Sunday, August 22, 2010

51. சங்கீதம் 93:1 பிரசங்கி 1:5ல் சொல்லப்பட்டவை தவறுதானே?


கேள்வி
: சங்கீதம் 93:1, 96:10, 104:5 மற்றும் பிரசங்கி 1:5ல் சொல்லப்பட்டவை தவறுதானே?



பதில்:

[1] பிரசங்கி 1:5 சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கு அது திரும்பவும் தீவிரிக்கிறது. The sun also ariseth, and the sun goeth down, and hasteth to his place where he arose.
இன்றும் எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களும் (அனைத்து வெளிநாடுகள் உட்பட), செய்தித்தாள்களும், வானிலை அறிக்கைகளும், இணைய தளங்களும் சூரியன் உதிக்கும் நேரம் (Sun-rise), சூரியன் மறையும் நேரம் (Sun-set)
என சொல்கின்றன. இவர்கள் அனைவருக்கும் சூரியன் உதிப்பதுமில்லை, மறைவதுமில்லை பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது என்று நன்றாகவே தெரியுமே. பின்னை ஏன் இன்னும் அதை "Sun-set", "Sun-rise" என்று சொல்கின்றனர்?
ஏனெனில் இது ஒரு சார்பியல் வார்த்தையாகும்
(relative term, perspective) . நாம் செல்லும் இரயில் ஒரு நிலையத்தில் நிற்கும்போது, அருகிலுள்ள இரயில் நகர ஆரம்பிக்கும்போது நமது இரயில் செல்வது போல தோன்றுகின்றதல்லவா? இரு இரயில்கள் இருக்கும்வரைக்கும் அவைகள் நகரும் வரைக்கும் அப்படித்தான் தோன்றும். அதுபோலவே சூரியனும், பூமியும் உள்ளவரை சூரியன் உதிக்கிறது, மறைகிறது என்றும், விடியற் காலை நேரம், சாயங்காலம், அஸ்தமிக்கும் நேரம் என்று சொல்லப்படும்.

இதைப்போலவே பிரசங்கி 1:7ல் "எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்." நதி எப்படி திரும்பும்? அதனால் பார்க்கமுடியுமா? என்றெல்லாம் கேட்கக்கூடாது. கடலில் நீர் ஆவியாகி மேகமாகவும், மேகம் மழையாகவும் பனிக்கட்டியாகவும், மழை/பனிக்கட்டி/ஊற்று நதியாகவும்" என்ற அடிப்படையை அறிந்துகொள்ளவேண்டும். ஆனால் இந்த நிகழ்வுகளுக்கான முடுக்கத்தை (trigger) தேவனே உண்டாக்குகிறார்.
எரேமியா 51:16; 10:13ல் "அவர் சத்தமிடுகையில் திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலையிலிருந்து ஏவிவிடுகிறார்."

எனவே நாளை காலை 5:54 மணிக்கு சூரியன் உதிக்கும் என்று சொன்னால் தவறல்ல. சரிதான்.
 

[2] சங்கீதம் 93:1, 96:10ல் ... "ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. சங்கீதம் 104:5 ... பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்". The world also is stablished, that it cannot be moved .... laid the foundations of the earth.

பூமியைத் தேவன் சிருஷ்டித்தபோது மனிதன் இல்லை! அப்போது தேவதூதர்கள் இருந்தனர் என்றும்
அவர்கள் பூமியானது சிருஷ்டிக்கப்படும்போது கெம்பீரித்தார்கள் என்று அறிகிறோம்.

யோபு 38:4-8ல்: நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் (foundation-அஸ்திபாரம்) எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.

"அளவு குறித்தவர் யார்?" என்னும் இந்த வசனத்திற்கு பின்னே தேவனின் ஞானம் எவ்வளவு உள்ளது! அடேங்கப்பா!!


பூமியானது சூரியனிலிருந்து சுமார் 14.7 கோடி கி.மீ (9.1 கோடி மைல் - Information from NASA) தூரத்தில் உள்ளது. சூரியனின் விட்டம் (diameter) பூமியைவிட 100 மடங்கு பெரியது ஆகும். கோளத்தின் கன அளவு என்பது (Volume of a Sphere)
\!V = \frac{4}{3}\pi r^3
- (சூரியனின்ஆரம் = 100 r) அதாவது கனஅளவு 100 x 100 x 100 = சுமாராக 10 லட்சம் பூமிகளைக் கொள்ளும் அளவுடையது சூரியன் ஆகும்!! அப்படியானால் சூரியன் எவ்வளவு பெரியது? அதாவது ஒரு பேருந்தில் சுமாராக 198,000 டென்னிஸ் பந்துகள் நிரப்ப முடியும். 10 லட்சம் டென்னிஸ் பந்துகளை நிரப்ப 5 பேருந்துகள் தேவைப்படும். இதில் ஒரு பந்துதான் நமது பூமி. இதில் நீங்களும் நானும் எங்கே?  (Bus size: 8 x 6 x 20 ft -- volume:1658880 cubic inches , Tennis ball radius: 1.26 inches --- volume: 8.379 cubic inches)
 
- சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை சுமாராக 6000 *C (செல்சியஸ்).  நம்மால் வெயிற்காலத்தில் 38 *
C கூட தாங்கமுடியவில்லை.

- சூரியனிலிருந்து ஒளி புறப்பட்டு பூமிக்கு வர சுமார் 500 விநாடிகள் (அதாவது 8 நிமிடங்கள் 20 விநாடிகள்) ஆகும்.  ஒளியானது நமது பூமியை சுற்றிவர 0.134 வினாடிகளே ஆகும்.


- பூமியானது சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுகின்றது. இதில் கோடையில் வெயில் அதிகமாவும், குளிர்காலத்தில் நடுங்கும் குளிராகவும் பூமியில் வெப்பநிலை உள்ளது. (http://www.physicalgeography.net/fundamentals/6h.html)
 

பூமியின் எடையும் சரியான விகிதத்தில் உள்ளதால் ஈர்ப்புசக்தி என்பது துள்ளியமாக சமன் செய்யப்பட்டுள்ளது. பூமியானது தான் சுற்றும் பாதையிலிருந்து (orbit) சற்றே விலகி வெளியே சுற்றினால் நாம் அனைவரும் குளிரில் உறைந்து இறந்துவிடுவோம். அதேபோல் சுற்றுபாதையிலிருந்து சற்றே உள்ளே போய் சுற்றினால் நாம் அனைவரும் சூரியனால் கருகி இறந்துவிடுவோம். நம் உடலானது வெப்பத்தை சில *C க்கு மேல்/கீழ் போனாலே தாங்கமுடிவதில்லை. குளிர்சாதனமோ, கம்பளமோ தேவைப்படுகிறது. அப்படியென்றால் பூமியானது அதன் சுற்றுப்பாதையில் எவ்வளவு நிலையாயிருக்கவேண்டும்!! இதைத்தான் சங்கீதத்தில் வாசிக்கிறோம். பூமியின் அஸ்திபாரத்தை தேவன் ஸ்தாபித்திருக்கிறார். அது அசையாது அதாவது பூமி அதிலிருந்து விலகிச் செல்லாது. வீட்டுக்கு அஸ்திபாரம் மண்ணுக்கு கீழேயாகும். ஆனால் விண்வெளியில் சுற்றும் பூமியின் அஸ்திபாரம் என்பது அதின் சுற்றுப்பாதையாகும் (orbit). அந்த அஸ்திபாரம் (ஆதாரம்) இன்றும் ஸ்திரமாயிருப்பதால்தான் நாம் இன்றும் உயிரோடு இருக்கிறோம்.

எனவே
சங்கீதம் 93:1ல் சொல்லப்பட்டவை சரிதான்.

சூரியனிலிருந்து இவ்வளவு தூரம் என்று அளவு குறித்தவர் யார் என்று தேவன் அப்போது யோபைக் கேட்டபோது நிச்சயமாக யோபுக்கு இவ்வளவு ஆழமான விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

11 comments:

Colvin said...

அற்புதமாக விளக்கம். அறிவியல் பார்வையும் மிக நன்று

AvizhdamDesigns said...

I praise GOD for you dear

S.John saravanan. said...

Our GOD is Great. Well explanation.

Anonymous said...

One More additional information bible came from GOD.
அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
He stretcheth out the north over the empty place, and hangeth the earth upon nothing.(JOB 26: 7)

22. அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
It is he that sitteth upon the circle of the earth, and the inhabitants thereof are as grasshoppers; that stretcheth out the heavens as a curtain, and spreadeth them out as a tent to dwell in: (Isaiah 40:22)

Dennis said...

என்னுடைய உடம்பை சிலிர்க்க வைக்கும் விதமான விளக்கம், I enjoy it, Thanks,
Dennis,

tamilnadufellowship said...

thank u

Unknown said...

GOD is great his wisdom no one knows I praise GOD because such a greater GOD loves me and gracious with me

Unknown said...

very wonderful!

Unknown said...

god is great brother

Unknown said...

very nice explanation...may GOD bless you and your ministry...

Anonymous said...

GOD IS GREAT I THING NEENGA KANAKULA PULI

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.