பதில்:
பைபிள் (வேதாகமம்) விஞ்ஞானத்தை பற்றிப்பேசும் புத்தகம் அல்ல. பைபிளின் நோக்கம் அதுவல்ல என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். பைபிளின் நோக்கம் அன்புள்ள தேவன் மனிதகுலத்தை பாவத்திலிருந்து மீட்பது பற்றியதாகும். உண்மையான தேவன் யார், எப்படி மோட்சம் செல்வது என்பது பற்றி சொல்லும் புத்தகமாகும்.
இருப்பினும் பைபிளில் அணுவைப்பற்றி சொல்லியிருக்கிறது என்று அறிகிறோம்.
[A] கொலோசெயர் 1:16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
இங்கே: "காணப்படாத" என்றால் அவை மூலக்கூறு மற்றும் அணுக்கள் ஆகியவற்றை குறிக்கும்.
[B] ரோமர் 1:20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
இங்கே: "காணப்படுபவைகள் காணப்படாதவைகளால் உண்டாக்கப்பட்டுள்ளன" என்பது அணுவைக் குறிக்கிறது என்று சொல்லலாம். விஞ்ஞானம் காணப்படுபவைகளை மிகச்சிறிதாக மூலக்கூறுகளாக பிரிக்கலாம். மூலக்கூறுகளையும் அணுக்களாவும், அணுவை எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் என பிரிக்கலாம். எலக்ட்ரானையும் க்வார்க் என்று பிரிக்கலாம். இவைகள் கண்ணுக்கு புலப்படாது என்கிறது.
----
மேலும், பைபிளில் தமிழ் மொழிபெயர்ப்பில் பைபிளில் "அணு" என்ற வார்த்தை குறைந்தது மூன்று இடங்களில் வருகிறது. இது மொழிபெயர்ப்பில் வந்தவையாகும்.
[1] ஏசாயா 40:15 இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும் எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.
* as a very little thing דַּק daq
இங்கே (தேவன்) தீவுகளை ஒரு மீச்சிறிதுபோல் தூக்குகிறார் என்று ஆங்கில மொழியில் கூறப்பட்டுள்ளது. இங்கு அணு என்பது சரியான ஒப்பிடுகையாகும்.
[2] யோபு 36:27 அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.
* For he maketh small גָּרַע gara`
இங்கே நீர்த்துளிகளை மீச்சிறிதாக்கி ஏறப்பண்ணுகிறார் என்று ஆங்கில மொழியில் கூறப்பட்டுள்ளது. இது மொழிபெயர்ப்பின் வார்த்தை.
[3] ஏசாயா 48:19 அப்பொழுது உன் சந்ததி மணலத்தனையாகவும், உன் கர்ப்பப்பிறப்பு அதின் அணுக்களத்தனையாகவும் இருக்கும்; அப்பொழுது அதின் பெயர் நம்மை விட்டு அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும்.
இங்கே உன் கர்ப்பப்பிறப்பு அதின்(மணல்) தூளத்தனையாகவும் இருக்கும் என்று ஆங்கில மொழியில் கூறப்பட்டுள்ளது. இதுவும் மொழிபெயர்ப்பின் வார்த்தை.
----
இதுபோக பைபிளில் அணுகுண்டு பேரழிவு (நியூக்ளியர்) பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து (சகரியா 14:12):
"Zach 14:12 And this shall be the plague wherewith the LORD will smite all the people that have fought against Jerusalem; Their flesh shall consume away while they stand upon their feet, and their eyes shall consume away in their holes, and their tongue shall consume away in their mouth".
இங்கே அவர்களுடைய சதைகள் அவர்கள் நிற்கும்போது இல்லாமல் போய் அழியும், அவர்கள் கண்கள் அதின் துளையில் இல்லாமற்போய் அழியும், அவர்களின் நாவு வாயில் இருக்கும்போதே இல்லாமல் போகும். அந்நாளில் எருசலேமை சுற்றி யுத்தம் செய்பவர்கள் அப்படியாக சாவார்கள் என்பது அணுகுண்டு பேரழிவுக்கு ஒப்பிட்டு சொல்லலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.
----
தமிழில் அணு என்ற வார்த்தை தொன்றுதொட்ட காலத்திலிருந்து பழக்கத்தில் உள்ளது என்று அறிகிறோம். இன்றைய அணு வரையறையின்படி அது 0.5 நானோ மீட்டர் (0.5 x 10-9m) நீளமாகும். தமிழில் 60 நானோ மீட்டர் என்று அக்காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆச்சரியம்.
அணு என்ற வார்த்தை தமிழில் இருந்து சமஸ்கிருத மொழிக்கு சென்றது. அதன்பின்பு அணு என்ற வார்த்தை இந்தியாவிற்கே பிரபலமானது.
தமிழில் பெரிய எண்களுக்கும், சிறிய விகித எண்களுக்கும் பெயர்கள் உள்ளன. இதுவரை தெரியாவிட்டால் இதோ உங்களுக்காக:
Value
|
Words
|
English
|
105
|
இலட்சம்
|
Lakh
|
106
|
பத்து இலட்சம்
|
Ten Lakhs
|
107
|
கோடி
|
Crore
|
108
|
பத்து கோடி
|
Ten Crore
|
109
|
அற்புதம்
|
Billion
|
1011
|
நிகர்ப்புதம்
|
|
1013
|
கர்வம்
|
|
1015
|
சங்கம்
|
Quadrillion
|
1017
|
அர்த்தம்
|
|
1019
|
பூரியம்
|
|
1021
|
முக்கொடி
|
Sextillion
|
1025
|
மாயுகம்
|
|
அணுவைப்பற்றி சொல்லியிருப்பதால் ஒரு புத்தகம் மேலானதாகிவிடாது. அதைவிட உண்மையை அதாவது மெய்ப்பொருளை (The Truth) கண்டறிவது அவசியம். அவர் இயேசுவே!
இயேசு சொன்னார்: சொர்க்கம் (மோட்சம்) செல்ல நானே வழி. என்னாலேயன்றி வேறொருவனும் பிதாவினிடத்தில் வரான்.
9 comments:
amen
இயேசுவே ஆண்டவர்
இயேசுவே ஆண்டவர்.
I love Jesus
amen
PRAISE THE LORD AMEN...
சிறப்பான செய்தி வாழ்த்துக்கள்
can plz explain about the What are the 14 books removed from the Bible?
The anagignoskomena are Tobit, Judith, Wisdom of Solomon, Wisdom of Jesus ben Sira (Sirach), Baruch, Letter of Jeremiah (in the Vulgate this is chapter 6 of Baruch), additions to Daniel (The Prayer of Azarias, Susanna and Bel and the Dragon), additions to Esther, 1 Maccabees, 2 Maccabees, 3 Maccabees, 1 Esdras, i.e.
why this book are removed from the bible
Amen🙏🙏
Post a Comment
தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.