கேள்வி:
நாள் நட்சத்திரம் பார்ப்பது சரியா, தவறா? ஏன்னா இயேசு பிறந்ததை நட்சத்திரத்தைப் பார்த்துதான் அந்த காலத்துல சாஸ்திரிகள் கண்டுபிடிச்சாங்க. இப்போதும் சூரியன், சந்திரன் வைத்து நாம் பகல் இரவு கண்டுபிடிக்கிறோம். எனவே நாள் நட்சத்திரம் பார்ப்பது சரியா, தவறா?
பதில்: தவறு!
பகலில் மழை, மேகமூட்டம் என்று நாள்முழுதும் சூரியன் தென்படாமல் இருந்தாலும் நம்மால் பகல் என்று சொல்லமுடிகின்றது. பகலிலும் சில நாட்களில் நாம் சந்திரனை தெளிவாக வானில் பார்க்கிறோம். இருந்தாலும் நமக்கு இது இரவு அல்ல என்று சொல்லமுடிகின்றது. நிலவு இல்லாவிட்டாலும் இருட்டாருயிக்கும்போது இரவு என்று சொல்லமுடிகின்றது. எனவே இந்த கேள்விக்கு பகல், இரவு என்று கண்டுபிடிக்கிறோம் என்று கொண்டுவருவது தவறான உதாரணம் (குறிப்பு: சூரியன் ஒரு நட்சத்திரம் அதாவது விண்மீன். இது நம்மனைவருக்கும் தெரிந்த ஒன்று) வானத்திலுள்ள நட்சத்திரங்களையெல்லாம் அவர் பெயர் சொல்லி அழைக்கிறார். ஆதாம் பூமியிலுள்ள மிருகங்களுக்கும் ஜீவராசிகளுக்கும் பேரிட்டான். ஆனால் விண்வெளியில் (Space) உள்ளவைகளுக்கு ஏற்கனவே தேவன் பேரிட்டாயிற்று.
சங்கீதம் 115:16 வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார். The heaven, even the heavens, are the LORD'S: but the earth hath he given to the children of men.
எனவே அந்த நட்சத்திரங்களின் பெயர்களை தேவன் மனிதனுக்கு சொன்னாலே அல்லாமல் மனிதன் கண்டுபிடிக்க முடியாது. இன்று மனிதன் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தான் ஒரு பெயர் இட்டு தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல் சூதுவாதுகளை செய்கிறான்.
[1] அப்படியானால் இயேசு பிறந்த போது ஒரு நட்சத்திரம் கிழக்கே (Middle East) தோன்றியது என்று சொல்கின்றார்களே என்ற சம்பவத்திற்கு வருவோம். ஒரு அடையாளம் வானத்தில் காணப்பட்டது. ஏனெனில் இங்கே வானத்தையும் பூமியையும் படைத்த குமாரனாகிய தேவனே (God the Son) பூமியில் மனிதனாக பிறந்திருக்கிறார் என்பதால். இந்த சாஸ்திரிகள் (Wise men- ஞானிகள்) லூக்கா 2ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள சிமியோன்போல கிறிஸ்து பிறப்பார் என்று முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் (ஆதியாகமம், ஏசாயா... ) நிறைவேறுதலுக்காக காத்திருந்திருக்கக்கூடும்.இவர்கள் ஜோசியர்கள் அல்ல. ஏனெனில் தேவன் ஜோசியர்களை வெறுக்கிறார், அப்படிப்பட்டவர்களுக்கு உத்தரவு கொடார் என்று வாசிக்கிறோம் (உபா 18:14), எனவே இவர்கள் நிச்சயமாக தேவனுக்கு பயந்த ஒரு கூட்டத்தாராக இருக்கவேண்டும். இவர்களுக்கு தேவன் ஏற்கனவே ஒரு நட்சத்திரம் தோன்றுவதுதான் அடையாளம் என்று சொல்லியிருக்கக்கூடும். அதற்காக அவர்கள் காத்திருந்தார்கள் என்பது என் விளக்கம்.
சரி, ஆச்சரியமான விஷயம் ஒன்று இங்கே சொல்லப்பட்டுள்ளது. என்ன அது?
"மத்தேயு 2: 2-10 யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்...ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்."
ஒரு நட்சத்திரத்தைக் கண்டு எருசலேமுக்கு வருகின்றார்கள். ஏரோது ராஜாவிடம் "யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கே?" என்று கேட்கிறார்கள். காரணம் ராஜாவாக பிறப்பவர் அரமனையில்தானே பிறக்கவேண்டும் என்ற இயல்பான யோசனை. ஆனால் அங்கே பிறக்கவில்லை. இந்த சாஸ்திரிகளுடைய கணிப்பு தவறாகிப்போனது. பின்பு இந்த நட்சத்திரம் இயேசு பிறந்த இடம்வரைக்கும் முன்னே வழிகாட்டிபோல் சென்றது. பிறகு இடம் வந்தபின்பு நின்று விட்டது.
இப்படி ஒரு பாதை (orbit) ஒரு நட்சத்திரத்துக்கு இருக்க வாய்ப்பிருக்குமா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அது ஒரு ஆள் வழிகாட்டிபோல் மனிதன்/மிருகம் நடந்து செல்லும் வேகத்திற்கு கூடவே சென்றது, இடம் வந்த பின்பு நின்றது என வாசிக்கிறோம். [ வாதத்திற்காக அது ஒரு விஷேசமான தேவதூதனாகக்கூட இருந்திருக்கலாம். ஒருதூதனின் மகிமையால் பூமி முழுதும் பிரகாசித்தது என்று வெளிப்படுத்தலில் படிக்கிறோம். ]
[2] நாள் நட்சத்திரம் பார்க்கலாமா?
உபாகமம் 18:14 நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்.
ஏசாயா 2:6 யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தியரைப்போல் நாள் பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர் மேல் பிரியப்படுகிறார்களே.
மீகா 5:12 சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்;
ஏசாயா 47:13 உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.
தானியேல் 2:27 தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது.
எனவே நாள், நட்சத்திரம் பார்ப்பது தவறு.
- வானத்தில் ஒரு அடையாளம் தோன்றும் என்று தேவன் சொன்னால், அந்த அடையாளம் எப்பொழுது தோன்றும் என்று காத்திருப்பது வேறு. உதாரணமாக அவரைக்குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்... அவர் ஒலிவ மலையில் வந்து இறங்குவார்... சந்திரன் இரத்தம்போல மாறும் என அடையாளங்கள்.
- இந்த நட்சத்திரம் இவன் வீட்டுக்கு ஓரத்துல எட்டிப் பாக்குது, அவன் இவனை பாக்கிறான். இந்த ராகு, கேது ஒன்னுக்கொன்னு முறைக்கிறது, அப்படி இல்லாம இருக்கனும் என்றால் பரிகாரம் பண்ணுங்கோ, " அதுக்கு இவ்வளவு செலவாகும்" என்று பிழைப்புக்காக காசு தேடும் கூட்டம் வேறு.
ஒரு செய்தி:இத்தனை வருடங்களாக விஞ்ஞானிகளின் உண்மை சமன்பாடுகள் தவிடுபொடியாய் போயின என்று ஐரோப்பாவில் ஒரு துகள்-முடுக்கி (particle accelerator, collider) என்னும் ஒரு சோதனையின் மூலம் கடந்த வாரம் செய்தி வந்தது. அதாவது matter, anti-matter இரண்டும் மோதினால் இல்லாமல் போகும் என்னும் தங்களுடைய அடிப்படையான சமன்பாடு தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி இவ்விரண்டும் மோதியும் matter அங்கே பிழைக்கின்றது என்று கண்டுபிடித்துள்ளார்கள். (http://www.csmonitor.com/Science/2010/0519/Matter-vs.-antimatter-particle-accelerator-experiment-says-matter-wins)
"வானங்கள் கர்த்தருடையவைகள்" என்று சங்கீதம் 115:16ல் வாசிக்கிறோம். இருப்பினும் மனிதன் குறைகுடம் போல் தழும்பி அங்குள்ளவைகளை வைத்து ஜோதிடம், எதிர்காலம் கணிப்பது என்பது தவறு மற்றும் முட்டாள்தனம். இன்னும் விஞ்ஞானத்தில் சில பிழைகள் இனிமேலும் நிரூபிக்கப்படும். ஜோசியம், கணிப்பு என்பவையும் பிழை என தேவன் உங்களுக்கு ஒரு நாள் காட்டுவார்.
மேலும் தானியேலில் "மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும் (wise men), குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது" என்று வாசித்தபிறகு மறைபொருளுக்காக இப்படி ஜோசியர், நாள் பார்ப்பவர் என்று தேடிப் போவது தவறேயாகும்! அவர்களால் மறைபொருளை அறிவிக்க முடியாது!!
(இயேசு பிறந்தபோது வந்த ஞானிகள் ஜோதிடர்கள் அல்ல.)
.
12 comments:
thank u jesus............. thanks 4 this wonderful message
Good explanation thank you
பல ஜோதிடப்புரட்டுக்களுக்கு தமிழ்வெப்துனியா தளத்திற்கு ஆதாரத்துடன் பதில் அளித்துள்ளேன். ஜோதிடம் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். ஒரு தடவை அவர்கள் சொல்வது பலித்துவிட்டால் போதும். அந்த ஜோதிடரின் காட்டில் மழைதான். மக்களுக்கு சிந்னை அறிவு இன்மை, இன்னும் இன்னும் சில கிறிஸ்தவபோதகர்களே தீரக்கதரிசனம் என்ற பெயரில் அபத்தங்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை என்னவென்று சொல்லுவது
I welcome you.your opinion about astrologers is the same of mine. Man stumbles with his little and incomplete knowledge.
கேள்வி பதில் அருமையா இருக்கு....
வாழ்த்துகள்....
Sam David Prabu : Very nice Question and Answer about astrology definition with bible verses..
Good one, For your Information " அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்", Why that star is gone in the middle and they found it out out later.Because during the absence of star they went to Herod to check the child which caused the killing of children below 2 Years.Star itself is a trap to kill jesus by devil, But he has not succeeded.
jesus is good he is my shepherd he is my way he is my light my world....
KARTHAR ERUKKA BAYAM YEN?
joshiam sollbavargal ellam saathanin pillaigal,saathanin uthavi illamal jaadhagam sollamatargal.....
சரியான விலக்கம் ... Praise the Lord
very nice question and answer
மிக சரியான பதில் ஆதாரங்கலுடன் கொடுக்கப்பட்டது அருமை
பிழைப்புக்காக நாள் பார்க்கிறவர்கள் இந்த ஒரு பதில் மூலம் இல்லாமற்போவார்கள்....
Thank you for your information....
தேவன் நமக்கு வெளிப்படுத்தின விசேசத்தில் 12 ஆம் அதிகாரத்தில் கூறியது போல வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி அதாவது நாளை மறு நாள் பூமியில் நிகழ வாய்ப்பு உள்ளது என்று பல தீர்க்கதரிசிகளும் கூறுகிறார்களே அதும் ஜோதிட அடிப்படையில் தான் கூறுகிறார்கள் அது உண்மையாக இருக்க வாய்ப்புகள் இருக்கா ?