Monday, November 2, 2009
11. எப்படி ஒரு அஞ்சனம் பார்க்கும் பெண் (witch) சாமுவேலை இறந்தபின் வரவழைத்து அவனுடன் (ஆவியுடன்) பேசினாள்?
எப்படி ஒரு அஞ்சனம் பார்க்கும் பெண் சாமுவேலை இறந்தபின் வரவழைத்து அவனுடன் பேசினாள்? அவளுக்கு அந்த சக்தி எப்படி ... ?
இதற்கு அநேகர் தவறான விடையுடனும், சிலர் வியப்படைந்து பதில் தெரியாமல் போயும் உள்ளனர். வேதத்திலே என்ன சொல்லப்பட்டுள்ளது என பார்ப்போம்.
[முன்னுரை] சவுல் தாவீதை கொல்லும்படி தேடினான். காரணம் ஜனங்கள் சவுல் கொன்றது 1000, தாவீது கொன்றது 10,000 என்று பாடியதால் தாவீதின் மேல் அவனுக்கு வெறுப்பு ஒரு புறம் உண்டாகிவிட்டது. தனக்குப்பின் ராஜாவாகுவான் என்று சவுல் அறிந்தும் அவன் எங்கே தான் இருக்கும்போதே ராஜாவாகிவிடுவானோ என்ற பயம் ஒரு புறம். கர்த்தர் சொன்னபடி சவுல் செய்யாமல் போனதால் கர்த்தர் சவுலைவிட்டு நீங்கினார், ஒரு பொல்லாத ஆவி அவனை அவ்வப்போது கலங்கப்பண்ணினது.
சவுல் பெலிஸ்தியர்கள் யுத்தத்துக்கு வந்தபோது கர்த்தர் அவனுக்கு சொப்பனத்திலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை. எனவே அவன் எந்தோரில் வசிக்கும் அஞ்சனம் பார்க்கும் பெண்ணைத் தேடிப் போகிறான்.
. அஞ்சனம் பார்க்கும் பெண் - ஆவியுடன் பேசும் குறிசொல்லுதல் என தமிழிலும்,
. Woman with familiar spirit - a spirit (usually in animal form) that acts as an assistant to a witch or wizard என ஆங்கிலத்திலும்,
. אוב 'Owb' or 'Aub' - which means a sorcerer or necromancer என எபிரேய மொழியிலும் சொல்லப்பட்டுள்ளது.
[1] தேவர்கள் பூமிக்குள்ளிருந்து எப்படி வந்தார்கள்?"
அஞ்சனம் பார்க்கும் பெண் "தேவர்கள் பூமிக்குள்ளிருந்து வருகிறார்கள்" [gods are ascending out of the earth] என்றாள். தேவர்கள் பூமிக்குள்ளிருந்து வரமுடியாது. இது வேதத்துக்கு மாறான வாக்கியம். தேவதூதர்களும் தேவனும் பரலோகத்தில் இருக்கிறார்கள். பிசாசானவன் பாதி பொய்யும் கொஞ்சம் உண்மையும் கலந்து பேசுவதில் மிகவும் தந்திரசாலி. [ஏவாளிடம் நீங்கள் சாகவே சாவதில்லை என்று பொய் சொன்னான். ஆனால் சாப்பிட்ட அந்த நாளே அவள் இறந்து போனாள் (கர்த்தருக்கு 1000 வருடம் ஒருநாள்) ]. அப்படியானால் அஞ்சனம் பார்க்கும் பெண் எப்படி தேவர்களைப் பார்த்தாள்? பூமிக்குள் இருந்து வந்தவை தேவர்கள் அல்ல, பிசாசின் ஆவிகள்.
நன்றாக கவனியுங்கள், இவைகள் சவுலின் கண்களுக்கு தெரியவில்லை. சவுல் இரண்டு கேள்விகள் கேட்கிறான். ஒன்று "நீ காண்கின்றது என்ன?" அவள் சொன்னாள் "தேவர்கள் (பிசாசின் ஆவிகள்) பூமிக்குள்ளிருந்து வருகிறார்கள்". இரண்டாவது, "அவருடைய ரூபம் என்ன?" இதற்குப்பின் அவள் சொன்னது "ஒரு முதியவர் சால்வை போர்த்திக்கொண்டு வருகிறார்". இரண்டு இடங்களிலும் சவுலின் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. [மேலே படத்தில் தவறாக சித்திரம் வரையப்பட்டுள்ளது.] ஒரு உருவம் எப்படி தோற்றமளித்தால் நீ நம்புவாய் என்று பிசாசு நன்றாக அறிந்திருக்கிறான் என்பதற்கு இது மிகவும் சிறந்த எடுத்துக்காட்டு. எப்படியெனில், சாமுவேல் உயிரோடிருந்த காலத்தில் I சாமுவேல் 15:27 "சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று" என்று வாசிக்கிறோம். சால்வை போர்த்தியவர் என்பதால் அவர் சாமுவேல்தான் என்று நம்பினான். இது பிசாசின் அற்புதம், அடையாளம் செய்யும் சக்தி. சாமுவேல் வடிவில் வந்து பேசியது பிசாசின் ஆவிதான், சாமுவேல் அல்ல. இதை என்னால் விளக்க முடியும். கீழே தொடர்ந்து வாசியுங்கள்.
[2] செத்தவர்களுக்கு இங்கு நடக்கும் விஷயங்கள் தெரியுமா? திரும்பி வரமுடியுமா?
செத்தவர்களுக்கு இங்கு நடக்கும் விஷயங்கள் தெரியாது. அவர்கள் தாமாக திரும்பி வரமுடியாது. ஏனெனில் அதற்குரிய திறவுகோல்களை உடையவர் இயேசு ஒருவரே.
பிரசங்கி 9:5,6 மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழேசெய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.
யோபு 14:21. "அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்."
யோபு 7:10. "இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.
ஏசாயா 38:18 மரணம் உம்மைப் போற்றாது; குழியிலிறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.
ஏசாயா 40:24 அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய அடிமரம் திரும்பப் பூமியிலே வேர்விடுவதுமில்லை
எனவேதான் இறந்துபோன சாமுவேலுக்கு சவுலைப்பற்றி ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சாமுவேலின் வடிவில் பேசியது பிசாசின் ஆவியே.
[3] பேசியது பிசாசா? எப்படி சாத்தியம்?
மூன்று வசனங்களை வாசியுங்கள்:
I இராஜாக்கள் 22:22 எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார்.
வெளி 16:14 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்;
மத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் (God's elect) வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
எனவே ஒரு ஆவியின் வடிவிலோ, முதியவரின் வடிவிலோ, ஒளியையுடைய தூதனின் வடிவிலோ (Angel of Light) அல்லது நீ எதில் ஏமாறுவாயோ அந்த வடிவில் வந்து வஞ்சிக்கிறான்.
பிசாசுக்கு மரித்தோரை உயிர்ப்பிக்கும் சக்தி இல்லை. தேவன் பேசும்போது ஒரு சமாதானம் இருக்கும். இங்கே பிசாசானவன் சவுலுடன் நாளை நீ சாவாய் நீயும் உன் குமாரரும் என்னுடன் இருப்பீர்கள் என்று பயமுறுத்திச் சொல்கின்றான். சவுலும் போரில் தற்கொலைசெய்துகொண்டு சாகின்றான். தற்கொலையெல்லாம் பிசாசின் தந்திரம்.
[4] அப்படியானால் பிசாசுக்கு சவுல் நாளை மரிப்பது எப்படி தெரியும்?
சவுல் அஞ்சனம் பார்க்கும்படி போனதால்தான் தேவன் அவன்மேல் இன்னும் கோபமாகி அவனை சீக்கிரத்தில் (மனுஷனுடைய கணக்கின்படி ஒருநாளில்) நீக்கிவிட்டார் என்று நான் நினைக்கிறேன். எனவே அவன் நாளை மரிப்பான் என்பது பரலோகத்தில் வெளியாக்கப்பட்டு (பொய்யின் ஆவிகள்) பிசாசானவன் பாதி உண்மையினை சொல்லுகிறான். அஞ்சனம் பார்க்கப்போகாமலிருந்தால் சவுல் ஒருவேளை இன்னும் கொஞ்சம்நாள் பூமியில் வாழ்ந்திருக்கக்கூடும். (இதற்கான காரணம் கீழேயுள்ள வசனங்கள்)
[5] சவுல் செத்ததற்கான இரண்டு காரணங்கள்:
I நாளாகமம் 10:13 அப்படியே சவுல் [1] கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், [2] அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான். இந்த இரண்டும் காரணம். ஒன்று மட்டும் காரணம் அல்ல.
நீ அஞ்சனம் பார்க்கும்படியோ, குறிகேட்கும்படியோ போனால், தேவன் மிகவும் கோபமடைவார். உன் ஆயுசு குறையும். ஏனெனில் நீ பிசாசை நாடுகிறாய். ஆயுள் குறையுமா? ஆமாம்! நீதிமொழிகள் 10:27 கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம். நீதிமொழிகள் 5:8, 9 உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.
லேவியராகமம் 20:27. அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக;
உபாகமம் 18:11 மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.
13 comments:
nalla padil
End of this article another question came to my mind. That is the last Bible verse mentioned in this article Deuteronomy 18:11 last section "asking to the dead".
செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும்
எகிப்திலே மந்திரவாதிகள், Mummies-மம்மிக்கள் என்று செத்தவர்களை பாதுகாக்கும் பழக்கம், அவர்களுக்கு பூஜைசெய்வது என்றெல்லாம் இருந்தது. கானானிலும் (350கி.மீ. தூரம்) புறஜாதியார் செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறோம் என்று எண்ணி பிசாசின் ஆவிகளிடத்தில் கேட்டிருப்பார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு இது ஒரு விநோதமான காரியாமாக காணப்பட்டதால் அதில் ஒரு ஆர்வம் உள்ளுக்குள்ளே இருந்திருக்கலாம். உன் தேவனாகிய கர்த்தர் நான் இருக்கும்போது, அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று கர்த்தர் சொல்ல விரும்பும்போது, எந்த வார்த்தைகளைச் சொன்னால் அவர்களுக்குப் புரியும்? மேலே உபாகம் 18:11ல் சொல்லியபடி சொன்னால் தானே அவர்களுக்கு புரியும். அதனால் செத்தவர்களிடத்தில் குறிகேட்கமுடியும் என்றோ, செத்தவர்கள் வந்து பதில் சொன்னார்கள் என்று அர்த்தமல்ல.
பகுதி [2] படித்தால் செத்தவர்கள் ஆவியாக திரும்பிவர வாய்ப்பேயில்லை.
உயிரைந்தவர்களெல்லாம், சரீரத்துடன் காணப்பட்டனர். எலிசா உயிரோடெழுப்பிய பிள்ளை. பேதுரு உயிரோடெழுப்பிய தொற்காள்....
it is quite amazing. thank you
அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ எழும்பி வரபண்ணினது சாமுவேலே. காரணம் ஆவிக்குரிய அநேக சபை பேதகர்கள் ஊறுகிறார்கள்.அதற்க்கு விளக்கமும் அளிக்கிறார்கள்.இப்படிக்கு விசுவாசிகள்.உங்கள்
கருத்து.
Woman with familiar spirit - a spirit (usually in animal form) that acts as an assistant to a witch or wizard அதாவது அஞ்ஞனம் பார்க்கும் பெண் - ஒரு குறிசொல்லும் அல்லது சூனியக்காரிக்கு ஒரு ஆவி (பொதுவாக மிருகத்தின் வடிவில்) உதவியாளராக இருக்கும். எனவே இந்த உதவியாளரான ஆவியே இவளுடன் பேசுகிறது என்று பொருள். இந்த ஆவி எந்தவடிவில் வேண்டுமானாலும் தோற்றமளிக்கும். அதுதான் அங்கே நடந்தது.
your answer for this question is wrong... woman with familiar spirit, that girl's profession is doing the witch or wizard thing.. then why should she cried with a loud voice: and the woman spake to Saul, saying, Why hast thou deceived me? if she saw a normal spirit then she answered, but saw a samuel then she cried.
அது பொய்யின் ஆவியாக இருக்கலாம். ஏனெனில் தேவன் அனுமதித்தால் ஒழிய, பிசாசு சாமுவேலை எழுப்ப முடியாது. தேவன் சவுலை பிசாசிடம் ஒப்புக்கொடுத்திருப்பார். அதனால் பிசாசானவன் சவுலை வஞ்சித்து இருப்பான்.
amazing
Subash
என்னுடைய அனுமானத்தின் படி அது சாமுவேலாகத் தான் இருந்திருக்க வேண்டும். ஏன்னென்றால் ஒரு வேளை அது சாமுவேலாக இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயமாக வேதம் அதை மறுத்திருக்கும். ஒரு வேளை சாமுவேல் தேவ அனுமதியுடன் அங்கு வந்திருக்கலாம்..
I agree that samuel came there. samuel angu vandhu irundhlaum oru sadalam alladhu oru uyir pirindha samueluku eppadi elam nyabagam irundhiruka mudium, alladhu evvaaru avaral innum theerkadharisanam soliruka mudium.
Angu Vandhadhu Samuel Alla......Kulamba Vendaam.......kandipaga adhu samuel alla.... ( Paditthu Paarungal I Samuel (15 : 35) சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை... pinbu eppadi samuel varamudiyum yaarum yesikkave illaye...Eppodhu dheva aaviyanavar saul ai vittu pirithaaro...Dhevan adharku piragu saul satthathirku sevikodukka villai...believe the truth...
Enga mama erathutaga 2 week munadi romba disturb ya iruku. Itha padicha peraku mind konjam relax iruku.thank you yesappa
Post a Comment
தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.