Wednesday, November 11, 2009
16. ஆதியாகமம் 3:15ல் சொல்லப்பட்டவை புரியவில்லை (Gen 3:15 meaning). விளக்கவும்.
ஆதியாகமம் 3:15: "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்".
வித்து என்றால் விதை, அதாவது சந்ததி (seed, offspring, generation) என்று பொருள்.
ஏவாள் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டபின்பு தேவன் சர்ப்பத்துக்கு(பிசாசு) ஒரு அறிவிப்பு சொல்கின்றார். "உனக்கும் ஸ்திரீக்கும், ஸ்திரீயின் சந்ததிக்கும், உன் சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்". இங்கே 'அவர்' என்று இயேசுவைக்குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. இதுவே இயேசுவின் பிறப்பைக்குறித்த முதலாவது முன்னறிவிப்பு.
[1] ஸ்திரீயின் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் பகை - இந்த உலகத்தில் காணப்படும் "பாவம்". (இன்றும் பாம்பைப் பார்த்தால் பகையினால் அடித்துக் கொல்லுகிறார்கள் என்று சிலர் விளக்கம் சொல்கின்றனர்.)
[2] ஸ்திரீயின் வித்து - இயேசு கிறிஸ்து. கலாத்தியர் 4:5 ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் ... தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
[3] அவர் உன் தலையை நசுக்குவார் - இயேசு பிசாசின் கிரியைகளையும் வல்லமையையும் சிலுவையிலே அழிப்பார். ஏனெனில் I யோவான் 3:8ல் "பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்" என்று வாசிக்கிறோம்.[4] நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் - இது இயேசுவின் சிலுவையின் பாடுகளைக் குறிக்கிறது.
எபிரெயர் 2:14,15 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
இன்னொரு சிறுகுறிப்பு: பிசாசைக்குறித்து அல்ல, பாவத்தினால் நாம் தேவனுக்கு பகைஞராய், சத்துருக்களாய் இருந்தோம். நம்மை அவருடன் சமாதானப்படுத்தின (ஒப்புரவு) நிகழ்வும் சிலுவையிலேதான். எபேசியர் 2:16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
(மேலே படத்தில் சிங்கத்தின் மடியில் ஆட்டுக்குட்டி படுத்து இருப்பது ரொம்பவே அழகாதான் இருக்கு).
.
1 comments:
even i also had doubt about this verse, thank you so much. May God bless this site abundantly.