முன்னுரை:
மதம் எல்லாம் மனிதன் வகுத்தவை. மனம் மாறுதல் தான் சரி.
இந்துக்கள் சொல்கின்றனர்: "யாரும் இந்துவாக மாறமுடியாது. வெறொரு மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து மதத்தைத் தழுவினாலும் அவர் இந்துவல்ல. இந்துவாக இருக்க ஒருவர் இந்துகுடும்பத்திலேயே பிறந்திருக்கவேண்டும்". ஆனால் கிறிஸ்துவை பின்பற்றியவர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் கொடுக்கப்பட்டது என்று அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிக்கிறோம். யூதர்களின் கலாச்சாரத்திலும் தாய் யூத குலத்தில் பிறந்து வந்திருக்கவேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் யூதர்களாவார்கள் என்கின்றனர் யூதர்கள். இதோ சான்றிதழ் வைத்திருக்கிறேன், ஆகையால் நான் கிறிஸ்தவன், எனவே பரலோகம் போவேன் என்று சொல்லக்கூடாது. கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தும் கிறிஸ்துவை அறியாமலேயே (இரட்சிக்கப்படாமலே) இந்த உலகத்தார் போல் வாழ்ந்தால் பரலோகம் செல்ல இயலாது. நீங்கள் ஒருவேளை சபைக்கு வாரந்தோறும் செல்பவாராயிருந்தாலும் (அற்புதம் அடையாளம் செய்தாலும்), தனிப்பட்ட வாழ்க்கையில் பாவத்தில் ஜீவித்தால் பரலோகம் செல்லமுடியாது. தேவன் அவர்களை நோக்கி "அக்கிரமச் செய்கைகாரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள், நான் உங்களை அறியேன்" என்று அந்நாளில் சொல்லுவார். உண்மையான கிறிஸ்தவன் என்பதற்கு நம் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். இயேசு கிறிஸ்து சொன்ன கற்பனைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளவேண்டும். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை என்று இயேசு சொன்னார். எனவே,
- நாம் இரட்சிக்கப்பட்டிருக்கவேண்டும். (பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு பெறுவது)
- ஞானஸ்நானம் பெற்றிருக்கவேண்டும். (ஜலத்தினால் பிறப்பது)
- பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற்றிருக்கவேண்டும். (ஆவியினால் பிறப்பது)
- [இவ்வுலகத்தில்] வேறுபாட்டின் ஜீவியம் செய்யவேண்டும்.
- பரிசுத்த ஜீவியம் செய்து பூரணத்தை நோக்கி கடந்து செல்லவேண்டும். ஏனெனில் தேவன் சொன்னார்: "நான் பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்".
இன்னும் அநேக காரியங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
பதில்:
இந்துக்கள் நடத்தும் "சடங்கு"களுக்கு போகலாமா என்ற கேள்விக்கு பதில்: சடங்கு சம்பிரதாயங்களில் பங்குபெறக்கூடாது. அது தேவனுக்கு பிரியமானது அல்ல. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள். எனவே அதை மாசுபடுத்தவேண்டாம். இங்கு வேறுபாட்டின் ஜீவியம் என்ற பகுதி பதிலாக அமைகின்றது. வேதத்திலிருந்து இரண்டு பகுதிகளை வாசிப்போம்.
II கொரி 6:14-17 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
I கொரி 8:5-12. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.
எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா? இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.
எனவே நாம் பாவஞ்செய்கிறவர்களாவோம்.
இந்த சடங்குகளில் எல்லாம் மற்ற தெய்வங்களும், பூஜைகளும், மந்திரங்களும், செய்முறைகளும் வருவதால் நாம் ஒதுங்கியிருக்கவேண்டும்.
திருமணங்களுக்குச் செல்லலாம், அங்கே விருந்தில் சாப்பிடலாம். ஆனால் அங்கு விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவற்றை வாங்கவும் கூடாது, புசிக்கவும் கூடாது, புரோதகர் ஓதிய அரிசி மஞ்சள் வாங்கக்கூடாது. நலங்குகளில் (நலுங்கு) பங்குபெறவும் கூடாது. அங்கே சந்தனம் பூசி, ஆரத்தி, குத்துவிளக்கு ஏற்றி எடுக்கப்படுகின்றது. "நாங்கள் இப்போது அதெல்லாம் செய்யக்கூடாது. கோபித்துக்கொள்ளாதீர்கள்." என்று அன்புடன் எடுத்துச்சொல்லி ஒதுங்கி விடுங்கள். இதற்கெல்லாம் அவர்கள் ஒரு காரணம் சொல்லி உங்களை இழுப்பார்கள், இடம் கொடாதிருங்கள்.
ஒருவர் இறந்துவிட்டால் அங்கே செல்லலாம். ஆனால் அங்கு செய்யப்படும் சடங்கு, பூஜைகளில் பங்குபெறவேண்டாம். அதன் பின் நடைபெறும் கருமாதி எல்லாம் போகக்கூடாது. அங்கே வேட்டி, புடவை, சாராயம், பீடி, சுருட்டு என்று வாங்கி போய் வைக்கும் பழக்கம் அநேக இடங்களில் உண்டு. பூப்புநீராட்டு விழா, காது குத்து எல்லாம் பங்குபெறத் தேவையில்லை. நாங்கள் இந்துக்களாயிருந்து இயேசுவைப் பின்பற்றியதால் இதுபோன்ற எல்லா சூழ்நிலைகளையும் சொந்தக்காரர்களால் சந்தித்தோம். இப்படிப்பட்ட சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக அமையாமல் பலமுறை அவர்களால் வெறுக்கப்படும்படி அமையும். மனிதனை விட தேவனுக்குத்தான் முதலிடம் கொடுக்கவேண்டும். இதை அநேகருக்கு ஏற்றுக்கொள்ளுவது என்பது சிரமமாக இருக்கலாம். அதற்காக குழந்தை பிறந்த நாள், வேலையிலிருந்து ஓய்வு பெறும் தினம் என்பவைக்கு போகமல் இருக்காதீர்கள். சென்று வாழ்த்து சொல்லுங்கள்.
உபாகமம் 20:18 அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.
இயேசு: இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் என்றார். (மத்தேயு 7:13, 14)
அவர்கள் வீட்டுக்கு போகலாம், ஆனால் சடங்கு, சாஸ்திரங்களில் பங்குபெறவேண்டாம்.
_____________________________
(Added Aug 16, 2010) :
"கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?" என்பதில் நீங்கள் அந்நிய தெய்வங்களுடைய கோயில் திருவிழாக்களுக்கு உதவும்போது நீங்கள் அவர்களுடன் பங்குபெறுகின்றீர்கள் என்று ஆகின்றது. எனவே அப்படிச் செய்யாமல் ஏழைகள், திக்கற்றபிள்ளைகள், விதவைகள் என்பவர்களுக்கு உதவுங்கள்.
"உங்கள் சத்துருக்களை நேசியுங்கள்" என்பதால் அவர்களுடைய விக்கிரக வழிபாடுகளுக்கும், பாவங்களுக்கும் உடன்படலாம் என்று அர்த்தமல்ல. சங்கீதம் 1:1ல் ".... பாவிகளுடைய வழியில் நில்லாமலும்....." என்றும் நீதி 1:15ல் "என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக." என்றும், நீதி 4:14, 15ல் "துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே. அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ" என்றும் வாசிக்கிறோம்.
7 comments:
நீங்கள் சொல்லுவதுஉண்மை. ஆயினும் கடைப்பிடிப்பது சிரமாக இருக்கும். சான்றாக அலுவலகத்தில் சரஸ்வதி பூசை நடக்கும். சிறுமான்மையினராக இருக்கும் இந்துக்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் இந்த பிரச்சினை ஒரு சிக்கலை ஏற்படுத்தக் கூடும் நாம் அவர்களின் தேவர்களை வணங்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் கோரிய உதவிகளை செய்யலாம். என்பது எனது கருத்து.
இதற்கு மாற்றுக் கருத்துக்களும் இருக்கலாம்.
very good answer,
நான் என்னுடய அலுவலகத்தில் சரஸ்வதிபூஜை எதுவும் உதவி செயவில்லை . நெகேமியா போன்று தேவ வைரகியமாய் இருந்தேன்
கோல்வின், எனது கருத்து, நீங்க விக்கிரஹ ஆராதனை சம்பத்தப்பட்ட எந்த காரியதிலேயும் பங்கேற்கவும் வேண்டாம். அதற்கு உதவி செய்யவும் வேண்டாம்.
விக்கிரஹ ஆராதனை,பூஜை இதற்கெல்லாம் உதவி செய்வது., அவர்கள் அவைகளை பூஜை செய்ய ஊக்குவிப்பதற்க்குச் சமம். நெகேமியா,தானியெல் போல வைராக்கியமாய் இருங்கள்... அப்பொழுது கர்த்தர் உங்களை உயத்துவார்......
boys can wear ear rings?
can u give me a suggestion for boys can wear ear rings and tatoos.