of the lion, ארי 'ariy
of the fierce lion, שחל shachal
of the young lions, כפיר kĕphiyr
ஆரிய என்பதற்கு: மான்புமிகு, உயர்ந்த என்ற பதத்தில் ரிக் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது.
ஆரியர்கள் என்பவர்கள் பெர்சியா (ஈரான்) நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆரிய மொழி என்பது இந்திய-பெர்சிய (Indo-Iranian) மொழியாகும். இம்மொழியானது சமஸ்கிருதம் என்று பெரிதும் சொல்லப்படுகின்றது (http://en.wikipedia.org/wiki/Sanskrit). இதைப்பற்றி பெர்சிய நாட்டின் வரலாறு மற்றும் இலக்கியங்களில் விரிவாக படிக்கலாம். விவரங்களுக்கு பெர்சியாவின் நூல்களஞ்சியங்களுக்கு செல்லவும். ஆரிய என்பதே ஈரான் என பின்பு திரிந்தது (ariya became iran) . பாரசீக மன்னன் "தரியு" தான் ஒரு ஆரிய வம்சத்தில் வந்தவன் என கல்வெட்டு ஏற்றினார். அகாஸ்வேரு என்னும் அரசனும் ஆரியன் ஆவான். பைபிளில் இந்த பாரசீகர்களைப் பற்றி தானியேல் புத்தகத்தில் வாசிக்கலாம். எனவே ஆரியர்கள் யார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
சில பெர்சிய மன்னர்களைப் பற்றி வேதாகமத்தில்:
[1] நெபுக்காத் நேச்சார் (கி.மு 605– 562)பைபிளில் II இராஜாக்கள் 24, 25 II நாளாகமம் 36 எஸ்றா 1-6, நெகேமியா 7, எரேமியா 21-52 மற்றும் தானியேல் முழுதும். இந்த பெர்சிய அரசனைப் பற்றி பைபிளில் அநேக இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவன் எப்படி இஸ்ரவேல் ஜனங்களை (யூதர்களை) அடிமையாக்கி பாபிலோனுக்கு கொண்டுசென்றான் என வாசிக்கிறோம். அவன் எப்படி ஒரு சிலை செய்து எல்லாரும் அதை வணங்கவேண்டும் என்று கட்டளையிட்டான் என்றும், சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோ என்பவர்கள் அதை வணங்கமறுத்து நெருப்பில் போடப்பட்டும் சாகாமல் போனதால் அவன் இஸ்ரவேலின் தேவனை வணங்கினான் என்றும் வாசிக்கிறோம். மேலும் தானியேலை நெபுக்காத்நேச்சார் எப்படி உயர்வாக மதித்தான் என்றும் வாசிக்கிறோம்.
[2] கோரேஸ் [Cyrus] ( கி.மு. 559-530)
II நாளாகமம் 36 எஸ்றா 1-5, தானியேல் 10ல் படிக்கலாம்.
[3] தரியு I, II, III [Darius] (கி.மு. 336 to 330)
எஸ்றா 4-6, தானியேல் 5-11ல் படிக்கலாம்.தரியுவை மாமன்னர் அலெக்ஸான்டர் வென்றான் (கி.மு. 356–323 Alexander the great) .
இந்தியாவைப்பற்றி "இந்து" தேசம் ( הֹדּוּ Hoduw - என எபிரெய மொழியில்) என்று பைபிளில் ஒரு இடத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸிந்து தேசம் என்பது, இந்து தேசமானது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்தியாவானது பெர்சிய (பாரசீக) மன்னர்களின் ஆட்சியில் (Persia, Currently known as Iran) இருந்தது. இதை எஸ்தர் 1:1ல் (கி.மு. 486-465) இப்படியாக வாசிக்கிறோம்: "இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது". The king of Persia Xerxes (Ahasuerus) ruled 127 Nations from India to Ethiopia". https://www.wordproject.org/bibles/audio/20_farsi/b17.htm இங்கே ஒலிவடிவில் பெர்சிய பைபிளில் ஹிந்த் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே அப்போது இந்து என்பது மதமல்ல. பின்பு அது மதத்தின் பெயராக மாறியது.
அப்போதைய இந்தியா (என்பது பல நாடுகளை உள்ளடக்கியதாகும். அதில் பாகிஸ்தான், இலங்கை, பங்ளாதேஷ், பர்மா, அந்தமான் தீவுகள் என்பவைகளும் அடங்கும் என்பதை பின்பு வந்த பிரிட்டிஷ் நாட்டவர் ஆளுகையின் வரலாற்றில் படித்தால் தெளிவாக காணலாம். எனவேதான் "All India" என்ற பதத்தையும் இந்திய அரசியல் சாசனத்தில் (Indian constitution) காணமுடிகிறது. "All India Radio" என்ற உபயோகமும் இதற்கு ஒரு சான்று.
குறிப்பாக இந்த ஆரியர்கள் என்பவர்கள் சிலைகளை வணங்கும் பழக்கமும், சிலைகளை கோவில்களில் வைத்து (II இராஜாக்கள் 5:17,18) ஒரு திருவிழா என்று கொண்டாடிய பழக்கமும் உடையவர்கள் (I இராஜாக்கள் 12:32). அக்கினியில் வார்த்து பூஜைசொல்லுதல், வேள்விகள் என்ற பழக்கங்களை உடையவர்கள். ( எரேமியா 7:18)
இஸ்ரவேலர்களின் வரலாற்றிலும் சில அரசர்கள் உண்மையான தேவனை விட்டுவிட்டு மற்றவர்களுடைய பழக்கத்தைப் பார்த்து பின்பற்றியதையும் பார்க்கிறோம். சில ஜனங்கள் (pagan worshipers) தங்களுடைய பிள்ளைகளையே பலி கொடுத்தார்கள் என்று எசேக்கியேலில் வாசிக்கிறோம். ஒரு ராஜா தன் மகனை தீமிதிக்கப்பண்ணினான் என்றும் வாசிக்கிறோம். இதனால் இவர்கள் அடிமைகளாவும் சுற்றியுள்ள ராஜாக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் இருக்க தேவன் அவர்களை விட்டுவிட்டார். இவை அனைத்தும் மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே நடந்தவை. (4000 ம் ஆண்டுகளுக்கு முன்பு).
இன்றும் மற்ற மதங்களில் காணப்படும் சில பழக்கத்தை பார்த்து தங்கள் மதத்தில் பின்பற்றும் மக்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். உதாரணமாக பாதயாத்திரை என்று தலையில் சுமை சுமந்துசெல்லும் பழக்கம் கேரளாவில் உருவானது. பின்பு இது தமிழக இந்துக்களிடையே தொற்றிக்கொண்டது. தற்போது இதை ரோமன் கத்தோலிக்க கூட்டத்தார் பின்பற்றி, வேளாங்கன்னிக்கு நடந்து போகிறார்கள். இந்த விநோத நிகழ்வு என்னுடைய காலகட்டத்தில் புதிதாக உருவாகியதை கண்கூடாக கண்டேன். இதை ரோமன் கத்தோலிக்கர்களிடமே விசாரித்தபோது, "அவர்கள்தான் தங்கள் தெய்வங்களுக்கு இப்படி நடக்கமுடியுமா, நாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்று காட்டவே" என தெரியவந்தது; இது ஜனங்களின் மதியீனத்தை அல்லவா காட்டுகிறது! உலகின் வேறுபகுதியில் வசிக்கும் ரோமன்கத்தோலிக்கர்கள் யாரும் இப்படியாக பாதயாத்திரை செல்வதில்லை. இதைப்போலவே இஸ்ரவேலரும் இந்த ஆரியர்களுடைய பழக்கங்களான நரகலான விக்கிரகங்களுக்கு பலி, வேள்வி போன்றவைகளை செலுத்தி தேவனுடைய கோபத்திற்கு ஆளாகினர். பைபிளில் வாசிப்போம்:
எசேக்கியேல் 23:39 "அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்" என்று இங்கே நம்முடைய தேவன் சொல்கிறார்.II இராஜாக்கள் 21:6 தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.
ஓசியா 4:13 அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்;
ஆரியர்கள் வேறு, இஸ்ரவேல் ஜனங்கள் வேறு. இந்த ஆரியர்கள், தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த சில முறைகளைத் திரித்து அந்நிய தெய்வங்களுக்கு பலியிடுதல் போன்ற பழக்கங்களையும் விநோதமாக பூஜை செய்தவர்களும் ஆவர்.
ஆனால் சிலைகளை வணங்கக்கூடாது என்று நம்முடைய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்: ஏசாயா 44:15-19. "மனுஷனுக்கு அவைகள்(மரங்கள்) அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான். அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி; அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான். அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை."
தாவீது சொல்லும்போது: சங்கீதம் 16:4 "அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்." என்கிறார்.அப்போது இந்தியாவில் வசித்தவர்கள் ரிக் என்னும் வேதத்தில் சொல்லியபடி "அக்கினி", "மழை", "காற்று", "சூரியன்" என இயற்கை வழிபாடுகளை உடையவர்களாகவே இருந்தனர். பலிகொடுப்பது போன்ற பழக்கங்கள் வர "யூதர்கள்" மற்றும் "ஆரியர்களின்" கலாச்சார பாதிப்பாக இருக்கவேண்டும். ஏனெனில் முதன்முதலில் பாவம் செய்தவன் பலி செலுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது பைபிளில்தான், அதுவும் தேவன் மோசேயிடம் சீனாய்மலையில் கொடுத்தார் என்று யாத்திராகமத்தில் படிக்கும்போது நாம் நன்கு அறிவோம். யூதர்கள் அந்த கட்டளை பெற்று 5770 வருடங்களாகின்றது. (யூதர்களின் வருடம் அவர்கள் எகிப்தைவிட்ட அன்று இரவுதான் ஆரம்பிக்கின்றது.)
கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான தேவனின் திரித்துவம் (தேவன் ஒருவரே, ஆனால் மூன்று ஆளத்துவங்கள் என்ற Trinity: God the father, God the Son, God the Holy Spirit) என்பது, இந்துக்களிடையேயும் காணப்படுகிறது. "ஒரு கடவுள் - மும்மூர்த்திகள்" என்று பட விளக்கத்துடன் யாரோ ஒரு கதையில் இவர்களுக்கு சொன்னதுபோல் உள்ளது என்பது ஆச்சரியமளிக்கின்றது.
இப்படியாக சிலர் சொல்கின்றனர்:
”திரிசூலத்தில்” -மூன்று கம்பிகள் ஒன்றாய் இணைகின்றன. தேவன் மூன்று ஆளத்துவங்கள், ஆனால் தேவன் ஒருவரே.
“விபூதி பூசுவதில்” - மூன்றுகோடுகளும் (தேவன் மூன்று ஆளத்துவங்கள்) ஒரு புள்ளியும் (ஆனால் தேவன் ஒருவரே). நாமம் போடுவதிலும் அதேதான்.
இது உண்மையா என்று நிரூபிப்பதைவிட, பைபிளில் சொல்லப்பட்டவைகளில் பல விஷயங்கள் சில மாற்றங்களுடன் இந்துசமயத்தில் பழக்கத்தில் காணப்படுகின்றன என்பதே மிகவும் உண்மை. இவை எல்லாம் யூதர்களிடம் தேவன் கொடுத்தவை. இந்துக்கள் பைபிளை ஒருதடவையாவது படிக்கவேண்டும். அப்போது ஆச்சரியமான காரியங்களைக் காண்பார்கள்.