மத்தேயு 12:31 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
மத்தேயு 12:32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
[Part I]
பாவங்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
1. Sin of commission - செய்வதால் பாவம். (எண்ணங்களிலோ -thoughts, கிரியைகளிலோ-works )
2. Sin of omission. - செய்யத் தவறியதால் பாவம்.
மனிதன் செய்த முதலாவது பாவம் செய்கையினால் (sin of commission or committed sin) உண்டானது. (புசிக்கவேண்டாம் என்று சொல்லியும் புசித்ததால் வந்த கீழ்ப்படியாமை என்கிற பாவம்) . தீமை செய்யாமல் இருக்கவேண்டும் என அறிந்திருந்தும் தீமை செய்தால் அது அவனுக்கு பாவமாகும். அதே போல் நன்மை செய்ய அறிந்திருந்தும் நன்மை செய்யாமல் போனால் அது அவனுக்கு பாவமாகும்.
கீழே பாவங்களைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளன:
மாற்கு 7:21, 22 பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். புறப்பட்டு வந்து மனுஷனை தீட்டுப்படுத்தும்.
கலாத்தியர் 5:19-21 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாற்கு 7:21, 22 பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். புறப்பட்டு வந்து மனுஷனை தீட்டுப்படுத்தும்.
கலாத்தியர் 5:19-21 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ரோமர் 1:23-32
23. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
24. இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
25. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
26. இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
28. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
29. அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
30. புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப்பிணைக்கிறவர்களுமாய் பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
31. உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
32. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
II தீமோத்தேயு 3:2-5
2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,
3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
5. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
[Part II]
யோவான் இப்படியாக குறிப்பிடுகிறார்:
1 யோவான் 5:16. மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
மரணத்துக்கேதுவான பாவம் என்று இங்கே சொல்லப்படுவது இரண்டாம் மரணம் எனப்படும் நமது ஆத்துமாவின் மரணமாகும். அதாவது அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவது ஆகும். முதலாம் மரணம் என்பது நாம் இந்த சரீரத்தை விட்டு கடந்துபோவது ஆகும்.
[மனம்திரும்பி மன்னிப்பு பெறாத] "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று பவுல் சொல்கிறார். தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் வரும் நித்திய ஜீவன். பவுல் மிகவும் வன்மையாக (strong) பாவம் எதுவும் செய்யாமலிருங்கள் என்று சொல்கிறார். யோவானும் பாவம் எதுவும் செய்யாமல் இருங்கள் என்று வன்மையாகவே சொல்லுகிறார். ஆனால் யோவான் சொல்லுவது மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை சிலர் செய்தால் அதை நாம் பார்த்தால் அல்லது கேள்விப்பட்டால் நாம் அவர்களுக்காக தேவனிடம் வேண்டுதல் செய்யவேண்டும் அப்போது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.உதாரணத்துக்காக:
- பிதாவே இவர்களை மன்னியும் என்று இயேசு மற்றவர்களுடைய பாவத்துக்காக வேண்டியது.- யோபு தன் சிநேகிதர்களுக்காக வேண்டியது.
- தேவ ஊழியர்கள் சபையில் ஒருவருடைய தவறுக்காக தேவனிடம் வேண்டுதல் செய்வது. (பக்கத்து வீட்டுக்காரரிடம் தன் பிள்ளை செய்த தவறுக்கு பெற்றோர் மன்னிப்பு கேட்பது போல்.)
ஒரு மனிதன் மனந்திரும்பி அறிக்கை செய்யப்படும் பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும். ஏனெனில் யோவான் "இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்"என்று சொன்னார். பவுல் சொல்லும்போது தேவனைப்பற்றிய அறிவை அறிந்த பின்பு பாவம்செய்தால் அவர்கள் தேவனுடைய குமாரனை சிலுவையில் இரண்டாம் முறையாக அறைவதால் அவர்களுக்கு மன்னிப்பில்லை என்று வன்மையாகக் கூறுகிறார். ஆனால் பேதுரு இயேசுவைப் பின்பற்றிய தேவனுடைய சீடன். அவன் இயேசுவை அறியேன் என்று மறுதலித்தான், சபித்தான். அதன்பின்பு இயேசு சொன்னதை நினைவுகூர்ந்து மனம்கசந்து அழுதான், அவனுக்கு மன்னிப்பு கிடைத்தது. அதன்பின்பு அவன் பெந்தெகொஸ்தே நாளில் பேசியபோது அன்றே மூவாயிரம்பேர் தேவனை ஏற்றுக்கொண்டார்கள். ஒரு போதகர் சொன்னார்: "பெரிய பாவம் (உதாரணத்திற்காக: விபசாரம்) செய்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் தினமும் மனம்கசந்து துக்கிக்கவேண்டும் என்று ஒரு போதகர் சொன்னார். இப்படிப்பட்ட பேதுரு, ராகாப், சிம்சோன் என்ற சாக்குபோக்குகளை காட்டி வேண்டுமென்றே பாவம் செய்க்கூடாது. ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் பாவம் செய்வதற்கு ஒரு சாக்குப்போக்கைத் தேடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தேவனுடைய ஆக்கினைதான் கிடைக்கும்".
நன்மை செய்ய தகுதியும் பணமும் இருந்தும் நன்மை செய்யாவிட்டால் அது பாவம். இதற்கு "லாசருவும் ஐசுவரியவானும்" பற்றி இயேசு லூக்கா 16ல் சொன்னதை குறிப்பிடலாம் என்பது என்னுடைய சொந்த கருத்து.