Tuesday, September 7, 2010

52. "கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன்" முடிந்துவிட்டதா, இனிமேலா, எப்படி சாத்தியம்?

கேள்வி:
"கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்" ஆமோஸ் 8:11
இப்படியாக சொன்ன பஞ்சத்தின் காலம் இனி தான் வரும் என்கிறார்கள் கிறிஸ்தவ மண்டல போதகர்கள். அதாவது ஒரு மொபைல் ஃபோனிலிருந்து இன்னோரு மொபைல் ஃபோனிற்கு முழு வேதத்தை அனுப்ப ஏறக்குறைய 6 விநாடிகளே சமயம் எடுக்கிறது. இணைய தளம் என்று எடுத்துக்கொண்டால், ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு இணைய தளத்தில் கிறிஸ்தவம் குறித்தும், வார்த்தைகளை குறித்தும் வாசிக்க நேரிடுகிறது. டெக்னாலஜி இவ்வுளவு முன்னேறிய பிறகு தான் வசனத்தின் பஞ்சம் ஏற்படுமா. தீர்க்கதரிசி எந்த காலத்தை குறித்து சொல்லி யிருக்கிறார், அந்த காலம் நிறைவேறி விட்டதா, இனிமேல் தானா?

பதில்:

ஆமோஸ் 8:11ல் "கேட்கக் கிடையாத பஞ்சம்"- famine of hearing". என்று வாசிக்கிறோம்
.
எபிரெய மொழியில் "Shama` - to hear" என்று சொல்லப்பட்டுள்ளது.

שמע shama` - hearing
דבר dabar - the words
יהוה Yĕhovah - of the Lord.

இங்கே கேட்க என்பதால், ஒருவர் சொல்லவேண்டும் அல்லது பேசவேண்டும் அதாவது போதிக்கவேண்டும் என்று சொல்லலாம்.

முதலாவதாக:
சாமுவேல் சிறுவனாக இருந்த காலத்தில் (கி.மு. 1020 - 1000) "சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை." என்று
I சாமுவேல் 3:1ல் வாசிக்கிறோம்.

இரண்டாவதாக:
ஆசா அரசாண்டகாலத்தில் (கி.மு. 913 - 873)
"இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை." II நாளாகமம் 15:3ல் வாசிக்கிறோம்.

கடைசியாக:
ஆமோஸ் வாழ்ந்த காலம் என்பது: ஆமோஸ் 1:1ல் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும்... (கி.மு. 783 - 742). இது சாமுவேலுக்கும், ஆசாவுக்கும் பின்பு ஆகும். (http://www.crivoice.org/israelitekings.html)

எனவே முதல் இரண்டு சம்பவத்தை வைத்து ஆமோஸ் 8:11ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் ஏற்கனவே முடிந்துவிட்டது என்று சொல்லக்கூடாது.

"வானமும் பூமியும் ஒழிந்துபோகும் என் வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போகாது" என்றால் அவைகள் எங்கே எழுதப்பட்டுள்ளன? பரலோகத்திலே!! லூக்கா 10:20ல் "...உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்" என்று இயேசு சொன்னதை நினைவுபடுத்துங்கள். எனவே அவருடைய வார்த்தையாகிய வசனம் அல்லது இந்த வேதாகமம் பூமியே ஒழிந்தாலும் எப்போதும் அழியாமல் பரலோகத்தில் இருக்கும்.

ஆமோஸ் சொல்லும் பஞ்சமானது கடைசிகாலத்தில் நடக்கவிருக்கும் சம்பவமாகும்.
இன்றும் சீனாவில் அநேக இடங்களில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள். எனவே இவர்கள் ஜெபிக்கவேண்டுமென்றால் மறைமுகமாக ஒரு வீட்டில் கூடி ஜெபிக்கின்றார்கள் (a.k.a. underground). நாளுக்கு நாள் கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஒருகாலத்தில் (கி.பி. 1960ல்) அமெரிக்காவானது கிறிஸ்தவர்களின் நாடாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்; காரணம் அன்று அனைவரும் சபைக்குச் செல்லவேண்டும் என்பதால். ஆனால் தற்போதோ சுதந்திரம் (freedom) என்ற வார்த்தையில் பறிபோகிவிட்டது. அநேக அலுவகங்களிலும் யாரும் சமயத்தைக்குறித்தும் பேசக்கூடாது என்ற கட்டளைகள் வந்துள்ளன. ஜனங்களும் பைபிளின்படி செய்யாமல், உலகம் போகிற போக்கிலே செல்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக "அந்தகாரத்தின் ஆவி"யானது இந்த உலகை ஆக்கிரமிக்கின்றது.

யோவான் 9:3ல் இயேசு சொன்னார், "இதோ ஒருவனும் கிரியைச் செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது". இதன் அர்த்தம் யாரும் வெளிப்படையாக சுவிஷேசத்தை கொண்டுசெல்லமுடியாது, பிரசங்கிக்க முடியாது என்பதாகும்.

இயேசு சொன்னதைத்தான் ஆமோஸ் அப்போது தீர்க்கதரிசனமாக உரைத்தான்.

மேலும், சபையானது இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டபின்பு அந்திக்கிறிஸ்துவின் ஆளுகையில் நிச்சயமாக கர்த்தருடைய வசனம் கேட்கக்கூடாத காலமாயிருக்கும். அதாவது பிரசங்கம் செய்து கேட்கக்கூடாத காலமாயிருக்கும்.


5 comments:

Colvin said...

சிலர் கூறுகிறார்கள் இணையத்தின் மூலம் மற்றும் கைத்தொலைப்பேசி மற்றம் நவீன ஊடகங்கள் மூலம் எப்போதும் பைபிளைப் படிக்கலாம் போதிக்கலாம் என்று ஆனால் இவற்றை வெகுஎளிதாக தடுக்ககூடிய முறைகள் அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் உருவாக்கப்படும். தற்போது தீவிரவாதிகளின் இ-மெயில்கள் மற்றும் என்ஸ்கிரிப் செய்யப்பட்ட உரையாடல்களை எப்படி அரசாங்கங்கள் கண்டுபிடிக்கின்றதோ அதே போன்று அந்திகிறிஸ்துவின் காலத்தில் வேதத்தை இப்படியாக போதிப்பதை இலகுவில் தடுப்பான். தற்போதைய நவீன வசதிகளே போதும் இவற்றை தடுப்பதற்கு. ஆயினும் விஞ்ஞான வளர்ச்சியில் இன்னும் முன்னேற்றம் ஏற்படும்போது வசனபஞ்சததை ஏற்படுத்துவது பெரிய வி்டயமல்ல தனிப்பட்டவர்களையும் கண்காணிக்கும் முறை தற்போதே உருவாகிவிட்டது.

Unknown said...

I don't know where I ask question.... So that I type here.... Eeranthavargalai nenaipathu avargalukkaga jebibathu thavara sariya...(eg.mum)

Tamil bible said...

இறந்தவர்களை நினைப்பது தவறல்ல. அவர்களுக்காக ஜெபிப்பது தவறு. அவர்களிடம் ஜெபிப்பதும் தவறு.

Helping god said...

Sir Parisutha aaviyin adaiyalangal

Tamil Bible said...

http://tamilbibleqanda.blogspot.com/2010/04/35.html

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

New comments are not allowed.