வேதாகமத்தில் கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் எப்படி தீர்க்கதரிசனம் சொன்னார்கள்:
- தேவனுடைய ஆவி அவர்கள் மேல் இறங்கினதினால் அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
- தேவனுடைய சத்தம் கேட்டு பின்பு யாரிடம் சொல்லவேண்டுமோ அவர்களிடம் சென்று சொல்லிவிட்டு சென்றார்கள்.
- ஆவிக்குள்ளாகி, தரிசனம் கண்டு பின்பு அதனை தீர்க்கதரிசனமாய் சொன்னார்கள்.
- தேவனுடைய மனுஷர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவ வெளிப்படுத்தல் பெற்று, ஏவப்பட்டு பேசினார்கள்.
எரேமியா 28:9-ல் "அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவான்" என்று வாசிக்கிறோம். இங்கே எதிர்காலத்தில் நடக்கவுள்ளதை சொல்லியபடி வந்தால் என்று புரிந்துகொள்ளவேண்டும், கடந்த மற்றும் நிகழ்காலம் அல்ல.
தேவனுடைய தீர்க்கதரிசிகளின் சுபாவங்கள்:
- தேவனை நோக்கி ஜெபிப்பார்கள்
- சுத்த இருதயமுள்ளவர்கள்
- மற்றவர்களுக்காக பரிந்து பேசுபவர்கள்
- சாந்தகுணமுள்ளவர்கள்
- தேவனுடைய வேதத்தை அறிந்தவர்கள்
- தற்காப்புகொள்ளாதவர்கள்
- தேவனிடம் அழுது கூப்பிடுபவர்கள்
- பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்கள்
- தேவனில் நம்பிக்கையாயிருப்பவர்கள்
- நேர்மையானவர்கள்
- தேவனுடைய நிகழ்ச்சிநிரல்(agenda) கொண்டவர்கள், தங்களுடையது அல்ல
- கீழ்ப்படிதலுள்ளவர்கள்
- தாழ்மையானவர்கள்
- பொருள், பண ஆசையற்றவர்கள்
- எளிமையாய் வாழ்பவர்கள்
மோசே தேவனுடைய தீர்க்கதரிசி, அவன் தேவன் சொன்ன அற்புதத்தைமட்டும் செய்பவனாயிருந்தான். தேவன் சொல்லாமல் எதையும் செய்யவில்லை. ஆனால் அங்கே எகிப்தில் (ஆப்பிரிக்கா) மந்திரவாதிகள் இருந்தனர். அவர்களும் ஒரு கோலைப்போட்டு அதை பாம்பாக மாற்றியுள்ளனர். (இன்று இந்த அளவுக்கு செய்யும் மந்திரவாதிகள் இருக்கிறார்களா தெரியவில்லை). ஆனால் எரிபந்த கொப்புளங்கள் அந்த மந்திரவாதிகள்மேலும் வந்ததால் அவர்கள் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாமற்போயிற்று. எனவே அற்புதம் செய்யும் அனைவரும் தேவனுடைய தீர்க்கதரிசிகள் என்கிற அவசியம் இல்லை.
எலியாவைக்குறித்த காரியத்தில் "நாகமான்: இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்”. (ஆனால் கேயாசி பொருளாசையினால் குஷ்டரோகியாகினான்.)
இன்னொரு இடத்தில், அப்பொழுது ராஜா [யெரொபெயாம்] தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான். தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை என்றான்.
கள்ளத்தீர்க்கதரிசிகளின் சுபாவங்களும், செயல்களும்:
இன்று அநேகர் தங்களின் பேர், புகழ், பிரசித்தி (popular) அடையவேண்டும், பணம் நிறைய சம்பாதிக்கவேண்டும் என்று மந்திரவாதங்களையும், குறிசொல்லுதலையும் தீர்க்கதரிசனம் என்ற பெயரில் சொல்லி தேவ ஜனங்களை வஞ்சிக்கிறார்கள். நாம் மிகவும் ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். என்னிடத்தில் ஒருவர்: இதோ இன்னும் இத்தனை நாட்கள், இத்தனை வருடங்கள் கழித்து உங்களுக்கு இது நடக்கும் என்று சொன்னார். அப்படி ஏதும் நடக்கவில்லை.
கள்ளத்தீர்க்கதரிசிகள் வெகுமானத்தை (பணம் அனுப்புங்கள் என்று தொலைக்காட்சியில்) கேட்டு, பொருளாசையுடனும் (பலகோடி விலையுயர்ந்த கார், விமானம் சொந்தமாக வாங்கி), என் பெயர் இது என்று சொல்லி தங்களை அறிமுகப்படுத்தி, தங்கள் பெயரை உயர்த்தி, தங்களைப்பற்றி பெருமையாக பேசி, "தீர்க்கதரிசனம் சொல் தேவமனுஷனே" என்று சொல்ல ஆட்களை வைத்துக்கொண்டு, குறிசொல்லும் ஆவியால் தரிசனம் கண்டு, தனிப்பட்ட மனிதனுடைய கடந்தகாலத்தைபற்றி சொல்லி, சில அற்புதம் செய்து அநேக தேவ ஜனங்களை வஞ்சிக்கின்றனர். இவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளே. ஆனால்
பிசாசை விரட்டும் தீர்க்கதரிசிகள் தேவனுடைய ஊழியக்காரர்கள்.
எரேமியா 6:13; 8:10-ல் "அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்" என்று வாசிக்கிறோம். எசேக்கியேல் 22:25-28-ல் "அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள்; திரவியத்தை விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள். அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாய்ப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தஞ்சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள். அதின் தீர்க்கதரிசிகள் அபத்தமானதைத் தரிசித்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, கர்த்தர் உரைக்காதிருந்தும், கர்த்தராகிய ஆண்டவர் உரைத்தாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள்" என்றும் செப்பனியா 3:4-ல் "அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்" என்றும், மீகா 3:11-ல் "அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்" என்றும் வாசிக்கிறோம்.
ஜனங்களுக்கு இப்படி தங்களைப்பற்றி சொல்வது ஆச்சரியமாயும், பிரியமாயுமிருப்பதினால் அவைகளை விரும்பி செல்கின்றார்கள். ஆவிகளைப் பகுத்தறிய அவர்களுக்கு முடிவதில்லை. பிசாசும் ஜனங்களின் இந்த பலவீனத்தை பயன்படுத்தி ஏமாற்றுகிறான். எரேமியா 5:31-ல் "தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்?" என்று வாசிக்கிறோம். ஒருவன் ஆவிகளைப் பகுத்தறிய விரும்பினால் தன்னைத்தானே 12-மாதங்கள் தேவசமுகத்தில் ஆராயட்டும். தேவன் நம்மில் உள்ள குறைகளைக் காட்டுவார். (ஒருமுறை கர்த்தர் எனக்கு சொப்பனத்தில் "உனக்குள் பெருமை உள்ளது" என்று காட்டியபோது மிகவும் வெட்கமடைந்தேன்). ஆவிகள் எப்படி ஏமாற்றுகின்றன, அவைகள் எப்படி சத்தியத்துக்கு மாறாக உள்ளன, எப்படி செயல்படுகின்றன, எப்படி பல உண்மைகளைக்கூறி ஒரு சில பொய்சொல்கின்றன என்றும் படிப்படியாக காட்டுவார்.
அவர்கள் தேவனின் பெயரைச் சொல்லி அற்புதம் செய்தாலும் நாம் ஏமார்ந்துபோகக்கூடாது என்று தேவன் எச்சரித்துள்ளார். எரேமியா 14:14-ல் "அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்களோடே பேசினதுமில்லை" என்றும், எரேமியா 23:13-ல் "சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தை மோசம்போக்கினார்கள்" என்றும் வாசிக்கிறோம்.
சிலதீர்க்கதரிசிகள் தங்களோடு பாலியல் கொள்ளவேண்டும் என்று சொல்லியும், முத்தம் கொடுத்தும் அருவருப்பை நடப்பிக்கிறார்கள். எரேமியா 23:14-ல் "எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்" என்று வாசிக்கிறோம். உங்களைக்குறித்த காரியங்களைச் சொல்லி உங்களை முக்கியப்படுத்துவார்கள். உங்கள் வியாபாரம் (business) செழிக்கும் என்றும் சொல்வார்கள். உங்கள் பிறந்ததேதி, விலாசம், வம்சவரலாற்றின் வருடங்கள், மற்றும் பெயர்கள் எல்லாம் சரியாக சொல்லுவார்கள். எரேமியா 23:16-ல் "உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்" என்று வாசிக்கிறோம். இப்படி அறிவை உணர்த்தும் வசனம் (word of Knowledge) - அதாவது நிகழ்கால மற்றும் கடந்தகால சம்பவங்களைபற்றி சொல்லும் வரம் தேவன் கொடுக்கிறார். பிசாசும் இப்படி அவர்களுக்கு சக்தி கொடுக்கிறான். அவர்கள் தேவனைவிட்டு தூரம் போனாலும் அந்த வரம் கிரியைச் செய்யும். எனவே அவர்கள் ஜீவியத்தைப் பார்க்கவேண்டும். இவர்கள் தேவசித்தம் செய்யாதவர்கள். இவர்களை அறியேன் என்று இயேசு சொல்லுவார்.
சில கள்ளத்தீர்க்கதரிசிகள் மாயாஜாலம் செய்து (Magic trick) ஜனங்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர். (உதாரணமாக iPad கொண்டு ஒருவரின் படம் வரவழைப்பது). சிலர் தங்கள் பெயரை கைக்குட்டைகளில் எழுதி அதை விற்பனையாக்கின்றனர். சிலர் ஜெபமாலைகள் (இவை பிசாசின் சாமான்கள்) செய்து விற்கின்றனர். அப்போஸ்தலர் 13:6-ல் "அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் (Magic trick) கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள். அவன் பவுலை எதிர்த்துநின்றபோது, பவுல் அவனை "சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான்" என்று வாசிக்கிறோம். சிலர் நான் உங்களுக்கு போனில் தீர்க்கதரிசனம் சொல்ல $200 (ரூ 12,000) "Seed"-கொடுங்கள் என்று சொல்கிறனர். ஒருவர் "யார் கள்ளத்தீர்க்கதரிசி, யார் தேவனுடைய தீர்க்கதரிசி" என்று தவறான உபதேசங்களைக்கொண்டு உபதேசம்பண்ணுகிறார். இது கள்ளத்தீர்க்கதரிசிகளின் மிகவும் முன்னேறிய தந்திரம். அதில் பாதி உண்மை, பாதி பொய்; எனவே ஜனங்கள் எளிதில் ஏமார்ந்து விடுகிறார்கள். இப்போது கள்ளத்தீர்க்கதரிசிகள் பலர் தங்கள் வரத்தை மற்றவர்களுக்கு கைகளைவைத்து வழங்குவோம், ஆனால் அது சும்மா அல்ல அதற்கு எங்கள் பள்ளிகளில் சேரவேண்டும் $500 (ரூ 30,000) கட்டவேண்டும் என்று சொல்கின்றனர். பண ஆசையுடன் செயல்படும் இவர்கள் தேவனுடைய ஆடுகள் அல்ல. அநேக தீர்க்கதரிசிகள் தேவனிடத்திலிருந்து வரம் பெற்றவர்கள், தற்போது பவுல் சொன்ன தேமாவைப்போல் பணஆசைகொண்டு இடுக்கமாண வழியில் செல்லாமல் விசாலமான வழியில் செல்கிறார்கள். இருப்பினும் தேவன் அவர்களுக்கு கொடுத்த வரத்தை திரும்ப எடுப்பதில்லை. இப்படி அற்புதம் செய்தாலும், தேவன் அவர்களை "அறியேன்" என்றே சொல்லுவார். எனவே அவர்களின் ஜீவியத்தைக் கவனியுங்கள். சிலர் உங்கள் பர்ஸ்-ல் பணம் வரும், உங்கள் வங்கிகளில் பணம் வரும் என்று எல்லாம் ஏமாற்றுவர். அப்படி சொல்லுபவர்கள் அல்லது அந்த உபதேசத்தை கைப்பற்றுபவர்கள் கள்ளதீர்க்கதரிசிகள்.
எரேமியா 23:31, 32 இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை.
இயேசு சொன்னார்: ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். (மாற்கு 13:22).
I யோவான் 4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
பிசாசிடம் குறிகேட்க சென்றால்:
நீங்கள் குறிகேட்கபோனால் நீங்கள் பிசாசின் வட்டாரத்துக்குள் அடியெடுத்து வைக்கின்றீர்கள். அப்படிசெய்வதினால் பிசாசானவன் உங்களுக்குள் நுழைய கதவை திறக்கின்றீர்கள். உங்கள்மேல் விபூதியோ, தண்ணீரோ தெளித்து உள்ளே நுழைந்துவிடுவான். அவன் உங்கள் எதிர்காலத்தில் நடக்கவுள்ளதை சொல்வதுபோல், குறிப்பாக இந்த வருடம் சாவீர்கள் என்றும், வியாதிவரும் என்றும், குருடனாவீர்கள் என்றும் அவர்கள் சொல்லும்போது அது அப்படியே நடக்கும். ஏனெனில் பிசாசானவன் இங்கே, தான் என்னசெய்யபோகிறேன் என்று சொல்கிறான். உங்கள் எதிர்காலத்தை அவன் பார்த்து சொல்வதில்லை. (ஜான் ரமீரஸ் - எழுதிய புத்தகத்திலிருந்து)
கள்ளத்தீர்க்கதரிசியின் தண்டனை:
அப்படியே அவரவர் தங்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும். (எசேக்கியேல் 14:10)
அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது இயேசு அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவார். (மத்தேயு 7:22, 23)
வெளி 20:10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
முடிவாக:
- தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களை உயர்வாக பெருமையாக பேசுவார்கள்.
- பேர்சித்தி (தங்கள் பெயர்) - ஊழியங்களுக்கு தங்களின் பெயர் வைத்திருப்பார்கள். எல்லாரைக்காட்டிலும் அதிக ஜனக்கூட்டம் தனக்கு வேண்டும் மற்றும் தான் பெரிய ஆளாக வரவேண்டும் (பெருமையின் ஆவி) என்ற உந்துதல்.
- கீழ்ப்படியாமை - இயேசுவின் போதனைகளின்படி வாழாதவர்கள். ஒருவன் என்னைப்பின்பற்ற விரும்பினால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன் சிலுவையை சுமந்துகொண்டு என்னை பின்பற்றக்கடவன்.
- அற்புதங்கள், அடையாளங்கள் - உடனே நம்பக்கூடாது. அவர்களது ஜீவியத்தைப் பார்க்கவேண்டும்.
- உலகம், பணம், நகை, புகழ் - இதன்பின் செல்பவர்கள்.
- தவறாக நிறைவேறாத தீர்க்கதரிசனம் சொன்னவர்கள்.
- கிறிஸ்து இயேசு தேவனுடைய குமாரன் என்று சொல்லாத ஆவிகளும், அவர் மரித்து மூன்றாம்நாள் உயிரோடு எழுந்தார் என்பதை மறுக்கும் ஆவிகளும்.
- தேவனுடைய ஆவியைக்கொண்டு சொல்லாமல், வேறெ ஆவியினால் சொல்லும் அனைவரும்.
- பிசாசை விரட்டுபவர்கள் இயேசுவின் நாமத்தில் அதை அதட்டி விரட்டவேண்டும். அந்த ஆவி அவர்களை அலைக்கழிக்கும். இயேசுவின் நாமத்தில் அதட்டி பரிசுத்த ஆவியைக்கொண்டு விரட்டாமல் சும்மா ஃபூ என்று ஊதுபவர்கள் எல்லாம் சாத்தானின் செயல்கள், அவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகள்.
இயேசு சொல்லும்போது: "இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்" என்றார். இருதயத்தில் தேவனைவிட்டு வேறே ஆவியை பின்பற்றுவது விபசாரம். தேவனுடைய ராஜ்யத்தையும் அவரது நீதியையும் தேடுங்கள். அப்பொழுது உங்களுடைய ஜீவியத்துக்குத் தேவையானவைகளைத் தேவன் கொடுப்பார். நாளையதினத்தைக்குறித்து கவலைப்படாதிருங்கள்.
அற்புதம் அடையாளங்களைக் கண்டால் ஜாக்கிரதையாய் அந்த நபரின் வாழ்க்கையையும், அவருடைய உபதேசங்களையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுபாவங்களையும் ஆராய்ந்து பாருங்கள். இந்நாட்களில் அநேகர் வஞ்சிக்கப்படுவார்கள். எனவே, (கள்ளத்தீர்க்கதரிசிகளை நோக்கி அல்ல) நம்முடைய விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.
13 comments:
Praise the lord. Good n clear explanation
Brother, Is it true that person becoming ghost whenever he/she attempted suicide/unnatural death? Please provide your explanation
Dear Anonymous: No, a person does not roam around as a ghost after suicidal death. It is the evil spirits that take advantage of that person's death pretending to be that person. We don't see any evidence in the bible for ghosts, even with the case of Judas committing suicide.
Hi Brother
Is secret coming happen before the occurence of anti christ?
கிறுஸ்துவர்கள் வாரம் ஒருமுறை திருவிருந்து எடுப்பது சரியா??? மாதம் ஒருமுறை திருவிருந்து எடுப்பது சரியா??? எது சரியான திருவிருந்து???
Dear brother,
Praise the Lord..
I'm a born Hindu, married to a Muslim and following Jesus Christ as my savior.. I got the salvation from Jesus after my suicidal attempt before 10 years.. I'm living with my husband with 2 kids..
I'm following the prophecies of a pastor whose 95% of the prophecies came true.. He also says that my husband had an illegal affair with his cousin sister.. I got upset and filled with grief and now I'm completely believing that it might not be the words of Jesus.. Also I know about my husband and also I am a song believer of Jesus.. So I trust that my Jesus wouldn't had lt this happen..
I'm getting scared that whether I'm following the right pastor or not because many of his preachings are like hatred and insisted me to pray Psalm 109 for my enemies...
Kindly in the Holy Spirit guide me if I'm going in the correct way towards Jesus..
In the name of Jesus
Thanks for your guidance..
Thief (devil) comes to steal and destroy (family, marriage, our walk with God). Pray to Jesus and stay away from false prophets. Ask your husband to listen to "Christian Prince" speech in YouTube.
இஸ்ரவேலை ஞாயம் விசாரித்த பெண் தீர்க்கதரிசி யார்
Deborah is the prophet and judge
@Kiruba "கிறுஸ்துவர்கள் வாரம் ஒருமுறை திருவிருந்து எடுப்பது சரியா??? மாதம் ஒருமுறை திருவிருந்து எடுப்பது சரியா??? எது சரியான திருவிருந்து???"
அப்போஸ்தலர் நடபடிகளில் 2:46-ல் தினந்தோறும் தேவலாயத்தில் கூடினார்கள், வீடுகள்தோறும் அப்பம்பிட்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. 20:7-ல் வாரத்தின் முதல்நாளிலே அப்பம்பிட்கும்படி கூடினார்கள் என்று வாசிக்கிறோம்.
எனவே இத்தனை நாளுக்கு ஒருமுறை என்று நியமம் இல்லை. என்னைப்பொறுத்தவரையில் சபை கூடிவரும்போதெல்லாம் செய்யவேண்டும்.
@Kiruba "கிறுஸ்துவர்கள் வாரம் ஒருமுறை திருவிருந்து எடுப்பது சரியா??? மாதம் ஒருமுறை திருவிருந்து எடுப்பது சரியா??? எது சரியான திருவிருந்து???"
அப்போஸ்தலர் நடபடிகளில் 2:46-ல் தினந்தோறும் தேவலாயத்தில் கூடினார்கள், வீடுகள்தோறும் அப்பம்பிட்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. 20:7-ல் வாரத்தின் முதல்நாளிலே அப்பம்பிட்கும்படி கூடினார்கள் என்று வாசிக்கிறோம்.
எனவே இத்தனை நாளுக்கு ஒருமுறை என்று நியமம் இல்லை. என்னைப்பொறுத்தவரையில் சபை கூடிவரும்போதெல்லாம் செய்யவேண்டும்.
Amen, Super message
Thankyou.. பல வினாக்களுக்கு விடைகள் கண்டேன்..
Post a Comment
தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.