வரலாறு:
யாத்திராகமம் 1:11 அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.
சிலர் கி.மு 13ம் நூற்றாண்டில் பார்வோன் ராமசேஸ்-II என்பவன் வாழ்ந்தான் என்று சொல்கின்றனர். இவனுடன்தான் மோசேயும் வாழ்ந்தான். பின்பு எத்தியோப்பியாவுக்கு ஓடிப்போய் அங்கே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான். தேவன் ஓரேப் பர்வதத்தில் அவனை சந்தித்து இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்கு வழிநடத்திசெல்லும்படி கூறினார். அப்போது இஸ்ரவேல் ஜனங்கள் பார்வோனுக்காக பித்தோம், ராமசேஸ் (Pithom, Raamses) என்னும் பண்டசாலை நகரத்தை கட்டினார்கள். இவ்விரு நகரங்களும் செத்தி-I மற்றும் ராமசேஸ்-II என்னும் இவர்களின் கீழ் கட்டப்பட்டவையாகும். அதற்குப்பின் வந்த புதிய ராஜன் 10 வாதைகளை சந்தித்து, இஸ்ரவேல் ஜனங்களை செங்கடல்வரை பின்தொடர்ந்து போன மெர்னெபாத் என்னும் பார்வோன் ஆவான்.
கி.மு. 1444ல் தான் எகிப்தியர்களின் 18வது பார்வோன் இருந்தான் என்று சிலர் கூறுகின்றனர். சாலொமோன் தேவாலாயம் கட்டியது இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபின் 480 வருங்கள் கழித்து ஆகும்.
யாத்திராகமம் சுமாராக கி.மு 17 முதல் கி.மு 13 க்கு இடைப்பட்ட நூற்றாண்டுகளில் என்று கணிக்கப்பட்டுள்ளது. சீனாய்மலையில் மோசேயின் மூலமாக வழங்கப்பட்ட நியாயப்பிரமாணமும் அப்போதுதான்.
மோசே: சுமாராக கி.மு. 1500 என்றும்.
ஆபிரகாம்: சுமாராக கி.மு. 2000.
தாவீது: சுமாராக கி.மு. 1000.
சாலொமோன் கட்டிய தேவாலயம் இடிக்கப்பட்ட வருடம் : சரியாக கி.மு 586.
பைபிள்:
யூதர்களுடைய கணக்கின்படி இந்த கி.பி 2010-ம் வருடமானது அவர்களுக்கு 5770-ம் வருடமாகும். யூதர்களுக்கு வருடமானது ஆரம்பித்த முதல் நாள் அவர்கள் எகிப்திலிருந்து விடுதலையான நாளாகும் (யாத் 12: 1,2).
எனவே இந்த கணக்கின்படி நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டு சுமார் 5000 வருடங்களுக்கு மேலேயே ஆகிவிட்டன.
0 comments: