"ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிப்பாயாக" என்பது பத்து கற்பனைகளில் ஒன்று. இன்று நாம் அதை வாரத்தில் ஒருநாளாக எடுத்து முதல் நாளில் சபைக்கு சென்று செலவிடுகிறோம்.
இயேசு ஓய்வுநாளிலே வியாதியஸ்தரை சுகமாக்கி, உங்களில் எவனாகிலும் ஆடாவது, மாடாவது, கழுதையாவது குழியில் விழுந்தால் தூக்கிவிடாமல் இருப்பானோ? ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான் என்று சொன்னாரோ அதிலிருந்தே நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். அனைத்து பரிசேயரும் வேதபாரகரும், ஏழாம் நாள் ஓய்வுக்காரர்போல் இயேசு ஓய்வுநாளை அநுசரிக்கவில்லை என்று குற்றம் சாற்றினர். இயேசுவோ இந்த காரியத்தை செய் என்றும் இனி செய்யதேவையில்லை என்றும் சொல்ல தேவனுக்கு ஞானம் உண்டு.
அப்படியானால் ஏன் ஏழாம் நாள் ஓய்ந்திருக்கவேண்டும் என்று தேவன் சீனாய் மலையில் சொன்னார்? 430 வருஷம் இஸ்ரவேலர் எகிப்திலே இருந்தார்கள். அங்கே ஓய்வு இன்றி அடிமையாய் வேலை செய்து வந்தார்கள். மனுஷன் ஓய்ந்திருக்கவேண்டும் அப்படி ஓயாமல் வேலை செய்தால் அவன் சீக்கிரத்திலே செத்துபோவன். அவனுக்கு இளைப்பாறுதல் தேவை. அது மனுஷனுடைய நலனுக்காகத்தான், தேவனுடைய நலனுக்கு அல்ல.
இன்னும் சொல்லப்போனால் ஐந்து நாள் தேவன் எல்லாவற்றையும் உண்டாக்கியபின் ஆறாம் நாளும் ஏழாம் நாளும் உள்ளதே என்ன செய்யலாம்....ஒரே குழப்பாயிருக்கே....சரி... ஏழாம் நாளுக்காக மனுஷனை ஆறாம் நாளில் உண்டாக்கி அவனை ஏழாம் நாள் ஓய்ந்திருக்கும்படி செய்வோம் என்றா செய்தார்? அல்ல. மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.
ரோமர் 14:5 அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; ஏழாம் ஓய்வுக்காரர் ஒரு நாளை மட்டும் விசேஷமாக எண்ணுகிறார்கள். என்னை பொறுத்தமட்டில் ஒவ்வொரு நாளும் விசேஷமான நாள்தான். தரியு என்னும் ராஜனும் "நீ இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் உன்னை தப்புவிக்க வல்லவராயிருந்தாரா?" என்று கேட்கிறான். நீ ஏழாம் நாள் ஆராதிக்கிற தேவன் என்று கேட்கவில்லை.
ஓய்வுநாளை மனுஷன் பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும் என்னும் கட்டளையை தேவன் சீனாய் மலையில்தான் கொடுத்தார். ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்கள் ஓய்வு நாளைக் கைகொள்ளவில்லையே!! ஆனாலும் அவர்கள் பரலோகத்திலே இருக்கிறார்கள். ஓய்வுநாளை கைக்கொள்ளாத ஏனோக்கை தேவன் உயிரோடே எடுத்துக்கொண்டாரே!! நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவன் அநேக இடங்களில் கூறுகிறார்.
"ஓய்வுநாள் மனுஷனுக்காகவா" அல்லது "மனுஷன் ஓய்வுநாளுக்காகவா"? கொஞ்சம் யோசித்து பார்க்கவும்.
பேதுரு சொல்கிறார்: "பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்? இயேசுகிறிஸ்துவின் கிருபையிலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே ... விக்கிரகங்களுக்குப்படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும்." என்று கூறி முடிக்கிறார்.
ஏழாம் நாள் ஓய்வுக்காரர் ஓய்வு நாளை சரியாக ஆசரிக்கிறார்கள் என்றால் ஓய்வுநாளில் நெருப்புகூட மூட்டக்கூடாது என்ற கட்டளையை பின்பற்றுகிறார்களா? ஒரு அடுப்பாயிருந்தாலும், ஒரு காரை ஸ்டார்ட் (car start) பண்ணுவதாக இருந்தாலும், ஒரு மின் சாதன பொருளை (electricity switch on/off) இயக்கினாலும் நெருப்பு வரும். இவர்கள் இவைகளை செய்வதால் ஓய்வுநாள் ஆசரிப்பை மீறுகிறார்களே.
ஏழாம் நாள் ஓய்வுக்காரர் "நாளுக்கு" முக்கியத்துவம் கொடுப்பது தவறாகும்.
மாற்கு 2:23 பின்பு, அவர் ஓய்வுநாளில் பயிர் வழியே போனார்; அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள். இயேசு "பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது" என்று சொல்கிறார்.
நாம் இன்றும் வாரத்தில் முதலாம் நாள் ஓய்வுநாளாக சபைக்கு சென்று தேவனை ஆராதிக்கின்றதின் மூலம் பரிசுத்தமாக ஆசரிக்கிறோம். நாள் முக்கியமல்ல, பரிசுத்தமாயிருப்பதே கருத்தாகும்.
யேகோவா சாட்சிகள் என்பவர்கள் ஏழாம்நாள் கூட்டாத்தாராகிய மில்லர் அமைப்பிலிருந்து வந்தவர்கள். இந்த மில்லர் அமைப்பு இயேசுவின் வருகையை பலமுறை தவறாக கணித்த பொய்தீர்க்கதரிசியின் கூட்டத்தார். இதைக்குறித்து விவரமாக இங்கே படிக்கவும்: கேள்வி பதில 86
Seventh day Adventists have a wrong understanding.