Tuesday, November 10, 2009

15. மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?முன்னோட்டமாக:
கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவுபடத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். இதை உதாரணமாகக் காட்டி: பாருங்கள் அங்கே அவர்களுக்கு தேவையான திராட்சரசத்தை மரியாள்தான் இயேசுவிடமிருந்து வாங்கிக்கொடுத்தாள். எனவே நம்முடைய தேவைக்கு தாயிடம் கேட்டாள், மறுக்காமல் கிடைக்கும் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் சொல்கின்றார்கள். இது தவறான புரிந்துகொள்ளுதல். இயேசு செய்த மற்ற ஆயிரக்கணக்கான அற்புதங்களில் ஏன் மரியாளிடம் யாரும் போகவில்லை? மரியாள் ஒரு மனிதர்.

நான் கொடுக்கும் 10 காரணங்களை படியுங்கள்:

[1] யோவான் 14:6 இயேசு சொன்னார்: "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". என்னாலேயல்லாமல் ஒருவனும் வேறு வழியாக பரலோகம் செல்லமுடியாது.
நான்தான் வழி. மரியாள் அல்ல.

[2] கானாவூர் கலியாணத்தில் (யோவான் 2:4) இயேசு சொன்னார், "ஸ்திரீயே (Woman), உனக்கும் எனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லையே". அம்மா அல்லது தாயே (Mummy/Mom/Mother) என்னும் வார்த்தைகளை அவர் சொல்லவில்லை. ஸ்திரீயே - Woman என்றார். இங்கே "ஸ்திரீயே" என்னும் வார்த்தை மிகவும் மரியாதைக்குரிய கனம்பொருந்திய வார்த்தையாகும். (Madam என்னும் மரியாதைச் சொல் போல)ஆனால் அதில் உறவு இல்லை. தேவனுக்குத்தான் அம்மா, அப்பா, ஆதி, அந்தம் (துவக்கம் மற்றும் முடிவு) இல்லையே.
தாய் என்னும் உறவை இங்கு இயேசு மறுக்கின்றார். அவர்தான் மரியாளை அவளுடைய தாயின் கர்ப்பத்தில் உண்டாக்கினார். எனவே "மரியாள் ஆண்டவருக்கு தாய், அவளிடத்தில் தான் கேட்கவேண்டும்" என்பது தவறு.

[3] மாற்கு 3:33 இயேசுவைக் காணவில்லையென்று மரியாளும், யோசேப்பும் தேடிவரும் நேரத்தில், அங்கே ஜனங்கள் "உம்முடைய தாயாரும் சகோதரரும் உம்மைத் தேடுகிறார்கள்" என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! என் பிதாவின் சித்தம் செய்பவர்களே எனக்கு தாயாரும் சகோதரரும் என்றார்.
தாய் மற்றும் சகோதரர்கள் என்னும் உறவையும் இங்கே மறுக்கின்றார். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில்(God the father) நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.

[4] யோவான் 19:26 ல் இயேசு சிலுவையில் தொங்கும்போதும், "அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்." தெளிவாக ஸ்திரீயே என்றுதான் அழைக்கிறார். இங்கேயும் அந்த உறவு இல்லை.


[5] 1 தீமோ 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும்
மத்தியஸ்தரும் (mediator) ஒருவரே. அவரே இயேசு என்று வாசிக்கிறோம். இயேசுதான் மத்தியஸ்தர், குறுக்கே மரியாளை மத்தியஸ்தராக கொண்டுவருவது தவறு.

[6] லூக்கா 2:35 ல் மரியாள் ஒரு பட்டயத்தால் கொல்லப்படுவாள் என்று பார்க்கிறோம். அவளும் சீஷர்களைப்போல இரத்த சாட்சியாக மரித்தாள்.

[7] அப் 2-ம் அதிகாரத்தில் மரியாள்
பெந்தெகொஸ்தே என்னும் நாளில் 120 பேரில் ஒருவராக இருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றாள். அந்நிய பாஷைகளில் பேசினாள். அந்த கூட்டத்தாரை அவள் சேர்ந்திருந்தாள். கத்தோலிக்க கூட்டத்தாரை அல்ல.

[8] யோவான் 14:13,14 "நீங்கள்
என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்." என் நாமத்தில் என்று இயேசு சொன்னார். மரியாளின் நாமத்தில் கேட்பது தவறு.

[9] இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான்! அதில் சந்தேகமில்லை. சோறு சமைக்கவேண்டும் என்றால் ஒரு பாத்திரம் (cooker) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிடவேண்டும். பாத்திரத்தை (cooker) அல்ல. மரியாள் பாத்திரம், இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது பாத்திரத்தைக் கடித்து சாப்பிடுவதுபோல் இருக்கின்றது.

[10] யாத் 20:3, 4 "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்". இதற்குப்பின்னும் சிலைகளை வைத்து வணங்கினால் (மரியாள் சிலையானாலும், இயேசுவின் சிலையானாலும்) பரலோகம் செல்ல வாய்ப்பில்லை என்று வெளி 21:8ல் சொல்லப்பட்டுள்ளது.இயேசுதான் மரியாளை உண்டாக்கினார், எனவே அவர்தான் மரியாளுக்கு அப்பா. அப்படியானால் அவர் மரியாளுக்கு மகன் என்பது சரியாகாது.

மாற்கு 12:35. இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே. தாவீதுதானே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அதுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.


மரியாளை வணங்குங்கள் என்று பைபிளில் எங்கேயும் இல்லை. வெளி 21:8-ல்: பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

மரியாளை வணங்குவது பாவம்.

அந்தோனியாரின் சிலையை வணங்குவதும் பாவம்.
இயேசுவின் சிலையை வணங்குவதும் பாவம்.
எந்த சிலையையோ படத்தையோ வணங்கினாலும் பாவம். அப்படிச் செய்பவர்கள் நரகத்துக்கு பங்கடைவார்கள்.


20 comments:

Robin said...

அருமையாக வசனங்களை ஆதாரமாகக்கொண்டு விளக்கியுள்ளீர்கள். நன்றி.

Michael said...

You could read bible with holyspirit then only you can find the exact meaning. Becasue No one have no rights to comment the Mother of Jesus.

Rs 5000 Weekly said...

Dear Michael,

If you read the Bible with holysprit then give some verses to praise Mother Mary.

Immanuel.

joseph balasundar said...

Bro. Michael is not able to break out of the strong tradition fed in to him since his child hood. As he is unable to substantiate his weaker stand with bible verses, he is inviting Holy Spirit to his support, but he has forgotten all the scriptures are written upon Holy Spirit's intercession.

Anonymous said...

Let us Pray for Brother Michael to read Bible including Catholic Bibles and understand that Mary is a respectable person but not worship-able person for Christians.

Anonymous said...

According to you, let mary be a just woman?
Y cant be that just woman,your mother?
A man who respects his own mother, definetly respects jesus' mother mary.Even if you r not convinced with this, ok no problem,from tommorrow onwards dont call your mother as your mummy(amma),
Call her a woman(Sthriyae).

Anonymous said...

இயெசுதான் மரியாளை உண்டாக்கினார் என்றால், அவர்தான் மரியாளுக்கு அப்பா. அப்படியானால் மரியாளுக்கு மகன் என்பது சரியாகாது.

மாற்கு 12:35. இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே. தாவீதுதானே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.

.

Anonymous said...

Nice explanation with prompt verses - Priya Joel

antony said...

your are not the right person to wright or comment about mother Mary.you can't call your mother as lady.AS a son you can get anything from your mother.You are ready to do anything your mother ask,right? AS a man you are loving your mother as much you can.Then how the Holy father our LORD JESUS can refuse? when the HOLY Mother ask anything.Thing it please. antony

jesheeth said...

Jesus created Mary is absolutely correct. Jesus used Mary to come into this world to teach all of us how to live in this world and to deliver all of us from our sins by shedding his blood in the cross, bcos he found mary is a God fearing women (keep in mind if Jesus didnt send the Angel to inform Joseph that she was pregnant with the help of Holyspirit, what the name Mary would get at those days....think about it)...and moreover all called him as the Son Of David because he came in Jewish family of Davids Generation in this earth. For example if your forefathers are the great kings or famous one then while you walk in the streets they will say that your the grandchild of that guy isn't it?....dear guys please understand the bible words properly and dont take a single verse from the bible, try to study throughly before debate and if not possible kneel and get wise from our heavenly father. Dont compare God with the normal human beings...whtr anyone in the world is ready to die in cross for the sins done by anonymous????????

Anonymous said...

அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள். இந்த வசன ஆதாரங்களை கொண்டு மரியாளை வணங்குபவர்களுக்கு அது தவறு என்று சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நன்றி...

Anonymous said...

Dear Antony,
Though Christ was God, he was born as a human being. So just like us all he had mother n father in this world. பல பெண்கள் இருந்த போதிலும் கிறிஸ்து மரியாளிடத்தில் பிறந்தார். எனவே மரியாள் பாக்கியவதி. அவ்வளவே.
* வேதத்தில் எங்கேயாகிலும் மரியாளை வணங்குமாறு, ஆராதிக்குமாறு சொல்லப்பட்டிருக்கிறதா?
* மேலும் மரியாளிடம் கேட்டால் கிடைக்கும் என்றோ, அவர் கிறிஸ்துவிடம் பரிந்துரைப்பார் என்றோ வேதத்தில் இருக்கிறதா?
*வேதத்தில் பிதா,குமாரன், பரிசுத்த ஆவி என்று தான் உள்ளது.மாதா என்று எங்கும் இல்லை.
* John15:16,14:12-14, இந்த வசனங்களில் "ask in my name" என்று தானே கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.கிறிஸ்துவிற்கும் நமக்கும் நடுவில் யாரும் இல்லை என்பதை மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது." Ask in my mother's name/Mary's name" என்று வேதத்தில் எங்கேயாவது கிறிஸ்து சொல்லியிருக்கிறாரா?
*மேலும் நமக்காக பாடுபட்டு, சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்தவர் கிறிஸ்து மட்டும் தான். அவர் நாமம் மட்டுமே நம்மை இரட்சிக்க வல்லது. அவர் மூலமாகவே பிதாவிடத்தில் நமக்கு ஒப்புரவும், சுதந்தரமும் உண்டு.
- XX

Anish John said...

in catholic they respect Mary. Nobodies ask anything from Mary. They ask to mary to pray for them only. Such we all peoples ask others to pray for us. she is one saint who we all known.
she is in Heaven with god.We will also go there only.For example one day Bro.Dinakaran's small Child (already dide)came in front of him with Gods Message.Like wise Mary also there she will pray for as.She is also like us only but she is Saint.we peoples all do sin.I love her. she is also my Mother.She will Pray for me.like u peoples are pray for ur childrens or your mother pray for u . thats all. again one thing In bible situations also there.we should not take wrong meaning for wrong situation.We all are sin people. We are not having ability to analyse the bible by words.only some peoples can do this. They are called as saints. we should respect them.please don't call the saints as 'avan evan'(example, poul jabithan,poul sonnan).why because God gave us a good language TAMIL we are having lot of respectable words we can use.we should not follow English.finally we all are Gods child. after death we all are going to same place only.there we meet Mary also.only difference is some peoples are ask other peoples to pray but some peoples ask Mary and other Saints for prayer help. both are same only.bot only thing is the Heaven peoples are 24hrs praying and singing God.

Joane said...

Awesome explanation :)

rkabc561 said...

இவ்வளவு ஏன்? "அவர்களுக்கு திராட்சரசம் இல்லை" என்று மரியாள் அவர்கள் சொன்னபோது, இயேசுவானவர், "ஸ்திரீயே எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை" என்று தானே சொன்னார், மாறாக, "சரி தாயே, நீங்களே சொல்லிவிட்டீர்கள், எனவே உடனே நான் அற்புதம் செய்து விடுகிறேன்" என்று அவர் சொல்லவில்லையே? எனவே மரியாளாக இருந்தாலும் சரி 'மறுபடி பிறக்க வேண்டும்' என்பது தெளிவாகிறது.

Unknown said...

WHY ROMAN CATHOLIC'S HAVE IDEAL AT CHURCH AND ALSO AT HOME. OUR FATHER STRICTLY CONDEMNED THAT. PLS CLARIFY THAT

Anonymous said...

(லூக்கா:1:41:45)எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,

42. உரத்தசத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.

43. "என் ஆண்டவருடைய தாயார்" என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது,

44. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.

45. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும் என்றாள்.

Febi Shipping said...

CAN'T ACCEPT.
I feel about the MARY . unbelievable wishes she given to me . i don't have the word to tell about the mother of Mary . Belive and feel . That's it

லெனின் said...

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.
கத்தோலிக்க நண்பர்களுக்கு ...
நமக்காக சிலுவையில் மரித்தது இயேசு மட்டுமே. நமக்காக பரிந்து பேசுபவரும் அவரே. பிதாவினிடத்தில் இருப்பவரால் மட்டுமே பரிந்து பேச முடியும். பரலோகத்துக்கு ஏறி பிதாவின் வலது பாரிசத்தில் இருப்பவர் இயேசுவே.உயிரோடு இருப்பவரும் இயேசுவே (உங்களுடைய விசுவாச பிரமாணத்தை பார்க்கவும்)மரியாள் பரலோகத்துக்கு ஏறி போகவில்லை.
5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

Anonymous said...

please don't be failed on the judgement day GOD has told us 10 comments... let us try to obey that...please ignore traditional worship.. come we can march towards the KINGDOM of our LORD our KING our SAVIOR JESUS CHRIST .JESUS IS COMING SOON...Let us ready for THE PRECIOUS DAY...may GOD help us

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

New comments are not allowed.