கேள்வி: பவுல் சொல்லும்போது: "நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும்(wine) கூட்டிக்கொள்." எனவே கொஞ்சம் மதுபானம் கொள்வது சரியா?
பதில்: இதற்கான பதில் அனைவரும் அறிந்ததே.
கானாவூர் கலியாணத்தில் இயேசு செய்த முதல் அற்புதம் தண்ணீரை திராட்சரசமாக மாற்றியது. தண்ணீரை மதுபானமாக மாற்றவில்லை. ஆங்கிலத்தில் King James Version-ல் wine என்று மொழிபெயர்த்துள்ளதால் வந்த குழப்பங்கள்தான் இவை. கிரேக்க மொழியில் இங்கே oinos [οἶνος ] என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முழுக்க திராட்சை பழச்சாறு அதாவது PURE GRAPE JUICE என்றே பொருள்படும். YLT (Young Literal Translation) எனப்படும் மொழிபெயர்ப்பினை பார்க்கவும். தீமோத்தேயு என்பவர் தேவ ஊழியர் இவர் குடிக்க "தண்ணீர்மாத்திரம்" பயன்படுத்தி வைராக்கியமாக இருந்திருக்கிறார். மற்ற பானங்களை குடித்ததாக சொல்லப்படவில்லை.
The Greek word oinos was used by both secular and religious
authors in pre-Christian and early church times to refer to unfermented
grape juice. The ancients considered unfermented oinos to be the best.
புதிய திராட்சரசம் மத் 9:17: "புது திராட்சரசத்தைப் ( G3631 ) பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை;
வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம்,
துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில்
வார்த்துவைப்பார்கள்; அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்."
ஆனால் தீமோத்தேயு சரீரத்தில் பலவீனமாக இருந்திருக்கிறார். எனவே பவுல் அக்கறைகொண்டவராக திராட்சைப்பழம் உடலுக்கு நல்லது என்ற யோசனையில் தீமோத்தேயுவுக்கு அப்படியாக சொல்கிறார். தீமோத்தேயுவுக்கு என்ன பலவீனம் என்று நமக்கு சொல்லப்படவில்லை. கிராமங்களில் "ஒரு ஆட்டுக்கால் சூப் வைத்து குடி" என்று சொல்வது போன்ற ஒரு யோசனையாக எடுத்துக்கொள்ளலாம்.
வேதாகமத்தில் இப்படியாக வாசிக்கிறோம்:
ஏசாயா 5:11-14
11. சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!
12. அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும்,
நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும்
கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.
13. என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில்
கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான
கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்.
14. அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல்
திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள்
ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள்.
நீதி 23: 29. ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
30. மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், [கலப்புள்ள] சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.
நீதி 23: 20. மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே.
மதுபானம்(Wine) இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
லேவி 10:9-11 நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக்
கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும்
குடிக்கவேண்டாம்.
10. பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும்,
11. கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல
பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள்
தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
தேவனுடைய பாராட்டு:
தேவன் ரேகாபியருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் திராட்சரசம் (Wine) குடிக்காமல் இருந்ததால் அவர்களை மெச்சிக்கொள்கிறார். இங்கே திராட்சரசம் என்பது மதுபானம்: יַיִן - yayin, yah'-yin; from an unused root meaning to effervesce; wine (as fermented) - lexicon reference H3196.
எரேமியா 35:2-17
2. நீ ரேகாபியருடைய வீட்டுக்குப் போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடு என்றார்.
3. அப்பொழுது நான் அபசினியாவின் குமாரனாகிய எரேமியாவுக்கு மகனான
யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய குமாரர் எல்லாரையும்,
ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து;
4. கர்த்தருடைய ஆலயத்திலே பிரபுக்களுடைய அறையின் அருகேயும்,
வாசலைக்காக்கிற சல்லூமின் குமாரனாகிய மாசெயாவினுடைய அறையின்மேலுமுள்ள
இத்தலியாவின் குமாரனும் தேவனுடைய மனுஷனுமாகிய ஆனான் என்னும் புத்திரருடைய
அறையிலே அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து,
5. திராட்சரசத்தினால் நிரப்பப்பட்ட குடங்களையும் கிண்ணங்களையும்
ரேகாபியருடைய குடும்பத்தைச் சேர்ந்த புத்திரரின் முன்னே வைத்து, அவர்களை
நோக்கி: திராட்சரசம் குடியுங்கள் என்றேன்.
6. அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால்,
ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாப், நீங்கள் பரதேசிகளாய்த்
தங்குகிற தேசத்தில் நீடித்திருக்கும்படிக்கு,
7. நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும்,
வீட்டைக் கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்சத்தோட்டத்தை
நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே
குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
8. அப்படியே எங்களுடைய எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும்
எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்,
9. நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும், ரேகாபின் குமாரனாகிய
எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்;
எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லை.
10. நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப்
எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்துவந்தோம்.
11. ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்த தேசத்தில் வந்தபோது,
நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும்
தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே
எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.
12. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
13. இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது
என்னவென்றால், நீ போய், யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும்
நோக்கி: நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு, புத்தியை
ஏற்றுக்கொள்ளுகிறதில்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14. திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன்
புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது;
அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல், தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக்
கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே
சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.
15. நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களைப் பின்பற்றாமல்,
அவனவன் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச்
சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான்
கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என்
ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே
அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக்
கீழ்ப்படியாமலும்போனீர்கள்.
16. இப்போதும், ரேகாபின் குமாரனாகிய யோனதாபின் புத்திரர் தங்கள் தகப்பன்
தங்களுக்குக் கட்டளையிட்ட கற்பனையைக் கைக்கொண்டிருக்கும்போது, இந்த ஜனங்கள்
எனக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினாலும்,
17. இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை
நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்தரவு கொடாமலும் போனபடியினாலும்,
யூதாவின்மேலும் எருசலேமின் குடிகள் எல்லாரின்மேலும் நான் அவர்களுக்கு
விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின்
தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
18. பின்னும் எரேமியா ரேகாபியருடைய குடும்பத்தாரை நோக்கி: நீங்கள் உங்கள்
தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய
கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு, அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம்
செய்துவந்தீர்களென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
19. ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின்
குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
இதுவே நமக்கு எடுத்துக்காட்டு. இவர்களின் திடமான நிலைப்பாட்டை நாமும் கைக்கொள்ளவேண்டும்.
இன்று உலக அளவில் "குடிப்பழக்கம் உடலுக்கு கேடு" என்று விளம்பரங்களே செய்யப்படுகின்றன.
"ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் தேவன் அவனை அழிப்பார்(destroy). நீங்களே அந்த ஆலயம்" என்று வாசிக்கிறோமே.
எனவே அன்புக்குரிய தேவனுடைய பிள்ளைகளே, நாம் வஞ்சிக்கப்படாதிருப்போமாக. உங்கள் சரீரம் தேவனுக்குச் சொந்தம். நீங்கள் கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்களே (you were bought with a price). கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்கள், கிரக்கத்திற்கு விலைபோகலாமா? நித்தியத்தை "சிறு துளி பேரிழப்பு" என்று தொலைக்காதிருப்போமாக. Wine மதுபானம் குடிக்காதீர்கள்.
ஏசா 5:14ம் வசனத்தின்படி மதுபானம் குடிப்பவர்கள் பாதாளத்திற்கு சென்று விடுவார்கள். எனவே வேண்டாம்.
26 comments:
மிக்க நன்றி...
இன்றைக்கு அநேக கிருஸ்த்துவர்கல் திராட்சரசத்திற்க்கும் மதுபானத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கல். அவர்கலுக்கு இந்த உபதேசத்தின் மூலம் உண்மையான சத்தியத்தை தெரிந்து கொல்லும்படி செய்ததற்க்கு நன்றி.(கர்த்தருக்கு ஸ்தோத்திரம்)
சு.ஆபிரகாம் குரோம்பேட்டை, நெமிலிச்சேரி
அருமையான விளக்கம். இயேசுவே மது அருந்தினார் நாம் அருந்தினால் என்ன என்று கேட்கும் கிறிஸ்தவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். போதாக்குறைக்கு வேதத்திற்கு எதிரானவர்கள் கூட இயேசுவை குற்றப்படுத்த இதையே உபயோகின்றார்கள். God Bless you bro.
சரியான பதில் கொடுத்து விட்டிர்
Thank you brother .
thank you brother for your wonderful message
THNAK YOU BROTHER FOR WONDERFUL AND GOOD MESSAGE
FOR ALL DRINKERS
NIXON R. KENNEDY
THNX,YOU REFRESHED THESE VERSES SO THAT I CAN TELL TO PEOPLE WHO DRINKS
Thanks dear.
Very nice explanation
மிகவும் பிரயோஜனமானது-Albert Ebenezer,Coimbatore
Very nice advice
நல்ல பதில் சிலர் சாரயம் குடிக்க விருப்பம் கொண்டு கர்த்தருடைய வார்த்தையை மாற்றுகிறார்கள் (சத்தியத்தை விற்கிறார்கள்)
good explanation thanks
very useful words
Thank you brother சரியான பதில் கொடுத்து விட்டிர்
NICE WORDS BRO.. GOOD EXPLAINING ... GOD BLESS YOU
Very Crisp and effective advice. One who follows the WORD shall not perish.
athu mathupanam alla.thiratsai juice.
பகிர்வுக்கு நன்றி, தேவன் ஆசிர்வதிப்பாராக !
God Jesus Bless you brother. Thank you Jesus for this good message
மதுபானம் வேறு திராட்சரசம் வேறு, திராட்சரசத்தை புளிக்க வைத்தால் வருவது மதுபானம். எனவே புளிக்க வைக்காமல் குடிக்க வேண்டும்.
Thank you bro nice message
Nantri Naala message
super explanation.
thank you so much.
Post a Comment
தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.