Wednesday, December 2, 2009
23. தேவன் ஏன் பிசாசை [சாத்தானை] உண்டாக்கினார்?
எசேக்கியேல் 28:15 நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.எசேக்கியேல் 28:12 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.
எசேக்கியேல் 28:16,17 உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன். உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்;
ஏசாயா 14:13 நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,ஏசாயா 14:14 நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
தேவன் அவனை உண்டாக்கியபோது அவன் ஒரு பூரண அழகிய தேவதூதன். பாவத்தினால் விழுந்துபோனான்.
அவனை பிசாசாக தேவன் உண்டாக்கவில்லை.
.
6 comments:
This Blog is really very informative.. Thanks!
நீங்கள் மேலே குறுப்பிட்டு உள்ள அதிகாரம் தீருவின் அதிபதியை பற்றி தானே சொல்ல பட்டு உள்ளது.
பிசாசை பற்றி என்று எப்படி சொல்ல முடியும்?
உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.எசேக்கியேல் 1 :2
இதற்கு என்ன அர்த்தம்?
எபன்ஜோ: உண்மைதான். இங்கே "தீரு ராஜா", "தீரு அதிபதி" என்று இரண்டு வேறுபட்டவர்களைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது.
தீருவின் ராஜாவைக்குறித்து சொல்லும்போது:
"நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்.பத்மராகம் ... மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்" என்று சொல்லப்பட்டுள்ளது.
இது அவன் மனிதன் அல்ல என்று தெளிவாக உணர்த்துகின்றது.
"தீருவின் அதிபதி" என்பது தனி விவாதத்திற்குரியது.
மனிதர்கலுக்கு அக்கிரமம் செய்ய தூன்டுவது பிசாசு என்ரால் முதலில் தெவ தூதனாக
இருந்த தர்பொது பிசாசானவனை அக்கிரமம் செய்ய தூன்டியது யார்
bro. ram kumar kedda kelvi sari thane brother atharkku pathil solla mudiyuma
Theva thuthan manathil yeppadi pavamana ennagal vanthathu ? atham & eval pavam seia thundiathu sarpam ? apo inga yaru pavamana ennathai thundiathu ?