Wednesday, November 11, 2009

17. தேவனின் பெயர் என்ன? தேவனை உண்டாக்கியது யார்? (What is the name of God?)


[Part A] தேவனின் பெயர் என்ன?
ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் இருந்தால், இரண்டையும் வேறுபடுத்த அதற்கு வேறொரு வார்த்தையைச் சேர்த்து, ஆண் பறவை, பெண் பறவை என்றோ அல்லது இரண்டு பெயர்களை வைத்தோ அழைக்கலாம்.

இந்த உலத்திலேயே
ஒருவேளை ஒரே ஒரு பறவைதான் இருந்தால், அதை "பறவை" என்று அழைத்தால் போதும். ஏனெனில் வேறு எந்த வகையான பறவையும் உலகில் இல்லையே.

அப்படியே இந்த உலத்திலும், இனிவரும் உலகத்திலும், விண்வெளியிலும் (Worlds, Galaxies, space) தேவன் ஒருவரே! அவருக்குப் பெயர் தேவையில்லை. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் அவர் திரும்பிப் பார்க்கவேண்டும் என்றா? அப்படிப்பட்டச் சிந்தனையே ஒரு சிறுபிள்ளைத்தனமானது.
இந்த உலகில் தெய்வங்கள் என்று மற்றவர்கள் நினைப்பவைகளெல்லாம் பிசாசின் ஆவிகள், விழுந்துபோன தூதர்கள் (fallen angels). அவைகள் அநேகமாயிருப்பதினால் அவைகளின் பெயர்களும் அநேகம்.

வேதத்தில் இருந்து சில பகுதிகள்:யாத்திராகமம் 3:13-15 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். 14. அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் (I AM THAT I AM) என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். 15. மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
ஒரு அருமையான பதிலை தேவன் மோசேக்கு சொன்னார். பெயர் இங்கே தேவையில்லை, தேவன் ஒருவர்தான்.


யாத்திராகமம் 6:3 சர்வவல்லமையுள்ள தேவன் (Almighty God) என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா (YHWH) என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

Jehovah
is translated as "The Existing One" or "Lord." The chief meaning of Jehovah is derived from the Hebrew word Havah meaning "to be" or "to exist." It also suggests "to become" or specifically "to become known". அதாவது 'இருக்கிறவராகவே இருக்கிறேன்'.

ஏசாயா 54:5 உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்;
நியாயாதிபதிகள் 13:18 அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்; என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.


அவருக்கு எப்பொழுது பெயர் தேவைப்பட்டது என்று பார்த்தால், அவர் பூமியில் மனிதனாக பிறக்கும்போதுதான். அநேக மனிதர்கள் இருக்கும் இந்தப் பூமியில் அவரை வித்தியாசப்படுத்தும்படி "இயேசு" (பாவங்களிலிருந்து இரட்சிப்பவர்) என்று பெயர் கொடுக்கப்படுகிறது. அந்தப்பெயரைக்கூட மனிதன் தேர்ந்தெடுத்து அவருக்குச் சூடவில்லை.

இயேசுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேறு பெயர்கள்:
ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்...அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியப் பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்
வெளி 19:16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

இப்போதும் அப்பா, பிதாவே என்று அழைக்கும் உரிமையை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். என் நாமத்தினால் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

[Part B] தேவனை உண்டாக்கியது யார்?
தேவனை யாரும் உண்டாக்கவில்லை. நான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று தேவன் மோசேயிடம் சொன்னார். வெளிப்படுத்தின விசேஷத்தில் நான் ஆல்பாவும் (Αα), ஒமேகாவும் (Ωω) ஆதியும் அந்தமுமாக இருக்கிறேன். நாட்களின் துவக்கமும், முடிவும் இல்லாதவர் தேவன். நம்முடைய நேரம் என்னும் குறியீட்டுக்கு (time domain) அப்பாற்பட்டவர்.God is Infinite: தேவன் வரையறைக்கு மீறியவர், எல்லையில்லா அளவுள்ளவர்.
God is Omnipresent: தேவன் எங்கும் இருப்பவர், ஒரே நேரத்தில்.
God is Omniscient: தேவன் எல்லாம் அறிந்தவர்.
God is Omnipotent: தேவன் எல்லாம் வல்லவர்.


எபிரெய மொழியில் தேவன் என்பதற்கு "El" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது இதற்கு அர்த்தம்: supreme god, the father of humankind and all creatures. சர்வ சிருஷ்டிக்கும், மனிதகுலத்துக்கும் பிதா, தேவாதி தேவன்.

கர்த்தர் என்பதற்கு எபிரெய மொழியில் "Adonai" என்ற பதம். இதற்கு Master (எஜமான்) என்று பொருள்.


சிந்தனைக்காக:
ஒருவேளை மாதேவன் என்று ஒருவர் தேவனை உண்டாக்கியிருந்தால், அந்த மாதேவனை உண்டாக்கியது யார் என்று கேட்கப்படும். அவரை உண்டாக்கியது மாமகாதேவன் என்றால் அவரை உண்டாக்கியது யார்......என்று போய்கொண்டே இருக்கும்.
எதுவாயினும் சிருஷ்டிக்கப்பட்டால் அது ஒரு சிருஷ்டி, தேவன் அல்ல!

(குறிப்பு: இயேசுவானவர் சிருஷ்டிக்கப்படவில்லை. அவர் தேவன்; இந்த உலகை உண்டாக்கினார், அவர் ஆதியும் அந்தமுமானவர்; ஆபிரகாமுக்கு முன்னே நான் "இருக்கிறேன்" என்று மோசேயுடன் சொன்ன அதே பதிலை இயேசு சொல்கிறார். இதை கேள்விபதில் 21 மற்றும் 63-ல் வாசிக்கலாம்.)
.

8 comments:

ESTHER said...

god is love me

selvaraj said...

wonderful message for me such great thing your teaches me.thank yo...

Regards
Selvaraj

Eloteah said...

very good explanation

God bless you

m.baskar said...

now i am very clear and understood .thank you very mush may god bless you

abu senthil said...

god bless you

Anupriya A Raj said...

Amen.. Hallelujah.....

Ruban Sam said...

அன்பு சகோதரிடம் சில கேள்விகள் தெரிந்து கொள்வதற்காக…
1. இப்போது மரிப்பவர்கள் எங்கே செல்வார்கள்?
2. மரித்தவர்கள் இதே உருவத்தில் இருப்பார்களா? பிரிந்து சென்றவர்களின் நினைவு இருக்குமா?
3. பூமியில் நடப்பது அவர்களுக்கு தெரியுமா?
4. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள் என்று வேதம் சொல்லுகிறது அப்படியென்றால் அவர்கள் கல்லறையில் இருந்து எழும்புவார்களா?அல்லது பரதீசுலிருந்தா?

Tamil Bible said...

1. மரித்தவர்கள் இளைப்பாறும்படி பரதீசுக்கு செல்வார்கள்.
2. ஆம், இதே உருவத்தில் இருப்பார்கள். பிரிந்து சென்றவர்களின் நினைவுகள் இருக்கும். (உதாரணம்: லாசருவும் ஐசுவரியவானும் சம்பவம்).
3. அவர்களுக்கு பூமியில் நடப்பது தெரியாது.
4. சரீரங்கள் கல்லறைகளிலிருந்து உயிர்பெறும். பரதீசில் இளைப்பாறுபவர்களின் ஆத்துமா எழும்பி மகிமையான சரீரம் (இயேசுவின் உயிர்த்தெழுந்த சரீரம் போல) பெறுவார்கள்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

New comments are not allowed.