Monday, January 25, 2010
29. மறு மணம் செய்யலாமா? விவாகரத்து ஆனபின் மறுமணம் செய்யலாமா? வேதாகமம் என்ன சொல்கிறது?
விவாகரத்தும் மறுமணமும்
கணவனோ மனைவியோ இறந்துபோனபின்பு மறுமணம் செய்துகொள்ளலாம்.
ஆனால் விவாகரத்து ஆனபின் திருமணம் செய்யலாமா என்றால், பதில் அழுத்தம் திருத்தமாக இல்லை! இதைக்குறித்து அநேகர் விவாதங்கள் எழுப்புகிறார்கள், சில போதகர்களும் தவறாக சொல்கின்றார்கள். எனவே இதைக்குறித்து திட்டவட்டமாக தியானிப்போமாக.
சிலர் சொல்கின்றார்கள் "ஒரு மனிதனின் வாழ்க்கைத்துணை (கணவனோ/மனைவியோ) தன் மேல் எந்த பிழையும் சுமத்தாமல் தன்னைவிட்டுபோய்விட்டால் தான் மறுமணம் செய்துகொள்ளலாம். ஏனெனில் என்மேல் எந்த பிழையும் இல்லையே." ஆனால் ரோமர் 7:2,3ல் தேவனுடைய வசனம் என்ன சொல்லுகின்றது: "அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல."
இங்கே தன்னுடைய துணை உயிரோடிருக்கும்போது மறுமணம் செய்ய எந்த வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை என்று தெள்ளத்தெளிவாக பார்க்கிறோம். சிலர் நொண்டிச் சாக்குகளை சொல்லி மறுமணம் செய்வதால் விபசாரம் என்னும் பாவத்திற்குள்ளாகின்றார்கள். அப்படிப்பட்ட தம்பதியினர் தங்களுடைய பாவத்திற்காக மனங்கசந்து மனம் திரும்பாவிட்டால், மிகவும் கடினமான தண்டனையும் நியாயத்தீர்ப்பையும் அடைவார்கள்.விவாகரத்தானபின்பு மறுமணம் செய்வதை ஆதரிப்பவர்கள் சொல்வது என்னவெனில்: ஒரு மனைவி (அல்லது கணவன்) விபசாரம் செய்தால் கணவன் விவாகரத்து செய்து மறுபடியும் திருமணம் செய்யலாம் என்று இயேசு சொன்னாரே! அப்படியாக இயேசு சொல்லவில்லை. அவர் சொன்னது: "ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 19:9)" .
விபசாரம் (adultery) என்பது திருமணத்திற்குப் பின்பு தன் கணவன்/மனைவியைத் தவிர வேறு ஒருவருடன் பாலியல் உறவு.
வேசித்தனம் (fornication) என்பது திருமணத்திற்குப் முன்பு பாலியல் உறவு. பழைய ஏற்பாட்டில் இதை "கன்னிமை" காணப்படாவிட்டால் என்ற பதத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
கிரேக்க அகராதியிலும் வேசித்தனம் (porneia - πορνεῖαι) என்பது விபசாரத்திலிருந்து (moikeia - μοιχεῖαι) வேறுபட்டது என்று உறுதிசெய்கின்றது.
மத் 15:19 ἐκ γὰρ τῆς καρδίας ἐξέρχονται διαλογισμοὶ πονηροί φόνοι μοιχεῖαι πορνεῖαι κλοπαί ψευδομαρτυρίαι βλασφημίαι
மாற்கு 7:21 ἔσωθεν γὰρ ἐκ τῆς καρδίας τῶν ἀνθρώπων οἱ διαλογισμοὶ οἱ κακοὶ ἐκπορεύονται μοιχεῖαι, πορνεῖαι φόνοι
பழைய ஏற்பாட்டில் மோசே: ஒருவனுடைய மனைவி விபசாரம் செய்தால் தள்ளுதற்சீட்டு கொடுத்துவிடலாம் என்று சொல்லவில்லை. லேவியராகமம் 20:10ல் "ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்". இதுதான் பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளை. மேலும் பழைய ஏற்பாட்டில்,
மல் 2:16. தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், என்று தேவன் சொன்னார்.மத் 19:9ல் ஒரே ஒரு விதிவிலக்கு மட்டும் கொடுக்கபட்டுள்ளது. அதாவது "வேசித்தனம்" என்னும் ஒரு காரியத்தினிமித்தம் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம்.
வேதத்தில் ஒருவள் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போதே அவள் அவனுடைய மனைவி என்று அழைக்கப்பட்டாள்!! இதற்கு நிரூபணமாக யோசேப்பு-மரியாள் என்பவர்களைக் குறித்த வசனத்திலிருந்து சொல்லலாம். மத்தேயு 1:18-20 அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. இங்கே திருமணத்திற்கு முன்பே அவள் அவனுடைய மனைவி என்று அழைக்கப்பட்டாள்.
எனவே நிச்சயம் செய்யப்பட்ட பெண்/ஆண் வேசித்தனம் செய்தால் தள்ளுதற்சீட்டு கொடுத்துவிடலாம், அதாவது நிச்சயத்தை ரத்துசெய்யலாம்.
உபாகமம் 22:23-24. கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளோடே சயனித்தால், அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
லூக்கா 16:18 தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.
கலா 1:8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.---------------------------------------------------
Part II
"மறுமணம் செய்துகொண்ட போதகர் மனந்திரும்பினார்" என்னும் ஒரு உண்மைச் சம்பவத்தைக் குறித்து சொல்வது மிகவும் முக்கியமானதாக எனக்கு தோன்றியதால், அவருடைய சாட்சியை தமிழில் மொழிபெயர்த்து இங்கே கொடுத்துள்ளேன்:
(http://www.cadz.net/humphrey.html)
நான் ஜூன் 20, 1872ம் வருடம் மெம்பிஸ்-டென்னிஸியில் (Memphis, TN) என்னுடைய வாழ்வின் ஆரம்ப நாட்களைக் கழித்துவந்தேன். எனக்கு சுமாராக 19 வயதாகும்போது நான் ஒரு 17 வயது இளமையான பெண்ணை திருமணம் செய்தேன். அவள் மிகவும் சிறந்தவள். நான்கு வருடங்கள் கழித்து நாங்கள் சிகாகோ (Chicago, IL) நகரத்திற்கு குடிபெயர்ந்து போனோம். நாங்கள் இருவரும் அங்கே இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டு சில காலம் மகிழ்ச்சியான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்தோம். ஆனால் திடீரென்று என் மனைவி வித்தியாசமாகவும், கர்த்தருக்குள் அனலாயில்லாமல் குளிராயும் காணப்பட்டு, தன்னுடைய வேதத்தின் நம்பிக்கையையும் தள்ளிவிட்டு, நான் அவளை விவாக ரத்து செய்யும் அளவிற்கு வெளிப்படையான அசுத்தமான பாவத்திற்குட்பட்டாள். மத் 5:32ன் படி என் வேதத்தின்படியும் மதத்தின் போதகர்கள் எனக்குச் சொல்லியபடியும் நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தேன். நான் இந்த சத்தியத்தை நான் அநேகருக்கு சபையிலும் பத்திரிக்கைகளிலும் போதித்தேன். பின்பு நான வளர்ந்து அநேக பரிசுத்த மனிதர்கள் என்பவர்களையும், தங்களை தேவனுக்கென்று அர்ப்பணித்துக்கொண்டவர்களையும், என்னைவிட வேதத்தில் தேறினவர்களையும் சுவிஷேச ஊழியத்திற்காகச் சென்றபோது சந்தித்தேன். அவர்கள் நம்பியிருந்தது அல்லது புரிந்துகொண்டிருந்ததாவது: மத் 19:9 அடிப்படையில், தன்மேல் பிழையில்லாத நபர்கள் மறுமணம் செய்யலாம். அநேக தேவனுக்கு வைராக்கியமான சபைகளிலும் மத் 19:9ஐ மேற்படி ஆதரித்தனர்.
என்வே நான் பலகோணங்களில் இதை சிந்தித்து நான் தவறாக புரிந்துகொண்டுள்ளேன் என்று ஒத்துக்கொண்டு என்னுடைய பிழையினை அறிக்கையிட்டு, மற்றவர்கள் சொன்ன கருத்தினை ஏற்றுக்கொண்டேன் (அதாவது தன்மேல் பிழையில்லாதவர் மறுபடியும் திருமணம் செய்யலாம் என்று). விவாகரத்து ஆகி ஏழுவருடங்கள் தனியாக வாழ்ந்த நான் வானம் திறந்து விளக்கம் பெற்றதுபோல் இரண்டாவதாக மனைவி பெறலாம் மத் 19:9ன்படி என்று உணர்ந்தேன். இருப்பினும் என்னுடைய சில நண்பர்கள் வித்தியாசமாக எனக்கு அறிவுரை கூறினர். ஆனால் அந்த அறிவுரையானது எனக்கு கிட்டும்போது காலம் கடந்துவிட்டது. மறுமணம் செய்துவிட்டேன். மறுமணம் செய்துகொண்டபின் மறுநாள் நான் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். தெளிவாக இல்லை. என்னுடைய ஆவியில் நான் கொஞ்சம் அடிவாங்கியதுபோல் உணர்ந்தேன். இருப்பினும் அந்த உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமால் வேதம் என் பக்கம் என்று எண்ணினேன். நான் பிசாசானவன் என்னை குற்றப்படுத்துகிறான் அல்லது வாதிக்க முயற்சிக்கிறான் என்று நினைத்தேன். இருப்பினும் கர்த்தர் இது நான் அறியாமையினால் செய்த பிழைஎன்று அறிந்து என்மேல் மிகவும் பொறுமையுள்ளவராகவும் கடுமையாயில்லாமலும் இருந்து, என்மேல் தன்னுடைய ஆசீர்வாத்தினாலும், ஆவியினாலும் நிரப்பி வந்தார்.
நாட்கள் செல்லச்செல்ல இந்த உறுத்துதல் மிகவும் அதிகமாகவும் தொடர்ந்து சீராகவும் வந்துகொண்டே இருந்தது. எனவே சில நாட்கள் உபவாசம் இருந்து ஜெபிக்க ஆரம்பித்தேன். அப்பொழுது எனக்கு மனது தெளிவாகவும், எல்லாம் நன்றாகவும் காணப்படும். ஆனால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும்போது மீண்டும் காரியங்கள் இருளடையத்தோன்றும். எனவே இப்படியாக சுமார் ஐந்து மாதங்கள் கடந்துபோனது. இருப்பினும் நான் எடுத்த இந்த மறுமண முடிவு மிகவும் சரியானதுதான் என்று ஒரு தேவதூதனைபோல கள்ளம்கபடற்றதுபோல் உறுதியாக நம்பினேன். ஆனால் திருமணமான முதல் ஐந்து மாதங்களில் மீண்டும் எனக்கு சந்தேகம் வரவே நான் மீண்டும் உபவாசம் இருந்து இந்த சந்தேகத்தை தீர்க்கவேண்டும் என்று உறுதிசெய்து நான் ஜெபித்தேன். எனக்கு தேவன் ஒரு பதில் சொல்லவேண்டும் என்பதில் தீர்மானமாயிருந்தேன்.
முதலாவதாக: நான் உண்மையாகவே தவறு செய்துவிட்டேனா? - விவாகரத்துசெய்து மறுமணம் செய்யலாம் என்பதற்கு ஆதாரம் எங்கேயும் இல்லையோ?
இரண்டாவதாக: ஒருவேளை நான் செய்தது தவறு என்றால் இதிலிருந்து எப்படி விடுபடுவது? ஏனெனில் நான் போதகனாயிருக்க இரட்சிக்கப்படாத மற்றவர்களுக்கு இது ஒரு முட்டுக்கட்டையாகிவிடக்கூடாதே.
இருப்பினும் நான் மனிதனுக்கோ பிசாசுக்கோ செவிகொடுப்பதைவிட, நான் எல்லாவற்றையும் இழக்கும்படி நேரிட்டாலும் தேவனுக்கு கீழ்ப்படியவேண்டும் என்று உறுதிசெய்தேன். எனவே நாங்கள் இருவரும் பதினெட்டு(18) மாதங்கள் தேவனுடைய தெளிவான மனதை அறியும்படி தனித்தனியே வாழ்ந்தோம். எனினும் நான் சிலகாலங்கள்தான் வீட்டிலிருப்பேன், ஏனெனில் அநேக நாட்கள் சுவிஷேச ஊழியத்தினால் தேவனுக்கென்று வெளியே மிகவும் சுறுசுறுப்பாய் காணப்பட்டேன்.
நாம் யோபு 33:14-18ல் இப்படியாக வாசிக்கிறோம்: "தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே. கனநித்திரை மனுஷர் மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில், அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு, மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார். இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்."
நிச்சயமாகவே கர்த்தர் இதை என்னுடைய காரியத்தில் இதை நிரூபித்தார். நான் இரட்சிக்கப்பட்ட நாள்முதல் ஒருபோதும் இல்லாததுபோல் வேதவசனத்தினாலும் ஒரு வித்தியாசமான முறையிலும் என்னை எச்சரித்து அறிவுறுத்தி திருத்தினார்.
எல்லா சொப்பனங்களின் மூலமாக தேவன் பேசுவதில்லை என்று நாம் அறிந்திருக்கிறோம், ஆனால் தேவனே நானே சொப்பனத்தில் பேசினேன் என்பதை உறுதிசெய்கிறவராயிருக்கிறார். எனவே இதை வாசிக்கும் வாசகர்களுக்கு தேவன் எனக்கு வெளிப்படுத்தியதையும், என்னுடன் எப்படி பேசினார் என்பதையும், நான் விவாகரத்து-மறுமணம் எப்படி தவறாக புரிந்துகொண்டேன் என்பதையும் கூறுகிறேன். இதை நான் யார்மேலும் திணிக்கவில்லை. இவைகளை நான் சம்பந்தப்படுத்துகிறேன், இதில் முக்கியமானதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். இவைகள் அனைத்தும் ஒருநாளிலோ, ஒரு மாதத்திலோ தேவனிடத்திலிருந்து நான் பெறவில்லை, பதினெட்டு மாத கால அளவில் அவ்வப்போது பெற்றேன்.
1. ஒரு நாள் இரவு ஏப்ரல் 13, 1907 அன்று ஒரு ஆவியானது என்னிடம் ஒரு சொப்பனம் அல்லது கனவில் வந்து ஒரு மிகவும் பரிசுத்த வாழ்க்கை வாழும் போதகர் வடிவில் என்னிடம் சில வேதத்தின் பகுதிகளை எடுத்து கூறியது (கூறினார்). அதிலும் இரண்டு முக்கியமான பகுதியை எனக்கு குறிப்பிட்டார். முதலாவதாக ஏசாயா 52:11 "புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்." இரண்டாவதாக 2 கொரி 7:1 " இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்". இந்த கனவு அல்லது சொப்பனம் மற்ற கனவுகளைப்போல் இல்லாமல் என்னுடைய இருதயத்திலும் மனதிலும் ஒரு முத்திரை போட்டதுபோல் அதைமறக்கமுடியாதபடி மிகவும் அழுத்தமாக இருந்தது.
2. செப்டம்பர் 28, 1907 ம் தேதியன்று என்னுடைய சொப்பனத்தில், நான் ஒரு ஆளில்லாத தெருவில், ஓரத்தில் உள்ள நடைபாதையில் நின்றுகொண்டிருந்தேன். சில கிலோமீட்டர்கள் தொலைவிற்கு ஒருவரையும் நான் காணவில்லை. ஆனால் திடீரென ஒரு ஜீவன் வேறொரு உலகத்திலிருந்து இறங்கி வந்து அந்த தெருவில் நான் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு எதிரேயுள்ள ஒரு கட்டிடத்தின்மேல் உட்கார்ந்தது. அது மிகவும் சத்தமாகவும் தெளிவாகவும் பயங்கரமான எச்சரிக்கும் வார்த்தைகளும் பேசியது. அந்த வார்த்தைகள் ஒரு அம்பு இருதயத்தை துளைத்ததுபோல் எனக்குள் சென்று நிலைத்தது. அவன் சொன்னது என்னவெனில்:
" இந்த சமுதாயத்தில் ஒருவன் இருக்கின்றான், அவன் தேவன் தனக்கு கொடுத்த ஒளியினை தள்ளிவிடுகிறான். அவர்கள் அதை நிறுத்தாவிடில் தேவன் அவர்கள் அனைவரையும் நரகத்திற்கு அனுப்பிவிடுவார். அவர்களை எச்சரிக்கும்படி தேவன் என்னை அனுப்பினார். இப்பொழுது நீங்கள் இந்த காரியத்தைக்குறித்து நீங்களே முடிவெடுங்கள். நான் உங்களை எச்சரித்துவிட்டேன். செல்கிறேன்."
அவன் இப்படி பேசியபின்பு அவன் ஒரு பெரிய பறவையாக மாறி வானத்திற்கு ஏறிப்போனான். உடனே நான் விழித்துக்கொண்டேன். பயத்தினாலும், குழப்பத்தினாலும், என் மனம் என்னை உறுத்தியவனாகவும் காணப்பட்டேன். என் மனைவியிடம் இவைகளைச் சொன்னேன். தேவன் நம்முடைய திருமணத்தில் விருப்பப்படவில்லை என்றேன். ஆனால் அவள் அதில் ஒரு ஒளியைக் காணவில்லை, அது அவளுக்கு ஒரு துர்ச்செய்தியாகவும் அவளது இருதயத்தை உடைத்த செய்தியாகவும் இருந்தது. எனவே அவளை நான் விட்டுவிடவில்லை. நான் தொடர்ந்து தேவனிடத்தில் ஜெபித்து, இந்த காரியத்தை மீண்டும் தெளிவாக்கவேண்டும் என்றேன். எனவே நாங்கள் இருவரும் தனித்து சுத்தமாக வாழ்ந்தோம்.
3. மற்றொரு இரவு நான் சொப்பனத்தில் ஒரு பெரிய கப்பல் (பாதுகாப்பான வேதத்தின் வழி) கடலில் நின்றது. ஆனால் நான் அந்த கப்பலைவிட்டு ஒரு சிறிய படகு (வேதத்திலிருந்து விலகி செல்லுதல்) ஒன்றில் சென்றேன். இப்படியாக நான் விலகி செல்லும்போது அந்தப் படகு மிகவும் ஆட்டமும், தத்தளிப்பும், அலைகளினால் ஆட்டி கட்டுப்படுத்தமுடியாதவாறு இருந்தது. நான் அமிழ்ந்து தண்ணீருக்குள் செல்ல ஆரம்பித்தேன். இப்படியாகக் கண்டு விழித்துக்கொண்டேன். எனவே தேவன் விவாகரத்து-மறுமணத்தில் விருப்பமில்லாதவர் என்று அப்போது உணர்ந்தேன். இருப்பினும் மீண்டும் ஒரு தவறை நான் செய்துவிடக்கூடாது என்பதினால், தேவனிடத்திலிருந்து சரியான ஒரு வழிநடத்துதல் வேண்டும் என்றிருந்தேன். இந்த காலக்கட்டத்திலும் தேவன் என்னை ஆசீர்வதித்து வந்தார். நான் அவருடைய சித்தம் என்னவென்று அறியவிரும்பினேன். இது எவ்வளவு பெரிய பாவம் என்று அறிந்தால் எப்படி நான் மீண்டும் பிரசங்கம் செய்யமுடியும்? ஒருபோதும் மனம் திரும்பாமல் இருப்பதைப்பார்க்கிலும் 1000முறை திரும்பி சரியாயிருப்பதே மேல்.
4. இன்னொருநாள் இரவில் என்னுடைய கனவில் நான் என்னுடைய (இரண்டாவது) மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு அகலமான பாதையில் 'கந்தகம் எரியும் நரகத்தின் வழி' என்னும் பாதையில் நடந்துகொண்டிருந்தேன். ஒரு நுழைவுவாயிலில் பாலியல்-சுகஜீவிகளாயிருந்தவர்கள் கறுப்பு உடையணிந்து, பட்டு தொப்பி அணிந்து, அணியாக இசை வாசித்தனர் அவர்கள் இப்படியாக பாடினர்:
" நரகத்துக்கு வந்தாச்சு,
பூமியும் அதின் சந்தோஷமும் போயாச்சு,
நரகத்துக்கு வந்தாச்சு
நாம் தள்ளப்பட்டு வாதிக்கப்படுவோமே"
அவர்களுக்கு முன்னே ஒரு டஜன் அசுத்தமான கறுப்பு பன்றிகள் காதினை அசைத்து ஆடிக்கொண்டிருந்தன. இவைகளைப் பார்த்தபோது நானும் சரீரத்தின்/பாலிய இச்சைக்கு இந்த மறுமணம் செய்ததால் இடம் கொடுத்துள்ளேன் என்று உணர்ந்தேன்.
எனவே நான் மீண்டும் விழித்துக்கொண்டு மிகவும் கலக்கமுடையவனாக காணப்பட்டேன். அந்த இசையானது என் காதில் ஒலித்துகொண்டிருந்தது. நான் ஒரு வெளிப்படையான பாவஅறிக்கைசெய்யவேண்டும் அதாவது நான் விவாகரத்து செய்தபின் மறுமணம் செய்ததால் பாவம் செய்தேன் என்று வெளிஉலகத்திற்கு சொல்லவேண்டும் என்று அறிந்தேன். இதைச் செய்யவேண்டுமென்றால், இந்த அடியிலும் நான் தவறு செய்யக்கூடாது என்று எண்ணியதால் மீண்டும் அறிக்கை செய்வதைக்குறித்தும் இந்த காரியத்தைக்குறித்தும் அநேக இரவுகள் ஜெபிக்க ஆரம்பித்தேன்.
5. ஒரு நாள் அமெரிக்காவில் கிழக்குப் பகுதியில் என்னுடைய நண்பரின் வீட்டில் ஒரு தனியறையில் நின்றுகொண்டிருந்தேன். இந்த பாரமான சிலுவைசுமக்கும் இந்த நிலையைக்குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். உடனே ஒரு மகிமையான் ஒரு ஆவியானது என்மேல் இறங்கி ஒரு பாடல் பாடியது, இந்த வார்த்தைகளை நான் முன்பின் கேட்டதில்லை.
"பரலோகம் காசில்லாமல் செல்லலாம்
அந்த துறைமுகத்தை எப்படியாயினும் அடைந்துவிடு
அடையாவிடில் எல்லாம் நஷ்டமே
பூலோக இழப்பெல்லாம் வெறும் குப்பையாமே
சிலுவைக்குமுன் இவைகள் ஒன்றுமல்லவே"
"அந்த துறைமுகத்தை எப்படியாயினும் அடைந்துவிடு" என்னும் வார்த்தைகள் என்னை மிகவும் தைரியப்படுத்தின. எனவே எங்கள் சபையின் பாட்டுபுத்தகத்தில் இப்படியாக ஒரு பாட்டை எழுதி சேர்த்துவிட்டேன். இந்த அனுபவத்திற்குப்பின் விவாகரத்து-மறுமணம் தவறு என்று தெள்ளத்தெளிவாக உணர்ந்தேன். மற்றும் நாங்கள் இருவரும் தனித்து வாழவேண்டும் என்றும் நான் நிச்சயித்துக்கொண்டேன். எனவே நாங்கள் அப்படி பிரிந்து வாழ்வதைக்குறித்து திட்டமிட்டோம். இருப்பினும் இப்படி தனித்து வாழ்வதைக்குறித்து ஜெபிக்க ஆரம்பித்தோம். ஆனால் தனித்து வாழவேண்டும் என்று வந்தால அப்படியே செய்வோம் என்று தீர்மானித்தோம். நாங்கள் இருவரும் பிரியவேண்டும் என்று முடிவுக்கு வந்தபோது அநேக நண்பர்கள் வந்து எங்களை காரணங்கள் கூறி விவாகரத்து என்றால் என்ன, இயேசு என்னசொன்னார் என்றெல்லாம்கூறி மாற்றும்படி பார்த்தனர். அவர்கள் கூறும் கருத்தெல்லாம் நித்திய பரலோகத்தில் செல்லாதே. நண்பர்களே ஏமாறாதீகள், நரகத்திற்கு செல்லாதீர்கள்.
6. ஒரு நாள் இரவில் சொப்பனத்தில் இரண்டு போதகர்கள் வந்து ஒரு தாளில் (paper) எழுதியிருந்ததை வாசித்தனர். " நீ விவாகரத்து-மறுமணம் என்னும் தவறை செய்யாதிருந்தால் நீ நீதிமான்" இப்படி வாசித்தபின் மறைந்துவிட்டனர். இது என்னை கலக்கப்படுத்தினது. பேச முயற்சித்தேன் பேசமுடியவில்லை. தேவன் என்னை கேள்வி கேட்பதுபோல் உணர்ந்தேன். இந்த பாவத்துடன் நீ மரித்தால் எங்கு போவாய் என்று கேட்பதுபோல் தோன்றியது. எனவே விவாகரத்து-மறுமணம் ஒரு பாவம் என்பது தெளிவானது.
7. அடுத்த நாளே கனவில் நான் ஒரு தனித்த அறையில் நின்றுகொண்டிருந்தேன். அங்கே தேவன் என்னுடைய விவாகரத்துக்குப்பின்செய்த மறுமணத்தினால் என்மேல் மிகவும் கோபமுள்ளவராக இருப்பதுபோல் காணப்பட்டது. ஒரு பெரிய மின்னல்ஆறுபோல் ஒளி வந்து நான் இருந்த இடத்தை நிரப்பிரனது என்னை 30 அடி உயரத்திற்கு எடுத்துச்சென்றது. அங்கே எரிந்துகொண்டிருந்த நெருப்பில் நான் வைக்கப்பட்டேன். நான் விழித்துக்கொண்டபோது நான் இன்னும் நெருப்பில் இருப்பதுபோலவே உணர்ந்தேன். என் படுக்கையும் நெருப்புபோல் இருந்தது. அப்போது ஒரு சத்தம் அந்த மின்னல் போன்ற அக்கினி பெருஞ்சரிவில் இருந்து கேட்டது: "உன் தேவனை சந்திக்கும்படி நீ ஆயத்தப்படு". இந்த சம்பவம் நான் வீட்டைவிட்டு தூரமாயிருக்கும்போது நிகழ்ந்ததது, நான் வீடு திரும்பி என் மனைவியிடம் இதைச் சொல்லி நாம் பிரிந்து செல்லவேண்டும் என்று சொல்லி இருவரும் அதற்கு ஒப்புக்கொண்டோம்.
அப்படியே நாங்கள் பிரிந்து சென்றோம். நான் ஒரு தெளிவான மனதோடு ஒரு தேவதூதன்போல் அதன்பின் காணப்பட்டேன். விவாகரத்துக்குப்பின் திருமணம்செய்தால் அது பாவமே. எந்த பல்கலைக்கழகத்திலிருந்து எப்படிப்பட்ட ஒருவர் பிரசங்கித்தாலும் அது தவறே.
- J. M. Humphrey
Thursday, January 7, 2010
28. உயிர்களைக் கொலை செய்யாதே என்று கூறப்பட்டுள்ளது. மிருகமானாலும் அது ஒரு உயிர் தானே? கொல்லுதல் பாவம்தானே?
கேள்வி: வேதாகமப்பகுதியில் ஆண்டவர் சிலவற்றை சாப்பிடக்கூடாது என்றும், சிலவற்றை (ஆடு,மாடு போன்றன) சாப்பிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. உயிர்களைக் கொலை செய்யாதே எனறும் கூறப்பட்டுள்ளது. மிருகமானாலும் அது ஒரு உயிர் தானே? அது கூட அம்மா என்று தானே வாய் விட்டுக் கூறுகிறது. உயிரைக் கொலை செய்வது பாவமல்லவா? இதனால் என் மகள் மாமிச உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து விட்டாள்.இதற்கான விளக்கம்?
ஆதியாகமம் 1:28-30
28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் (have dominion over them) என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
29. பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
30. பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.
ஏதேனில் மனுஷனுக்கும்-மிருகங்களுக்கும், மிருகங்களுக்கும்-மிருகங்களுக்கும் இடையில் ஒரு சமாதானம் இருந்தது. 29, 30 வசனத்தின்படி
மனுஷனுக்கு:கனிமரங்கள், சகலவித விதைதரும் பூண்டுகள்தான் ஆகாரம்.
விலங்குக்கு: பசுமையான எல்லா பூண்டுகளும் ஆகாரம். மனிதன் மிருகத்தைச் சாப்பிடவில்லை.
பாவத்திற்குட்பட்டபின்பு மனுஷன் ஏதேனிலிருந்து துரத்தப்பட்டான். இதன் பின்தான் இந்த ஒன்று மற்றொன்றை சாப்பிட்டு வாழக்கூடிய நிலை வந்தது. முதலாக தேவன்தான் தோல் உடையை உண்டாக்கினார். இதன் பின்பு ஆபேல் முதன் முதலில் தன் மந்தையிலிருந்து தேவனுக்கு காணிக்கை செலுத்தினான். இது தேவனை கனம்பண்ணவேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பமாயிருக்கலாம் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து வாசிக்கும்போது, லேவியராகமத்தில் பாவநிவாரண பலி, குற்றநிவாரணபலி, தகனபலி, சமாதான பலி என்ற பரிகாரம் என்னும் முறையில் தேவன் மிருகங்களை எப்படிக் கொல்லவேண்டும், அதின் இரத்தம் எப்படிச் சிந்தப்படவேண்டும் என்று என்றெல்லாம் கூறியிருக்கிறார். அவைகளைச் சாப்பிடலாம் என்றும் தேவனே கூறியிருக்கிறார்.
"உயிர்களைக் கொலை செய்யாதே" என்று இல்லை. "கொலை செய்யாதிருப்பாயாக" என்று சொல்லப்பட்டது, இது மனுஷனைக் குறித்துதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மனுஷன் வேறு மனுஷனை கொன்றால், அல்லது சில கற்பனைகளை மீறினால், அவன் நிச்சயமாகக் கொல்லப்படவேண்டும் என்று தேவன் சில விதிவிலக்கு வைத்திருக்கிறார். ஒரு மாடு மனுஷனை முட்டி அவன் இறந்து போனால் அந்த மாடும் கொல்லப்படவேண்டும் என்றும் தேவன் சொல்லியிருக்கிறார். இன்று கூட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை தேவன் நீதிபதிகளுக்கு கொடுத்துள்ளார். இது மோசே காலத்தில் ஆரம்பமானது. எனவே மேலே கொல்லுதல் என்பது இடம், பொருள், ஏவல் என்பவகைளைப் பொருத்தது.
இயேசு சொன்ன ஒரு உவமையில் (லூக்கா 15)ல் ஒரு கொழுத்த கன்றை அடித்தார்கள் என்று வாசிக்கிறோம். மாமிசம் சாப்பிடுவது தவறல்ல.
அது ஒரு உயிர்தான். தேவன் சுத்தமான மிருகங்களைச் சாப்பிடலாம் என்றும், அசுத்தமான மிருகங்களைச் சாப்பிடவேண்டாம் என்று கூறியிருக்கிறார் (லேவியராகமம் 11, உபாகமம் 14 ). உதாரணமாக பன்றி அசுத்தமான மிருகம். இதை ஒரு பண்ணையில் வளர்த்தாலும் அது அசுத்தமான மிருகம்தான். ஏனெனில் விஞ்ஞான முறைப்படி நோய் எதிர்ப்புத்தன்மை மிகமிக குறைவாயுள்ள மிருகம் பன்றி. மேலும் இதின் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் மனித மூளைக்கு சென்று அங்கு சேதத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகின்றது. (Read Wikipedia) .
மாமிசம் சாப்பிடாமல் இருந்தாலும் தவறல்ல.
இதைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுலும் சொல்லியிருக்கிறார்: ரோமர் 14:2,3 ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறான். புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.
.
ஆதியாகமம் 1:28-30
28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் (have dominion over them) என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
29. பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
30. பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.
ஏதேனில் மனுஷனுக்கும்-மிருகங்களுக்கும், மிருகங்களுக்கும்-மிருகங்களுக்கும் இடையில் ஒரு சமாதானம் இருந்தது. 29, 30 வசனத்தின்படி
மனுஷனுக்கு:கனிமரங்கள், சகலவித விதைதரும் பூண்டுகள்தான் ஆகாரம்.
விலங்குக்கு: பசுமையான எல்லா பூண்டுகளும் ஆகாரம். மனிதன் மிருகத்தைச் சாப்பிடவில்லை.
பாவத்திற்குட்பட்டபின்பு மனுஷன் ஏதேனிலிருந்து துரத்தப்பட்டான். இதன் பின்தான் இந்த ஒன்று மற்றொன்றை சாப்பிட்டு வாழக்கூடிய நிலை வந்தது. முதலாக தேவன்தான் தோல் உடையை உண்டாக்கினார். இதன் பின்பு ஆபேல் முதன் முதலில் தன் மந்தையிலிருந்து தேவனுக்கு காணிக்கை செலுத்தினான். இது தேவனை கனம்பண்ணவேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பமாயிருக்கலாம் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து வாசிக்கும்போது, லேவியராகமத்தில் பாவநிவாரண பலி, குற்றநிவாரணபலி, தகனபலி, சமாதான பலி என்ற பரிகாரம் என்னும் முறையில் தேவன் மிருகங்களை எப்படிக் கொல்லவேண்டும், அதின் இரத்தம் எப்படிச் சிந்தப்படவேண்டும் என்று என்றெல்லாம் கூறியிருக்கிறார். அவைகளைச் சாப்பிடலாம் என்றும் தேவனே கூறியிருக்கிறார்.
"உயிர்களைக் கொலை செய்யாதே" என்று இல்லை. "கொலை செய்யாதிருப்பாயாக" என்று சொல்லப்பட்டது, இது மனுஷனைக் குறித்துதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மனுஷன் வேறு மனுஷனை கொன்றால், அல்லது சில கற்பனைகளை மீறினால், அவன் நிச்சயமாகக் கொல்லப்படவேண்டும் என்று தேவன் சில விதிவிலக்கு வைத்திருக்கிறார். ஒரு மாடு மனுஷனை முட்டி அவன் இறந்து போனால் அந்த மாடும் கொல்லப்படவேண்டும் என்றும் தேவன் சொல்லியிருக்கிறார். இன்று கூட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை தேவன் நீதிபதிகளுக்கு கொடுத்துள்ளார். இது மோசே காலத்தில் ஆரம்பமானது. எனவே மேலே கொல்லுதல் என்பது இடம், பொருள், ஏவல் என்பவகைளைப் பொருத்தது.
இயேசு சொன்ன ஒரு உவமையில் (லூக்கா 15)ல் ஒரு கொழுத்த கன்றை அடித்தார்கள் என்று வாசிக்கிறோம். மாமிசம் சாப்பிடுவது தவறல்ல.
அது ஒரு உயிர்தான். தேவன் சுத்தமான மிருகங்களைச் சாப்பிடலாம் என்றும், அசுத்தமான மிருகங்களைச் சாப்பிடவேண்டாம் என்று கூறியிருக்கிறார் (லேவியராகமம் 11, உபாகமம் 14 ). உதாரணமாக பன்றி அசுத்தமான மிருகம். இதை ஒரு பண்ணையில் வளர்த்தாலும் அது அசுத்தமான மிருகம்தான். ஏனெனில் விஞ்ஞான முறைப்படி நோய் எதிர்ப்புத்தன்மை மிகமிக குறைவாயுள்ள மிருகம் பன்றி. மேலும் இதின் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் மனித மூளைக்கு சென்று அங்கு சேதத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகின்றது. (Read Wikipedia) .
மாமிசம் சாப்பிடாமல் இருந்தாலும் தவறல்ல.
இதைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுலும் சொல்லியிருக்கிறார்: ரோமர் 14:2,3 ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறான். புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.
.
Subscribe to:
Posts (Atom)