Wednesday, October 27, 2010

59. முகமது பற்றி பைபிளில் யோவான் 14:16-ல் உள்ளது என்று இஸ்லாமியர்கள் சொல்வது பற்றி?

யோவான் 14:16-ல் சொல்லப்பட்ட தேற்றரவாளன் (Comforter) முகமதுவா?

பதில்: இல்லை.

முதலாவது யோவான் 14, 15, 16, 10 மற்றும் அப்போஸ்தலர் 2, 8, 10 அதிகாரம் முழுதும் வாசியுங்கள்.

இஸ்லாமியர்களில் பலர் பைபிளில் இருந்து வசனங்களை எடுத்து தங்களுக்கு இஷ்டமானபடி திரிக்கிறார்கள். அவர்களை நம்பாதிருங்கள். இங்கும் அங்குமாக சில வசனங்களை எடுத்து தங்களுடைய முகமதுவை எப்படியாவது காப்பாற்றும்படி அப்படி செய்கிறார்கள். ஆனால் இங்கே அவர்களுடைய முயற்சியானது முழுதும் தோல்வியில் முடிகிறது.

சத்திய ஆவியானவர்(Spirit of truth), தேற்றறரவாளன் (Comforter) என்று இயேசு "பரிசுத்த ஆவியானவரைத்தான்" சொன்னார். நிச்சயமாக முகமதுவை அல்ல. எப்படி நமக்கு தெரியும்?

[1] யோவான் 14:16 "நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய (Spirit of truth) வேறொரு தேற்றரவாளனை (Comforter) அவர் உங்களுக்குத் தந்தருளுவார்."

முகமது என்னென்றைக்கும் உங்களுடனே இல்லை. அவர் கி.பி. 632ல் இறந்தார். அவருடைய கல்லறை இன்றும் மெதினாவில் உள்ளது. எனவே இயேசு சொன்னவர் முகமது இல்லை.

[2] யோவான் 14:17. "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், (dwells with you, and shall be in you) நீங்கள் அவரை அறிவீர்கள்."

முகமது உங்களுடன் இல்லை, நிச்சயமாக உங்களுக்கு உள்ளே இல்லை. அப்படி இருக்க அவர் மேலே சொன்னதுபோல் ஒரு ஆவியாக இருக்கவேண்டும். (நீங்கள் ஒருவேளை நமது மனதில் இருக்கிறார் என்று விவாதித்தால், எல்லா குடும்பங்களிலும் இறந்துபோன அம்மா அப்பா என்பவர்கள் தங்கள் மனதில் இருக்கிறார்களே என்ற விவாதத்திற்கு முன் இந்த விவாதம் சிறுபிள்ளைத்தனமாகிவிடும்).

மேலும் "உங்களுடனே வாசம்பண்ணி" என்பதை இயேசு தம்முடைய சீஷர்களுடன் சொல்கிறார். முகமது அந்த சீஷர்களுடன் வாசம்பண்ணவில்லை.

"சத்திய ஆவியானவர்" : முகமது சரீரத்துடன் இருந்தார், ஆவி அல்ல.

II தீமோத்தேயு 1:14 "உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்."

எனவே பரிசுத்த ஆவியானவரே (Holy Spirit) நமக்குள் வாசம்பண்ணுகிறார்.

[3] யோவான் 14:26 "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய (Holy Spirit) தேற்றரவாளனே (Comforter) எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன 'எல்லாவற்றையும்' உங்களுக்கு நினைப்பூட்டுவார்."

- பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இதற்குமேல் ஒரு விளக்கமும் தேவையில்லை. இங்கேயே அவர்கள் வாதம் ஒன்றுமில்லாமல் போகிறது. முகமது பரிசுத்த ஆவி அல்ல.

- நான் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். பிரமாதம்!
இயேசு சொன்ன "உங்கள் சத்துருக்களை நேசியுங்கள்" எப்படி இருக்கிறது !!
முகமது சொன்ன "உங்கள் நம்பிக்கையில்லாதவரை கொல்லுங்கள்" எப்படி இருக்கிறது?
இயேசு சொன்ன எல்லாவற்றையும் முகமது எங்கே நினைப்பூட்டினார்?
முகமது ஏன் இயேசு சொன்னதை சொல்லவில்லை, அல்லது "சொன்ன எல்லாவற்றையும்" ஏன் சொல்லவில்லை? முகமது இயேசு சொன்னதற்கு முரண்பாடாக சொல்கிறார்.

[4] யோவான் 16:14,15. "அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்."

இயேசு சொன்னதிலிருந்து முகமது அறிவிக்கவில்லை. இயேசு நான் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பேன் என்றார், அப்படியே அவர் செய்தார். இதை முகமதுவால் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தது; அப்படி ஏற்றுக்கொண்டால் தனக்கு ஒரு மதிப்பும் இல்லாமல் போய்விடுமே என்பதால் அதை சொல்லவில்லையா? ஏன் இவர் இயேசு சொன்ன எல்லாவற்றையும் சொல்லவில்லை? அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லும்போது "கிறிஸ்து உயிரோடு எழும்பாவிட்டால் எங்களுடைய பிரசங்கம் வீணாயிருக்கும்" என்கிறார். முகமது இயேசுவை மகிமைப்படுத்தவில்லை. முகமது சுமார் 550 வருடம் கழித்து வந்து இதை மறுக்கிறார். ரொம்பவே காலம் கடந்துவிட்டது.


[5] யோவான் 15:26 "பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்."

இங்கே அந்த தேற்றரவாளனை அனுப்புவதே இயேசு என்று வாசிக்கிறோம்.  இஸ்லாமியர்கள்  இதற்குமேலும் ஒற்றைக்காலில் நின்றால், நாம் இப்படியாக வாதிடமுடியும்: குரானில் முகமதுவை அனுப்பியது அல்லாஹ், பைபிளில் தேற்றரவாளனை அனுப்பியது இயேசு. எனவே தேற்றரவாளன் என்பவர் முகமது என்றால், இயேசுதான் அல்லாஹ் என்றாகிவிடும், அப்படியானல் இஸ்லாமியர்களின் அனைவரும் இயேசுவை வணங்கவேண்டும். எப்படித்தான் இவ்வாறு இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இருக்கிறார்களோ, தெரியவில்லை.

 இயேசு கிறிஸ்தவர்களுக்குமட்டும் தேவன் அல்ல, அவர் சொல்கிறார்: நான் மாம்சமாகிய அனைவருக்கும் தேவனாகிய கர்த்தர். எனவே எல்லா இஸ்லாமியர்களும் இயேசுவை வணங்கவேண்டும்.


யார் இந்த சத்திய ஆவியானவர், எப்போது வழிநடத்த வந்தார்?

அப்போஸ்தலர் 2:1-4
"பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்."
இது இயேசு உயிர்த்தெழுந்து 50-வது நாள் ஆகும். இயேசுவானவர் உயிர்த்தெழுந்தபின்பு 40 நாள் பூமியில் இருந்தார். வானத்துக்கு அவர் அப்படியே எடுத்துக்கொண்டபின்பு 10 நாள் கழித்து இந்த பரிசுத்த ஆவியானவர் (Holy Spirit) காத்திருந்தவர்கள் மேல் வந்தார். இது முகமது வருவதற்கு 500-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பே ஆகும். முகமது பிறந்தது கி.பி. 570/571.


அப்போஸ்தலர் 8:29. ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;

அப்போஸ்தலர் 10:19,20 பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள். நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.
அப்போஸ்தலர் 10:44, 45 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும் தேவனைப் புகழுகிறதையும்...

மேலே "ஆவியானவர்" என்பவர் இயேசு சொன்ன "சத்திய ஆவியானவர்." அப் 10:45ல் அவர்கள் தேவனை புகழுவதையும் அதாவது தேவனை மகிமைப்படுத்துவதையும் இயேசு [4]ல் சொன்னதுபோல் காண்கிறோம்.
அப்போஸ்தலர்களின் நிருபம் என்பது பேதுரு, பிலிப்பு, பவுல் என்பவர்கள் வாழ்ந்த காலம். இது முகமதுக்கு சம்பந்தமே இல்லாத காலம். ஏனெனில் 500 வருடங்கள் கழித்துதான் முகமது வருகிறார். (கி.பி. 570/571)

இயேசு சொன்னார்:
"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (யோவான் 14:6)
"நானும் ஒரு வழி" என்று சொல்லாமல், "நானே வழி" என்று சொல்வதைக் கவனியுங்கள்.

"நானே ஆடுகளுக்கு வாசல். வாசல்வழியாய் பிரவேசியாமல் (என் வழியில் இல்லாமல்), வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்." (யோவான் 10:1,9)
இயேசு வாழ்ந்த காலத்திலிருந்து 600 வருடங்கள் கழித்து ஒருவர் இதை புரட்டுகிறார் என்றால், மேலே இயேசு சொன்னது போல் அவர் யார்? அவர் கள்ளனும், கொள்ளைக்காரனுமாயிருக்கிறார்.
முகமது தீர்க்கதரிசி அல்ல. எனவே அவர்களின் குரான் என்பது தவறானது.

இஸ்லாமியர்கள் முகமதுவை காப்பாற்ற இப்படி யோவானுக்கு தாவி பரிசுத்த வேதாகமத்தை புரட்டுவது தவறு. அவர்களுடைய முயற்சி முழுதும் தோல்வியாகிறது.


சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் என்பவர் "பரிசுத்த ஆவியானவர்" ஆவார். 


காணொளிகள்: https://islam-qanda.blogspot.com/



--------- In English -----------

Question #59:
About John 14:16 which talks about the comforter; Muslims debate that it is Muhammad?

Answer: NO, it is not Muhammad.

To begin with, You MUST read the following chapters John 14, 16, 10 and Acts 2, 8, 10.

Muslims will pick and interpret the scriptures according to their needs. Do not believe them. They pick one verse from here one verse from there just to save their Muhammad. But that attempt utterly fails as we uncover it in this article.

When Jesus mentioned about the "Spirit of truth" , "Comforter" he was talking about the "Holy Spirit". Definitely not about Muhammad. How do we know?

[1] John 14:16 "And I will pray the Father, and he shall give you another Comforter, that he may abide with you for ever;"

Muhammad is "NOT with you for ever". He is dead. He died in the year A.D.632 . Muhammad's tomb is still there in Medina. There fore Jesus did not talk about Muhammad.

[2] John 14:17 "Even the Spirit of truth; whom the world cannot receive, because it seeth him not, neither knoweth him: but ye know him; for he dwelleth with you, and shall be in you".

Muhammad does not dwell with you, he is definitely NOT inside of you. For that as mentioned above he needs to be a spirit. (If you argue that He dwells in your mind and memory, then every family will say that their mom and dad who passed away are in their memory as well, so that argument is very silly to consider.)

When Jesus said, "Dwells with you" he was talking with the disciples. Muhammad did not dwell with the disciples of Jesus. His arrival was 500 years later, which is too late.

"Spirit of truth": Muhammad had a body, not a spirit. (Remember God is Spirit.)

In II Timothy 1:14 we read: "That good thing which was committed unto thee keep by the Holy Ghost which dwelleth in us."

Therefore Holy Spirit is the one that dwells in us.

[3] John 14:26 "But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said unto you"


- It is explicitly and clearly mentioned that the Comforter is the "Holy Ghost". There is no need to explain any further. The Muslim's debate comes to a dead end here. Muhammad is NOT the "Holy Spirit"

- "He will teach you all things, whatsoever I have said unto you". Amazing!
Jesus said, "Love your enemies". How great this is !!
Muhammad said, "Kill the unbelievers". How silly is this?
Why Muhammad did not say what Jesus said above and "whatsoever" Jesus said? So the comforter is not Muhammad. Muhammad contradicts what Jesus said.

[4] John 16:14, 15 "He shall glorify me: for he shall receive of mine, and shall shew it unto you. All things that the Father hath are mine: therefore said I, that he shall take of mine, and shall shew it unto you"

Muhammad did not take from what Jesus said and proclaim. Jesus said I will rise again bodily, and he did. Muhammad denies it because it is too hard for him to believe, and if he did, there is no value for him anymore.
Jesus was greatly glorified in resurrection. With out the resurrection of Christ there is nothing to preach says apostle Paul. Muhammad did not glorify Jesus. He came 500 years later after all these events took place. Too late.

[5] John 15:26 

But when the Comforter is come, whom I will send unto you from the Father, even the Spirit of truth, which proceedeth from the Father, he shall testify of me:

Here we read that it is Jesus who sends the comforter. Even after this argument if they get stubborn, we can argue in the following way: In Quran, Mohammad was sent by Allah, In the Bible, Comforter was sent by Jesus. If they claim Comforter is Mohammad, then we by logic we see that Jesus is Allah. So all Muslims must worship Jesus. I don't understand how gullible are Muslims.

Jesus is not the God just for Christians. He says "I am the God of all flesh". Therefore all Muslims must worship Jesus.



Who is this "Spirit of Truth", when did He come to guide?

Acts 2:1-4
"And when the day of Pentecost was fully come, they were all with one accord in one place. And suddenly there came a sound from heaven as of a rushing mighty wind, and it filled all the house where they were sitting. And there appeared unto them cloven tongues like as of fire, and it sat upon each of them. And they were all filled with the Holy Ghost, and began to speak with other tongues, as the Spirit gave them utterance."

This is 50 days since resurrection of Jesus. Jesus lived on this earth for 40 days after resurrection, then he was taken up. 10 days later the Holy Spirit came upon them that waited on the upper room. Muhammad was born only in A.D. 570/571. Too late.

Acts 8:29 Then the Spirit said unto Philip, Go near, and join thyself to this chariot
Acts 10:19,20 While Peter thought on the vision, the Spirit said unto him, Behold, three men seek thee.
Arise therefore, and get thee down, and go with them, doubting nothing: for I have sent them.
Acts 10:44-46 While Peter yet spake these words, the Holy Ghost fell on all of them which heard the word...For they heard them speak with tongues, and magnify God.

Here the Spirit is the one that Jesus said as Comforter and the Spirit of Truth. Notice in Acts 10:46 people magnify God i.e. glorify God as mentioned by Jesus in [4]

Books of Acts is the time Peter, Philip, Paul lived. This is nothing to do with Muhammad period. Because Muhammad came 500 years later.

Jesus said in John 14:6
"I am the way, truth and life. with out me no one can come to the father".
-Notice that Jesus did NOT say I am "a" way. Instead He said I am "the way".

Jesus said in John 10:1,9
"Verily, verily, I say unto you, He that entereth not by the door into the sheepfold, but climbeth up some other way, the same is a thief and a robber"
" I am the door: by me if any man enter in, he shall be saved, and shall go in and out, and find pasture."

After 600 years of have gone from the time of Jesus, a man called Muhammad comes and flips and twists the truth that is already established. So in which "way" does Muhammad takes the people according to Jesus? the "other way" which only a thief and robber enter.

Muslims are trying to save their Muhammad by quoting verse here and there, but their attempt has now utterly failed. Muslims are corrupting the truth, and it is wrong.
The Spirit of truth, the Comforter is the "Holy Spirit".

Tuesday, October 12, 2010

58. இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம், புத்த... மத தெய்வங்கள் எல்லாம் ஒன்றா?

பதில்: இல்லை.

அநேகர் எல்லா கடவுளும் ஒன்றுதான், ஒரே கடவுளைத்தான் எல்லாரும் வணங்குகிறார்கள்,
"All roads lead to Rome" என்று சொல்கின்றனர். இது தவறு.
"All roads lead to Rome?" என்ற வழக்கச் சொல்லை நாம் இங்கே கொண்டுவருவது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பதுபோல் ஆகும். ஆஸ்திரேலியாவில் எந்த சாலையில் போனாலும் ரோம்-க்கு போகமுடியாது. இலங்கையில் எந்த வழியில் போனாலும் ரோம்-க்கு போகமுடியாது. உலகில் எத்தனை சாலைகள் கடலில் போய் முடிகின்றன? எத்தனை சாலைகள் மலை உச்சியில் போய் முடிகின்றன? எத்தனை சாலைகளில் குழிகளும், பள்ளங்களும்? எத்தனை சாலைகள் மூடப்பட்டுள்ளன?

எல்லா கடவுளும் ஒரே கடவுள் அல்ல; ஒவ்வொரு கடவுளுக்கும் வேறுபட்ட குணங்கள், அந்த கடவுள்கள் சொல்லும் வேறுபட்ட கட்டளைகள்/
அறிவுரைகள் என உள்ளன. ஒரு அலுவகத்தில் காணப்படும் ஒவ்வொரு மேலாளர்களின் குணங்கள் மாறுபடுகிறதே. கடவுள்கள் சொல்லும் கட்டளைகள் மாறுபடும்போது அவை எல்லாம் எப்படி ஒரே கடவுள் என்று சொல்லமுடியும்?

எல்லா மதங்களும் நல்லதைத்தானே போதிக்கின்றன? என்று சொல்பவர்கள் அனைவரும் மதங்களில் காணப்படும் பொதுவான நீதி கட்டளைகளைத்தான் (Moral Law) ஒப்பிடுகின்றனர். ஆழமான போதனைகளை மறந்துவிடுகின்றனர். குறிப்பாக:

[அ] உலகம் எப்படி உண்டாயிற்று? (origin of the world, universe)
[ஆ] மனிதன் பூமியில் எப்படி தோன்றினான்? (origin of Human kind)
[இ] பாவ சுபாவங்கள், பாவத்தினின்று விடுதலை பெறுவது எப்படி? (Salvation)
[ஈ] மனிதன் மரித்தபின் எங்கே போகிறான்? (Life after death)
இதுபோன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு மதமும் ஒரு பதில் தருகின்றது.

இந்துமதத்தில் 33 கோடி தேவர்கள் உண்டு. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சக்தியும், குணமும் உண்டு என்று அறிகிறோம்; அழிக்க, காக்க, உண்டாக்க (இம்மூன்றும் திரித்துவம்), செல்வத்துக்கு, அறிவுக்கு, நீதிக்கு....சூரியன், நாகம் என கணக்கில் அடங்கா கடவுள்கள். சிலை வணக்கம் கூடாது என்று பைபிளில் தெளிவாக உள்ளது. சிலையின்றி இந்து மதத்தில் எப்படி? பலிகேட்கும் கடவுள்களும் அவைகளில் அடங்கும். இந்துக்களின் கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்ற நம்பிக்கையும், மறுபிறவி அல்லது மறுஜென்மம், கர்மா போன்ற கொள்கையும் மற்ற சமயங்களில் இல்லை.[1]


இஸ்லாமிய சமயத்தில் கடவுள் ஒருவரே என்றும் நபி முகமதுவை பின்பற்றவேண்டும் என்று சொல்கின்றனர். இயேசுவை [குமாரனாகிய] தேவன் என்று சொல்வதில்லை; அவரை ஒரு தீர்க்கதரிசி என்றுதான் சொல்கின்றனர். ஆனால் இயேசு ஒரு கன்னிகையிடத்தில் பிறந்தார், மரித்தோரை உயிர்ப்பித்தார் என்று அவர்கள் வேதத்தில் இருந்தாலும் அவர் சிலுவையில் அறையப்படவில்லை என்றும், அவர் தேவன் அல்ல என்றும் சொல்கின்றனர்.
மொசாப் ஹசான் யூசுஃப் (Mosab Hassan Yousef) என்பவர் சொல்லும்போது, "தங்களது இஸ்லாமிய நம்பிக்கையைச் சார்ந்தவர்கள் அல்லாதவர்களை கொல்லுங்கள் என்று அவர்களின் வேதத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. முகமது என்ற ஒழுங்கு நெறியற்ற ஒருவரை, பலரை கொலை செய்தவரை தங்களுக்கு முன்மாதிரியாக வைத்துக்கொண்டுள்ளனர்" என்று சொல்கிறார்" [2].



மேலும், இவர்: "இஸ்லாமியர்கள் எனக்கு விரோதிகள் அல்ல, அவர்களுடைய நபியும், அவர்களின் இரட்டை வேடம் உடைய கடவுளும்தான்" என்கிறார்.
கிறிஸ்தவ சமயத்தில் தேவன் ஒருவரே, அவர் திரித்துவ தேவன் (Trinity) என்று கூறப்படுகின்றது; மேலும் குமாரனாகிய தேவன் பூமியில் மனிதனாக வந்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார், மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்றும் சொல்கிறது. மேலும் கொலை செய்யாதிருப்பாயாக, உங்கள் சத்துருக்களை நேசியுங்கள், தேவன் அன்பாயிருக்கிறார் (God is Love) என்று பைபிளில் இருக்கின்றது; இயேசு பாவத்தை வெறுக்கிறார்; பாவிகளையோ சிநேகிக்கிறார்; "நீ உன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல பிறனிடத்தில் அன்புகூருவாயாக" என்று இயேசு சொல்லியிருக்கிறார். பிறர் எனப்படுபவர்கள் யாராக இருந்தாலும் சரி. விதிவிலக்கு ஏதும் இல்லை.[3]



புத்தமதத்தில் உயிர்களை கொல்லாதே என்று சொல்லப்பட்டாலும், கடவுள் இல்லை என்ற அடிப்படையை உடைய மதமாகும். புத்த மதத்தின் வேதத்தில்: சிருஷ்டிகர் (C
reator) என்று ஒருவர் இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உலகம் உண்டாக்கப்பட்டது, அதின் ஜீவராசிகள் எல்லாம் உண்டாக்கப்பட்டன என்பது எல்லாம் குப்பை என்கிறது[4]. புத்தர் இந்து மதத்தை ஏற்கமறுத்தவர்; இந்துக்களின் வேதங்களை தள்ளிவிட்டவர்; மோசேயினால் பெறப்பட்டவகைளை ஒதுக்கி தள்ளியவர். என்றால் எப்படி எல்லா கடவுளும் ஒரே கடவுளாக முடியும்?



இப்படியிருக்க எல்லாரும் ஒரே தேவனை வணங்குகிறோம் என்று எப்படி சொல்லமுடியும்? எல்லாரும் ஒரே கடவுளை வணங்குகிறோம் என்று சொல்பவர்களுடைய வேதங்களை கொண்டுவந்து ஆதாரம் காட்டசொல்லுங்கள்.

கேள்வி பதில் 49ல் http://tamilbibleqanda.blogspot.com/2010/07/49.html நம்முடைய தேவன் ஒருவரே தேவன்; வேறு ஒருவர் இல்லை என்று பல வசனங்கள் ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும்:
- நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு சொன்னார். மேலும் என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றார். இதில் வேறு வழியில்லை என்றாகிறது அல்லவா?
- நம்முடைய பாவங்களுக்காக இரத்தம் சிந்தியவர் இயேசு ஒருவரே. (இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை) சிலுவையில் மரித்து உயிருடன் எழும்பி பின்பு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் ஒருவரே.
- அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லும்போது: "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை."
- யோவான் சொல்லும்போது: "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் [நித்திய] ஜீவன் இல்லாதவன்."

ஒரே கடவுளை வணங்குகிறோம் என்று சொல்பவர்களின் சில கொள்கைகள் அல்ல அனைத்து கொள்கைகளும் ஒன்றாகவே இருக்கவேண்டும். கொள்கைகள் மாறுபட்டால், பாதை மாறுபடும்; பாதைமாறினால் செல்லும் இடம் மாறும். எங்கே செல்கிறோம் என்பது எவ்வளவு முக்கியம்!



-----------In English---------

Question #58: Is the God of Hindus, Christians, Muslims, Buddhists .... the same?

Answer: NO

Many say that All gods are the same, we all are worshiping the same god. All roads lead to Rome. This is wrong.

It is illogical to bring the saying "All roads lead to Rome" in this context. For example we all know for sure that no one can go to Rome, no matter on which road a man takes from Australia and Sri-Lanka. How many roads end in the peak of a mountain? How many roads end up in the Ocean? How many roads are closed? So many roads are with potholes and ditches.

Nay, not all gods are the same. Each god has its own characteristics. Instruct different moral teachings, commandments, which exclude each other.We see that the directors and managers in a small office itself vary by character. If that is the case, when god's characters and teaching are different, how could then one say they all are the same god?

Many say, " Aren't all religions teach good things?". Well, such people compare only the common Moral Law found all the religions. But they completely forget about the deep doctrines, beliefs and teachings such as:
[a] The origin of the world, universe
[b] The origin of mankind on earth
[c] How to get delivered from the nature of sin and sin? [Salvation]
[d] Life after death
Each religion gives different views, for such questions.

In Hinduism there are 330 million gods. Each god has a unique power and character. There are innumerable gods like To create, To protect, To destroy (these three are trinity), for wealth, for wisdom, for judgment..... Sun, Snake and so on. In the Holy Bible such Idol worship is prohibited. Could you imagine Hinduism without Idols and statues? Some of their gods ask animal sacrifice. The belief that Hindus have is "by dipping themselves in the holy river Ganges, their sin's will be washed away". Their beliefs such as Karma, incarnations in to next birth, is not present in other religions. [1]

In Islam they say "there is one god, and all must follow Muhammad". They deny Jesus as God [the Son]. They call him as prophet. Though they say that Jesus was born of a virgin, he raised the dead, they say that he was not crucified, and he is not god. when Mosab Hassan Yousef says "In the Koran many places it is mentioned to kill all the unbelievers or infidels that do not believe in their god. Moreover their highest example or model is a man who committed many murders and indecent fellow"[2]. (Watch first video). "Muslims are not my enemies, their messenger and their god that has dual personality"

In Christianity we know that "God is one, in three persons (Trinity)". Also God [the Son] came to earth in the form a man and gave his life for us, to save us from our sins and rose up on the third day. Bible teaches that "Thou shalt not kill. Love your enemies. God is Love". Jesus loves the sinners but not the sin. "Love your neighbor as you love yourself" said Jesus. It does not matter who those "neighbors" are, no exception. [3] (Watch second video)

In Buddhism though it talks about do not kill, it is a religion that has no god as its basis. It is clearly mentioned in the Buddhist text that there is not such one as Creator. (Watch third video) It is a junk and rubbish to say that all living things were created, and all that we see are not created[4]. Buddha was a man who rejected the Vedas of Hindus, rejected the commandments obtained by Moses. If so how can all gods be the same god? How then we say that we all worship to the same God. If any one argues that we all worship the same God, first ask them to bring their religion' books to provide such evidence.

In the Q&A #49 many verses have been given to show that "Our God is the only God, there is no other God than Him".

Moreover Jesus said that
- "I am the way truth and life, No one can come to the father but by me". Doesn't is say that there is no other way other than Jesus himself?
- It is only Jesus who shed his blood for us, for our sins. (There is no redemption of sin without shedding of blood).
- It is only Jesus who rose from the dead on the third day and was taken up to the heaven.
- Apostle Paul says that, " Neither is there salvation in any other: for there is none other name under heaven given among men, whereby we must be saved."
- John says, " He that hath Son has [eternal] life, he that does not have Son of God, does not have life"

For those who say that they worship the same god, their doctrines and teachings should be the same. Not few doctrines and teachings. All doctrines and teachings should be the same. If the teachings differ then the way in which we go (or follow) will be different. If the path is different, the destination is different. How important it is find out if we are in the correct path!



References:
[1] http://www.religionfacts.com/hinduism/beliefs.htm[2] From the book "Son Of Hamas" and http://www.sonofhamas.com
[3] sermon on the mount, Book of Matthew: chapter 5 and Clip from passion of Christ.
[4] http://en.wikipedia.org/wiki/God_in_Buddhism

Monday, October 4, 2010

57. புதிய ஏற்பாடு சபைக்கு தசமபாகம் கட்டளையாக கொடுக்கப்பட்டதா?

பதில்: ஆம் ! தசமபாகம் (tithe) செலுத்தவேண்டும்.

முன்னோட்டமாக:
தசமபாகம் என்றால் பத்தில் ஒரு பங்கு. தசம் என்றால் பத்து. (ஹிந்தியில் தஸ் என்றாலும் பத்து). கணிதத்தில் வரும் எண்களிலும் புள்ளி வரும் இடத்தை "தசம ஸ்தானம்" என்பர். தேவன் நமக்கு கொடுப்பதில் பத்தில் ஒரு பங்கை தேவனுக்கு திரும்ப செலுத்தவேண்டும். புதிய ஏற்பாட்டில் தசமபாகத்தைக் குறித்து பற்றி பார்ப்போம்.

[A] தசமபாகம்:

 [1] லூக்கா 11:42ல் இயேசு சொல்லும்போது: "பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே".

இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும் என்பதில் தசமாகம் என்ற கட்டளையை விடாதிருக்க வேண்டும் என்பதை தெளிவாகக் காணலாம். கட்டளை என்றால் கைக்கொள்ளவேண்டும் அல்லவா?


[2] இயேசு சொன்னார்: லூக்கா 18:10-12 "இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்."

மேலே சொல்லப்பட்டதில் இவர்கள் ஜெபித்தது புதிய ஏற்பாட்டு காலத்தில்தான். அங்கே தசமபாகம் செலுத்தும் பழக்கம் இருந்தது என்பது மறுக்கப்படமுடியாதது.

[3] அப்போஸ்தலனாகிய பவுல் மெல்கிசெதேக் பற்றி எபிரெயர் 7ல் சொல்லும்போது. ஆபிரகாம் இவனுக்கு "எல்லாவற்றிலும்" தசமபாகம் செலுத்தினான் என்று சொல்லுகிறான். நாம் நன்கு அறிவோம் பவுல் புதிய ஏற்பாட்டுகாலத்தை (கிறிஸ்து பிறந்த பின்பு வரும் காலத்தைச்) சேர்ந்தவர். பவுலின் காலத்திலும் தசம
பாகம் என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரிந்ததால் அதைக்குறித்து அவர் தைரியமாக எழுதுகிறார். இது பவுலுடைய காலத்தில் தசமபாகம் கொடுக்கும் பழக்கம் இருந்ததை உறுதிசெய்கிறது.


மல்கியா 3:8-10ல் "மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்".

தேவனையே சோதித்துப் பாருங்கள் என்று இந்த ஒரே ஒரு விஷயத்தில்தான் பைபிளில் உள்ளது. எனவே தசமபாகம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும் அப்படி நீங்கள் கொடுக்காவிட்டால், வீண்செலவுகள் மருத்துவர் செலவு, வாகனச் செலவு ... என்று வரும். ஏனெனில் நீங்கள் தேவனுடைய பணத்தை திருடிய குற்றவாளிகள் ஆகிறீர்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட விளக்கம். மேலும் உங்கள் வாழ்வில் ஆசீர்வாதம் இல்லாமல் காணப்படும்.


[B] காணிக்கை
தசமபாகம் வேறு, காணிக்கை வேறு. தசமபாகம் மட்டுமன்றி, நாம் உற்சாகமாக தேவனுக்கு காணிக்கை (Offering) செலுத்தவேண்டும். ஏழைகளுக்கு உதவுவது என்பதும் இதை உள்ளடக்கும்.

பைபிளில் ஒரு ஏழை விதவை 2 காசு போட்டதை இயேசு பெரிதாகச் சொன்னார் என்றால், அது எந்த அளவு தேவனின் இதயத்தை தொட்ட செயலாக இருக்கவேண்டும்! (இங்கே 2 காசு என்பது அவள் ஏழை என்று காட்டுகிறது; ஆனால் அவள் தான் வாழ்வதற்கு இருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்பதுதான் தேவனின் இதயத்தை தொட்ட செயல்). "அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" என்று II கொரி 9:7ல் வாசிக்கிறோம். இது கட்டளையல்ல.

லூக்கா 6:38ல் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார். இது காணிக்கை பற்றிய வசனம்.

சிந்தனைக்கு:
1998 ம் வருடம் ஒரு போதகர் திடீரென்று என் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை மாலையில் வந்தார். சற்றுநேரம் பேசிவிட்டு நான் அவரை வழியனுப்பிவைக்கும் போது என்னிடம் இருந்த 20 டாலரை காணிக்கையாக அவரிடம் கொடுத்து அனுப்பினேன். அச்சமயம் அவ்வளவுதான் என்னுடைய பணப்பையில்(Wallet) இருந்தது. அதை கொடுத்துவிட்டேன். என்னிடம் இருந்ததை கொடுத்துவிட்டதால் என்னிடம் அப்போது வேறு பணம் ஏதும் இல்லை. அவர் சென்றபின் சாப்பிட என்னசெய்வது...என்று யோசித்தேன். என்னிடத்தில் வாகனம் இல்லாத காலம் அது. வங்கிக்குப் போகவேண்டுமென்றால் சற்றே தூரம். சரி அருகிலுள்ள கடைக்கு சற்றே நடந்து போய்வரலாம் என்று சொல்லி "Lucky's" (தற்போது அதன் பெயர் Albertsons) என்ற ஒரு கடைக்கு உள்ளே சென்றேன். அங்கே மிகவும் வயதான ஒரு மூதாட்டி என்னிடம் வந்து, "Here.., this is for you" என்று சொல்லி கையில் ஏதோ கொடுத்துவிட்டு சென்றார்கள். கையை திறந்துபார்த்தேன் 20 டாலர். ஏறெடுத்து அவர்களைத் தேடியபோது அந்த மூதாட்டி எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. மனதில் ஒருவித ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியும், அதே சமயம் தேவன் மிகவும் உண்மையுள்ளவராக இருக்கிறாரே என்பது நெஞ்சைத் தொட்டதால் உள்ளே அழுகை கலந்த உணர்வும்.

"கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்" என்பதற்கு இது ஒரு சிறிய சாட்சி. நிச்சயமாக உங்களுக்கும் அப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

Friday, October 1, 2010

56. ஆரியர்கள் யார்? பைபிளில் உண்டா?

யோபு 4:10-ல் சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோம். (The roaring of the lion, and the voice of the fierce lion, and the teeth of the young lions, are broken) என்று வாசிக்கிறோம். சிங்கத்துக்கு எபிரேய மொழியில் பல வார்த்தைகள் உள்ளன. அதில் ஒரு வார்த்தை "ஆரிய" (ariy) என்பது ஆகும்.

of the lion, ארי 'ariy
of the fierce lion, שחל shachal
of the young lions, כפיר kĕphiyr

ஆரிய என்பதற்கு: மான்புமிகு, உயர்ந்த என்ற பதத்தில் ரிக் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது.

ஆரியர்கள் என்பவர்கள் பெர்சியா (ஈரான்) நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆரிய மொழி என்பது இந்திய-பெர்சிய (Indo-Iranian) மொழியாகும். இம்மொழியானது சமஸ்கிருதம் என்று பெரிதும் சொல்லப்படுகின்றது (http://en.wikipedia.org/wiki/Sanskrit). இதைப்பற்றி பெர்சிய நாட்டின் வரலாறு மற்றும் இலக்கியங்களில் விரிவாக படிக்கலாம். விவரங்களுக்கு பெர்சியாவின் நூல்களஞ்சியங்களுக்கு செல்லவும். ஆரிய என்பதே ஈரான்
என பின்பு திரிந்தது (ariya became iran) . பாரசீக மன்னன் "தரியு" தான் ஒரு ஆரிய வம்சத்தில் வந்தவன் என கல்வெட்டு ஏற்றினார். அகாஸ்வேரு என்னும் அரசனும் ஆரியன் ஆவான். பைபிளில் இந்த பாரசீகர்களைப் பற்றி தானியேல் புத்தகத்தில் வாசிக்கலாம். எனவே ஆரியர்கள் யார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

சில பெர்சிய மன்னர்களைப் பற்றி வேதாகமத்தில்:
[1] நெபுக்காத் நேச்சார் (கி.மு 605– 562)
பைபிளில் II இராஜாக்கள் 24, 25 II நாளாகமம் 36 எஸ்றா 1-6, நெகேமியா 7, எரேமியா 21-52 மற்றும் தானியேல் முழுதும். இந்த பெர்சிய அரசனைப் பற்றி பைபிளில் அநேக இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவன் எப்படி இஸ்ரவேல் ஜனங்களை (யூதர்களை) அடிமையாக்கி பாபிலோனுக்கு கொண்டுசென்றான் என வாசிக்கிறோம். அவன் எப்படி ஒரு சிலை செய்து எல்லாரும் அதை வணங்கவேண்டும் என்று கட்டளையிட்டான் என்றும், சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோ என்பவர்கள் அதை வணங்கமறுத்து நெருப்பில் போடப்பட்டும் சாகாமல் போனதால் அவன் இஸ்ரவேலின் தேவனை வணங்கினான் என்றும் வாசிக்கிறோம். மேலும் தானியேலை நெபுக்காத்நேச்சார் எப்படி உயர்வாக மதித்தான் என்றும் வாசிக்கிறோம்.

[2] கோரேஸ் [Cyrus] ( கி.மு. 559-530)
II நாளாகமம் 36 எஸ்றா 1-5, தானியேல் 10ல் படிக்கலாம்.

[3] தரியு I, II, III [Darius] (கி.மு.
336 to 330)
எஸ்றா 4-6, தானியேல் 5-11ல் படிக்கலாம்.தரியுவை மாமன்னர் அலெக்ஸான்டர் வென்றான் (கி.மு. 356–323 Alexander the great) .

 இந்தியாவைப்பற்றி "இந்து" தேசம் ( הֹדּוּ Hoduw -  என எபிரெய மொழியில்)  என்று பைபிளில் ஒரு இடத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸிந்து தேசம் என்பது, இந்து தேசமானது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்தியாவானது பெர்சிய (பாரசீக) மன்னர்களின் ஆட்சியில் (Persia, Currently known as Iran) இருந்தது. இதை எஸ்தர் 1:1ல் (கி.மு. 486-465) இப்படியாக வாசிக்கிறோம்: "இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது". The king of Persia Xerxes (Ahasuerus) ruled 127 Nations from India to Ethiopia"https://www.wordproject.org/bibles/audio/20_farsi/b17.htm    இங்கே ஒலிவடிவில் பெர்சிய பைபிளில் ஹிந்த் என்று சொல்லப்பட்டுள்ளது.  எனவே அப்போது இந்து என்பது மதமல்ல. பின்பு அது மதத்தின் பெயராக மாறியது.

அப்போதைய இந்தியா (என்பது பல நாடுகளை உள்ளடக்கியதாகும். அதில் பாகிஸ்தான், இலங்கை, பங்ளாதேஷ், பர்மா, அந்தமான் தீவுகள் என்பவைகளும் அடங்கும் என்பதை பின்பு வந்த பிரிட்டிஷ் நாட்டவர் ஆளுகையின் வரலாற்றில் படித்தால் தெளிவாக காணலாம். எனவேதான் "All India" என்ற பதத்தையும் இந்திய அரசியல் சாசனத்தில் (Indian constitution) காணமுடிகிறது. "All India Radio" என்ற உபயோகமும் இதற்கு ஒரு சான்று.

குறிப்பாக இந்த ஆரியர்கள் என்பவர்கள் சிலைகளை வணங்கும் பழக்கமும், சிலைகளை கோவில்களில் வைத்து (II இராஜாக்கள் 5:17,18) ஒரு திருவிழா என்று கொண்டாடிய பழக்கமும் உடையவர்கள் (
I இராஜாக்கள் 12:32). அக்கினியில் வார்த்து பூஜைசொல்லுதல், வேள்விகள் என்ற பழக்கங்களை உடையவர்கள். ( எரேமியா 7:18)

இஸ்ரவேலர்களின் வரலாற்றிலும் சில அரசர்கள் உண்மையான தேவனை விட்டுவிட்டு மற்றவர்களுடைய பழக்கத்தைப் பார்த்து பின்பற்றியதையும் பார்க்கிறோம்.
சில ஜனங்கள் (pagan worshipers) தங்களுடைய பிள்ளைகளையே பலி கொடுத்தார்கள் என்று எசேக்கியேலில் வாசிக்கிறோம். ஒரு ராஜா தன் மகனை தீமிதிக்கப்பண்ணினான் என்றும் வாசிக்கிறோம். இதனால் இவர்கள் அடிமைகளாவும் சுற்றியுள்ள ராஜாக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் இருக்க தேவன் அவர்களை விட்டுவிட்டார். இவை அனைத்தும் மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே நடந்தவை. (4000 ம் ஆண்டுகளுக்கு முன்பு).

இன்றும் மற்ற மதங்களில் காணப்படும் சில பழக்கத்தை பார்த்து தங்கள் மதத்தில் பின்பற்றும் மக்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். உதாரணமாக பாதயாத்திரை என்று தலையில் சுமை சுமந்துசெல்லும் பழக்கம் கேரளாவில் உருவானது. பின்பு இது தமிழக இந்துக்களிடையே தொற்றிக்கொண்டது.
தற்போது இதை ரோமன் கத்தோலிக்க கூட்டத்தார் பின்பற்றி, வேளாங்கன்னிக்கு நடந்து போகிறார்கள். இந்த விநோத நிகழ்வு என்னுடைய காலகட்டத்தில் புதிதாக உருவாகியதை கண்கூடாக கண்டேன். இதை ரோமன் கத்தோலிக்கர்களிடமே விசாரித்தபோது, "அவர்கள்தான் தங்கள் தெய்வங்களுக்கு இப்படி நடக்கமுடியுமா, நாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்று காட்டவே" என தெரியவந்தது; இது ஜனங்களின் மதியீனத்தை அல்லவா காட்டுகிறது! உலகின் வேறுபகுதியில் வசிக்கும் ரோமன்கத்தோலிக்கர்கள் யாரும் இப்படியாக பாதயாத்திரை செல்வதில்லை. இதைப்போலவே இஸ்ரவேலரும் இந்த ஆரியர்களுடைய பழக்கங்களான நரகலான விக்கிரகங்களுக்கு பலி, வேள்வி போன்றவைகளை செலுத்தி தேவனுடைய கோபத்திற்கு ஆளாகினர். பைபிளில் வாசிப்போம்:

எசேக்கியேல் 23:39 "அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்" என்று இங்கே நம்முடைய தேவன் சொல்கிறார்.
II இராஜாக்கள் 21:6 தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.
ஓசியா 4:13 அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்;


ஆரியர்கள் வேறு, இஸ்ரவேல் ஜனங்கள் வேறு. இந்த ஆரியர்கள், தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த சில முறைகளைத் திரித்து அந்நிய தெய்வங்களுக்கு பலியிடுதல் போன்ற பழக்கங்களையும்
விநோதமாக பூஜை செய்தவர்களும் ஆவர்.
ஆனால் சிலைகளை வணங்கக்கூடாது என்று நம்முடைய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்:
ஏசாயா 44:15-19. "மனுஷனுக்கு அவைகள்(மரங்கள்) அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான். அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி; அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான். அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை."

தாவீது சொல்லும்போது: சங்கீதம் 16:4 "அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்." என்கிறார்.
அப்போது இந்தியாவில் வசித்தவர்கள் ரிக் என்னும் வேதத்தில் சொல்லியபடி "அக்கினி", "மழை", "காற்று", "சூரியன்" என இயற்கை வழிபாடுகளை உடையவர்களாகவே இருந்தனர். பலிகொடுப்பது போன்ற பழக்கங்கள் வர "யூதர்கள்" மற்றும் "ஆரியர்களின்" கலாச்சார பாதிப்பாக இருக்கவேண்டும். ஏனெனில் முதன்முதலில் பாவம் செய்தவன் பலி செலுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது பைபிளில்தான், அதுவும் தேவன் மோசேயிடம் சீனாய்மலையில் கொடுத்தார் என்று யாத்திராகமத்தில் படிக்கும்போது நாம் நன்கு அறிவோம். யூதர்கள் அந்த கட்டளை பெற்று 5770 வருடங்களாகின்றது. (யூதர்களின் வருடம் அவர்கள் எகிப்தைவிட்ட அன்று இரவுதான் ஆரம்பிக்கின்றது.)
கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான தேவனின் திரித்துவம் (தேவன் ஒருவரே, ஆனால் மூன்று ஆளத்துவங்கள் என்ற Trinity: God the father, God the Son, God the Holy Spirit) என்பது, இந்துக்களிடையேயும் காணப்படுகிறது. "ஒரு கடவுள் - மும்மூர்த்திகள்" என்று பட விளக்கத்துடன் யாரோ ஒரு கதையில் இவர்களுக்கு சொன்னதுபோல் உள்ளது என்பது ஆச்சரியமளிக்கின்றது. 


இப்படியாக சிலர் சொல்கின்றனர்:
”திரிசூலத்தில்” -மூன்று கம்பிகள் ஒன்றாய் இணைகின்றன. தேவன் மூன்று ஆளத்துவங்கள், ஆனால் தேவன் ஒருவரே.
“விபூதி பூசுவதில்” - மூன்றுகோடுகளும் (தேவன் மூன்று ஆளத்துவங்கள்) ஒரு புள்ளியும் (ஆனால் தேவன் ஒருவரே). நாமம் போடுவதிலும் அதேதான். 


இது உண்மையா என்று நிரூபிப்பதைவிட, பைபிளில் சொல்லப்பட்டவைகளில் பல விஷயங்கள் சில மாற்றங்களுடன் இந்துசமயத்தில் பழக்கத்தில் காணப்படுகின்றன என்பதே மிகவும் உண்மை. இவை எல்லாம் யூதர்களிடம் தேவன் கொடுத்தவை. இந்துக்கள் பைபிளை ஒருதடவையாவது படிக்கவேண்டும். அப்போது ஆச்சரியமான காரியங்களைக் காண்பார்கள்.