ஆதியிலே மனுஷனை தேவன் உண்டாகியபோது அவனுக்கு உடைகள் இல்லை. தேவனுடைய மகிமையே அவர்களை மூடி இருந்தது. உடையானது உடலை ( நிர்வாணத்தை) மறைக்க வேண்டும், இதுவே உடையின் நோக்கமாகும். பேஷன்கள் தற்போது அளவுக்கு மீறி செல்வதால் மனுஷன் எல்லையை மீறுவதாகவே கருதுகிறேன். கீழே கொடுக்கப்பட்ட இரண்டு வசனங்களை வாசிப்போம்.
I தீமோத்தேயு 2:8-9 ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும் (modest), நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
உபாகமம் 22:5. புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
முதலாவதாக தகுதியான உடையாயிருக்கவேண்டும்: நிர்வாணத்தை காட்டும்படியாகவோ, ஒருவரை வசீகரம் அல்லது கவர்ச்சி செய்யும்படியோ இருக்கலாகாது. அது தீய நோக்கம், (நீதிமொழிகள் 24:9 தீயநோக்கம் பாவமாம்). உடையானது உடலுடன் ஒட்டிக்கொண்டு உடலின் பாகங்களை காட்டுவதாக இருக்கக்கூடாது. அதிக அளவில் பேன்ட், ஜீன்ஸ் இப்படி ஒட்டியவாறு பாகங்களைக் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
இரண்டாவதாக உடைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாகும்: உதாரணமாக நாம் அணியும் வேஷ்டி வெளிநாடுகளில் ஆணின் உடையல்ல. தாவணியும் பாவாடையும் வடநாட்டில் பெண்ணின் உடையுமல்ல. தமிழ்நாட்டின் உடை வேறு, காஷ்மீரின் உடை வேறு. எனவே நாம் வசிக்கும் இந்த எல்லைக்குள் நிதானிக்கவேண்டும். ஒரு நாட்டில் பெண்ணின் உடை எதுவோ அதை அங்கு அவர்கள் அணியலாம். ஆனால் அது தகுதி உள்ளதாக இருக்கவேன்டும். ரோமர் 14:13 ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். இது மரணத்துக்கு ஏதுவான பாவம் அல்ல என்று எண்ணுகிறேன் (I யோவான். 5:16,17)
மூன்றாவதாக உடையானது செய்யும் தொழிலை சார்ந்தது:
நீதிமொழிகள் 7:10 அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள் என்று வாசிக்கிறோம். தற்போதும் நர்ஸ், தீயணைப்பவர், காவல்துறை என செய்யும் தொழிலுக்கு ஒரு உடை ஒழுங்கு உண்டு. ஐஸ் (பனிக்கட்டி) மலைகளுக்கு செல்லும்போது வெறும் பாவாடை அல்லது சேலை அணிந்து சென்றால் நம் உடல் உறைந்து விடும். அங்கு அதற்குரிய கூடுதல் உடையை அணியவேண்டும். அப்படியே விண்வெளிக்கும் ஒரு உடை உண்டு.பெண்ணின் உடையை ஆண் (அல்லது ஆணின் உடையை பெண்) அணிந்தால் கிருமிகள் பரவலாம் என்ற காரணத்தினால்கூட தேவன் சொல்லியிருக்கலாம். ஆண் பெண் யார் என்ற குழப்பங்கள் வரலாம்.
எனவே:
- புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது
- உடையானது தகுதியான உடையாயிருக்கவேண்டும்.
- உடையானது அவர்கள் தற்போது வாழும் நாட்டின் உடையாக இருக்கலாம்.
இதை எந்த உடை மீறினாலும் அது அருவருப்பாகும்.
17 comments:
I had a doubt with this issue for a long time whether girls can wear Pants or not? Now I am clear with your answers & views...Thanks for the Posting
மிக அருமையான பதில். நானும் இந்த கிட்டத்தட்ட பதிலைத்தான் மனதில் வைத்திருந்தேன். மேலும் இன்னும் சிறப்பாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். போதிய விளக்கம் கிடைத்துவிட்டது. மிக்க நன்றி
very neatly and clearly explained. thank u it is very useful.
All the answers very useful for us .May Our Lord Bless you more
Is this correct if a woman in Tamil Nadu uses the dress of a man in Tamil Nadu?
The bible does not allow, so not correct.
Right answer bro
நல்ல பதிவு :)
is it wrong if girls wearing leggins.....
அந்த கால கட்டத்தில் ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரி உடை தானே போட்டிருந்தாங்க அப்போ எத வச்சு இந்த வசனம் ஆண்டவர் சொல்லி இருப்பார். அந்த காலத்தில ரெண்டு பேரும் ஒரே மாதிரியான அங்கிய தானே போட்டிருந்தாங்க
Amen!
thank u so much brother
Krishthava pengal krishthuvai ariyatha aangalai kadhalithu thirumanam seyvadhu thavara.?
Gnasnanam edutha piragu paavam seydhu vittu pinbu krishthuvidam mannipu kettal, krishthu Yesu nammai mannipaara brother..
@BhavaniSindhu: உண்மையாக மனந்திரும்பும் ஒவ்வொருவரையும் அவர் மன்னிக்கிறார்.
@BhavaniSindhu: அந்நிய நுகத்தில் அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். எனவே தேவனை அறியாதவர்களை திருமணம் செய்யவேண்டாம்.
All ladies in abroad wear jeans and pants. It does not mean they are not God fearing. Something wrong in what has been mentioned. Nothing wrong in the bible words but the clarity is not upto the mark.
Post a Comment
தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.