Monday, July 12, 2010
44. காயீன், ஆபேல், சேத் ஆகியோருக்கு மனைவி யார்?Incest (முறைகேடு) இல்லாமல் எப்படி ஆதாமுக்குப் பின்பு நாம் பிறந்திருக்கக்கூடும்?
பதில்:
ஆதாம் ஏவாள் ஆகியோருக்கு பிறந்தவர்கள் காயீன், ஆபேல் மற்றும் சேத். இவர்களில் ஆபேல் காயீனால் கொல்லப்பட்டான். ஆதாமின் பிள்ளைகள் இவ்விருவர் மட்டுமல்ல.
ஆதியாகமம் 5:3,4 அதன் பின்பு ஆதாம் நூற்று முப்பது (130) வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் (800) உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஆதாமின் வயது 930. (130 + 800)
இங்கே அவன் குமாரரையும் குமாரத்திகளையும் அடுத்த எண்ணூறு வருடங்களில் (இரட்டையர்கள் என்ற பிள்ளைகளை கணக்கில் சேர்க்காவிட்டாலும்) சுமாராக 300க்கும் அதிகமான பிள்ளைகளை பெற்றிருக்கக்கூடும். இதற்கிடையே 100 வயதாகிய அந்த பிள்ளைகளின் குடும்பங்களில் பிறந்த அநேக பிள்ளைகளை கணக்கில் கொண்டுவந்தால் எண்ணிக்கை இன்னும் கூடும். ஆதாமும் ஏவாளும் ஒரு குடும்பத்தையல்ல, ஒரு கிராமத்தையே உருவாக்கியிருந்திருக்கக்கூடும்.
ஆதியாகமம் 4: 17 காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள். ஆரம்பத்தில் இவர்கள் தங்கள் சகோதரிகளையே தங்களுக்கு துணையாக வைத்திருந்தார்கள். அவர்கள் மூலமாக பிள்ளைகளைப் பெற்றார்கள். அப்போது சகோதரிகளை துணையாக வைக்கக்கூடாது என்ற கட்டளை இல்லை. பிற குடும்பத்தைச் சேர்ந்தவர்களை துணையாக வைத்துக்கொண்டதெல்லாம் அநேக குடும்பங்கள் வந்தவை.
உலகம் ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்ட பின்பு நோவாவின் குடும்பத்தார் 8 பேர்; அவன் சந்ததியில் வந்தவர்கள் தங்கள் சகோதரிகளை (cousins) மனைவியாக கொண்டார்கள். ஆபிரகாம் தன்னுடைய சகோதரியை (half-sister) விவாகம் செய்தான் என்ற ஒரு சம்பவம் இதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஆதியாகமம் 20:12 அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்! நான் இந்த வசனத்தை வாசித்தபோதுதான் காயீன், சேத் இவர்களின் மனைவி யார் என்று எனக்கு விளக்கம் கிடைத்தது. இன்னொரு நெருங்கிய உறவு மனைவி உதாரணம்: அம்ராம் தன் அத்தை யோகபாத்தை விவாகம் பண்ணினான். இவர்களுக்கு பிறந்தவர்கள்தான் மோசே, ஆரோன், மிரியாம் என்பவர்கள்.
இப்படி நெருங்கின உறவினரை மனைவியாக வைத்திருக்கும் பழக்கம் கானானியர் மற்றும் எகிப்தியர்களிடம் இருந்தது என்று எண்ணாகமம் 18:3ல் வாசிக்கிறோம். எகிப்தில் பார்வோன்கள் தங்கள் சகோதரிகளை மனைவியாக வைத்திருந்தார்கள் என்று வரலாற்றை படித்தால் நாம் அறிவோம்.
Incest - Incest (முறைகேடு) is sexual intercourse between close relatives. கீழே சொல்லப்பட்ட உறவிடம் திருமணமோ, பாலியலோ கூடாது. No Marriage or sexual relationship with the following:(எண்ணாகமம் 18, உபாகமம் 27 லில் இருந்து)
* ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை.
* உன் தகப்பனையாவது உன் தாயையாவது.
* உன் தகப்பனுடைய மனைவியை. [இரண்டு மனைவிகள் இருப்பின்]
* உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை.
* உன் குமாரனுடைய மகள்; உன் குமாரத்தியினுடைய மகள். [பேரன் பேர்த்திகள்/ தாத்தா பாட்டி]
* உன் தகப்பனுடைய [இரண்டாவது] மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தி.
* உன் தகப்பனுடைய சகோதரி [அத்தை].
* உன் தாயினுடைய சகோதரியை [பெரியம்மா, சின்னம்மா]
* உன் தகப்பனுடைய சகோதரன் (பெரியப்பா/ சித்தப்பா) அல்லது இவரின் மனைவி.
* உன் மருமகள் / மருமகன் (மாமனார், மாமியார்).
* உன் சகோதரனுடைய மனைவியை [கொளுந்துயாள்]. * ஒரு ஸ்திரீயையும் மற்றும் அவள் மகளையும்.
* ஒரு ஸ்திரீயுடைய குமாரரின் மகளையும், அவளுடைய குமாரத்தியின் மகளையும்.
* உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் விவாகம்பண்ணலாகாது.
* பிறனுடைய மனைவியுடன்.
* ஆணோடு ஒரு ஆண் /பெண்ணோடு ஒரு பெண்.
* ஒரு மிருகத்துடன்.
மேலே சொல்லப்பட்ட முறைகேடுகளை (Incest) கானானியர், எகிப்தியர் செய்துவந்தனர். எண் 18:3 நீங்கள் குடியிருந்த "எகிப்து தேசத்தாருடைய" செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற "கானான் தேசத்தாருடைய" செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும் இருக்கவேண்டும் என்று தேவன் சொன்னார். இன்றும் உலகில் சில இடங்களில் அறியாமலோ அறிந்தோ நடக்கிறது.
உதாரணமாக இங்கிலாந்தில் ஒரு இரட்டையர்கள் பிறந்தபோது அவர்களை தத்தெடுத்து சென்றுவிட்டனர் இரு குடும்பத்தினர். அநேக வருடங்கள் கழித்து இவ்விருவரும் தற்செயலாய் சந்தித்தபோது ஈர்க்கப்பட்டனர். இருவரும் பின்பு திருமணம் செய்துகொண்டனர். பின்புதான் தாங்கள் இருவரும் சகோதர சகோதரிகள் என்று தெரிய வந்தது. பின்பு இதை சிலர் நீதிமன்றத்துக்கு புகார் கொடுக்க நீதிமன்றம் அவர்களது திருமணத்தை ரத்துசெய்தது. இந்த செய்தி ஜனவரி 11, 2008ம் வருடம் வெளியானது. (http://www.nydailynews.com/news/national/2008/01/11/2008-01-11_twin_brother_sister_marry_one_another.html)
இன்னொரு சம்பவத்தில் ஒரு தாய் ஒரு மகனைப் பெற்றிருந்தாள். பின்பு அந்த கணவனை பிரிந்தாள். அந்த மகன் அந்த கணவருடன் வாழ்ந்தான். பின்பு இந்த தாய் வேறொருவருடன் வாழ்ந்து ஒரு பெண்ணைப் பெற்றாள். அந்த மகனும் (28 வயது) மகளும் (20 வயது) ஒருவரை ஒருவர் சந்தித்தபோது ஈர்க்கப்பட்டு மூன்றே வாரத்தில் திருமணமும் செய்துகொண்டனர். ஒருநாள் அவர்களது தாயார் 2006ம் வருடம் நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார். நீதிமன்றமும் இவர்களைப்பிரித்து தீர்ப்பு சொல்லிற்று. இந்த செய்தி பிப்ரவரி 18, 2008ல் வெளிவந்தது. (http://www.dailymail.co.uk/femail/article-514809/How-fell-love-brother-sister-grew-apart-met-20s.html) .
இப்படிப்பட்ட முறைகேடுகளை இந்தக் காலத்தில் செய்தால் அது பாவமாகும். திருமணத்துக்கு முன் பாலியல் உறவு வேசித்தனம் என்றழைக்கப்படும். அப்படிச் செய்பவர்கள் நரகத்துக்கு செல்வார்கள் என்று நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம்.
ஆபிரகாம் மற்றும் அம்ராம் (மோசேயின் தந்தை) ஆகியோர் மேலே கூறப்பட்டுள்ளவைகளில் அடங்குவர். ஆனால் மோசே சீனாய் மலையில்தான் இப்படிப்பட்ட கட்டளைகளைப் பெற்றான். எனவே அதற்கு முன் வந்த கணக்கில் அடங்காத பலரை "தேவனின் கட்டளையை மீறியவர்கள்" என்று சேர்க்கமுடியாது. ஏனெனில் இவர்கள் நியாயப்பிரமாண காலத்துக்கு முன் வாழ்ந்தவர்கள். எனவே அவர்களுக்கு அப்படிப்பட்ட பிரமாணம் கொடுக்கப்படவில்லை. தேவனும் "நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன்" என்கிறார்.
தற்போது, மருத்துவத்துறையில் நெருங்கிய உறவை திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று கண்டுபிடித்திருக்கின்றனர். ஆனால் யூதர்களோ, "தேவன் எங்களுக்கு இதை எப்போதோ சொல்லிவிட்டார்" சொல்லி என்று புன்னகை பூக்கின்றனர்.
மருத்துவத்துறை சொல்லும் நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் வரும் குறைகள்:
* Reduced fertility both in litter size and sperm viability (விந்துவின் அளவிலும் விரையத்திலும் குறைவு ஏற்படுவதால் பிள்ளைப்பேறு குறைவு)
* Increased genetic disorders ( ஊனம் உயர்வு)
* Fluctuating facial asymmetry (முகம் ஒத்திசைவாயிராமல்/ இணக்கமாயிராதிருத்தல்)
* Lower birth rate (பிறப்பின் விகிதம் குறைவு)
* Higher infant mortality (சிறுவயதில் மரணம் என்பது உயர்வு)
* Slower growth rate (வளர்ச்சி விகிதம் குறைவு)
* Smaller adult size (குள்ளமான ஆள்)
* Loss of immune system function (நோய் எதிர்ப்புசக்தி இழப்பு)
நெருங்கிய உறவில் ஒருவர் பகிர்ந்து கொள்ளும் ஒரேவகையான/பொதுவான மரபணுவின் (genes) அளவு விகிதம்:* Identical twins → 50%
* Father/daughter – mother/son – brother/sister → 25%* Half-brother/half-sister → 12.5%
* Uncle/niece – aunt/nephew → 12.5%
* Double first cousins → 12.5%
* Half-uncle/niece → 6.25%
* First cousins → 6.25%
* First cousins once removed – half-first cousins → 3.125%
* Second cousins – first cousins twice removed → 1.5625%
* Second cousins once removed – half-second cousins → .78125%
நாம் இப்படியாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது. நீ இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளையானால் நீ ஒரு தேவனுடைய பிள்ளையைத்தான் திருமணம் செய்யவேண்டும். அதில் ஜாதி எல்லாம் பார்க்கக்கூடாது. நாம் அனைவரும் இரட்சிக்கப்பட்டபின்பு பரிசுத்த ஜாதி (Holy Nation) என்று அழைக்கப்படுகிறோம். (1 பேதுரு 2:9). இந்தியாவில்தான் இந்த ஜாதிப்பிரச்சனைகள்...
காயீனுக்கும், சேத்துக்கும் மனைவிகள் அவர்களது சகோதரிகளே....
சிந்தனைக்கு:
சரி... நாம் 100 வயதில் இப்படி சுருக்கமும், பார்வை மங்கியும், கோலூன்றியும் இருக்கிறோமே. 900 வயதில் அவர்கள் பார்ப்பதற்கு எப்படி இருந்திருப்பார்கள்?
ஒரு மனிதரைப் பார்த்தால் நாம் சுமாராக இவருக்கு வயது 40 இருக்கும் என்றும் நம்மால் சொல்லமுடிகிறது. தற்போது நடைபெறும் இந்த கி.பி. 2010 வருடத்தில் 40 வயதுள்ள ஒரு மனிதரை நாம் அப்படியே ஆதாமின் காலத்தில் கொண்டுபோய் நிறுத்தினோம் என்றால் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள், "இதோ அங்கே நிற்கின்றார் பாருங்க அவருக்கு சுமாரா 500 வயசு இருக்கும்" என்று சொல்வார்கள். "அடடா... 400 வயசுதான் ஆகிறது, இந்த வாலிப வயசு பையன் இறந்துவிட்டாரே" என்றும் சொல்வார்கள். 900 வயதுள்ளவர் இப்போதுள்ள 100 வயது மனிதர்போல் இருந்திருப்பார். ஏனெனில் அக்காலத்தில் உடலின் முதுமை என்னும் வளர்ச்சி மெதுவாகவே இருந்தது.
.
0 comments: