கேள்வி:
ஆதியாகமம் 6:2, 4 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை" அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்...அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
இங்கே "தேவகுமாரர்" யார், "இராட்சதர்" யார்?
பதில்:
ஆதியாகமம் 6:1-4 வரையுள்ள வசனங்களைக்காட்டிலும் வரலாற்றில் சிலர் எழுதிய புத்தகங்கள் ஜனங்களின் மத்தியில் ஒரு விநோத ஆர்வத்தையும், வேறுபட்ட கருத்துக்களையும் எழுப்பியுள்ளது. முதற்பார்வையில் இந்த வசனம் சிறு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். கடினமானது என்னவெனில் "தேவ புத்திரர்", "மனுஷ குமாரத்திகள்" மற்றும் "இராட்சதர் (அதாவது நெஃபிலிம் என்னும் எபிரெய வார்த்தை)" எனப்படும் வார்த்தைகளில் அடையாளம் கண்டுகொள்ளப்படவேண்டியவர்கள்தான். இந்த கூட்டத்தினரினைப் பற்றி தனித்தனியே விளக்கம் கொடுக்க பல பண்டிதர்கள் பெரிய நிலைகளில் எழும்பி விவாதித்தனர்.
மூன்று வாதத்திற்குரிய கூட்டத்தினராக
[1] அண்டவெளியின் கலப்பினங்கள் (cosmological mix - தூதர்கள்-மனிதர்கள் கலவை).
[2] சேத்தின் புத்திரர் மற்றும் காயீனின் புத்திரர் கலவை.
[3] சமுக அந்தஸ்த்தில் கலந்தவர்கள் (sociological mix).
என்று வார்ப்புரு (label) இடப்பட்டன. இப்படி கொடுக்கப்பட்டுள்ள கலப்பினங்களுக்குள் முதற்பார்வையில் தேவதூதர்கள் மனிதர்களுடன் கலந்தார்கள் என்ற சாத்தியம், எல்லா பார்வைகளை(view) விட ஒருவேளை மேலோங்கி நிற்கலாம்.
[1] "அண்டவெளியின் கலப்பினங்கள் (cosmological mix- தூதர்கள்-மனிதர்கள் கலவை)"
"1 ஏனோக்கு" எனப்படும் புத்தகமானது சுமார் கி.மு 200-ல் எழுதப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது, அதில் 6:1, 7:6ல் "இருநூறு தூதர்கள் செமாயா என்ற தூதனின் தலைமையில் இருந்தனர். அவர்கள் பூமியிலுள்ள மிகவும் அழகிய குமாரத்திகளை கண்டனர். அந்த ஆசையில் இவர்கள் பூமிக்கு செல்வோம் என்று ஆணைவிடுத்துக்கொண்டு பூமிக்கு வந்து ஒவ்வொருவரும் தங்களுக்கு மனைவிகளைக் கொண்டனர். அவர்கள் மனைவிகளுக்கு மாயாஜால மருந்துகள், வேர் மூலிகை மருந்துகள் என்பவைகளைப்பற்றி சொல்லிக்கொடுத்தார்கள். பெண்கள் கர்ப்பமடைந்து பிரசவித்தபோது 300 முழம் அளவுக்கு வளரும் இராட்சதர்கள் பிறந்தார்கள். இந்த இராட்சதர் பூமியிலிருந்த ஆகாரத்தை பெரிதளவில் காலிசெய்தார்கள். எனவே மற்ற மனிதர்கள் இவர்களை வெறுக்க ஆரம்பித்தனர். இந்த இராட்சதர்கள் பின்பு பூமியிலிருந்தவர்களையே விழுங்க ஆரம்பித்தனர், விலங்குகளையும், பறவைகளையும் கூட விட்டுவைக்கவில்லை. பின்பு பூமியே இவர்களை குற்றப்படுத்தியது." இப்படி ஒரு (கட்டுக்) கதை. இது பைபிளில் இல்லை.
யூதர்களில் புகழ்பெற்ற வரலாற்றாலர் (historian கி.மு.37) "ஜோஸஃபஸ்" என்பவரும் இந்த தேவதூதர்கள்-மனிதர்கள் கலப்பு கொள்கையை பின்பற்றினார். அவர் எழுதும்போது "பல தூதர்கள் பெண்களுடன் துணையாக இருந்து பிள்ளைபெற்றது அநீதியென்று காட்டியது என்றார். அப்படியே கிரேக்க மொழியில் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தில் "தேவனின் தூதர்கள்" என்ற பதத்தை ஆதி 6:2ல் பயன்படுத்தினர். அதன்பின் அதினால் வந்த பல சிக்கல்கள், தொல்லைகள் நிமித்தம் அந்த பதமானது பயன்படுத்தக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டது.
யோபு 1:6 ல் தேவபுத்திரர் என்ற வார்த்தை வருகின்றது; அங்கே அது "தேவ தூதர்கள்" என்று தெளிவாக புரிந்துகொள்ளும்படி உள்ளது. மனிதர்கள் அல்ல; அதை வைத்துக்கொண்டு ஆதி 6:2ல் சொல்லப்பட்ட தேவகுமாரர் என்பவர்கள் தேவதூதர்கள் என்று உடனே முடிவுசெய்யக்கூடாது.
ஆனால் பைபிளில் எங்குமே தேவதூதர்கள் மனிதர்களை திருமணம் செய்ததாக இல்லை. மிக மிக முக்கியமாக நம்முடைய ஆண்டவராகிய இயேசு சொல்லும்போது "அவர்கள் தேவதூதர்களைப்போல திருமணம் செய்யாமல் (கொள்வனையும் கொடுப்பனையும் இன்றி) இருப்பார்கள்" என்று மாற்கு 12:25ல் குறிப்பிட்டுள்ளார். மிகவும் முக்கிய பதிப்பான ஆல்பிரட் ரால்ஃப்ஸ் என்பவரின் பதிப்பு, தூதர்கள் கலப்பைப்பற்றி சொல்லவில்லை. பூமியிலே தேவதூதர்கள்தான் பிரச்சனை உண்டாக்கினார்கள் என்றால் தேவன் ஏன் பூமியை ஜலப்பிரளயத்தால் அழிக்கவேண்டும்; பரலோகத்தில் ஒருபகுதியில் பேரழிவை உண்டாக்கியிருக்கலாமே; குற்றவாளிகள் மேலேயிருந்து தானே வந்தார்கள்; சிலர் 1 பேதுரு 3:18-20, 2 பேதுரு 2:4 மற்றும் யூதா 6,7 ஆகிய வசனங்களை கொண்டுவந்து "மனிதர்கள்-தூதர்கள்" கொள்கையை ஆதரிக்கின்றனர். ஆனால் அந்த வசனங்களில் தூதர்கள் திருமணம் செய்ததைப் பற்றி சொல்லவில்லை. மேலும், சோதோம் கொமோராவின் பாவம் என்பது ஆதி 6:1-4ல் சொல்லப்பட்டதுதான் என்று விவாதிப்பது தவறான ஒப்பிடுகையாகும். அங்கே தூதர்களின் பாவத்தை சோதோம் கொமோராவின் பாவத்துடன் ஒப்பிடவில்லை; பதிலாக, சோதோம் கொமோராவின் பாவத்தை அதைச்சுற்றியுள்ள பட்டணங்களுடன் (அத்மரா, செபோயீம் உபாகமம் 29:23, ஓசியா 11:8) ஒப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. எனவே யூதா குறிப்பிட்ட தூதர்களின் பாவங்களும் (யூதா 6), அந்த பட்டணங்களின் பாவங்களும் (யூதா 7) மற்றவர்களின்மேல் வரும் நியாயத்தீர்ப்பைக்குறித்து நமக்கு உணர்த்துகின்றன. யூதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தூதர்களின் விழுகை என்பது பிசாசாசின் (லூசிபர்) விழுகையைப் பற்றியதாகும். இந்த விழுகையையும் ஜலப்பிரளயத்து காலத்தையும் இணைப்பது தவறாகும். அப்படி இணைத்தால் அந்த பட்டணங்களின் பாவத்தையும் ஜலப்பிரளயத்துடன் இணைக்கும்படி வரும், அது பொருந்தாமல் போகிறது. யூதா-வில் ஒரே நேரத்தில் நடந்தவைகள் குறிப்பிடப்படவில்லை; அடுத்தடுத்து நடந்தவை குறிப்பிடப்பட்டுள்ளன.
தூதர்கள் பைபிளில் பழைய ஏற்பாட்டிலும், புதியஏற்பாட்டிலும் செய்தி சொல்லும்படி தேவனால் மனிதர்களிடத்திற்கு அனுப்பப்பட்டனர். கிதியோன், சிம்சோனின் பெற்றோர் (மனோவாவின் மனைவியிடம் முதலில்), எலியா, தாவீது, சகரியா, ஏசாயா, மரியாள், கொர்நேலியு என்று பல உதாரணங்களை வைக்கலாம்."இராட்சதர்" என்பவர்கள் தூதர்-மனிதர்களின் கலவை என விவாதிப்பது பைபிளுடன் பொருந்தவில்லை. தூதர்கள் மனிதனுடைய அழிந்துபோகும் மண்ணின் சரீரத்துக்கு மாறிவந்து மணம் செயதது என்பது எல்லாம் யூகத்துக்கு அடுத்தவையாகும். மேலும் "1 ஏனோக்கு" என்ற புத்தகத்தை சாட்சியாக கொண்டுவருவதும், வேதத்திலுள்ளதை மாற்றாக பிரதிபலிப்பதும் தவறாகும். எனவே இது நிச்சயம் சாத்தியமல்ல.
[2] "சேத்தின் புத்திரர் மற்றும் காயீனின் புத்திரர்":
இந்த பார்வை "தேவகுமாரர்" என்பவர்களை சேத்தின் வம்சவழி என்று அடையாளப்படுத்துகின்றது. ஏனெனில் இவர்கள் தேவனை தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள் (ஆதி 4:26). "மனுஷ குமாரத்திகள்" என்பவர்கள் காயீனின் சந்ததி; இவர்கள் தேவபயமில்லாமல் வாழ்ந்தவர்கள். ஆதி 6:2,3 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். அப்படியென்றால் அங்கே காணப்பட்ட பாவம் "அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்பட்டது (unequally yoked)" என்பது ஆகும்.இந்த கலவையில் வந்தவர்கள் எப்படி பேர்பெற்ற மனிதர்களானார்கள்? இதற்கு எந்த சாட்சியும் இல்லாததால், இந்த சாத்தியமும் முதற்பார்வையில் சந்தேகத்துக்குரியது. ஆயினும் சாத்தியங்கள் உண்டு.
[3] "சமுக அந்தஸ்த்தில் கலந்தவர்கள்": (sociologically mixed)
"தேவ புத்திரர்" என்பது ஆரம்பநாட்களில் ராஜாக்கள், கனவான்கள், அதிபதிகள் மற்றும் ஞானிகள் போன்ற மதிப்புக்குரியவர்களுக்கு மத்தியகிழக்கு பகுதியில் காணப்பட்ட வழக்கச்சொல். இப்படிப்பட்ட அதிகாரப்பெயர் பெறுவதற்கு அவர்கள் மிகவும் உந்தப்பட்டு பேர்பெற்றவர்களாக (ஆதி 6:4) இருக்க விரும்பினர். இப்படியாக அறியப்படுவதற்கு அவர்கள் எந்த பகுதிகுயில் இருந்தார்களோ அந்த பகுதிக்கு தானே பொறுப்பென்றும், அதிகாரி என்றும் காட்டுவதற்கு அநியாயமுறையில் தாகத்துடன் இருந்தனர். இப்படியாக அவர்கள் அநீதியாகவும் இச்சையுடனும் காணப்பட்டனர். (ஆதி 6:5-6; ஆதி 10:8-12) மேலும் பல மனைவிகளையும் தங்களுக்கு கொண்டனர் (ஆதி 6:2). இப்படியாக சொல்லப்படும் கருத்துக்கு என்ன ஆதாரம்?
ஆறு ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன:
[அ] முற்கால அராமிய மொழிபெயர்ப்புகள் "தேவ புத்திரர்" என்பதை "கனவான்களின் புத்திரர்" என்று சொல்கின்றது. (Onkelos மொழிபெயர்ப்பில்)
[ஆ] கிரேக்க மொழிபெயர்ப்பில் "ராஜாக்களின் புத்திரர் அல்லது கர்த்தாக்களின் புத்திரர்" என்று சிம்மாச்சஸ் (Symmachus) -ல் கொடுக்கப்பட்டுள்ளது.
[இ] எபிரெய மொழியில் தேவர்கள் (elohim--gods) எனபது நியாதிபதிகள் மற்றும் அதிபதிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் அவனை தேவர்களிடத்தில் (நியாயாதிபதிகளிடத்தில்-gods-elohim) கொண்டுபோகவேண்டும். (ஆதியாகமம் 21:6, யாத் 22:8 மற்றும் சங்கீதம் 82:1, 6)
[ஈ] அமைப்பின்படி, "காயீன் வழிவந்த லாமேக்கு" (ஆதி 4:19-24) மற்றும் "தேவபுத்திரர்" (ஆதி 6:1-4) இரண்டும் ஒன்றுபோல் உள்ளது. இவ்விரண்டிலும் பெண்கொள்ளுதலும், பிள்ளைப்பெறுதலும், "பேர்"பெறுதலும் காணப்படுகின்றன. முதற்பகுதியானது லாமேக்குடைய அதிகார தீர்ப்புடனும், பின்புவரும் பகுதியானது தேவனால் வந்த தீர்ப்புமாயிருக்கிறது. லாமேக்கு இருமனைவிகளை கொண்டிருந்தான்; தன்னுடைய அதிகாரத்தைக்கொண்டு கட்டளைகளை இட்டான்.
[உ] மத்தியக் கிழக்குபகுதியில் ஜனங்கள் தேவர்கள்(gods) மற்றும் தேவதைகளின்(goddess) பெயர்களை தங்களுக்கு பயன்படுத்தியதாக கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. இப்படி தங்களுக்கு பெயர் சூட்டிக்கொண்டதால் எகிப்து மற்றும் மெசப்பதோமியா பகுதியில் தங்களுக்கு கிடைத்த மரியாதைக்காக அப்படிச் செய்தார்கள். எனவே அவர்கள் "தேவபுத்திரர்" என்ற பட்டத்தை கொண்டிருந்தனர்.
[ஊ] கடைசியாக, நெஃபிலிம்/கிப்போரோம் என்று சொல்லப்பட்டுள்ள இராட்சதர் (ஆதி 6:4). இந்த "நெஃபிலிம்" ஆதியாகமம் 6:4-லும், எண்ணாகமம் 13:33ல் ஏனாக்கின் புத்திரர் என்பவர்கள் பார்வையில் தாங்கள் வெட்டுக்கிளிகள் போல என்ற வசனத்திலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மூலபாஷையான எபிரெய மொழியில் நெஃபிலிம் என்ற வார்த்தைக்கு "விழுகை(fall)" என்று பொருள். இருப்பினும் ஆதி 6:4ல் "நெஃபிலிம்" என்னும் பதம் "கிப்போரோம்" என்ற பதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதற்கு "பராக்கிரமசாலிகள், பலசாலிகள், செல்வம் மற்றும் அதிகாரமுடையவர்கள்" என்று பொருள்படும். ஆதி 10:8ல் நிம்ரோத் கர்த்தருக்குமுன்பு பலத்தவேட்டைக்காரனாயிருந்தான் என்பதில் அவன் கிப்போரோம்- ஆக இருந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. அவன் சிநெயார் தேசத்தில் ராஜாவாயிருந்தான்.
எனவே "நெஃபிலிம்/கிப்போரோ"ம் என்றால் இராட்சதர் என்று அர்த்தமல்ல, ஆனால் "இளவரசர்கள், வல்லுநர்கள், பெரியோர்" என்றே பொருள்படும். எனவே ஆதியாகமம் 6:1-4ல் பேராசைகொண்ட ஆளுபவர்கள் அதிகாரத்தையும், பெண்களையும், நாட்டையும் இஷ்டத்துக்கு பயன்படுத்தினர். இந்த துர்பிரயோகம் தேசத்தைக் கெடுத்ததுமட்டுமன்றி, தேவனையும் துக்கப்படுத்தினது. தேவனுடைய இருதயத்துக்கு அது விசனமாயிருந்தது என்று உடனே அடுத்த வசனமான ஆதி 6:6-ல் வாசிக்கிறோம். எனவே ஜலப்பிரளயமானது தேவனின் தீர்ப்பாக இருந்தது; அது அவர்களின் இச்சைகளையும், அதிகார துர்பிரயோகத்தையும், அநீதியான காரியங்களையும், பாலியல் பாவங்களையும் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட முற்றுப்புள்ளியாகும்.
இதற்கும் சாத்தியங்கள் [அதிகம்].
குறிப்பிகள்:
-- கெய்சர் என்னும் விரிவான கட்டுரை 1983.
-- Gesenius's Lexicon
13 comments:
பலருககும் இருக்கும் சந்தேகம் இது. இராட்சதர்களின் உயரங்களை கூட சிலர் குறிப்பிடுகிறார்கள். இது அறிவியலுக்கும் முரணானது. இராட்சதர்கள் இருந்திருப்பார்களானால் அவர்களின் எச்சங்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் வம்சங்கள் கூட இல்லாது போய்விட்டது ஆச்சரியம்தான்.
அருமையான குறிப்பு
idhu migavum sariyana vilakkam
Hi
Please any one inform me how to leave all sins?
bro my name is mohankumar....as it is in genesis 18:2 angels can come like humans...cosmological mix is
true only..that all you need is faith.. that is true...
romba arumaiyana vilakkam,,,,
nandri
Well, but y v should not consider nephilim as fallen angels??? Bcoz we r well known that Lucifer fell on the face of the earth as a result of his pride nature against god and also deceived eve thru serpent and after that, in order to make destroy the plan of god upon mankind he might joined with women and begat giants. Even after the flood destruction we can see the existence of giants. Look goliath then bible mentioned the land of baasan as giants land. also we can see the journey of Israelites in which they fought against giants and won. So my conclusion is giants were created by fallen angels in order to demolish children of god before they inherited the land canaan. Yet god took victory by demolished all the devices of him. Praise the lord
சரியாகத்தான் தெரிகிறது. அதிகாரப்பூர்வம் இல்லை.
then what happened to that fallen angels whether they were forgiven by God or punished by him??
மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது:
2. தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்
6. நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
இங்கே தேவர்கள் என்று குறிப்பிடுவது தேவனுக்கு பயந்து தேவனுக்கு பிரியமாக நடந்தவர்களைக்குறிப்பிடுகிறது உதாரணமாக ஏனோக்கின் சந்ததி போன்றோரது பிள்ளைகளும் தேவனற்றவர்களும் இணைந்து இனப்பெருக்கம் உண்டானதினால் ஏற்பட்ட இனத்தைத்தான் அந்த காலத்தில் இராச்சதரர்கள் என்று அழைக்கப் பட்டிருக்கிறார்கள். இயேசு சொல்லியதையும் இணைத்துப் பார்க்கவும்
ஆதியாகமம் 1:11 மற்றும் 2:5 க்கான காரணத்தை தயவுகூர்ந்து விழக்க கேட்டுக்கொள்கிறேன்
https://www.youtube.com/watch?v=oSNBoPj8lQI இந்த லிங்க் இல் மேலே கேட்ட கேள்விக்கு பதில் இருக்கிறது
மிகவும் அருமையான பதிவு,தமிழில் வேதபாடம் பதிவு செய்வதற்குத் வாழ்த்துக்கள் .இன்னும் கூடுதலாக பதிவிடவும்.ராஜ்கமல் ,திருச்சி
JOHN 10: 35 --- I would like you to read this verse to clarify the doubt regarding. Actually Angels don't have physical body like us instead they spirit like like our Almighty God. Even Satan himself a spirit we have to extra careful while reading scriptures. God bless.