Saturday, November 7, 2009

12. தேவனை (God) ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை என்று வாசிக்கிறோம். பரலோகத்திற்கு போன பின் தேவனைக் காண்போமா?




ஆம், பரலோகத்தில் நிச்சயமாக தேவனைக் காணமுடியும். காண்போம். வேதத்திலிருந்து ஒரு சில வசனம் மட்டும் உங்கள் கவனத்திற்கு:

இறந்த பின்பு, ஒருநாள் "வெள்ளை சிங்காசன நியாத்தீர்ப்பு" பரலோகத்தில் இருக்கும்.
அங்கே:
மத்தேயு 25:32அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன்
செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.
வெளி 3:21நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய
சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

I கொரி 13:12. இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்;


I தெச 4:17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

இந்த உலகத்திலும் நாம் அவரை தரிசிக்கலாம். அநேகருக்கு அவர் தரிசனமாயிருக்கிறார். அவர் என்னுடன்கூட சொப்பனத்தில் சில சமயங்களில் பேசுகிறார்.

மத்தேயு 5:8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத்
தரிசிப்பார்கள்.
யோவன் 14:9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்
; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
எனவே தேவனை நிச்சயம் காண்போம்.

1 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

New comments are not allowed.