Monday, December 7, 2009

24. தேவன் அன்பாயிருக்கிறார் (God is Love) என்றால் அவர் ஏன் நரகத்தை உண்டாக்கி மனிதர்களை அங்கே அனுப்பவேண்டும்?



இப்படியாக ஒரு கேள்வியினை உலகத்தார் எழுப்புகின்றார்கள்: "If God is love, How could a God of love send people to the lake of fire (or hell)
?". எப்படி அன்பானவர் நரகத்தை உண்டாக்கி மனிதனை அங்கே தள்ளமுடியும்?

'அன்பே கடவுள்' என்று அநேக இடங்களில் வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது எங்கிருந்து வந்தது என்றால்: I யோவான் 4:7,8லிருந்து
7. பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
8. அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். (God is Love)

இயேசு மத்தேயு 25:41ல் "அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்." என்று கூறினார்.

"தேவன் பிசாசுக்காகவும், அவனுடைய [விழுந்துபோன] தூதர்களுக்காகவும் மட்டுமே அக்கினிக்கடலை உண்டாக்கினார்".

நீங்கள் பிசாசை பின்பற்றினால், அல்லது பிசாசின் கிரியைகளுக்கு உட்பட்டால், நீங்களே பிசாசின் பின்னாகச் செல்கின்றீர்கள், பிசாசின் பிள்ளைகளாகவும் அவனுடைய கூட்டத்தாராகவும் ஆகின்றீர்கள். எனவே தேவனல்ல, பிசாசே உங்களைத் தனக்கென்றும், தன்னுடைய கூட்டத்தாருக்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நரகத்திற்கு அழைத்துச் செல்கின்றான். நீங்கள் யாரைப் பின்பற்றுகிறீர்கள்? குருடனுக்கு குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்கள்.

எபேசியர் 5:11 கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

தேவன் மனிதனுக்காக நரகத்தை உண்டாக்கவில்லை. [மீண்டும் ஒருமுறை படியுங்கள்]. 


மனிதன் பாவத்திலிருந்து விடுபடும்படி தேவன் தன்னுடைய குமாரனாகிய இயேசுவை பூமிக்கு அனுப்பினார். இது தேவன் நம்மேல் வைத்த அன்பினால்தான். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவதில்லை. அவர் அன்பாகவே இருக்கிறார். "நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்புகூருங்கள்" என்று சொல்கின்றார். நம்மை நரகத்துக்கு அனுப்புவது அவரது சித்தமல்ல. ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையவேண்டுமென்பதே அவருடைய சித்தமாயிருக்கின்றது.

.

5 comments:

Anonymous said...

அனைவருக்கும் எளிதில் புரியும் படியான விளக்கம். மிக்க நன்றி.

Unknown said...

ஆமென்

Unknown said...

It's not giving exact answer brother/sister. Because you have told that don't follow evil's attitudes....THE question is why GOD has created HELL,Evil..??

Anonymous said...

இயேசுவே உண்மையான கடவுள். ஆமென்

johnpo said...

தேவன் பிசாசுக்காகவும், அவனுடைய [விழுந்துபோன] தூதர்களுக்காகவும் மட்டுமே அக்கினிக்கடலை உண்டாக்கினார்"

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

New comments are not allowed.