Saturday, September 24, 2011

73. வட்டி வாங்கலாமா? வாங்க வேண்டாம் என்று வாசிக்கிறோமே..

கேள்வி: வட்டி வாங்கலாமா? பழைய ஏற்பாட்டில் வட்டி வாங்கவேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளதே..

பதில்: வட்டி வாங்காதிருப்பது மேலானது. வேதத்தின்படி வட்டி வாங்கலாம். ஆனால் யாரிடம் வாங்கலாம், யாரிடம் வாங்கக்கூடாது என்பதில்தான் விவரங்கள் உள்ளது.

யாரிடம் வாங்கக்கூடாது?

 [1] உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். (யாத் 22:25)
==> இங்கே "என் ஜனங்களில் ஒருவனுக்கு" என்றார். இப்போது தேவனுடைய ஜனமாகிய உங்கள் சபையில் ஒருவருக்கு என்றும், தேவனுடைய பிள்ளை ஒருவருக்கு என்றும் பொருள்படும்.

[2] கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிறவேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக. (
உபா 23:19 )
==> உன் சகோதரன் அல்லது சொந்தக்காரர்களிடம் வட்டி வாங்காதே.
நெகேமியா என்பவர் இஸ்ரவேல் ஜனங்கள் இந்த வசனத்தை மீறி தன் சதோதரரிடம் வட்டி வாங்கியதால் பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து, நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக. நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக்கொடுத்துவிடுங்கள் என்றான்.

[நூற்றுக்கு 1 தான் வட்டியாக ( 1% )அப்போது இருந்தது என்பதை கவனியுங்கள்.]

நீ அவன் (சகோதரன்) கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக. (
லேவி 25:36,37)


யாரிடம் வட்டி வாங்கலாம்?

உபாகமம் 23:20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும்வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக.

மேலும் இயேசு ஒரு உவமையில் சொல்லும்போது: " அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, ..." என்று வாசிக்கிறோம்.

எதிலும் வட்டி வாங்கக்கூடாது என்று நாம் விவாதித்தால் வங்கியில் உங்கள் சேமிப்பில் அவர்கள் கொடுக்கும் வட்டியையும் நீங்கள் வாங்கக்கூடாது!
எனவே வங்கி(Bank)-ல் சேமிப்பில் போட்டு வட்டி வாங்கலாம். தவறல்ல.அந்நியன் கையில் வட்டி வாங்கலாம். அநியாய வட்டி வாங்கக்கூடாது. மேலும் ஏழைகள், சிறுமைப்பட்டவர்களிடம் வட்டி வாங்காதீர்கள். வட்டி வாங்காதிருப்பது அதைவிட மேல்

ஆனால் வங்கிகள் உங்கள் பணத்துக்கு சேமிப்புக் கணக்கில் வட்டி தருவார்களே, அதை வேண்டாம் என்று சொல்பவர்கள் எத்தனைபேர்?

சங்கீதம் 15: 5. தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.


இயேசு சொன்னார்:
லூக்கா 6:34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

வட்டி வாங்காதிருப்பதே சிறந்தது.


28 comments:

MANO நாஞ்சில் மனோ said...

கரெக்ட்டா சொல்லிட்டீங்க நன்றி, கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது!!!!

prithivi rajan said...

இது முழக்க என்னுடைய கருத்து மட்டுமே . தவறு எனில் மன்னிக்கவும். பழைய ஏற்பாடில் அந்நியன் என குறிப்பிடுவதை புதிய ஏற்பாடில் சகோதரன் என்றே பார்க்கிறோம். எனவே சகோதரனிடம் வட்டி வாங்க கூடாது என்பது தெரிந்தவரையும், தெரியதவரையும், தேவனை அறிந்தவரையும், தேவனை அறியாதவரையும் குறிப்பிடுகிறது. மேலும் பரமண்டல ஜெபத்தில் நாம் ஜெபிக்கும் போது பரமண்டலங்களில்லுள்ள எங்கள் பிதாவே என்று தானே ஜெபிக்கிறோம் . எனவே எங்கள் பிதாவே என்னும் போது நாம் அனைவரம் சகோதரர் தானே ...

S.Abraham said...

நான் ஒரு வேதாகம கல்லூரி மாணவன் ஆகையால் இந்த ஆலோசனை எனக்கு மிகவும் பயனுல்லதாக இருந்தது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

G.Senthil Kumar said...

மேலே சகோதரர் Prithivi rajan சொன்ன கருத்தும் என்னுடைய கருத்தாகும்- G.Senthil Kumar

Y. Sivakumar said...

வேத வசனப்படி சகோதரர் சொன்னது சரியே. ஆனால் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் தேவனுடய பிள்ளைகளாகிய நமக்கு இன்றைய உலக சூழலில் சரிபட்டுவராது. ஏனெனில் அவர்கள் எப்படி வசூலிக்கிறார்கள் என்று நமக்கு நன்றாக தெரியும். நாம் அப்படி செய்ய முடியாது, செய்யவும் கூடாது.

சகோ. சிவகுமார்

Annie said...

If you did take interest,In any form(bank,neighbors,Friends,relative's)It would confirm that you have no love for your neighbors .That would make you unbeliever in God's new commandment,that jesus gave.Doesn't New testament says that you should not take interest. Even bank is giving us interest by taking interest from others.Corinthians says we should be knowledgable of taking money from others.

M S Joshua Sathyamoorthy said...

வட்டி வாஙுவதும் தவரு வட்டிக்கு கொடுப்பதும் தவரு என்ரு வைத்துக் கொன்டால் நன்ராக இருக்கும்

balu said...

எப்படியானாலும், வட்டிக்கு பணத்தை கொடுத்து வரவு,செலவு செய்யும்போது கிறிஷ்தவ ஜீவியத்தில் தொய்வு ஏர்படுகிறது...ஆசீர்வாதங்கள் குறைகிறது,,,,, என்பதே உண்மை.....

robert dinesh said...

மிகவும் சிறந்த விளக்கம்

stephen gunal said...

thank u bro for u r msg

gods child said...

Iam so touched about gods explanations.really worthy.
i believe in god.i always trust him.but sometimes i feel so loney and i am worthless.my mind sometimes doesnt know what to do and why im here.

Unknown said...

thank you for the explanation. But it is a blessing if you dont lend money for interest (other than bank) ; similarly dont borrow from others for interest.

Unknown said...

thank you for the explanation. But it is a blessing if you dont lend money for interest (other than bank) ; similarly dont borrow from others for interest.

Unknown said...

it's amazing message to us. god be with you

Unknown said...

GOOD MESSAGE

Unknown said...

Praise the lord.. .....this makes very clear that we need not get intrest from the people.....god need a good things from our lives.............do such things and prove our lord is great and he is the king of kings

Anonymous said...

Psalm 13:5. தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

எசேக்கியேல் 18:13 வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை, இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவேசாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்

Anonymous said...

வேத அடிபடையில் சரியான் பதில். prithivi rajan சொல்கிறபடி அந்நியன் என்றால், புதிய ஏற்பாட்டில் சகோதரன் என்று எங்கே உள்ளது. இது தவறு. - Raj

Unknown said...

psalms 15 says in details. no interest

MUGILARASU said...

VADDI VAANGALAMA VAANGAKOODATHA SOLLUNGA BROTHERS

Anonymous said...

Psalm 13:5. தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

எசேக்கியேல் 18:13 வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை, இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவேசாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்


வட்டி வாங்கலாமா... என்ன சகோதரா சொல்லுகிறீர்கள்... கொடுத்த கடனையே திருப்பி கேட்க கூடாதென்கிறார் நமது அருமை இயேசு கிறிஸ்து...

லூக்கா 6:34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

Unknown said...

GOOD ANSWER... BUT THIS IS TALKING ABOUT REAL CHRISTIANITY லூக்கா 6:34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

GK TAMIL said...

கிறிஸ்துவுக்குள் பிரியமான என் சகோதரர்களே வட்டி மிகவும் கொடியது நான் 500000/= ரூபா வரை வட்டி கடனால் நிம்மதி இழந்து மீளமுடியாதவாறு வேதணை படுகிறேன் இதை வாசிக்கும் யாரவது எனக்கு உதவ முடிதல் வட்டி இல்ல கடனாகவோ அல்லது நன்கொடையாகவோ தந்து உதவவும் இது பொய் இல்லை உண்மை ஆதாரம் உண்டு தொடர்புக்கு 0940770808223 / ௦772734442 email ; rajamani.jayamani3@gmail,com

Unknown said...

எசேக்கியேல் 18:13 - வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை, இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவேசாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.

John said...

Oruthar 100 ku 2% vatti vaanginal adhu thavaru thaney?

John said...

Rajamani Jayamani, Muzhu manathodu jebam pannungal Karthar aal kudatha kaariyam ondrum illai.

D Meshack Raman said...

எனது நீண்டநாள் சந்தேகத்திற்கு விடை கிடைத்தது.
தேவன் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக. நன்றி!

Theo said...

There will verses which suits to any business. Please do not mislead any body...
Psalm 13:5. தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

எசேக்கியேல் 18:13 வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை, இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவேசாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்


வட்டி வாங்கலாமா... என்ன சகோதரா சொல்லுகிறீர்கள்... கொடுத்த கடனையே திருப்பி கேட்க கூடாதென்கிறார் நமது அருமை இயேசு கிறிஸ்து...

லூக்கா 6:34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.