Monday, March 7, 2011
70. வாஸ்து பார்த்து வீடு கட்டலாமா? இதைபத்தி வேதாகமத்தில் என்ன சொல்லப்பட்டு உள்ளது?
கேள்வி:
வீடு எப்படி கட்டவேண்டும். வாஸ்து பார்த்து கட்டலாமா. இதைபத்தி வேதாகமத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை விளக்கவும்.
பதில்:
நாள் நட்சத்திரம் பார்க்கலாமா என்ற கேள்விக்கு ஏற்கனவே கேள்வி பதில் 40ல் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. http://tamilbibleqanda.blogspot.com/2010/05/40.html இதுவும் அதேபோன்றதுதான்.
"வாஸ்து சாஸ்திரம்" என்பது என்ன?
சமஸ்கிருத வார்த்தையாகிய "Vasthu" (வஸ்து) என்றால் " இருக்கக்கூடிய எந்த ஒரு அமைப்போ, பொருளோ ஆகும். எனவே ஒரு பொருளைக்குறித்த அல்லது அமைப்பைக்குறித்த சாஸ்திரம், கூற்றுகள் 'வஸ்து சாஸ்திரம்' அல்லது 'வாஸ்து சாஸ்திரம்' ஆகும். இருப்பினும் தற்போது இந்த வாஸ்து சாஸ்திரம் என்பது குறிப்பாக கட்டிடங்களுக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. இப்போது தமிழ் நாட்டில்அநேகர் இதை வைத்து பிழைப்பே நடத்துகின்றனர். 1960 வரைக்கும் இது கோயில் கட்டிடங்களுக்குத்தான் பெரிதாக பின்பற்றப்பட்டது.
வாஸ்து சாஸ்திரம் என்பதில்: ஒரு சதுர வடிவத்தை 64 (8x8) அல்லது 81 (9x9) கட்டங்களாகப் பிரித்து இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்குப் பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக" இருப்பதாக கூறுகிறது. இங்கே மதங்களையும் கடவுள்களையும் வைத்து நாள் நட்சத்திரம் போல கணிப்பது பைபிளுக்கு ஒத்துப்போகாத ஒன்று.குடிசார் பொறியாளர் (civil engineer) மற்றும் கட்டிட நிபுணர்கள் (architect) இக்காலத்தில் பழங்காலத்தைவிட விஞ்ஞானத்தில் மிகவும் முன்னேறி இருக்கின்றனர்.
நீங்கள் என்னதான் வாஸ்து சாஸ்திரப்படி வீடுகட்டினாலும் அது ஒரு பூமிஅதிர்ச்சி வரும்போது சுவர்கள் விரிசல்விட்டு இடிந்து விழுந்துவிடும். ஏனெனில் தமிழ்நாட்டில் வீடு செங்கல் மற்றும் சிமெண்ட் ஆகியவற்றால் கட்டப்படுகின்றது. ஆனால் கலிஃபோரினியாவில் கட்டிய வீடு பூமியதிர்ச்சி 6.0 ரிக்டெர் அளவு வந்தாலும் விழாது. பூமி அதிர்ச்சியில் விழாமல் இருக்கவேண்டுமென்றால் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் மரத்தால் வீடுகளைக் கட்டவேண்டும்; மற்றபடி நமது இஷ்டப்படி கட்ட அரசாங்கம் இங்கே அனுமதிப்பதில்லை. ஒரு நல்ல கட்டிட நிபுணரிடம் சென்றால் இதற்கு சிறப்பாகவே ஆலோசனை கொடுக்கப்படும். உயர்ந்த கட்டிடங்கள் பூமி நகர்வதால் உடையாமலிருக்க சக்கரங்கள் போன்ற அமைப்பு அஸ்திபாரத்தில் அமைக்கப்பட்டு, முழுக்கட்டிடமும் நகரும் ஆனால் உடையாது என்ற அளவுக்கு ஜப்பான் போன்ற நாடுகளில் விஞ்ஞானம் சென்றுகொண்டிருக்கின்றது (கீழே படம்). ஆனால் வாஸ்துகாரர்கள் வீட்டில் கஷ்டம் உள்ளது என்பதால் சுவற்றை இடித்து கட்டுங்கள் என்று சொல்லி அங்கே யமன், இங்கே இந்திரன் என்று கொண்டுவருகின்றனர். காற்றுபோக ஜன்னல் எங்கே இருக்கவேண்டும், வாசல் எங்கே இருக்கவேண்டும் என்றுதானே சொல்கிறோம் என்கின்றனர். காற்றுவீசும் திசையைப் பார்த்து அதை யார்வேண்டுமானாலும் சொல்லலாமே என்ற எதிர் கூற்றும் வைக்கப்படுகின்றது. 'இல்லை... இல்லை... அதுபோக வீட்டிலுள்ள கஷ்டங்கள் நீங்கும்' என்று அவர்கள் சொல்வதை நம்பி போகும்போது அது ஜோதிடர் போன்றவர்களை நாடி செல்வது என்பதுபோல் ஆகிறது.
பைபிளில் இரண்டு இடத்தில் வீட்டைக்குறித்து சொல்லப்பட்டுள்ளது:
உபாகமம் 22:8 நீ புதுவீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிசுவரைக் கட்டவேண்டும். (பாதுகாப்பு)
லூக்கா 6:48 ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. (இங்கே வெள்ளம், சுனாமி என்ற ஒரு பாதிப்புக்கு கற்பாறை.)
இன்று இதையெல்லாம் விஞ்ஞானம் தாண்டி நாம் விண்வெளியில் பறந்து ஆய்வுசெய்கிறோமே. வாஸ்து சாஸ்திரம் எல்லாம் பார்க்கவேண்டாம். அதற்கு பதிலாக வீடுகட்டுவதற்கு நிபுணர்கள் (architect) , குடிசார் பொறியாளர்களிடம் (civil engineer) செல்லுங்கள்.
9 comments:
A very good writing on Vastu.
unnamaya paduyu...
Divya
Really Superb answer
"En Kanmalayagiya Karthave Umakke Magimai undavathaga"...
Well Said
praise the lord
அர்சி க்ரிச்தாவர்கல் சீல்ய் வழிபாடு செஇகிரார்கல் சரிஅ
Nice explanation with bible verse
Nice explanation with bible verse
thank u
Post a Comment
தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.