Tuesday, August 10, 2010

49. கிறிஸ்தவர்களை புதைக்காமல் எரிக்கலாமா?

ஒரு பரிசுத்தவான் இறந்தபின்பு அவருடைய சரீரத்தை புதைப்பதாலோ எரிப்பதாலோ அவருடைய ஆத்துமாவிற்கு கிடைக்கும் நித்திய ஆசீர்வாதங்களில் எந்த மாற்றமும் வராது. அவர்கள் எல்லாரும் பரலோகத்தில் பத்திரமாகத்தான் இருக்கின்றனர்.

நாம் எப்படி ஒரு வீட்டிலிருந்து வெளியே செல்கிறோமோ அப்படித்தான் நாம் இறப்பதும். வீடு என்பது நாம் இருக்கும் இடம். வெளியேபோனாலும் நாம் நாம்தான், வீடு நாமல்ல, அது நாம் இருந்ததற்கு அடையாளம் என்பது என்னுடைய விளக்கத்தின் ஒரு பகுதி.

சடலத்தை எரிப்பது என்பது இஸ்ரவேலர் அல்லாதவர்களின் துவக்கம். தேவனுடைய வார்த்தையாகிய பைபிளில் சுட்டெரிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டது எல்லாம் ஒரு நியாயத்தீர்ப்பு மற்றும் சாபம் என்ற விதத்தில் ஆகும். தேவனுக்கு கீழ்ப்படியாமல் போன சவுலின் சடலத்தை பெலிஸ்தியர்கள் (Philistines) எரித்தார்கள். (1 சாமு 31:12). மோவாபிலே மனுஷனுடைய எலும்புகள் எரிக்கப்பட்டது மிகவும் கொடூரமான குற்றம் ஆகும். (ஆமோஸ் 2:1,2).

வேசிகள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்று அறிவோம். (ஆதி 38:24, லேவி 21:9) ஆகான் என்பவன் சாபத்தீடானவைகளை எடுத்துக்கொண்டு போய் அவனும் இறுதியில் எரிக்கப்பட்டான். பொல்லாத ராணியாகிய யெசேபேல் கொல்லப்பட்டபோது, அவளைப் புதைக்க யாரும் இல்லை.

பழைய ஏற்பாட்டில் "நீ சமாதானத்தோடே உன் பிதாக்களின் கல்லறையில் சேர்க்கப்படுவாய்" என்று தேவன் சொன்னது ஒரு விசேஷமான ஆசீர்வாதமாக எண்ணப்பட்டது. (II நாளா 34:27,28).

I கொரி 15ம் அதிகாரத்தில் பவுல் ஏன் ஒரு கிறிஸ்தவன் அடக்கம்பண்ணப்படுகிறான் என்றும் உயிர்த்தெழுதலின் நிச்சயத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
புதிய ஏற்பாட்டிலும் இரத்தசாட்சியாய் மரித்த யோவான் ஸ்நானகன், ஸ்தேவான் என்பவர்கள் அடக்கம் பண்ணப்பட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவானவர் வேதவாக்கியத்தின்படியே அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்று வாசிக்கிறோம்.

கிறிஸ்துவின் மரணத்தில் அவருக்கு செய்யப்பட்டதைவிட வேறு சிறந்த உதாரணம் இல்லை. பைபிளில் வாசிக்கும்போது
சபிக்கப்பட்டவர்கள் எல்லாம் எரிக்கப்பட்டார்கள். எனவே எரிக்காமல் புதைக்கும்படி உங்களுக்கு அறிவுரை சொல்கிறேன்.

-----------------------------
சிந்தனைக்கு:

இந்த காலத்திலும் (கி.பி 1990-2010) மரித்து பின்பு உயிர்திரும்பி வந்தவர்கள் பொதுவாக சொல்லுவது என்னவெனில் எனக்கு திரும்பி இந்தபூமிக்கு வர இஷ்டமே இல்லை. இந்த சரீரத்தை விட்டு சென்றபின்பும் நான் நானாகத்தான் இருந்தேன் இந்த பூமியில் நடந்தவை ஞாபகங்கள் இருக்கின்றன. ஒளியை நோக்கி பிரயாணம் செய்தேன் அதில் தேவன் வாசம்பண்ணினார். பரலோகம் என்பது வருணிக்கமுடியாத அளவுக்கு அருமையாக உள்ளது. குருடனுக்கு சிவப்பு, நீலம்,பச்சை என்பதை எப்படி விளக்குவது கடினமோ அப்படித்தான் அங்கே பரலோகத்தில் பார்த்த உணர்ந்த அனுபவமும் விளக்குவது கடினம் என்று சொல்கின்றனர்.

கீழே ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானியாயிருந்தவர் (George Rodaniah) 1976-ல் வேண்டுமென்றே கார் மோதி கொல்லப்பட்டார். அவர் சரீரம் எரிக்கப்படவில்லை. மருத்துவமனையில் குளிர்-சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. மூன்று நாள் கழித்து உயிர் வந்தது. பின்பு அமெரிக்கா சென்று
BayTown, Texas-ல் ஒரு போதகராக மாறிவிட்டார். அவருடைய சாட்சியை இங்கே படிக்கலாம் (George Rodania's Testimony). கடந்த அக்டோபர் 12, 2004ல் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

இவருடைய சாட்சியை நான் எப்பொழுது படித்தாலும்/பார்த்தாலும், என் மனதில் ஓடும் எண்ணங்கள் பல. உங்களையும் சிந்திக்கவைக்கும் என்பதில் ஐயம் இல்லை.
டிஸ்கவரி சேனலில் (Discovery Channel) அந்த உண்மைச் சம்பவம் உங்களுக்கு இங்கே சான்றாக:




இன்றும் சில தேவனுடைய பிள்ளைகள் இறந்தபின்பு உயிரடைந்திருக்கின்றனர். YouTube-ல் தேடுங்கள் மரித்தபின்பு தேவனைச் சந்தித்த
மயிர்சிலுக்கும் சம்பவங்கள் காணலாம். அநேக வீடியோக்கள் இருப்பினும் இது டிஸ்கவரி சேனலில் வந்ததால் இங்கே ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது. என்னதான் மரித்தபின் உயிரடைந்தவர்கள் வந்து சொன்னாலும் இயேசு சொன்னதுபோல் சந்தேகப்படும் சந்தேகவாதிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.
மனிதன் மரித்தபின்பு ஒன்றுமில்லாமல் போகிறான் என்று சொல்பவர்கள் இந்த வீடியோவைப் பார்த்த பிறகாவது சற்றே சிந்திக்கட்டும். இன்று மரித்தால் எங்கு போவாய்? பரலோகத்திற்கா, நரகத்திற்கா? தெரியவில்லையெனில் இயேசுவிடம் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். ஏனெனில் அவரே பாவங்களை மன்னிக்கும் அதிகாரமுள்ள தேவன். இயேசு: என்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு இந்த உலகிற்கு வந்து மனுஷருடைய பாவங்களுக்காக சிலுவையிலே மரித்தேன், இதோ சதா காலமும் உயிரோடிருக்கிறேன் என்று சொன்னார். உங்களுக்கு பரலோகத்துக்குச் செல்லும் நம்பிக்கையையும் நிச்சயத்தையும் அவர் தருவார்.

4 comments:

simeon said...

really i realize that there is a new life after this soul dead. thanks a lot, for providing such a good evidence.

Colvin said...

நல்ல விளக்கம். கேள்விப்பட்டிராத சில விடயங்கள். மரித்து மீண்ட விஞ்ஞானி இயேசுவை ஏற்றுக் கொண்டது அதுவும் போதகராக மாறியது.

Bro.Lenin said...

Good Explain. Thanks

deva said...

wow super message

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

New comments are not allowed.