Thursday, April 1, 2010

34. இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தினால் மருத்துவர் தேவையில்லை. இது பற்றி உங்கள் கருத்து?

கேள்வி: உடலில் பிரச்னை என்றால் மருத்துவரை பார்கிறோம். இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தினால் மருத்துவர் தேவையில்லை. இது பற்றி உங்கள் கருத்து?



பதில்:
இது மிகவும் விவாதிக்கப்படும் தலைப்பு.
இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிப்போர் அநேகம். ஆதரிப்போர் அதைவிட குறைவு. எனவே வாசகர்களாகிய உங்கள் கருத்தினை இந்த கட்டுரைக்கு பதிலாக தெரிவிக்கவேண்டாம். வருத்தப்படவும் வேண்டாம். என்னுடைய பதில்: ஆம் தேவையில்லை.
கீழே இருபுறமும் ஒரு பார்வை.

[A] மருத்துவரிடம் போகத் தேவையில்லை என்று:
[1] I பேதுரு 2:24 அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
[2] மத்தேயு 8:17 அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்.
[3] மத்தேயு 4:23 இயேசு ... ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.[4] சங்கீதம் 91:3 அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.
[5] சங்கீதம் 103:3 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி
[6] யாத் 15:26 நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்.

விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாதகாரியம் என்று வாசிக்கிறோம். தேவன் என்னை எப்போது சுகமாக்கப்போகிறார் என்றுஅநேகர் சொல்லுகின்றனர். இப்படி சொல்பவர்களுக்கு விசுவாசம் குறைவு என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுவாகவே மனிதர்களாகிய நமக்கு காத்திருக்கும் அனுபவம் பிடிப்பதில்லை. ஆனால் கர்த்தருக்கு காத்திருப்பவர்கள் கழுகுகளைப்போல புதுபெலனை அடைவார்கள் என்று வாசிக்கிறோம்.

மருந்துக்கு குணமாக்கும் தன்மையுண்டு, உண்மைதான்; கூடவே பக்கவிளைவுகளும் (side effects) உண்டு. ஆனால், தேவன் குணமாக்கும்போது சரீரம் மட்டும் குணமடைவது இல்லை. ஆத்துமாவுக்கு ஒரு இளைப்பாறுதல், ஆவியில் ஒரு விடுதலை என்று ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறார். இது மறுக்கப்படமுடியாத உண்மை.

ஆசா என்னும் ராஜா முதிர்வயதில் கால்களில் வியாதிகண்டு இருந்த போது அவன் தேவனைத்தேடாமல், வைத்தியர்களைத் தேடினான் என்று II நாளா 16:12ல் சொல்லப்பட்டுள்ளது.

நமக்கு நோய் அல்லது வியாதி வந்தால் தேவனிடம்
"உலகத்தில் துன்மார்க்கன் நல்லா இருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் வந்தது?" என்று கேட்பது தவறு. காரணம்: முதலாவதாக நாம் நல்லவர்கள் என்கின்ற யூகம், இரண்டாவதாக தேவன்மேல் ஒரு வெறுப்பு என்று இருப்பதுபோல் ஆகிறது. "இதற்கு நான் என்னசெய்யவேண்டும்? ஏன் வந்தது?" என்று கேட்கவேண்டும். ஏனெனில் வாதை உன் கூடாரத்தை அணுகாது; உன் நோய்களையெல்லாம் குணமாக்கி...; பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்; எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உங்களுக்கு வரப்பண்ணேன் என்றெல்லாம் வாக்குத்தத்தங்கள் இருக்கும்போது எப்படி இந்த நோய் வந்தது என்று காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். சில சமயங்களில் பாவம்/கீழ்ப்படியாமை/குறைவுகள் ... என்று காரணங்கள் இருக்கலாம். சிலரை இயேசு குணமாக்கும் முன்பு "உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது" என்று சொல்லி பின்பு குணமாக்கினார். எனவே பாவம் இருப்பின் நாம் குணமடைவது சாத்தியமல்ல.

இயேசு தன்னிடம் வந்தவர்களிடம் சொன்னார்: "உன் விசுவாசத்தின்படியே உனக்கு ஆகக் கடவது". இந்த வாக்கியம் மிகவும் விலையேறப்பெற்றது!!

பன்னிரண்டு வருடம் பெரும்பாடுள்ள ஸ்திரீ தன்னுடைய ஆஸ்தியை வைத்தியர்களிடம் செலவழித்தாள். இயேசு அவளை "நீ ஏன் மருத்துவரிடம் போனாய்?" என்று கேட்கவில்லை. அவள் இயேசுவை கேள்விப்படும் முன்பு மருத்துவர்களிடம் போனாள்; கேள்விப்பட்டபின்போ எப்படியாகிலும் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தினையாவது தொட்டு சுகமாவேன் என்று ஒரு விசுவாசம்!

ஏசாயா என்பவன் எசேக்கியா குணமடைய பிளைவையின் மேல் தேவன் சொன்னதுபோல் ஒரு அத்திப்பழ அடையைப் போடுகின்றான். இது மருத்துவத்துக்கு ஒத்துப்போகாத காரியம். ராஜபிளவைக்கு இந்த அத்திப்பழ அடையைப் போட்டால் சீக்கிரமாகவே அவர்கள் இறந்து விடுவார்கள். வேணும்னா போய் போட்டுப்பாருங்க. அதுல Sugar (சக்கரை) அதிகம். (http://www.nutritiondata.com/facts/fruits-and-fruit-juices/1889/2
) இங்கே தேவன் இப்படி சொன்னதற்கான காரியம் மருந்து போடுங்கள் என்று கற்றுக்கொடுப்பதற்காக இல்லை, தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று நிரூபிக்கத்தான்.இயேசு குருடனுக்கு சேறுபூசி சுகமாக்கினாரே! அந்த சேற்றில் பிறவிக்குருடனை குணமாக்கும் மருந்து இருந்தது!! என்று சிலர் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்கள். இல்லை, அதில் மருந்து இல்லை. போய் சேறுபூசி பாருங்கள், உள்ளதும் போய்விடும். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று நிரூபிக்கத்தான் இயேசு பலவிதமாக குணமாக்கினார். ஒருவார்த்தை சொல்லும் என் வேலைக்காரன் சுகமாவான் என்று நூற்றுக்கதிபதி சொன்னானே. அங்கே எந்த சேறு பூசப்பட்டது? விசுவாசமே.

மருந்து/மாத்திரை சாப்பிட்டு தேவன் என்னை குணமாக்கினார் என்று சொன்னால் அது பொய்யாகும். தேவன் குணமாக்கிய போதெல்லாம் அனைவரும் உடனே குணமானார்கள். எனவே காயத்தில் மருந்து போட்டேன்... ஒருவாரத்தில் தேவன் குணமாக்கினார் என்று சொல்வது தேவனுடைய நாமத்தை வீணில் வழங்குவது போலாகும். அது தெய்வீக சுகமும் ஆகாது.

சில வசனங்கள்:

யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.

உபாகமம் 28:60 நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.

II நாளாகமம் 16:12 ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.

மத்தேயு 10:1 அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

யாக்கோபு 5:14 உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

ஏசாயா 33:24 வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.


சொந்த அனுபவம்:
என்ன இது தெய்வீக சுகம் என்று எல்லாம் சொல்கிறார்களே, எனக்கு ஞாபகத்தில் இருக்குமளவுக்கு ஏதுமில்லையே என்று பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை பாரமான பளுவை வீட்டில் நகர்த்தும்போது இடுப்பில்/முதுகு வலி  வந்தது. அது மூன்று மாதக்கணக்காகியும் போகவில்லை. மருத்துவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்கவும் இயலவில்லை. வலியும் குறைந்தபாடில்லை. நான் ஒரு ஜெப ஆராதனைக்குபோனபோது எப்படியாகிலும் தேவன் என்னை சுகமாக்கவேண்டும் என்று ஒரு பாராமான இருதயத்துடன் சென்றேன். நான்காம் நாள் கூட்டத்தில் போதகர் ஒருவர் எல்லார் மேலும் கைவைத்து ஜெபித்துக்கொண்டே சென்றார். நானும் கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன். என்னை பின்புறமாக நின்று தொட்டு  ஜெபித்தார், பின்பு சென்றுவிட்டார். அந்த நிமிடமே தேவன் என்னை சுகமாக்கினார். வலி பறந்து போனது. என்னை தேவன் சுகமாக்கியது அந்தபோதகருக்குத் தெரியாது, ஏனெனில் அந்த கூட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கு அதிகமானோர் ஜெபத்திற்காக  மேடைக்கு முன்னே  இருந்தனர்.

[B] மருத்துவர்களை ஆதரித்து:
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே இருந்தபோது பிள்ளைபெறும்போது ஆண்பிள்ளைகளை கொன்று போடவேண்டும் என்று பார்வோன் கட்டளையிட்டபோது எகிப்திய மருத்துவச்சிகள்தான் அவர்களுக்கு பிரசவம் செய்தனர். எனவே பிள்ளை பேறுக்காக மருத்துவமனைக்கு போவது தவறல்ல.
ஒருவர் அடிபட்டுக்கிடந்தால் நாம் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி கொடுக்கவேண்டும் என்று நாம் இயேசு சொன்ன லேவியன், ஆசாரியன், நல்ல சமாரியன் என்னும் கதையிலிருந்து (லூக்கா 10) புரிந்துகொள்ளலாம்.இயேசு சொன்னார்: "பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்". இங்கே இயேசு சொன்ன முக்கியமான விஷயம் நீதிமான்களுக்கு அல்ல பாவிகளுக்காவே மரிக்க வந்தேன் என்று சொல்கிறார், அதற்காக ஒரு இயல்பு காரியத்தை ஒப்பிடுகிறார்.

மருத்துவரிடம் சென்றால் பாவமா? என்றால் பாவமில்லை என்று சொல்வதைவிட விசுவாசக்குறைவு என்று பதிலாக சொல்லலாம். மேலும் தேவன் உன்னை எப்படிப்பட்ட ஜீவியம் செய்யும்படி அழைத்தார் என்பதைப் பொறுத்ததும் ஆகும். மேலான ஜீவியம் செய்வோர் பரலோகத்தில் பெறும் பிரதிபலன் அதிகமாக இருக்கும்.

முடிவாக:
சங்கீதம் 118:8 "மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும் தேவன்பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்". இதை பொதுவாக எல்லா காரியங்களுக்கும் சொல்லலாம்.
எரேமியா 17: 5 "மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து ... கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்". இந்த வசனம் மருத்துவர்களிடம் போவது குறித்து அல்ல,
ஒரு காரியத்துக்காக கர்த்தரைவிட மனிதன் மேல் நம்பிக்கைவைத்து அவரை விட்டு விலகுபவர்களைக் குறித்தாகும்.எனவே "உன் விசுவாசத்தின்படியே உனக்கு ஆகக் கடவது!" என்பதே இந்த கேள்விக்கு பதிலாகும்

இந்த புத்தகத்தை வாசியுங்கள்:
 "REMARKABLE INCIDENTS And MODERN MIRACLES Through PRAYER And FAITH By G. C. Bevington"



சிந்தனைக்கு:
.