Tuesday, October 6, 2009

7. புகைபிடிப்பது (smoking) குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?

புகைபிடிக்கும் பழக்கம் குறித்து வேதத்தில் தேடினால் யாரும் புகை பிடித்ததாக தெரியவில்லை. கீழேயுள்ள வசனங்களில் நன்றாகவே நாம் புரிந்துகொள்ளும்படி சொல்லப்பட்டுள்ளது.

எண்ணாகமம் 3:4 ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் அந்நிய தூபம் /அக்கினி கொண்டுவந்து இறந்து போனார்கள். 

எரேமியா 19:13 எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். நீ புகைபிடித்தால் தீட்டுப்பட்டவன்.

நீதிமொழிகள் 16:27 பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது. எனவே புகைபிடித்தால், நீ பேலியாளின் மகன் (ungodly man) . இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை. 

தானியேல் 1:8 தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். புதிய ஏற்பாட்டு காலத்து பரிசுத்தவான்களாகிய நாம் அதைவிட மேலான தீர்மானத்துடன் இருக்க முயற்சிக்கவேண்டும். 

I கொரிந்தியர் 3:16-17 16. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். புகைபிடிப்பதால் (அந்நிய அக்கினி கொண்டு வந்தது போல்) நாம் தேவனுடைய ஆலயத்தை கெடுக்கிறோம். தேவனுடைய ஆலயமாகிய இந்த சரீரத்தை பரிசுத்தமாக வைக்கவேண்டும் என்று கட்டளை பெற்றிருக்கிறோம். 

1 தெசெலோனிக்கேயர் 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. சரீரம் முழுவதும் என்னும் வார்த்தைகளை கவனியுங்கள்.

எபேசியர் 5:18 துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், (பரிசுத்த) ஆவியினால் நிறைந்து இருங்கள்; புகையினால் நிறைந்து இருக்காதீர்கள். கடைசியாக முக்கியமான வசனம்: 

யோபு 2:10 இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை !!! (amazing!) 

கர்த்தருடைய ராஜ்யத்தில் காணப்படவேண்டுமென்றால், புகை பிடிக்காதீர்கள் !!

4 comments:

Colvin said...

அட புகைப்பிடித்தலை தடை செய்யும் நேரடி வசனங்கள் இல்லாது விட்டாலும் அது தொடர்பாக வேதத்தில் உள்ளது என்பது இப்போது அறிந்து கொண்டேன்.


நீதிமொழிகள் 16:27 பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.

இவ்வாக்கியத்தின்படி அக்காலங்களிலும் புகைத்தல் பழக்கம் இருந்திருக்குமா? அல்லது தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டதா?

Unknown said...

வெளி 9 அதிகாரம்
18. அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.

Anonymous said...

http://www.healthjustice.ph/?cat=7
சில கள்ளப் போதகர்கள் மது அருந்துதல், புகைப்பிடித்தல் தவறில்லை அளவோடு நிறுத்தினால் சரி என்று புத்தி கூறுகின்றார்கள் அதற்கு வேதாகமத்திலிருந்து தவறான ஆதாரங்களையும் தருகின்றார்கள், . இதற்கெல்லாம் வேதாகமத்திலிருந்து ஆதாரம் தேடவேண்டிய தேவையே இல்லை, ஏனெனில் ஒவ்வொரு புகைத்த்தல் பெட்டியிலும் 60வீதாமான பகுதியில் எச்சரிக்கை அமைந்திருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சட்டம் வைத்திருக்கின்றது, மேலும் பொது இடங்களிலோ பாடசாலைகளிலோ வேலைத்தளங்களிலோ அல்லது குறிப்பிட்ட சில நோரங்களைத்தவிர்ந்த பொதுவான நோரத்தில் பயணம் செய்யும் தொரூந்துகளிலோ மது அருந்துவது தடைசெய்யப்பட்டதாகும், அப்படியானானால் பரலோகம் தேவனுடைய ராஜ்ஜியம் நோக்கி பயணம் செய்யும் எங்களுக்கு எவ்வளவாக தடைசெய்யப்பட்டிருக்கின்றது என்பதை சிந்தத்துப்பாருங்கள்

Johanan said...

உங்களுடைய சரீரமே தேவனுடைய ஆலயமாக இருக்கின்றது... ( உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? 1 கொரிந்தியர் 6:19 )

ஆகவே, பரிசுத்த ஆவியானவர் உங்களில் ( ஆலயமான சரீரம் ) வாசம் செய்கையில், மாம்ச இச்சையை நிறைவேற்ற உங்கள் சரீரத்தை தீட்டுப்படுத்தி புகைப்பிடிப்பது பாவமே !!!

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.