Wednesday, December 9, 2009

25. பிசாசினை ஜெபங்களில் கட்டி சபித்தல், பாதாளத்திற்கு அனுப்புதல், அக்கினியில் சுட்டெரித்தல் என்பதெல்லாம் சரிதானா?

கேள்வி: விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள் (மாற்கு 16:17) இயேசு பிசாசை துரத்தவே அதிகாரம் கொடுத்தார். இப்படியிருக்க, பிசாசினை ஜெபங்களில் கட்டி சபித்தல், பாதாளத்திற்கு அனுப்புதல், அக்கினியில் சுட்டெரித்தல் என்பதெல்லாம் சரிதானா?

இரண்டு வசனங்களை முதலில் வாசிப்போம்.
வெளி 20:2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

லூக்கா 13:16
இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.

மேலே இரண்டு விதமான கட்டுகளைக் காண்கிறோம்.
முதலாவது பிசாசு ஆயிரவருட ஆளுகைக்கு முன்பு கட்டப்படுகின்றான். "பிசாசைக் கட்டவேண்டும்", "பாதாளத்திற்கு அனுப்புதல்" என்னும் உபயோகம் இங்கிருந்து வந்தது.

இரண்டாவது 18 வருட கூனி பிசாசின் கட்டில் இருந்தாள், இயேசுவால் விடுவிக்கப்பட்டாள். நாமும் கூட பிசாசின் பாவக்கட்டில் இருந்தோம். தேவன் நம்மை இரட்சித்தார், இப்போது அந்தக் கட்டிலிருந்து விடுதலையாயிருக்கிறோம். எனவே இங்கே "கட்டு" என்பது அடிமையாயிருப்பது என்றும் பொருள்படும்.

மத்தேயு 12:29. அன்றியும் பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். இங்கே ஒரு உதாரணம்/உவமை சொல்லப்படுகின்றது.
பிசாசின் வல்லமையை ஜெபத்தின் மூலம் கட்டமுடியும். அடுப்பை எரியவிடு என்றால் அடுப்பிலுள்ள விறகு என்பதுபோல், பிசாசைக் கட்டி என்றால் அவன் வல்லமையைக் கட்டி என்றுதான் நான் புரிந்துகொண்டுள்ளேன். வெளி 20:2 ல் கூறப்பட்டுள்ள சம்பவம் 1000 வருட ஆளுகைக்கு முன்பு உண்மையிலேயே கட்டப்படுதல்.

"சுட்டெரித்தல்": எலியா
தன்னை அழைக்க வந்தவர்களை வானத்திலிருந்து அக்கினி இறக்கி சுட்டெரித்தான். மேலும் ஒரு இடத்தில் சீஷர்கள் எலியா செய்ததுபோல் நாமும் அக்கினியால் இவர்களை சுட்டெரிப்போமா என்கின்றனர். எனவே இங்கிருந்து சுட்டெரித்தல் என்கிற உபயோகம் வந்திருக்கக்கூடும். ஆனால் பிசாசை அக்கினியால் நாம் சுட்டெரித்துவிட முடியாது, தேவன் அதற்கென்று ஒரு நாள் வைத்துள்ளார். யோபையும் அவனுக்குள்ள எல்லாவற்றையும் தேவன் ஒரு வேலி அடைத்து பாதுகாத்தார் என்று வாசிக்கிறோம். அது ஒரு அக்கினிபோன்ற வேலி என்றும் சொல்லப்படுகின்றது. (Wall of fire). நம்மைச்சுற்றி [தேவனின்] அக்கினிமதில்கள் இருந்தால் பிசாசானவன் நம்மைத் தொடமுடியாது.

எனவே [வல்லமையைக்] "கட்டுதல்" என்பதை ஏற்றுக்கொள்ளமுடிகிறது, ஆனால் "அக்கினியால் எரித்தல், பாதாளத்திற்கு அனுப்புதல்" என்பவை சரியான உபயோகம் என்று சொல்லமுடியாது.

2 comments:

Unknown said...

நம்மை தேவன் பிசாசின் பிடியிலிருந்து விடுதலை ஆக்கும்படியே கிருஸ்துவை அனுப்பினர்,கொலொ :1:13. விடுதலையானவன் அவனுக்கு நிங்கலாக இருக்கிரான். இயேசு யாருக்கு பிசாசை துரத்தும் அதிகாராத்தை கொடுத்தார்? மார்க்:16ம் அதிகாரத்தில் அவர்கள் என்பது யாரை குறிக்கிறது -அபோஸ்தலர்கலையல்லவா.விசுவசிகளால் நடக்கும் அடையாளங்களாவன[மார்க்16:17],யாரை குறிக்கிறது 16:14ன் படி விசுவாசியதவர்கலையல்லவா?வெளி: 20:2> ஆயிரம் வருடம் அரசாட்சி என்பதை எப்படி நாம் நேரடி அர்தத்தில் எடுத்துக்கொள்ள முடியும்?

tamilnadufellowship said...

super!!!

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

New comments are not allowed.