42; 25:41,46; லூக்கா 16:22-24; வெளி. 14:11)
(1 கொரி. 2:9; 2 கொரி. 5:6-8; பிலி. 1:21-23; வெளி 7:17; 21:4).


11. நரகம்.
யெகோவா சாட்சிகள் நரகமானது நித்திய துன்பத்திற்கான இடமல்ல, மாறாக மனிதகுலத்தின் பொதுவான கல்லறை என்று நம்புகிறார்கள். துன்மார்க்கர்கள் நிர்மூலமாக்கப்படுவார்கள், கரைந்து இல்லாமற்போகும்படி தகனமாவர். (annihilated) என்கின்றனர்.

==>
பைபிளில் நரகம் என்பது நிஜமான, நித்திய துன்பத்தின் உண்மையான இடமாகும் (மத் 5:22; 25:41, 46; யூதா 7; வெளி. 14:11; 20:10, 14).  மத் 25:41-ல் பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்... என்று இயேசு தெளிவாக சொல்லியிருக்கிறார்.

12. சிலுவை
இயேசு சிலுவையில் மரிக்கவில்லை. ஒரு மரத்தில் அவரை கொன்றனர். சிலுவை என்பதெல்லாம் உலகமக்களாகிய புறமதத்தாரின் ஆசரிப்பு என்று யெகோவா சாட்சிகள் சொல்கின்றனர்.

==>
இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள் என்று தெளிவாக வாசிக்கிறோம். இந்த ஒன்றுக்கே அவர்கள் அந்த மனிதகுல வழிதளத்தை (cult) விட்டு வெளியேறவேண்டும்.

மேலும் இவர்கள் பிறந்த நாள், விடுமுறைகளை கொண்டாடுவதில்லை. இரத்த தானம் செய்வதில்லை. தடுப்பு ஊசி போடுவதில்லை. இராணுவத்தில் சேவை செய்வதில்லை. காவல்துறையில் சேர்வதில்லை. எந்த அரசாங்க கட்டமைப்பிலும் சேருவதில்லை. முக்கியமாக இயேசு தேவனுக்கு சமம் அல்ல என்று கூறுகின்றனர்.

இவர்கள் பிசாசின் உபதேசத்துக்கு உட்பட்டவர்கள்.

------
அமெரிக்காவில் சார்ல்ஸ் ரஸ்ஸல் என்பவருக்கு விரோதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அந்த நீதிவிசாரணையின் கோப்புகள் இன்றும் உள்ளன. அதில்:

வழக்கறிஞர்: "உமக்கு கிரேக்க மொழி தெரியுமா?"
சார்ல்ஸ் ரஸ்ஸல்: "ஓ, ஆம்"
 வழக்கறிஞர்: "நான் உங்களுக்கு காட்டினால் சரியான எழுத்துக்களை காட்டமுடியுமா?"
சார்ல்ஸ் ரஸ்ஸல்: "சிலவற்றில் நான் தவறாக காட்டிவிட வாய்ப்புள்ளது"
 வழக்கறிஞர்: "என்னிடத்திலு உள்ள 447 பக்கம் கொண்ட(Wescott &  Hort Greek NT) உள்ளது. அதின் பெயரை உங்களால் குறிப்பிட முடியுமா?"
சார்ல்ஸ் ரஸ்ஸல்: "தெரியாது"
வழக்கறிஞர்: "உம்மால் அதை சொல்லமுடியாது, பார்த்து அவைகள் என்ன என்று சொல்லவும்?"
சார்ல்ஸ் ரஸ்ஸல்: "என் வழியில்.." (இங்கே Stanton குறுக்கிடுகிறார்)
வழக்கறிஞர்: "உமக்கு கிரேக்க மொழியை தெரியுமா?"
சார்ல்ஸ் ரஸ்ஸல்: "தெரியாது"

இப்படி கிரேக்கமொழி தெரியாமல் யெகோவா சாட்சியினர் பைபிளை தவறாக மொழிபெயர்த்து உள்ளனர்.

உதாரணமாக யோவான் 1:1 மொழி பெயர்ப்பு உங்களுக்காக:

கிரேக்கம்: Ἐν ἀρχῇ ἦν ὁ Λόγος, καὶ ὁ Λόγος ἦν πρὸς τὸν Θεόν, καὶ Θεὸς ἦν ὁ Λόγος.
ஆங்கிலம் KJV: In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
தமிழ்: "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது."
யெகோவா சாட்சிகள்: "ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார், அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார், அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார்"
யெகோவா சாட்சிகள் (ஆங்கிலம் NWT): "In the beginning was the Word, and the Word was with God, and the Word was a god"

இங்கே தமிழில் இயேவை தேவன் இல்லை என்றும் அவர் ஒரு மனிதன் (அல்லது சாமியார்) எப்படி கடவுள் பக்தி, தெய்வீகத்தன்மை உள்ளவனாக இருகிறானோ அதுபோல என்று காட்டியுள்ளனர். ஆங்கிலத்தில் அவர் ஒரு (சிறிய) கடவுள் என்று பிரித்து அவரை காட்டுகின்றனர்(Note how small 'g' is used in god, in stead of God). இன்னும் நூற்றுக்கும் அதிகமான வசனங்கள் அவர்களால் மாற்றப்பட்டுள்ளன.

அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லும்போது (கலாத்தியர் 1:8) நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.


II கொரிந்தியர் 11:3, 4 ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.

1800 வருடம் கழித்து வேறொரு இயேசுவை பிரசங்கிக்கும் யெகோவா சாட்சிகள் கூட்டத்தார் சாத்தானின் கூட்டத்தார். லூசிபர் என்கிற சர்ப்பம் இவர்களை வஞ்சித்தது. இவர்கள் மனந்திரும்பாமல் போனால் நரகத்தில் பங்கடைவார்கள்.

இந்த கட்டுரையை பகிருங்கள் அல்லது பிரிண்ட் செய்து யேகோவா சாட்சி நண்பர்களுக்கு கொடுங்கள். அவர்கள் இந்த பொல்லாத உபதேசங்களில் இருந்து விடுதலை பெற இன்றே அவர்களுக்கு உதவிடுங்கள்.