பதில்: இல்லை.
முதலாவது யோவான் 14, 15, 16, 10 மற்றும் அப்போஸ்தலர் 2, 8, 10 அதிகாரம் முழுதும் வாசியுங்கள்.
இஸ்லாமியர்களில் பலர் பைபிளில் இருந்து வசனங்களை எடுத்து தங்களுக்கு இஷ்டமானபடி திரிக்கிறார்கள். அவர்களை நம்பாதிருங்கள். இங்கும் அங்குமாக சில வசனங்களை எடுத்து தங்களுடைய முகமதுவை எப்படியாவது காப்பாற்றும்படி அப்படி செய்கிறார்கள். ஆனால் இங்கே அவர்களுடைய முயற்சியானது முழுதும் தோல்வியில் முடிகிறது.
சத்திய ஆவியானவர்(Spirit of truth), தேற்றறரவாளன் (Comforter) என்று இயேசு "பரிசுத்த ஆவியானவரைத்தான்" சொன்னார். நிச்சயமாக முகமதுவை அல்ல. எப்படி நமக்கு தெரியும்?
[1] யோவான் 14:16 "நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய (Spirit of truth) வேறொரு தேற்றரவாளனை (Comforter) அவர் உங்களுக்குத் தந்தருளுவார்."
முகமது என்னென்றைக்கும் உங்களுடனே இல்லை. அவர் கி.பி. 632ல் இறந்தார். அவருடைய கல்லறை இன்றும் மெதினாவில் உள்ளது. எனவே இயேசு சொன்னவர் முகமது இல்லை.
[2] யோவான் 14:17. "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், (dwells with you, and shall be in you) நீங்கள் அவரை அறிவீர்கள்."
முகமது உங்களுடன் இல்லை, நிச்சயமாக உங்களுக்கு உள்ளே இல்லை. அப்படி இருக்க அவர் மேலே சொன்னதுபோல் ஒரு ஆவியாக இருக்கவேண்டும். (நீங்கள் ஒருவேளை நமது மனதில் இருக்கிறார் என்று விவாதித்தால், எல்லா குடும்பங்களிலும் இறந்துபோன அம்மா அப்பா என்பவர்கள் தங்கள் மனதில் இருக்கிறார்களே என்ற விவாதத்திற்கு முன் இந்த விவாதம் சிறுபிள்ளைத்தனமாகிவிடும்).
மேலும் "உங்களுடனே வாசம்பண்ணி" என்பதை இயேசு தம்முடைய சீஷர்களுடன் சொல்கிறார். முகமது அந்த சீஷர்களுடன் வாசம்பண்ணவில்லை.
"சத்திய ஆவியானவர்" : முகமது சரீரத்துடன் இருந்தார், ஆவி அல்ல.
II தீமோத்தேயு 1:14 "உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்."
எனவே பரிசுத்த ஆவியானவரே (Holy Spirit) நமக்குள் வாசம்பண்ணுகிறார்.
[3] யோவான் 14:26 "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய (Holy Spirit) தேற்றரவாளனே (Comforter) எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன 'எல்லாவற்றையும்' உங்களுக்கு நினைப்பூட்டுவார்."
- பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இதற்குமேல் ஒரு விளக்கமும் தேவையில்லை. இங்கேயே அவர்கள் வாதம் ஒன்றுமில்லாமல் போகிறது. முகமது பரிசுத்த ஆவி அல்ல.
- நான் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். பிரமாதம்!
இயேசு சொன்ன "உங்கள் சத்துருக்களை நேசியுங்கள்" எப்படி இருக்கிறது !!
முகமது சொன்ன "உங்கள் நம்பிக்கையில்லாதவரை கொல்லுங்கள்" எப்படி இருக்கிறது?
இயேசு சொன்ன எல்லாவற்றையும் முகமது எங்கே நினைப்பூட்டினார்?
முகமது ஏன் இயேசு சொன்னதை சொல்லவில்லை, அல்லது "சொன்ன எல்லாவற்றையும்" ஏன் சொல்லவில்லை? முகமது இயேசு சொன்னதற்கு முரண்பாடாக சொல்கிறார்.
[4] யோவான் 16:14,15. "அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்."
இயேசு சொன்னதிலிருந்து முகமது அறிவிக்கவில்லை. இயேசு நான் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பேன் என்றார், அப்படியே அவர் செய்தார். இதை முகமதுவால் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தது; அப்படி ஏற்றுக்கொண்டால் தனக்கு ஒரு மதிப்பும் இல்லாமல் போய்விடுமே என்பதால் அதை சொல்லவில்லையா? ஏன் இவர் இயேசு சொன்ன எல்லாவற்றையும் சொல்லவில்லை? அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லும்போது "கிறிஸ்து உயிரோடு எழும்பாவிட்டால் எங்களுடைய பிரசங்கம் வீணாயிருக்கும்" என்கிறார். முகமது இயேசுவை மகிமைப்படுத்தவில்லை. முகமது சுமார் 550 வருடம் கழித்து வந்து இதை மறுக்கிறார். ரொம்பவே காலம் கடந்துவிட்டது.
[5] யோவான் 15:26 "பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்."
இங்கே அந்த தேற்றரவாளனை அனுப்புவதே இயேசு என்று வாசிக்கிறோம். இஸ்லாமியர்கள் இதற்குமேலும் ஒற்றைக்காலில் நின்றால், நாம் இப்படியாக வாதிடமுடியும்: குரானில் முகமதுவை அனுப்பியது அல்லாஹ், பைபிளில் தேற்றரவாளனை அனுப்பியது இயேசு. எனவே தேற்றரவாளன் என்பவர் முகமது என்றால், இயேசுதான் அல்லாஹ் என்றாகிவிடும், அப்படியானல் இஸ்லாமியர்களின் அனைவரும் இயேசுவை வணங்கவேண்டும். எப்படித்தான் இவ்வாறு இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இருக்கிறார்களோ, தெரியவில்லை.
இயேசு கிறிஸ்தவர்களுக்குமட்டும் தேவன் அல்ல, அவர் சொல்கிறார்: நான் மாம்சமாகிய அனைவருக்கும் தேவனாகிய கர்த்தர். எனவே எல்லா இஸ்லாமியர்களும் இயேசுவை வணங்கவேண்டும்.
யார் இந்த சத்திய ஆவியானவர், எப்போது வழிநடத்த வந்தார்?
அப்போஸ்தலர் 2:1-4
"பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்."
இது இயேசு உயிர்த்தெழுந்து 50-வது நாள் ஆகும். இயேசுவானவர் உயிர்த்தெழுந்தபின்பு 40 நாள் பூமியில் இருந்தார். வானத்துக்கு அவர் அப்படியே எடுத்துக்கொண்டபின்பு 10 நாள் கழித்து இந்த பரிசுத்த ஆவியானவர் (Holy Spirit) காத்திருந்தவர்கள் மேல் வந்தார். இது முகமது வருவதற்கு 500-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பே ஆகும். முகமது பிறந்தது கி.பி. 570/571.
அப்போஸ்தலர் 8:29. ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;
அப்போஸ்தலர் 10:19,20 பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள். நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.
அப்போஸ்தலர் 10:44, 45 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும் தேவனைப் புகழுகிறதையும்...
மேலே "ஆவியானவர்" என்பவர் இயேசு சொன்ன "சத்திய ஆவியானவர்." அப் 10:45ல் அவர்கள் தேவனை புகழுவதையும் அதாவது தேவனை மகிமைப்படுத்துவதையும் இயேசு [4]ல் சொன்னதுபோல் காண்கிறோம்.
அப்போஸ்தலர்களின் நிருபம் என்பது பேதுரு, பிலிப்பு, பவுல் என்பவர்கள் வாழ்ந்த காலம். இது முகமதுக்கு சம்பந்தமே இல்லாத காலம். ஏனெனில் 500 வருடங்கள் கழித்துதான் முகமது வருகிறார். (கி.பி. 570/571)
இயேசு சொன்னார்:
"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (யோவான் 14:6)
"நானும் ஒரு வழி" என்று சொல்லாமல், "நானே வழி" என்று சொல்வதைக் கவனியுங்கள்.
"நானே ஆடுகளுக்கு வாசல். வாசல்வழியாய் பிரவேசியாமல் (என் வழியில் இல்லாமல்), வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்." (யோவான் 10:1,9)
இயேசு வாழ்ந்த காலத்திலிருந்து 600 வருடங்கள் கழித்து ஒருவர் இதை புரட்டுகிறார் என்றால், மேலே இயேசு சொன்னது போல் அவர் யார்? அவர் கள்ளனும், கொள்ளைக்காரனுமாயிருக்கிறார். முகமது தீர்க்கதரிசி அல்ல. எனவே அவர்களின் குரான் என்பது தவறானது.
இஸ்லாமியர்கள் முகமதுவை காப்பாற்ற இப்படி யோவானுக்கு தாவி பரிசுத்த வேதாகமத்தை புரட்டுவது தவறு. அவர்களுடைய முயற்சி முழுதும் தோல்வியாகிறது.
சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் என்பவர் "பரிசுத்த ஆவியானவர்" ஆவார்.
படிக்கவும்: அல்லாஹ்வின் வஞ்சனை புத்தகம்
காணொளிகள்: https://islam-qanda.blogspot.com/
--------- In English -----------
Question #59:
About John 14:16 which talks about the comforter; Muslims debate that it is Muhammad?
Answer: NO, it is not Muhammad.
To begin with, You MUST read the following chapters John 14, 16, 10 and Acts 2, 8, 10.
Muslims will pick and interpret the scriptures according to their needs. Do not believe them. They pick one verse from here one verse from there just to save their Muhammad. But that attempt utterly fails as we uncover it in this article.
When Jesus mentioned about the "Spirit of truth" , "Comforter" he was talking about the "Holy Spirit". Definitely not about Muhammad. How do we know?
[1] John 14:16 "And I will pray the Father, and he shall give you another Comforter, that he may abide with you for ever;"
Muhammad is "NOT with you for ever". He is dead. He died in the year A.D.632 . Muhammad's tomb is still there in Medina. There fore Jesus did not talk about Muhammad.
[2] John 14:17 "Even the Spirit of truth; whom the world cannot receive, because it seeth him not, neither knoweth him: but ye know him; for he dwelleth with you, and shall be in you".
Muhammad does not dwell with you, he is definitely NOT inside of you. For that as mentioned above he needs to be a spirit. (If you argue that He dwells in your mind and memory, then every family will say that their mom and dad who passed away are in their memory as well, so that argument is very silly to consider.)
When Jesus said, "Dwells with you" he was talking with the disciples. Muhammad did not dwell with the disciples of Jesus. His arrival was 500 years later, which is too late.
"Spirit of truth": Muhammad had a body, not a spirit. (Remember God is Spirit.)
In II Timothy 1:14 we read: "That good thing which was committed unto thee keep by the Holy Ghost which dwelleth in us."
Therefore Holy Spirit is the one that dwells in us.
[3] John 14:26 "But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said unto you"
- It is explicitly and clearly mentioned that the Comforter is the "Holy Ghost". There is no need to explain any further. The Muslim's debate comes to a dead end here. Muhammad is NOT the "Holy Spirit"
- "He will teach you all things, whatsoever I have said unto you". Amazing!
Jesus said, "Love your enemies". How great this is !!
Muhammad said, "Kill the unbelievers". How silly is this?
Why Muhammad did not say what Jesus said above and "whatsoever" Jesus said? So the comforter is not Muhammad. Muhammad contradicts what Jesus said.
[4] John 16:14, 15 "He shall glorify me: for he shall receive of mine, and shall shew it unto you. All things that the Father hath are mine: therefore said I, that he shall take of mine, and shall shew it unto you"
Muhammad did not take from what Jesus said and proclaim. Jesus said I will rise again bodily, and he did. Muhammad denies it because it is too hard for him to believe, and if he did, there is no value for him anymore.
Jesus was greatly glorified in resurrection. With out the resurrection of Christ there is nothing to preach says apostle Paul. Muhammad did not glorify Jesus. He came 500 years later after all these events took place. Too late.
[5] John 15:26
But when the Comforter is come, whom I will send unto you from the Father, even the Spirit of truth, which proceedeth from the Father, he shall testify of me:
Here we read that it is Jesus who sends the comforter. Even after this argument if they get stubborn, we can argue in the following way: In Quran, Mohammad was sent by Allah, In the Bible, Comforter was sent by Jesus. If they claim Comforter is Mohammad, then we by logic we see that Jesus is Allah. So all Muslims must worship Jesus. I don't understand how gullible are Muslims.
Jesus is not the God just for Christians. He says "I am the God of all flesh". Therefore all Muslims must worship Jesus.
Who is this "Spirit of Truth", when did He come to guide?
Acts 2:1-4
"And when the day of Pentecost was fully come, they were all with one accord in one place. And suddenly there came a sound from heaven as of a rushing mighty wind, and it filled all the house where they were sitting. And there appeared unto them cloven tongues like as of fire, and it sat upon each of them. And they were all filled with the Holy Ghost, and began to speak with other tongues, as the Spirit gave them utterance."
This is 50 days since resurrection of Jesus. Jesus lived on this earth for 40 days after resurrection, then he was taken up. 10 days later the Holy Spirit came upon them that waited on the upper room. Muhammad was born only in A.D. 570/571. Too late.
Acts 8:29 Then the Spirit said unto Philip, Go near, and join thyself to this chariot
Acts 10:19,20 While Peter thought on the vision, the Spirit said unto him, Behold, three men seek thee.
Arise therefore, and get thee down, and go with them, doubting nothing: for I have sent them.
Acts 10:44-46 While Peter yet spake these words, the Holy Ghost fell on all of them which heard the word...For they heard them speak with tongues, and magnify God.
Here the Spirit is the one that Jesus said as Comforter and the Spirit of Truth. Notice in Acts 10:46 people magnify God i.e. glorify God as mentioned by Jesus in [4]
Books of Acts is the time Peter, Philip, Paul lived. This is nothing to do with Muhammad period. Because Muhammad came 500 years later.
Jesus said in John 14:6
"I am the way, truth and life. with out me no one can come to the father".
-Notice that Jesus did NOT say I am "a" way. Instead He said I am "the way".
Jesus said in John 10:1,9
"Verily, verily, I say unto you, He that entereth not by the door into the sheepfold, but climbeth up some other way, the same is a thief and a robber"
" I am the door: by me if any man enter in, he shall be saved, and shall go in and out, and find pasture."
After 600 years of have gone from the time of Jesus, a man called Muhammad comes and flips and twists the truth that is already established. So in which "way" does Muhammad takes the people according to Jesus? the "other way" which only a thief and robber enter.
Muslims are trying to save their Muhammad by quoting verse here and there, but their attempt has now utterly failed. Muslims are corrupting the truth, and it is wrong.
The Spirit of truth, the Comforter is the "Holy Spirit".
7 comments:
Dear Bro. It’s really a good Explanation with our Lord’s word. Please continue to explain more and more Lord our God be with you.
அருமையான கட்டுரை.
முகமதுவை சாதாரண மனிதனாக கூட எண்ணி்ப் பார்க்க முடியவில்லை
முகமது குறி்த்த அறிய நல்ல தமிழ் தளங்கள்
http://isakoran.blogspot.com/
http://answering-islam.org/tamil.html
IT IS A FANTASTIC EXPLANATION.
பரிசுத்த ஆவியானது இயேசுவிற்கு முன்பு இருந்ததா இல்லையா?
ஏசாயா 48:16 நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
==> இங்கே இயேசுவைக்குறித்தும், பரிசுத்த ஆவியைக்குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.
ஆதியாகமம் 1ல் "தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்" என்று சொல்லப்பட்டுள்ளது.
பிதா, குமாரன், பரிசுத்தாவி என்னும் திரித்துவ தேவன் ஆதிமுதலாகவே இருக்கின்றார்.
Thank you for your explanations...please innum neraya upload pannunga...nangalum mulusa therinjutu pesa vasathiya irukum...difference between jesus and other religions gods...indha maari neraya..............
really superb and useful
Post a Comment
தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.