Monday, August 2, 2010

48. டார்வினின் பரிணாமக் கொள்கை, பைபிள் பற்றி?

சார்ல்ஸ் டார்வின் 1809-1882 வரை வாழ்ந்தவர். டார்வின் சொன்ன கோட்பாடுகள் சுமார் 200 வருடங்களுக்கு முன் வந்தவை. இவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர் நெருங்கிய சொந்தத்தில் தன்னுடைய Cousin-யை திருமணம் செய்திருந்தார். இவருடைய 10 குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் பிறந்து நடப்பதற்கு முன்பே இறந்தன. இவர் தன்னுடைய பத்து வயது மகள் இறந்தபின்பு அன்றுமுதல் இறைவன் மீது நம்பிக்கையில்லாமல் ஆலயங்களுக்கு போவதை அத்துடன் நிறுத்திவிட்டார். ( யோபு எங்கே! இவர் எங்கே? ). “உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?” - இவ்வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது. எனவே மறைந்துவிட்ட உயிரினங்களின் எலும்புகளையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும்கொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். இவ்வாய்வின் விளைவாக “பரிணாம வளர்ச்சிக் கொள்கை”முடிவுக்கு அவர் வர நேர்ந்தது. இவருடைய பரிணாம கோட்பாடுகள் (Theory of Evolution) இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இவர் ஒரு மரம்போல பல கிளைகளுடன் வரைபடம் வரைந்து இதிலிருந்து இது வந்தது என சொல்லியிருக்கிறார். இவ்விரண்டு உயிரினத்திற்கும் இடையிலே ஒரு உயிரினமும் காணப்படும் என்று சொல்லியிருக்கிறார். இவ்விரண்டிற்கும் இடையில் இருப்பவை "Missing Links-தொலைந்த/விடுபட்ட இணைப்புகள்" என பட்டியல் பெரிதாகிக்கொண்டேதான் போகின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று வர கோடி வருடங்கள் ஆயின என்று சொல்கின்றன இவரது கோட்பாடுகள்.

உண்மையிலே எனது ஆராய்ச்சியின்படி உயிரினங்களின் வகைகள் குறைந்துகொண்டுதான் வருகின்றன. எனவேதான் இல்லாதவைகளின் எலும்புகளையெல்லாம் கண்டுபிடிக்கின்றனர். வெறும் சில எலும்பை வைத்தே உயிரினம் இப்படி இருந்தது என்று சொல்வது தவறு. உண்மையில் டார்விணின் வரைபடம்-மரம் கீழிருந்து மேலே போகவில்லை. மேலிருந்து கீழே வருகிறது என்றுதான் அகழ்வாராய்விலிருந்து முடிவுக்கு வரத்தோன்றும். ஏனெனில் பல ஜீவராசிகள் இன்று இல்லையே.

இவரது கொள்கையைப் பின்பற்றியவர்கள் இதற்கு பின் இதில் இரண்டு பிரிவுகளைக் கொண்டுவந்தார்கள். ஒன்று Micro-evolution, மற்றொன்று Macro-evolution. ஒரு கூட்டத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கு கால அளவில் மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டு வளர்ச்சியில் குட்டை அல்லது நிறம் மாற்றம் வருவது மைக்ரோ பரிணாமம். உணவு பழக்கத்தை வைத்து மனித இனம் குட்டையாகவும், வளர்ச்சியாகவும் ஆகமுடியும் என்று பலரும் அறிந்த உண்மையை இதற்கு சான்றாக கொண்டுவருகின்றனர். மேலும் ரோஜா பூவில் மாற்றங்களைக் கொண்டுவந்து பல புதிய ரோஜாவாக கொண்டுவருவதும் இந்த மைக்ரோ பரிணாமத்தில் அடங்கும்.
மூதாதையரைத் தேடும் படலம், உதாரணமாக குரங்கிலிருந்து மனிதனைக் கொண்டுவர முயற்சிப்பது மேக்ரோ பரிணாமம்.
(Microevolution is used to refer to changes in the gene pool of a population over time which result in relatively small changes to the organisms in the population — changes which would not result in the newer organisms being considered as different species. Examples of such microevolutionary changes would include a change in a species’ coloring or size.
Macroevolution, in contrast, is used to refer to changes in organisms which are significant enough that, over time, the newer organisms would be considered an entirely new species. In other words, the new organisms would be unable to mate with their ancestors, assuming we were able to bring them together).

Genome is the entirety of an organism's hereditary information. It is encoded either in DNA or, for many types of virus, in RNA.தற்போது விஞ்ஞானம் மனிதன் குரங்குகளிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் மனிதனுக்கும் குரங்குக்கும் (Chimps) பொதுவாக 48.6% மரபு மூலக்கூறுகள் (genome) இருப்பினும் 4.8% குரோமோசோம்களே பொதுவாக உள்ளன; ரேடியோலாரியனில் குரோமோசோம் எண்ணிக்கை 800, மனிதனுக்கு 46, ஆனால் குரங்குக்கு 48 என்பதால் கணக்கு இடிக்கிறது. (http://en.wikipedia.org/wiki/Radiolarian, http://www.apologeticspress.org/articles/2070) . எனவே விஞ்ஞானத்தின் வளர்ச்சி உலகில் பல கோட்பாடுகளை தவிடுபொடியாக்கிக் கொண்டுதான் வருகின்றன. சமீபத்தில் இவர்கள் தங்களது கோட்பாட்டில் ஒரு மாற்று கருத்தை தெரிவித்தனர். குரங்கும், மனிதனும் ஒரு மரத்தின் இருகிளைகள் போல என்றும், இவ்விரண்டிற்கும் பொதுவான மூதாதையர் இருக்கவேண்டும் என்றனர். எனவே அந்த மூதாதையரைத் தேடினர். தற்போது லெமோர் (Lemur) என்ற ஒரு மிருகத்துக்கு தாவி "விடுபட்ட இணைப்பினை" கண்டுபிடித்தோம் என்று சொல்கின்றனர், ஆனால் அதிலும் சிக்கல்கள்.யாரேனும் விஞ்ஞானம் தவறு என்று கூறுவது கண்மூடித்தனமாகும். விஞ்ஞானமும் அதின் கண்டுபிடிப்புகளும் முக்கியம். ஏனெனில் இவைகள் உண்மையை (truth) வெளியே கொண்டுவரும். மனிதன் இறந்தபின் அவன் ஆத்துமா செல்லும் அந்த பாதையை (Another Dimension) விஞ்ஞானம் கண்டுபிடிக்குமா?

பரிணாமக் கொள்கையும்
பைபிளில் சொல்லப்பட்டவையும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. ஒரு காலத்தில் பைபிளில் உலகம் உருண்டை என்று சொல்லப்பட்டதை கேலி செய்து கொண்டிருந்தனர். விஞ்ஞானமானது உலகம் உருண்டை என கண்டுபிடித்தபின்பு ... அவர்கள் எல்லோரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை."தேவன் இல்லையென்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்கிறான்" என்றும், "துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே" என்றும் பைபிளில் வாசிக்கிறோம். ஒரு கார் செய்வதில் எத்தனை ஞானம் தேவைப்படுகின்றது, அதில் எத்தனை பாகங்கள் உள்ளன! இந்தக்காரை ஒருவரும் உண்டாக்கவில்லை, சும்மா முளைத்து வந்தது என்று சொன்னால் காரை உண்டாக்கிய நிறுவனம் அவனைப் பார்த்து என்ன சொல்லும்?

ஒரு எறும்பு நாம் உறுவாக்கியுள்ள கம்யூட்டரை புரிந்துகொள்ளுமா? அதிலுள்ள mother board, number of layers in the PCB, components such as resistors, capacitors, LEDs, transformers, hard drive, USB, the monitor screen, the colors, contrast, CD/DVD drives, mouse, keyboards, wireless modems, speakers, the CPU and its thousands of registers that compute at binary level inside, and how it was fabricated to operate, the clock crystals......and overall the complicated software or the operating system, the BIOS, and the RAM and the drivers that runs on it...என நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படியானால் மனிதர்களாகிய நாம் எவ்வளவு விசேஷித்தவர்கள்!
For I am fearfully and wonderfully made: marvellous are thy works; என்று பைபிளில் வாசிக்கிறோம்.
பரிணாம கொள்கைவாதிகளிடம் நாம் காணும் இவைகள் எங்கிருந்து வந்தன என்ற கேள்விக்கு, இது அதிலிருந்து வந்தது என்பர்....சரி அது எங்கிருந்து வந்தது? ..... அது எங்கிருந்து வந்தது என்ற தொடர் கேள்விக்கு இதுவரை "பதில் தெரியவில்லை" என்று தான் சொல்கின்றனர். இவர்கள்: தேவனை உண்டாக்கியது யார் என்று சிறுபிள்ளைபோல் கேள்வி கேட்கின்றனர். (http://tamilbibleqanda.blogspot.com/2009/11/17-what-is-name-of-god.html).
ISBN-10: 0374288798
ISBN-13: 978-0374288792

"டார்வின் தவறாக பெற்றவைகள் (அறிந்தது) என்ன?" இப்படியாக ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை எழுதிய ஜெர்ரி ஃபோடோர் என்பவர் ஒரு "கடவுள் இல்லை" என்ற நம்பிக்கையைச் சேர்ந்தவர். இவர் ரட்ஜெர்ஸ் பற்கலைக்கழகத்திலிருந்து தத்துவம் மற்றும் எண்ணங்களின் நிகழ்வு அறிவியல் (cognitive science) பேராசிரியரும், மாசிமோ பியாடெல்லி-பால்மாரினி என்பவர் அரிசோனா பற்கலைக் கழகத்திலிருந்து வந்த ஒரு எண்ணங்களின் நிகழ்வு என்னும் பேராசிரியருமாவார். எனவே இப்படியாக இவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் உள்ளன. (http://www.salon.com/books/feature/2010/02/22/what_darwin_got_wrong_jerry_fodor)


ஒரு பெயர்பெற்ற பரிணாமக்கொள்கைவாதி(ரிச்சர்ட் டாக்கின்ஸ்)யிடம் ஒரு கேள்வி கேட்டார்கள் (வீடியோவில்):உலகின் உற்பத்தி நிறுவனங்கள், விவசாயங்கள் இன்றும்:
நெல்லை விதைத்து நெல்லை அறுக்கின்றனர். ஆடுகளிலிருந்து ஆடுகளும், மீன்களிலிருந்து மீன்களும், பறவைகளிலிருந்து பறவைகளும், மனிதர்களிலிருந்து மனிதர்களுமே என தெளிவாய் உணர்த்துகின்றன. காலப்போக்கில் எல்லாம் மாறிமாறிவந்தால் உலகில் ஒரு இடத்திலிருந்தாவது நொடிப்பொழுதில் செய்தி வந்திருக்குமே இந்த நவீன உலகத்தில்!
மாற்றத்துக்குஒரு கோடி வருடங்கள் ஆகும் என்றால்... கோடான கோடி உயிரினங்கள் வாழும் இந்த பூமியில் நேற்றோடு ஒரு உயிரினத்துக்கு ஒருகோடி வருடம் முடிந்திருக்க வாய்ப்பு உண்டு; எனவே அங்கே அந்த மாற்றத்தைக் கண்டுபிடித்திருக்க வேண்டுமே என்ற வாதமும் வலுக்கிறது. தற்போதைய பரிணாமக் கொள்கையின் தந்தையான ரிச்சர்ட் டாக்கின்ஸ் என்பவரிடம் ஒரு பேட்டியில் பரிணாமக்கொள்கைக்கு ஆதாரங்களை கேட்டார்கள். அவரோ "We are working on it" என்றே பதிலளித்தார்.


[Updated Feb, 2018] - மனித செல்லின் சிக்கலை அறிந்த இவர், இன்று இவரே ஒருவேளை வேறுகிரகத்திலிருந்து யாராயினும் வந்து நம்மை உண்டாக்கியிருக்கக்கூடும் என்று சொல்கிறார்.
இந்த விஞ்ஞான உலகில் நம்மால் ஆய்வகத்தில் எத்தனை இரசாயனங்களைக் கலந்தாலும் ஒரு உயிரினம் கூட செய்ய முடிவதில்லையே.
ஏற்கனவே உள்ள உயிரினத்தை எடுத்து அதோடு இரசாயங்களை கலக்கிறார்கள். இந்த பூனையில் இத்தனை சதவீதம் இரசாயனம் உள்ளது, இரும்பு, பொட்டாசியம், உப்பு, அமிலம் எல்லாம் உள்ளது என்று சொல்லத்தெரிகிறதே, இந்த அமிலங்களையும் இரசாயனங்களையும் போட்டு ஏன் ஓர் உயிரினம் கூட உருவாக்க முடியவில்லை? போன்ற கேள்விகளுக்கு மௌனமே பதில். அப்படியே பல விஞ்ஞானிகள் சேர்ந்து உருவாக்கினாலும், அது சிருஷ்டிப்பைத்தான் நிரூபிக்கும்; பரிணாமத்தை அல்ல. மேலும் சிருஷ்டிக்க மேலான அறிவு (Intelligence) தேவைப்படுகிறது என்பதையும் காட்டும்.
ஒரு பரிணாமக் கொள்கையில் நம்பிக்கையுள்ளவராயிருந்த ஒருவர் பற்றிய வீடியோ:

கடவுளை நம்பாத மனிதர்கள் பலர் இருப்பினும், அவர்களின் உள்ளுக்குள்ளே "ஒருவேளை தேவன் என்று ஒருவர் இருந்தால்..." என்ற பயமும் உண்டு. இந்த பூமியில் நான் கண்ட 100 மனிதரும் இறந்துவிட்டார்களே! எனவே எனக்கும் இறப்பு என்பது உறுதி. இறந்த பின் என்ன நடக்கும் என கொஞ்சம் யோசித்தார்களே என்றால், அதற்கு விடை பைபிளில் தெள்ளத்தெளிவாக உள்ளது. வேறு எங்கும் இல்லை.

நம்முடைய தேவன் நானே இவைகளை சிருஷ்டித்தேன் என தெளிவாக சொல்கிறார். மேலும் நான் ஒருவர்தான் தேவன் (God), வேறு தேவன் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார். வேறு எந்த மதமும் இவ்வளவு தெளிவாகச் சொல்லவில்லை.

நானே தேவன், என்னைத்தவிர வேறு தேவன் இல்லை (I AM GOD, there is no one besides me):
ஏசாயா 44:6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
ஏசாயா 44:8 நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததுமில்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள், என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.

ஏசாயா 45:5
நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.
ஏசாயா 45:6 என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஏசாயா 45:21 நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.

நானே சிருஷ்டித்தேன் (I created):
ஏசாயா 42:5 வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குக் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது.
ஏசாயா 45:12 நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷர்களைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.
ஏசாயா 40:28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.
ஏசாயா 45:18 வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஏசாயா 66:2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்;

யோவான் 1:3 சகலமும் அவர்[இயேசு] மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
கொலோசெயர் 1:16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
ரோமர் 1:20. எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

எனவே நம்முடைய தேவனே இவைகளை உண்டாக்கினபடியால், "டார்வினின் பரிணாமக் கொள்கை தவறு". தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் டார்வினின் கொள்கையினை நம்பினால் / பின்பற்றினால் உங்கள் வாழ்வில் நீங்கள் தேவனையும் அவர் கரத்தின் கிரியைகளையும் மறுதலித்தது போலாகிவிடும்.

இக்கட்டுரை விவாதத்திற்கு அல்ல, தகவலுக்காக.

7 comments:

Siva said...

"யோபு எங்கே! இவர் எங்கே?" - ரசித்தேன் !!

Anonymous said...

Excellent Explanation / Padma Jothi

colvin said...

இந்த குரங்கு மெடரைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டுள்ளேன். இப்போ பன்றிதான் மனிதனுக்கு மிக நெருக்கமானது என்று சொல்லுறாங்க. மனித குரோமோசோம்கள் குரங்கினதை விட பன்றியினுடையதற்கே அதிக பொருத்தமுள்ளதாக இருக்காம். எப்படி இருக்கு
ஹா....ஹா..ஹா....

Anonymous said...

God created this world
Jesus is God.......

S.John saravanan said...

There is no one can not able to understand GOD's wisdom. Oh... what a wonderful GOD!!!

abu senthil said...

god bless u

Anonymous said...

GLORY TO GOD MY ALMIGHTY JESUS...

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

New comments are not allowed.